Friday, June 24, 2011

மாம்பழம் நறுக்குவது எப்படி? / How to cut a Mango?

தேவையான பொருட்கள்
நல்ல சுவையான,இனிப்பான மாம்பழம்
கத்தி
கட்டிங் போர்டு
நிதானமாக நறுக்குவதற்கு தேவையான நேரம் & பொறுமை & அழகுணர்ச்சி & நளினம் எக்ஸட்ரா,எக்ஸட்ரா!! :)))))))

செய்முறை
முதலில் மாம்பழத்தை சுத்தமாக கழுவிக்கொள்ளவும்.
பழத்தின் மேலே இருக்கும் காம்புப்பகுதியைக் கத்தியால் நறுக்கி நீக்கவும்.
மாம்பழத்தை 90டிகிரி கோணத்தில் செங்குத்தாக நிற்க வைத்து இடது கையால் பிடித்துக்கொள்ளவும்.
வலது கையால் பதமான (ஷார்ப்-ஆன) கத்தியை எடுத்து மாம்பழத்தினை படத்திலுள்ளவாறு நறுக்கவும்.
நறுக்கிய துண்டுகளில் ஒன்றை இடது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு, வலது கையில் உள்ள கத்தியால் கவனமாக குறுக்கும் நெடுக்குமாக கோடுகள் போட்டது போல் நறுக்கவும். (கோடு நேரா இருக்கோணும், கோணையா நறுக்கிராதீங்க)
நறுக்கிய பழத்தின் விளிம்புகளைப் பிடித்து மெதுவாக (பழத்தின் தோல் பகுதியை உட்புறமாக கொஞ்சம் அழுத்தம் கொடுத்துவிட்டு) விரிக்கவும். டடா! அழகான மாம்பழத்துண்டுகள் ரெடி!

அவ்ளோதாங்க, மாம்பழம் நறுக்க ஸ்டெப்-பை-ஸ்டெப் ப்ராஸஸ்!! சாப்பிடுறவங்க விரல்களால் துண்டுகளை எடுத்து சாப்பிடுவார்கள் என்றால் அப்படியே பரிமாறலாம், அல்லது ரொம்ப நாசூக்கு பார்ப்பாங்க என்றால், கத்தியால் துண்டுகளை நறுக்கி எடுத்து பரிமாறலாம். ;)

சரி, பழத்தின் 2 துண்டுகளை நறுக்கறதுக்கு மட்டும்தானே ஸ்டெப் இருக்கு? மீதி பழத்தை என்ன செய்வது என்ற கேள்வி உங்களுக்கு வரலாம், எனக்கும் வந்தது. இந்த ஸ்டெப் சொல்லியிருந்த லைப்ரரி புக்கில் அதுக்கு மேலே ஒண்ணும் சொல்லல. அதுக்காக சும்மா இருக்க முடியுமா? இன்டர்நெட்டில் தேடியதில் இப்படி ஒரு வீடியோ கிடைத்தது. நீங்களும் அதை ஃபாலோ பண்ணுங்கோ!!



நான் என்ன செய்தேன்னு கேப்பீங்கன்னு தெரியும்...பழத்தை அப்படியே சாப்பிடாம இப்படி பொறுமையா நறுக்குவதே ஒரு பெரிய வேலை,அதனால் மீதி இருக்கும் பழத்தை அப்படியே(!!) சாப்பிட்டுட்டேன். ஹிஹிஹிஹி!

ரொம்ப மொக்கையா இருக்கோ?? போன வாரம் ஒரு நண்பர் வீட்டுக்கு போயிட்டு மஷ்ரூம் வாங்கப்போன மார்க்கெட்லே தான் இந்த மாம்பழங்கள்(Bunny Mangoes, Product of Mexico) கிடைத்தது. நம்ம ஊர் மாம்பழம் போலவே சூப்பர் இனிப்பு!

கரெக்ட்டா அதே நேரம் லைப்ரரியில் ஒரு வார இதழைப் புரட்டுகையில் ஹவ் டு கட் எ மேங்கோ என்று படமெல்லாம் போட்டு விளக்கியிருந்தாங்களா.. தமிழ் வலையுலகிலும் இம்பூட்டு விளக்கமா யாரும் சொல்லிருந்த மாதிரி தெரில, அதான் வீட்டிலிருந்த பழத்தை வைச்சு நானும் உங்களுக்கு விளக்கி கழுவிட்டேன்! :))))))))

அடுத்தமுறை மாம்பழம் வாங்கைல இதே போல நறுக்கி அழகா சாப்புடுங்க,ஓக்கே? முதல் படத்தில் இருப்பது (நான் செய்த வண்டு இல்லை,கூகுள் இமேஜிலே கிடைத்த வண்டு ) போல அழகான பூச்சி-புழு ச்சீ,ச்சீ, கார்விங் செய்து வீட்டில் உள்ள குட்டீஸ்-ஐ/பார்ட்டிகளில் வைத்து விருந்தினர்களை அசத்துங்கோஓஓஓ!


