ஒரு வாரக்கடைசியை இன்ட்ரஸ்டிங்கா செலவிட நினைத்து பக்கத்தில ஒரு காட்டுக்குள்ள(!!) ஹைக் பண்ணி ஒரு நீர்வீழ்ச்சியைப் பார்க்கப் போனோம். ஒரு க்ரூப்பா எல்லாரும் ஒரு இடத்தில மீட் பண்ணி போலாம்னு பார்த்தா,நாங்க சீக்கிரமா(எர்லி மார்னிங் 8மணிக்கே!!!ஹிஹி) கிளம்பிட்டோம்.நண்பர்கள் வர லேட்டாயிடுச்சு.
ஹைக்கிங் ட்ரெய்லை கண்டுபிடிச்சு, போய்ப் பார்த்தா...ஒரு நாலஞ்சு மைலுக்கு ரோடு பூரா கல்லு,குண்டும் குழியுமா இருக்கு!! (பர்ப்பஸா அந்தமாதிரி வைச்சிருக்காங்க..4வீல் ட்ரைவ் இருக்கற வெஹிக்கிள்ஸ்-க்காகவாம்)..எங்க கார் ஹோண்டா கூப்..அதுவும் போகும்னு இவர் என்னை கன்வின்ஸ் பண்ணினார்..அங்கே வேற ஈ-காக்கா கூட இல்லை..நாங்க டெலிபரேட் பண்ணிட்டி இருக்கப்ப ஒரு கார் வந்தது.அந்த ஆள் கிட்ட கேட்டுட்டு, அவர் கார் போகிற தைரியத்தில, நாங்களும் போக ஆரம்பிச்சோம்.
மினிமம் அரைமணி நேரம் ஆகும் அந்த ஸ்ட்ரெச்சை தாண்ட..அப்பாடின்னு ஆயிடுச்சு போங்க! அந்தளவுக்கு மோசம் அந்த ரோடு. பாதி வழி போகைலயே மொபைல் சிக்னலும் போயிடுச்சு. நல்ல வேளையா சிக்னல் கட் ஆகறதுக்குள்ள ப்ரெண்ட்ஸ்க்கு போன் பண்ணி ரூட் சொல்லிட்டார் என்னவர்.
ட்ரெய்ல் ஹெட்-ஐ நெருங்க,நெருங்க,சின்னச்சின்ன ஓடைகள் ஆங்காங்கே ரோடை கடந்து போகுது. ஒருவழியா போய்ச்சேர்ந்தப்ப கார்ல புழுதி மட்டும் 2 இன்ச் அளவு ஒட்டிருந்தது.
கீழே அந்த ஆற்றின் அருகில் ரிசார்ட் மாதிரி நிறைய வீடுகள் இருந்தது.ஆனா யாரும் தங்கியிருக்கமாதிரி தெரியல.அமைதியான ஆறும்,பளிங்கு மாதிரி தெளிவா இருந்த நீரில் தெரிந்த மரங்களின் நிழலுமா ரொம்ப அழகா இருந்தது.
அங்கே ஒரு முக்காமணி நேரம்,பின்னால் வந்த கார்க்காரங்ககிட்ட எல்லாம், ஒரு CRV வருதா,வருதான்னு கேட்டுட்டே வெயிட் பண்ணோம். பசங்க வரமாதிரி தெரில.இவர்தான் அவங்க கட்டாயம் வருவாங்க,வந்தா நம்ம காரைப் பாத்துட்டு உள்ளே வருவாங்க என்று சொல்லி ஒரு மெசேஜ் எழுதி கார்ல வைச்சுட்டு வந்தார்.
ஹைக்-ஐ தொடங்கினோம்..சரியான காடு,ஒரு ஒத்தையடிப்பாதைதான்..பூச்சிகள் வேற எக்கச்சக்கம்..அங்கங்க காய்ஞ்ச மரங்கள் விழுந்து கிடக்கு..ஒரு சில மரங்கள்,முழுவதும் கீழே விழாம உடைந்து தொங்கி,இப்ப உன் மேலே விழப்போறேன்னு பயம் காட்டுது..
அங்கங்கே,அருவியின் குட்டி ஆறு வேற ஆறேழு இடத்தில க்ராஸ் பண்ணுது. நடக்கறதுக்கே சிரமமா இருந்த அந்த ஒற்றையடிப் பாதையில் மவுண்டெய்ன் பைக்கர்ஸ் வேற.
95% டிஸ்டன்ஸ் நடந்தப்புரம் வழி ரொம்ப டேஞ்சரா தெரிந்தது எனக்கு.போதும்,திரும்பிடலாம்னு இவர்கிட்ட சொன்னா,காதுலயே போட்டுக்க மாட்டேறாரு!
