Thursday, October 6, 2016

அப்பளாம் போட்ட வத்தக்குழம்பு

தேவையான பொருட்கள் 
சுண்டக்காய் வத்தல் (அ) மணத்தக்காளி வற்றல் - கொஞ்சம் 
உளுந்து அப்பளாம்/அப்பளம் - 2 (அ) 3 
நறுக்கிய வெங்காயம் - 4 டேபிள்ஸ்பூன் (அ) சின்னவெங்காயம் - 7 
புளி - எலுமிச்சை அளவு 
நசுக்கிய பூண்டு - 4 பற்கள் 
கறிவேப்பிலை கொஞ்சம்
வரமிளகாய் -1
வெந்தயம் -1 டீஸ்பூன்
கடுகு -1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு - தலா 1 டீஸ்பூன் 
சாம்பார் பொடி -1 டீஸ்பூன்
ரசப்பொடி - 1 டீஸ்பூன் 
மல்லித்தூள் - 1டீஸ்பூன் 
பருப்பு பொடி -1 டீஸ்பூன் (நான் சேர்க்கவில்லை) 
அரிசிமாவு -1டீஸ்பூன் 
உப்பு 
சர்க்கரை அல்லது வெல்லம் - கொஞ்சம் 
நல்லெண்ணெய் 

செய்முறை 
வெங்காயத்தை நறுக்கி வைக்கவும். பூண்டை நசுக்கிக் கொள்ளவும். புளியை ஊறவைத்து நீர்க்க கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பாத்திரத்தில் நல்லெண்ணெய் காயவைத்து வத்தலை பொரித்து, தனியாக எடுத்து வைக்கவும்.
அதே எண்ணெயில் கடுகு தாளித்து, வெந்தயம் சேர்த்து கருகாமல் சிவக்க வறுத்ததும் க.பருப்பு -உ.பருப்பு சேர்க்கவும். 
அப்பளத்தை சிறு துண்டுகளாக உடைத்து சேர்க்கவும்.
அப்பளம் பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு,  உடைத்த மிளகாய் வத்தல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் சாம்பார் பொடி - ரசப்பொடி - மல்லிப்பொடியை சேர்த்து, தேவையான உப்பும் சேர்க்கவும். (வத்தலில் உப்பு இருக்கலாம், கவனமாக உப்பைச் சேர்க்கவும்.)
புளிக்கரைசலைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
மிதமான தீயில் புளிக்கரைசல் பச்சை வாசம் போக கொதித்ததும், பொரித்து வைத்திருக்கும் வத்தலையும் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் (அ) சர்க்கரையையும் சேர்க்கவும்.
அரிசிமாவை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும். (பருப்பு பொடி சேர்ப்பதாக இருந்தால் அரிசிமாவுடன் சேர்த்து கரைத்து சேர்க்கவும்)
குழம்பு நன்கு சுண்டி எண்ணெய் மிதந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான அப்பளாம் போட்ட வத்தக்குழம்பு தயார். பருப்பு உசிலி அல்லது பருப்புத் தொகையல் காம்பினேஷனுடன் சுவையாக இருக்கும்.
படத்தில்-- சோறு, வத்தக்குழம்பு, பீன்ஸ் பருப்புசிலி, பைனாப்பிள்-மேங்கோ சாலட். ரசமும் தயிரும் படத்தில் வரவில்லை. :)

குறிப்பு 
இந்த குறிப்பு காமாட்சி அம்மாவின் ப்ளாகைப் பார்த்துச் செய்தது. அவர்கள் மணத்தக்காளி வற்றல் சேர்த்து செய்திருந்தாங்க..என்னிடம் கைவசம் அந்த வத்தல் இல்லாததால் சுண்டவத்தல் சேர்த்தேன்.  அம்மா செய்த அளவு கலர் வரவில்லை..அடுத்த முறை மீண்டும் முயற்சித்துப்பார்க்கவேண்டும், மணத்தக்காளி வற்றலுடன். ;) நாமள்ளாம் ஆரு..கஜினி முகம்மது பரம்பரையில்ல? சீக்கிரமா செய்து அந்தப் படத்தையும் போடறேன் பாருங்க!! :D

6 comments:

  1. ஏனுங்கோ... உங்க வூட்டுல இருந்து எங்க வூடு ரெண்டு கல் தூரம் தான் போல இருக்கு. இந்த மாதிரி ஏதாவது செய்யும் போது... ரெண்டு கரண்டி அதிகமா போட்டு செய்ங்கோ. நாங்களும் வந்து சாப்பிட்டு வரோம். உங்களுக்கு புண்ணியமா போட்டும்.

    ReplyDelete
    Replies
    1. தாராளமா வாங்க, குடும்பத்தோட வாங்க!! ...வத்தக்குழம்பு எப்பவுமே அதிகமாத்தான் செய்யறது வழக்கம். திருப்தியா சாப்டுட்டு போகலாம். :)

      Delete
  2. இதுவரை அப்பளம் போட்டு குழம்பு வச்சதில்லை. மகி வத்தல மாத்தி போட்டு செஞ்ச மாதிரி எனக்கும் கத்திரிக்கா அல்லது வெண்டக்கா குழம்பில் அப்பளம் போட்டு செஞ்சிடலாம்னு ஒரு யோசனை. ரசமும், தயிரும் சாப்டீங்கன்னு நெஜமா நம்புறோம் :)

    குழம்புக்குப் பக்கத்துல‌ கலர்கலரா இருக்கவும் இதன் நிறம் கொஞ்சம் கொறஞ்ச‌ மாதிரி தெரியுதோ !

    ReplyDelete
    Replies
    1. செய்து பாருங்க சித்ராக்கா...சுண்டைக்காயை விட கத்தரி-வெண்டை கண்டிப்பா நல்லாவே இருக்கும். :)

      //குழம்புக்குப் பக்கத்துல‌ கலர்கலரா இருக்கவும் இதன் நிறம் கொஞ்சம் கொறஞ்ச‌ மாதிரி தெரியுதோ !// ஆங்...அப்படித்தான் இருக்கோணும்!! ;)

      Delete

LinkWithin

Related Posts with Thumbnails