ஓஹ்..அதாரது கையில் உருட்டுக்கட்டையுடன் ஓடி வருவது?? கமென்ட் போட்டு ஊக்கம்தரும் அன்புள்ளங்கள் எல்லாரும் கத்தி-கபடா-ஆயுதங்களுடன் பெரிய படையா வர மாதிரி தெரியுது, பக்கத்தில் வாரதுக்குள்ள மீ த எஸ்கேஏஏப்பு! ஹேப்பி வீகெண்ட் எவ்ரிபடி!

31 comments:

  1. hey mee the firstu..

    wow very useful post...:)

    enaku cutting ellam theriathu

    only eating,,parcel all mangos....

    ReplyDelete
  2. mee the second ;)

    //ரொம்ப மொக்கையா இருக்கோ??// nope. அப்பாடா! ஒரு மாதிரி நம்ம வழிக்கு வராங்கன்னு இருக்கு. சூப்பர் வண்டு. நானும் மாம்பழம் இப்புடித்தான் வெட்டுவேன். ஆனா இந்த மாதிரி கண்ணுல்லாம் வைக்கத் தோணினது இல்ல. நிச்சயமா அடுத்த பார்ட்டில மகி பேரால மாம்பழத்துவண்டு இருக்கும். (இதும் மஞ்சளாத்தான் இருக்கணுமா!!)

    ReplyDelete
  3. //லைப்ரரியில் ஒரு வார இதழைப் புரட்டுகையில் // இதுக்குத்தான் ஒழுங்கா லைப்ரரி போகணும் என்கிறது. கிக் கிக். ;)

    ReplyDelete
  4. //மீதி இருக்கும் பழத்தை அப்படியே(!!) சாப்பிட்டுட்டேன். // நல்லால்ல. ;( மீதியானாலும் யாருக்கும் கொடுக்காம தனியா சாப்பிடப் படாது. கோச்சுக்கப் போறாங்க வீட்ல இருக்கிறவங்க, பார்த்து. ;)

    ReplyDelete
  5. வண்டு அழகா பண்ணி இருக்கீங்க.
    - சொன்னது க்றிஸ்

    வண்டு மூக்கு ரொம்..ப க்யூட்டா இருக்கு. இதுல்லாம் தின்னப் படாது, செல்லமா வளக்கணும். - இது இமா

    ReplyDelete
  6. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! இமா இது நான் செய்த வண்டு இல்ல,சொல்லிருக்கேனே,பார்க்கலியா நீங்க? தெளிவாச் சொல்லாம விட்டிருக்கேனோ??!

    இது கூகுள் இமேஜஸிலே கிடைத்த வண்டு! இந்தமாதிரி கலைவண்ணமெல்லாம் உங்களுக்குத்தானே வரும்?? எங்களுக்கெல்லாம் அப்புடியே சாப்டத்தான் தெரியும்!! ஹிஹிஹி

    இருந்தாலும் அந்த வண்டைப் பிடிச்சு உங்க கண்ணில் காட்டியதுக்காக உங்க/க்றிஸ் அங்கிள் பாராட்டுகளை ஏற்றுக்கொள்கிறேன்! நன்றி! (இது எப்புடி? கடத் தேங்காய எடுத்து வழிப்புள்ளையாருக்கு உடைச்சுப்போட்டு வரமும் கேக்கறமாதிரி இருக்கோ? ;) )

    ReplyDelete
  7. மாம்பழம் கட் பண்ணத் தெறியாதவா கூட இருக்கா மகி. அரிவாள்மணையிலேயே கட் பண்ணி பழக்கமாநவர்களுக்கு கத்தியில் கட்பண்ணறதுகூட ப்ரம்மப் ப்ரயத்தனம்தான். எதையுமே அழகாகச் செய்தால் பாராட்டுதான். அந்தவிஷயத்தில் உன்னைச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. வீடியோவும் கண்டு பிடித்து எழுதியிருக்கே. பாராட்டு மழைதான்.

    ReplyDelete
  8. ஓஓஓஓஓஓஒ.... மாம்பழத்து வண்டூஊஊஊஊஊ.....

    சூப்பர் கிரே8:).

    கறுத்தக் கொழும்பான் மாம்பழத்தைக், கூடை கூடையாகச் சாப்பிட்டு வளர்ந்த எங்களுக்கே... கெள ரூ கட் எ மாம்பழமாம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).... கெள இஸ் இட்?:))).

    ReplyDelete
  9. நீங்க தெளிவாத்தான் சொல்லி இருக்கீங்க மகி. நான் தான் படத்திலிருந்து கண்ணை எடுக்க முடியாமல்... ;((

    நானும் அதேதான் நினைச்சன் அதீஸ். ;) இப்ப போற போக்கைப் பார்த்தால் படத்தைப் பார்த்து... சாப்பிட்டாச்சுது எண்டு நினைச்சுட்டு இருக்க வேணும் போல இருக்குது. இங்க வாறது எல்லாம் அங்க வெம்பிப் போச்சுது எண்டு தூக்கிப் போடுற பழம் மாதிரியே இருக்குது. ;((

    ReplyDelete
  10. என்னோட ப்ளாக் பார்த்து விட்டு யாராவது உங்களுக்கு பிறந்த நாள் மற்றும் கல்யாண நாள் வாழ்த்துக்குகள் சொல்லுவாங்க, உங்களுக்கு நிறைய வாழ்த்து கிடைக்கும்னு நினச்சேன் மகி. வீக் எண்டு என்பதால் யாரும் வரலையா ...இல்லேன்னா என்னோட ப்ளாக் யாரும் பார்க்கலையான்னு தெரியலை. உங்களுக்கு அங்க நாளே முடிய போறது..... இன்னிக்கு எப்படி போச்சு நல்லா ஸ்பென்ட் பண்ணீங்களா ???

    அருண் சார்க்கும் எங்களோட வாழ்த்துக்களை சொல்லிடுங்க.

    இனிய பிறந்த நாள் மற்றும் கல்யாண நாள் வாழ்த்துக்கள் மகி.... :)

    ReplyDelete
  11. 2 in 1!! இனிய பிறந்த நாள் மற்றும் கல்யாண நாள் வாழ்த்துக்கள் மகி. ;) @}->--
    இன்றைக்கு என்ன ஸ்பெஷல்? ;)

    ReplyDelete
  12. மகி உனக்கும், திரு.அருண் அவர்களுக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். பிறந்த நாள் வாழ்த்தும்
    கூடவே தொடர்ச்சியாக மற்ற எல்லா இனிய சுப விஷயங்களும் ஆசீர்வதிக்க வந்துகொண்டே இருக்க கடவுளை வேண்டும். அன்புடன்

    ReplyDelete
  13. Happy birthday Mahi and Happy anniversary to you both. Hope you had a great day :-)

    Nicely explained with pictorial illustration & video. The decorated piece posted from google images is really very cute.

    Nan narukka somberithanapattu vandu maathiri oru ota pottu pulp urinji eduthuduven ;-) paravalye kat panni mathavangalukku koduthirukeenga. Naan cut panna panna en vayukula poyudum.

    ReplyDelete
  14. Hi Mahi,

    I came across your blog recently and it is very interesting. Rom....ba nalla ezhithiringa (mokka podaringa??) Unga puniyathula went into Appavi Thangamani's blog as well. I was really at the end reading all posts. Neenga rendu perum blog ulahukku aatrum thondu mahaththanathu enbathu en thaazhmayana karuthu ( kashtapattu padichittingala??) Seekiram I'll write in tamil.

    Belated birthday & wedding anniversary wishes.

    Girija

    ReplyDelete
  15. wow!
    Nice post.
    first blog comment after set righting everything here at Chennai.
    My hearty wishes to your birthday and weddingday. many many more happy returns of both days.
    My blessings.
    vijimma.

    ReplyDelete
  16. hai mahi . nan unagaludaya sweet bun seiden aanal softaha varavillai .ennudaya baking yeast kasa kasa vadivil irukkm. illai evladhu neram pesayavendum maavai.nan siridhu neram tan pesainthen.

    ReplyDelete
  17. Belated birthday & wedding anniversary wishes mahi!!

    ReplyDelete
  18. மகி, நான் தோலை சீவிட்டு அப்படியே கத்தியால் வெட்டி சாப்பிடுவேன் ( of course பிள்ளைகள், கணவருக்கும் குடுத்து தான் ). ஒரு முறை குக்கிங் சானலில் இதே போல் காட்டினார்கள். அடுத்த முறை வாழைப்பழத்தின் தோலை எப்படி உறிப்பதுன்னு யாராவது பதிவு போடாம இருக்கணும்.

    ReplyDelete
  19. azhagaa irukku mahi, posted so many recipes, all are good, belated birthday and wedding anniversary wishes, coimbatore supero super

    ReplyDelete
  20. Madam potta
    Mango cutting
    Matter superu!

    Madam
    Marriage Anni
    Meter nalla odikitte irukonumnu
    'AAM'ravaneswarar kitte
    Mandi pottu vendikiren!

