Friday, September 2, 2016

காலிஃப்ளவர் ஃப்ரை

தேவையான பொருட்கள் 
காலிஃப்ளவர் - 11/4கப் 
கறிவேப்பிலை - கொஞ்சம்
சீரகம், சோம்பு - தலா1/2டீஸ்பூன் 
மஞ்சள்தூள் - 1/8டீஸ்புன்
சில்லி சிக்கன் மசாலா பொடி - 2 டீஸ்பூன்
எண்ணை 
உப்பு 

செய்முறை 
காலிஃப்ளவரை கழுவிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
காடாயில் எண்ணெய் காயவைத்து சீரகம் சோம்பு தாளித்து காலிஃப்ளவர் துண்டுகள் சேர்த்து வதக்கவும். 
காய் லேசாக வதங்கியதும் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறிவிட்டு, மூடி போட்டு வேகவிடவும். 
காலிஃப்ளவர் முக்கால்பாகம் வெந்ததும் மசாலாபொடி மற்றும் கறிவேப்பிலையச் சேர்த்து கிளறவும்.
காய் நன்றாக வெந்து மசாலாவாடை அடங்கியதும் பரிமாறவும்.
விரைவில் செய்யக்கூடிய காரசாரமான பொரியல் இது. சில்லி சிக்கன் மசாலா விரும்பாதவர்கள் மிளகாய்ப்பொடி-கரம் மசாலா பொடி சேர்க்கலாம். அல்லது சாம்பார் பொடியும் சேர்க்கலாம். காய் வேக தண்ணீர் சேர்க்கவேண்டியதில்லை, மூடி போட்டு வைக்கையில் அதுவே நீர் விட்டு வெந்துவிடும். சுவைக்கேற்ப காரப்பொடியை சேர்த்துக்கொள்ளவும். சாதம் வகைகளுடன் சுவையாக இருக்கும்.

4 comments:

  1. சில்லி சிக்கன் எல்லாம் கிடையாது. இங்கு யாழ் கறித்தூள் மட்டும் உள்ளது. ட்ரை பண்ணுறேன்.

    ReplyDelete
  2. பார்க்க நல்லாயிருக்கு மகி. ஈசியாகவும் இருக்கு..

    ReplyDelete
  3. மகி,

    குட்டிகுட்டியாய், இலைகளால் மூடி இருப்பதால், அதன் அழகில் மயங்கி, காலிஃப்ளவரை ஆசையாசையாய் வாங்குவதோடு சரி, இப்போதும் போன வாரம் வாங்கின ஒன்னு ஃப்ப்ரிட்ஜில் உறங்கிகிட்டு இருக்கு. சோம்பு சேர்த்து செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  4. அருமையாய் இருக்கு...all time favorite...

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails