ஜெயின் கிச்சடி ரெசிப்பி பகிர்ந்திருந்த பொழுது, பக்கத்திலிருந்த பத்லா கடி / வட இந்திய மோர்க்குழம்பு ரெசிப்பி இது. புளித்த மோர் இருந்தால் சுலபமாகச் செய்துவிடலாம்.
தேவையான பொருட்கள்
புளித்த மோர்/ தயிர் - 1 கப்
கடலை மாவு - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4டீஸ்பூன்
உப்பு
தாளிக்க
எண்ணெய்
கடுகு-1/2டீஸ்பூன்
பச்சைமிளகாய் -1
கறிவேப்பிலை -கொஞ்சம்
வெந்தயம் - 7
மிளகு -5
கிராம்பு/லவங்கம் -1
செய்முறை
புளித்த மோருடன் ஒரு கப் தண்ணீர், கடலை மாவு, மஞ்சள்தூள் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கிக்கொள்ளவும். (நான் மிக்ஸியில் பெரிய ஜாரில் எல்லாவற்றையும் சேர்த்து அரைத்துக்கொண்டேன், ஈஸி!! ;)) தயிர் உபயோகிப்பதானால் தேவையான தண்ணீரையும் சேர்த்து மிக்ஸியில் கலந்துகொள்ளவும்.)
பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து, கடுகு தாளித்து கிராம்பு -மிளகு, வெந்தயம் சேர்த்து பொரியவிடவும். நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அடுப்பில் தணலை குறைத்துக்கொண்டு மோர்க்கலவை + தேவையான உப்பைச் சேர்க்கவும். குறைந்த தீயில் மோர் சூடாகி லேசாக நுரைத்து ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான கடி தயார்.
கிச்சடி-யுடன் கடி, இதனுடன் சுட்ட மிளகு அப்பளாம் பெஸ்ட் காம்பினேஷன் என்று காமாட்சி அம்மா சொல்லிருந்தாங்க. என்னிடம் அப்பளம் இல்லாததால் படத்திலும் இல்லை. நீங்களும் செய்து சுவைத்துப் பாருங்க. நன்றி!
புதிய செய்முறைக்கு நன்றி...
ReplyDeleteநாங்க கடலை மாவு போட்டு செஞ்சது இல்ல...உற வெச்ச து. பருப்பும், அரிசியும் அரைச்சு விட்டு செய்வோம்.....
ReplyDeleteசெய்முறை விளக்கம் அருமை....
ReplyDeleteபார்க்கவும் அழகாக இருக்கிறது. மணமாகவும் இருக்கிறது. எப்படியா? தாளிக்கும்போது காற்று இந்தபக்கம் வீசியதுஅன்புடன்
ReplyDeleteசமைத்துப் பார்க்கலாம்
ReplyDelete