இவ்ளோ தூரம் வந்துட்டோம்,பாத்துட்டே போலாம்னு என்னை இழுத்துட்டுப் போனாரு..பத்தடிதான் போயிருப்போம்,ஃபால்ஸ் வந்திருச்சு.இதோ,இதுதாங்க 3மைல்(~5கி.மீ) நடந்து போய் நாங்க பார்த்த நீர்வீழ்ச்சி!!
இதையெல்லாம் நீர்வீழ்ச்சின்னு சொல்லறது ஓவர்தான் இல்ல? நயாகரா அளவுக்கு(!!) இல்லன்னாலும், ஏதோ கொஞ்சம் சுமாராவாவது இருக்கும்னு நினைத்திருந்தேன்.பொக்குன்னு போயிடுச்சு,இந்த குட்டி அருவியைப் பாத்ததும்.
ஒருவேளை நாங்க போனது கோடைக்காலமா இருப்பதால தண்ணி குறைவா இருக்குன்னு மனதைத் தேத்திகிட்டோம். வெய்யிலா இருந்தாலும், தண்ணி பயங்கர சில்லுன்னு இருந்தது.பறந்துட்டிருந்த பூச்சிகள்ல நிறைய தண்ணில மிதக்குது.வெயில்ல பூச்சிகளின் நிழல் தண்ணிக்குள்ள விழுவது ரொம்ப அழகா இருந்தது.
அரைமணி நேரம் அங்க உட்கார்ந்து ரிலாக்ஸ் பண்ணிட்டு கீழே இறங்க ஆரம்பிச்சோம்..எதிர்ல வந்தவங்க,"your buddies are on the way!"ன்னாங்க. கொஞ்ச நேரத்தில நண்பர்களும் வந்துட்டாங்க. என் கணவர் எழுதி வச்சிருந்த மெஸேஜ்-ஐ பாத்துட்டு, காட்டுக்குள்ள பார்த்தவங்களிடமெல்லாம் விசாரிச்சுட்டே அவர்களும் அருவிக்கு வந்து சேர்ந்துட்டாங்க. அவர் எழுதிவைச்சதைப் பாத்து நான் கிண்டல் பண்ணிட்டு இருந்தேன்..ஆனா அது யூஸ்புல்லா இருந்தது.:)
இது என்ன பூ/காய் என்று தெரியல.Forbidden fruit-னு பெயர் சூட்டியது நானில்ல,எங்க வீட்டு ஐயா! :)
திரும்பி வரும்போது நிறைய போட்டோஸ் எடுக்கல.மீண்டும் அந்த குண்டும்குழியுமான ரோடைக் கடந்து, நேரா ரெஸ்டாரன்ட்ல லன்ச்-ஐ முடிச்சுட்டு நாலு மணிக்கு வீடு வந்து சேந்தோம்..களைப்புத் தீர இரண்டு நாட்களானது. ஆனால், ஒரு நல்ல எக்ஸ்பீரியன்ஸ்ங்க!
போய் தான் பார்ப்போமேன்னு நானும் கூடவே வந்த திருப்தி.ட்ரக்கிங் போயிருக்கோம்,டெசர்ட் ரைட் போயிருக்கோம்,இதுக்கு பேரு ஹைக்கிங்கா?புது அனுபவம்...
ReplyDelete// நேரா ரெஸ்டாரன்ட்ல லன்ச்-ஐ முடிச்சுட்டு நாலு மணிக்கு வீடு வந்து சேந்தோம்//
ReplyDeleteமாம்ஸ் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாரே..!! யப்பா இப்பதான் எனக்கு திருப்தியா இருக்கு ..!! ஒரு நாளாவது வீட்டு சாப்பாட்டிலிருந்து(ஙே ?) விடுதலைன்னு சொல்லி ஹா..ஹா.. !!
கீழிலிருந்து மேலே மூனாவது போட்டோ ரியலி சூப்பர்....!!
ReplyDeleteம்ம் நல்ல அனுபவம். சூப்பரான படங்கள்.
ReplyDeleteபுகைப்படங்கள் அழகு! அதிலும் அந்த முதலாவது.. கண்ணைப் பறிக்குது!
ReplyDelete//இதையெல்லாம் நீர்வீழ்ச்சின்னு சொல்லறது ஓவர்தான் இல்ல?//
எங்களுக்கும் இப்பிடி ஒரு அனுபவம் இருக்கு :)) ஆனாலும், க்ரூப்பா போனதால நல்லா என்ஜாய் பண்ணுனோம்.. அந்த 'வீழ்ச்சி'ய க்ராஸ் பண்ணி, அப்ப போட்டோவும் எடுத்து, உலகத்துலயே ஒரே ஜம்ப்புல நீர் வீழ்ச்சிய க்ராஸ் பண்ணின சூரர்கள்ன்னு, ஆர்குட்ல போட்டு வச்சிருந்தது நினைவுக்கு வருது :) நீர் வீழ்ச்சிய, மேல இருக்கற வீட்டுல இருந்து வர்ற சீவேஜ் தண்ணின்னு கிண்டல் வேற அடிச்சோம் :)
//Forbidden fruit //
அப்போ கண்டிப்பா டேஸ்ட் பண்ணிப் பாத்திருக்கனுமே? :)
நல்ல ட்ரிப் மாதிரி இருக்கு.
ReplyDeleteபோட்டோஸ் எல்லாம் கலக்கல் மகி, அதுவும் அந்த நிழல். சுப்பர். நெக்ஸ்ட் ஹைக்கிங் நானும் கூட வரேன். ;))
ReplyDeleteNice post,I remember once my trip to ooty,we saw now where greenery :P But nice experiencing right!
ReplyDeleteInteresting post, the falls might be small but it looks good at pictures.
ReplyDeletewow very nice pictures.... nalla kalakki irukeenga....
ReplyDeleteEvent: Dish Name Starts with C
Learning-to-cook
Regards,
Akila
சூப்பர் போட்டோஸ் மகி!! நல்ல டிரிப்!
ReplyDeleteWhich falls, Mahi?
ReplyDeleteமகி, நல்லா இருக்கு. நயகராவின் கடைசித் தம்பி அருவி சூப்பர். படங்கள் நல்லா இருக்கு.
ReplyDeleteromba nalla irukku mahi ,pictures ellam super
ReplyDeleteபுதுமையான அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி மகி
ReplyDeletemeeeeeeee the 16th...
ReplyDeleteerunga poi padithchu varen..
மகிமா இதுக்கே எவ்ளோ களைப்பா??
ReplyDeleteஇன்னும் எந்தன் ப்ளாக் பக்கம் எல்லாம் வந்த அவ்ளோதான் நீங்க...
அந்த நிழல் படம் ..ரொம்ப கிளின் வாட்டர் ...அழகான புகைப்படம்...
//நேரா ரெஸ்டாரன்ட்ல லன்ச்-ஐ முடிச்சுட்டு ///--என்ன இருந்தாலும் உங்கள் சமையல் போல வருமா???
நல்ல பயன் உள்ள தகவலும் கொடுத்து இருக்கீங்க,
nice photos, hope you had a great time
ReplyDeletemm...finally u had a great trip mahi...photos r superb....
ReplyDeleteஉங்களுக்கும் எங்களுடன் வந்தமாதிரிஇருந்ததா? நன்றி ஆசியாக்கா,ரசித்து கருத்தும் தந்ததுக்கு.:)
ReplyDelete~
ஜெய் அண்ணா,ஒரு நாளாவது நல்ல சாப்பாடு சாப்பிடுவோமென்னுதான்..ஹிஹி!
நன்றி!
~
நன்றி ப்ரியா!
~
சந்தனா,உங்களோட மலரும் நினைவு காமெடியா இருக்கு.:) நாங்க க்ரூப்பா போகநினைத்து அது நடக்கல.வரும்போது ஒண்ணா வந்தோம்.
/கண்டிப்பா டேஸ்ட் பண்ணிப் பாத்திருக்கனுமே/இல்லயே..நாங்கள்லாம் உஷாரு!!;)
~
கவுண்டரே,இது ஒரு நல்ல அனுபவம்தாங்க.நன்றி!
~
இமா,எப்ப வரீங்கன்னு சொல்லுங்க.மழை கொட்டினாலும்,வெயில் வாட்டினாலும் விடாம இதே பால்ஸுக்கு போயிட்டுவரலாம். நன்றி இமா!
~
ராஜி,ஆமாங்க.நினைவில் நிற்கும் ஒரு அனுபவம் இது. ஊட்டில ஹைக்-ஆ? சூப்பரா இருந்திருக்குமே!!
நன்றி ராஜி!
~
Umm Mymoonah,முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
போட்டோஸ் நல்லாருக்கா?? நன்றி! நாந்தான் எடுத்தேன் இங்கே இருக்க எல்லா போட்டோஸும். :) (என்ன ஒரு தற்பெருமை பாருங்க!!ஹிஹி)
~
அகிலா,நன்றிங்க!கலக்கிட்டு வந்து 2 நாள் ரெஸ்ட் எடுத்தோம்.அது வேற கதை.:)
ReplyDelete~
சுகந்திக்கா,நன்றி!
~
மஹேஸ்,இது ஹோலி ஜிம் பால்ஸ்-ங்க.
~
வானதி,அருவி/ஆறுகளை பொதுவா பெண்பால்ல சொல்லுவாங்க.நீங்க"குட்டிதம்பி"ஆக்கிட்டீங்க?:) நன்றி வானதி!
~
சாரு,நன்றி!
~
ஸாதிகா அக்கா,அனுபவங்களை இங்கே பகிர்வதால் நானும் சிலகாலம் கழித்து படித்துப்பார்க்க வசதியாவும் இருக்கு.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~
சீக்கிரமா உங்க ப்ளாக் பக்கமும் வரேன்.
கருத்துக்களுக்கு நன்றி சிவா!
~
வேணி,நன்றிங்க!
~
கொயினி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~