Wednesday, November 16, 2016

ABCD EFG..!!!

ABCD EFG..!!
SOMEONE SWEET HAS TURNED 3!!
:) :D B-)
36 மாதங்கள் ஓடிய வேகம் தெரியவில்லை... 2013, நவம்பர் 15-ல்  பட்டு வண்ண ரோசாவாய்ப் படுத்திருந்த என் "நச்சரிக்கும் சிட்டுக் குருவிக்கு" 3 வயது முழுமையடைந்துவிட்டது.  :)))

சில வசந்தங்கள் காத்திருந்து நான் பெற்ற பொன்வசந்தம் இன்று என் வாழ்க்கையை முழுவதுமாய்க் குத்தகைக்கு எடுத்து விரல் நுனியில் ஆட்டுவிக்கிறாள்.

என் கைக்குள் அடங்கிக் கிடந்த குட்டி மனுஷி இப்போது றெக்கை கட்டிப் பறக்கும் அருவியாய் துள்ளித் திரிகிறாள்.  சில நாட்களாய், பேனாவைக் கொடுத்து அவள் கையில் ஒரு ஸ்மைலியும் என் கையில் ஒரு ஸ்மைலியுமாய் வரைந்து கொண்டு அவ்வப்பொழுது வந்து ஸ்மைலி பத்திரமாய் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்கிறாள். :)))

வாழ்க்கை நதியில் புதிதாய் உதித்த இன்பச்சுழலொன்று நதியின் போக்கையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஓடிக்கொண்டிருக்கிறது. நாங்களும் சந்தோஷமாக ஓடிக்கொண்டிருக்கிறோம். :) 

எங்கள் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த எங்கள் பூமகளே...உலாவும் வானம்பாடியாய் வாழ்க கண்ணே!! பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு பல்லாயிரத்தாண்டு நீ நலம் வாழ வாழ்த்துக்கள்! :)) 

10 comments:

  1. பிறந்த நாள் வாழ்த்துக்கள் லயா. ஸ்கூலுக்கு போறீங்களா .. தலைமுடி அழகா இருக்கு ...:)

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க! :) ப்ளே ஸ்கூல் போறாங்க வாரம் 3 நாள்!
      // தலைமுடி அழகா இருக்கு ...:)// அது ஒண்ணுதான் அம்மா ஜீன் -ல இருந்து அவங்களுக்கு போயிருக்கு. ;)

      Delete
  2. Happy birthday to Laya, time flies right, still remember that beautiful post you wrote when she was born, take care..

    ReplyDelete
  3. லயா செல்லக்குட்டீ வாழ்த்துகளும்,ஆசிகளும்,அன்பு முத்தங்களும். பாட்டி ஒருநாள் தாமதமாக உனக்கு வாழ்த்து சொல்கிறாள். இப்போது நான் அப்படிதான். எனக்கு பிறந்தநாள் என்று நீயே எனக்குச் சொல்லிவிடு .Happy birthday to you my dear Laya. love

    ReplyDelete
    Replies
    1. காமாட்சிம்மா, நீங்க வாழ்த்தினாப் போதும்..எவ்வளவு நாளானா என்ன? எங்கம்மாவுக்கு பேத்திக்கு 36 மாசமாமிட்டதான்னு ஆச்சரியம்..2 வயசுதான் ஆச்சுன்னு அடிச்சு சொல்லுறாங்க!! ;):) ரொம்ப நன்றிம்மா!!

      Delete
  4. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் லயாகுட்டி. (தாமதமான வாழ்த்துக்கள்)

    ReplyDelete
  5. மகியோடு சேர்ந்து நாங்களும் லயாவை வாழ்த்துகிறோம் ! வாழ்க பலகோடி ஆண்டு நலமாக !

    நம்ம அம்மாக்கெல்லாம் நம்ம வயசே ஏறாது, இதுல பேரப்பிள்ளைகளின் வயசு மட்டும் ஏறிடுமா என்ன :)

    ReplyDelete
  6. தாமதமாக வந்திருக்கிறேன். :-) மூன்று வருடங்கள் எப்படி ஓடிப்போயிற்று!! லயாவுக்கு அம்மாவுக்கும் என்றும் என் அன்பும் வாழ்த்துகளும். :-)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails