Wednesday, November 16, 2016

கத்தரிக்காய் கூட்டு / Brinjal koottu

தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் - 6
சாம்பார் பொடி - 3/4டேபிள்ஸ்பூன் 
பாசிப்பருப்பு - 1/4கப் 
உப்பு 
சர்க்கரை - 1/2டீஸ்பூன் (விரும்பினால்) 
அரைக்க
தேங்காய்த்துருவல் - 3டேபிள்ஸ்பூன்
மிளகு -5
சீரகம் - 1டீஸ்பூன் 
தாளிக்க
எண்ணெய்
கடுகு -1/2டீஸ்பூன் 
உளுந்து பருப்பு -1/2டீஸ்பூன் 
கறிவேப்பிலை -கொஞ்சம்
வரமிளகாய் -1 

செய்முறை 
கத்தரிக்காயை சிறூ துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். 
பாசிப்பருப்பை குழையாமல் வேகவத்துக்கொள்ளவும். 
அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்துக்கொள்ளவும்.

பாத்திரத்தில் கத்தரிக்காய், சாம்பார் பொடி, உப்பு, தேவையான தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
 கத்தரிக்காய்  முக்கால்வாசி வெந்ததும் அரைத்த தேங்காய் விழுது மற்றும் வெந்த பருப்பைச் சேர்க்கவும்.
தேவையான தண்ணீர் ஊற்றி, (விரும்பினால்) அரை டீஸ்பூன் சர்க்கரையும் சேர்க்கவும்.
 தேங்காயின் பச்சைவாசம் அடங்க, கூட்டை நன்கு கொதிக்கவைக்கவும்.
தனியாக சிறு தாளிப்பு கரண்டியில் கடுகு - உளுந்து தாளித்து , கறிவேப்பிலை -வரமிளகாய் கிள்ளிப் போட்டு வதக்கி கூட்டில் சேர்க்கவும்.
சுவையான கூட்டு ரெடி. சாதம், பொரியலுடன் பரிமாறவும்.

5 comments:

  1. Kathrikkai kootu looks good, andha araicha masala would have given a nice flavor to it, Mahi, andha poondu chutney pannradhuku, pakkathaliya irruka vendiya avasiyam illa, put it on the lowest flame and stir a couple of times in between.

    ReplyDelete
    Replies
    1. Thanks for stopping by Hema! ...and for the tip on Garlic chutney..sure will give it a try and let you know! The color of the chutney is attractive! :)

      Delete
  2. கத்தரிக்காய் கூட்டிற்கான குறிப்பு நன்றாக இருக்கிறது மஹி!

    ReplyDelete
  3. சாப்பாட்டுத் தட்டு கலர்ஃபுல்லா இருக்கு :)

    கத்திரிக்கா கூட்டு செய்ததே இல்ல மகி. செய்யலாம்னு தோணும், அப்புறம் அது பொரியலா மாறிடும். குட்டிகுட்டியா கத்திரிக்கா வாங்கியிருக்கேன், சீக்கிரமே கூட்டு செய்து பார்க்கணும்.

    ReplyDelete
  4. மஹி துளி புளித்தண்ணீர் சேர்த்தால் கத்கரிக்காய் நிறம் மாறாது இருக்கும். கடுப்பு சுவை இருந்தாலும் குறைந்து விடும். அல்லது தக்காளி சேர்த்தாலும்ஸரி. மற்றதெல்லாம் ஸுலபமாக இருக்கிறது. நன்றாகவும் இருக்கிறது. அன்புடன்

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails