Thursday, September 22, 2016

கீரை வாங்கலையோ...கீரை!!

அமரந்த் சீட்ஸ்/ ராஜ்கிரா சீட்ஸ் (Amaranth seeds/Rajgira seeds) என்ற பெயரில் இங்கே இந்தியன் மளிகைக்கடைகளில் கிடைக்கும் விதைகளை வாங்கி விதைத்து கீரை வளர்க்கலாம் என்ற தகவல் தெரிந்ததால் முயற்சித்து பார்க்கலாம் என ஆரம்பித்த கீரை வளர்ப்பு பற்றிய பதிவு இது. 
பக்கத்து வீட்டுத் தோழியிடம் இருந்து கிடைத்த அமரந்த் சீட்ஸ்...கீரை விதைகள்.. 
என் பெண்ணின் குட்டிக்கைகள் உதவிசெய்ய,
இரண்டு சிறிய தொட்டிகளில் விதைத்தாயிற்று...கீரைகள் முளைவிட்டு வளரலாயின.
குட்டிக்கால்களுடன் குட்டிக்கீரைகள்!! :) கீரைகள் வளர்வதைக் கண்டு சற்றே பெரிய தொட்டிகளிலும் கொஞ்சம் விதைகள் தூவி வளர்ந்த கீரைகள். 
பறித்து, பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டாயிற்று. கீரைகளைப் பறிக்கையில் வேருடன் பறிக்காமல், தண்டுகளை மட்டும் நறுக்கிக் கொண்டால், மீண்டும் அதே தண்டிலிருந்து கீரைகள் துளிர்க்கின்றன. அப்படி இரண்டாவது முறை பறித்த கீரை..பருப்புடன் சேர்த்து கடைந்த கோவை ஸ்பெஷல்!! 
இரண்டாவது முறை நறுக்கிய பின் இப்படி இருந்த கீரைத்தொட்டி,
சில நாட்களில் இப்போது...
இப்படி இருக்கிறது.  
:) 
வீட்டிலேயே கீரை வளர்த்து சாப்பிட விரும்பும் வெளிநாட்டு வாசிகள் சிறிய தொட்டிகளில் இந்தக் கீரையை வளர்க்கலாம். எளிதில் முளைத்து வளர்கிறது. நாமே வளர்க்கும் காய்-கனி-கீரைகளின் ருசி அறிந்தவர்கள் கண்டிப்பாக முயற்சிக்கலாம்!! :D 

8 comments:

  1. மிகவும் அருமை ...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சங்கீதா!!

      Delete
  2. அரைக்கீரை என்று தோன்றுகிறது. அதுதான் இப்படிப் பயனளிக்கும். அறுவடை கீரை அதிக ருசி.அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. அரைக்கீரையா, முளைக்கீரையா, தண்டுக்கீரையா தெரியலைம்மா..ஆக மொத்தம் ஒரு கீரை..! :) நன்றிம்மா!

      Delete
  3. அடேங்கப்பா... எம்புட்டு கீரை.!! நல்லா கீரை கடைஞ்சு கடைஞ்சு சாப்பிட்டு அம்மாவும், மகளும் தெம்பா இருங்கோ... அடுத்து தக்காளி அறுவடை இருக்கே :-)

    ReplyDelete
    Replies
    1. யெஸ் அபி..தக்காளி எவ்ளோ கிலோ காய்க்குதுன்னு எடை போட தராசு வாங்கப்போறேனே!! ;) தேங்க்யூ!

      Delete
  4. ம் ம் நல்லா எஞ்ஜாய் பண்ணுங்க :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails