Wednesday, December 28, 2016

பனீர் குடைமிளகாய் மசாலா / Paneer Capsicum Do Pyazaa


தேவையான பொருட்கள் 
வெங்காயம் -2
பச்சைமிளகாய் -2
தக்காளி - 3
கேப்ஸிகம்/குடைமிளகாய் -1
பனீர் - 11/2 கப் (1" துண்டுகளாக நறுக்கியது) 
ஹாஃப் & ஹாஃப் / ஃபுல் க்ரீம் - 1/2கப் 
இஞ்சி பூண்டு விழுது -2டீஸ்பூன்
சீரகம் - 1டீஸ்பூன் 
மிளகாய்த்தூள் - 2டீஸ்பூன்
மல்லித்தூள் - 2டீஸ்பூன் 
மஞ்சள்தூள் - 1/4டீஸ்பூன் 
கசூரி மேத்தி - 1டீஸ்பூன் 
வெண்ணெய் - 1டீஸ்பூன்
எண்ணெய் 
உப்பு 
தண்ணீர் 

செய்முறை 
ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சைமிளகாயை நறுக்கவும். தக்காளியையும் பொடியாக நறுக்கிவைக்கவும்.
மற்றொரு வெங்காயத்தையும், குடைமிளகாயையும் பெரிய சதுரத் துண்டுகளாக நறுக்கி தனியே வைக்கவும். 
1.கடாயில் எண்ணெய் காயவைத்து சீரகம் தாளிக்கவும். சீரகம் பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். 
2.வெங்காயம் ஓரளவு வதங்கியதும் , இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசம் போக வதக்கி, 
3. நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
4. தக்காளி குழைய வதங்கியதும், மிளகாய்த்தூள்-மல்லித்தூள்-மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். 
5. பிறகு பெரிய துண்டுகளாக நறுக்கிய இரண்டாவது வெங்காயம் - குடைமிளகாயைச் சேர்த்து வதக்கவும். 
6. ஒரு டீஸ்பூன் வெண்ணையையும் சேர்த்து வதக்கிவிட்டு, சில நிமிடங்கள் கழித்து சுமார் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். 
7. மிதமான தீயில் மசாலா 3-4 நிமிடங்கள் கொதிவந்ததும், 
8. அடுப்பில் தணலை குறைத்து ஹாஃப் & ஹாஃப் பாலைச் சேர்க்கவும். 
9. பால் மசாலாவுடன் கலந்து சூடானவுடன் நறுக்கிய பனீர் துண்டுகளைச் சேர்க்கவும்.
10. இரண்டு மூன்று நிமிடங்கள் அடுப்பிலேயே வைத்து, பனீர் மசாலாவுடன் சேர்ந்து சூடானதும் அடுப்பிலிருந்து இறக்கவும். 
11. கசூரி மேத்தியை மசாலாவில் சேர்க்கவும். 
சுவையான பனீர் கேப்ஸிகம் மசாலா / பனீர் கேப்ஸிகம் (D)தோ ப்யாஸா ரெடி. சப்பாத்தி, பரோட்டா, மற்றும் புலாவ்-பிரியாணி-ஜீரா ரைஸ் வகைகளுடன் பரிமாறலாம்.

குறிப்பு
இந்த பதிவில் படங்களை இணைத்ததும், ரெசிப்பியை டைப் செய்ததும், குறிப்பாக பனீர் மசாலா & சப்பாத்தியை வெளுத்துக் கட்டியதும் மட்டிலுமே என் பங்கு. மற்றபடி முழுச் சமையலும் லயா அப்பாவின் கைவண்ணம்!! :) :D ;)  Holiday Special!! B-)

4 comments:

  1. உங்களின் பங்கு மிகவும் பிடித்திருக்கிறது... ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. ஹிஹி...என்னோட பங்குதானே மிக முக்கியம்? கஷ்டப்பட்டு சமைத்தாலும் அதை ருசி பார்க்க ஆள் வேணும்தானே?B-)
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டிடி அண்ணா! :)

      Delete
  2. ஹாஹாஹா,,

    உங்களுக்கு வாழ்த்துக்கள்,,

    முயற்சி செய்து பார்க்கிறேன்,, பாராட்டு பெற,, ஹாஹா

    ReplyDelete
    Replies
    1. செய்து பார்த்து சொல்லுங்கங்க! பாராட்டு பெற வாழ்த்துக்கள்! :)

      Delete

LinkWithin

Related Posts with Thumbnails