    -MCE

    அம்மம்மா...'எம்'ல எழுத எவ்ளோ கஷ்டமா கீது??!!

    என் கசின் சொல்வது போல்...
    இதுதான் 'அறு'சுவையோ?!

    ReplyDelete
  21. சிவா,மாம்பழ பார்சல் இன்னேரம்வந்து சேர்ந்திருக்கும்னு நினைக்கிறேன்! ;)
    நன்றி சிவா!

    இமா,இங்கே அப்பப்ப இப்படி நல்ல பழங்கள் கிடைக்குது.நம்ம ஊர் மாதிரி நிறைய வெரைட்டி கிடைக்காது. உங்க ஊர்ல சம்மர்ல கிடைக்காதா?


    காமாட்சிமா,எனக்கும் இவ்வளவு நாள் இப்படியெல்லாம் கட் பண்ணத் தெரியாது.புக்ல பாத்துதான் கத்துகிட்டேன். ஊர்ல எல்லாம் இன்னும் அரிவாள்மணைதான்! :) நன்றிமா,வருகைக்கும் கருத்துக்கும்!

    //கறுத்தக் கொழும்பான் மாம்பழத்தைக்// இது என்ன வகை மாம்பழம் அதிரா? எங்கூர்ல நீலம்-அல்போன்ஸா-கிளிமூக்கு இன்னும் பலவகை கேள்விப்பட்டிருக்கேன், இது புதுசா இருக்கு! அவ்வ்வ்வ்-னா கோவம் இல்லைதானே? ;)
    நன்றி அதிரா!

    ப்ரியா,உங்க பதிவிற்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி! :)

    இமா,/இன்றைக்கு என்ன ஸ்பெஷல்? ;)/ சின்னதா ரெண்டு "கேரட்" கிடைச்சது,அதுதான் ஸ்பெஷல் இமா! உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!

    காமாட்சிமா,உங்களைப்போன்ற பெரியவங்க ஆசீர்வாதம் கிடைத்தது சந்தோஷமா இருக்கு.:) நன்றி அம்மா!



    அதிரா,

    ReplyDelete
  22. மீரா,தேங்க்ஸ்ங்க! வீகெண்ட் போனதே தெரியல,அவ்ளோ ஸ்பீடா போயிடுச்சு. :)

    எனக்கு இப்படி மாம்பழம் நறுக்குவது சிம்பிள்னு தெரில, எதோ பெரிய வேலை அதுன்னு நினைச்சேன்,ஒருமுறை ட்ரை பண்ணப்பவே அழகா வந்ததா,அதான் போஸ்ட் பண்ணிட்டேன்.:)

    நானும் வண்டுமாதிரி மாம்பழம் சாப்பிட்டிருக்கேன். என்னதான் இப்புடி டெகரேட் பண்ணினாலும் நம்ம ஸ்டைல்ல சாப்ட்டா தனி ருசிதான்!

    நன்றிங்க மீரா!

    கிரிஜா,வாங்க வாங்க! நீங்க எல்லாரும்(!) தர ஆதரவுதான் எங்களை மாதிரி ஆட்களை எழுதவைக்குது! ரொம்ப சந்தோஷம் உங்க கமென்ட்டை பார்த்து!

    புவனா ப்ளாகும் போனீங்களா? நல்லா டைம் பாஸாகிருக்குமே! :)

    தங்கிலீஷ் எல்லாம் நான் ஈஸியாவே படிப்பேன்,ஆனாலும் சீக்கிரம் தமிழில் எழுத முயற்சி செய்யுங்க.

    உங்க ப்ளாக் பார்க்க ட்ரை பண்ணினேன்,லிங்க் இல்லையே?

    மிக்க நன்றிங்க!

    வாழ்த்துக்களுக்கு நன்றி அதிரா! இதுக்கு முன்னாலே உங்களுக்கு பதில் டைப் பண்ணினேன், இப்போ பாத்தா அதைக் காணோம். :( நீங்க சொன்ன கொழும்பான் மாம்பழம் நான் கேள்விப்பட்டதில்லை. ரொம்ப நாள் கழிச்சு இந்த பழங்கள் கிடைச்சது. உங்க 'கௌ' ரெம்ப நல்லா இருக்கு! :)
    நன்றி அதிரா!

    விஜிமா,ஊரில் செட்டில் ஆகிட்டீங்களா? முதல் கமென்ட் எனக்கா? தேங்க்ஸ் விஜிமா! :)
    உங்க வாழ்த்துக்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  23. சபீக்கா,நான் யூஸ் பண்ணற ஈஸ்ட்டும் கசகசா மாதிரிதாங்க இருக்கும். வெதுவெதுப்பான தண்ணில கரைச்சு நுரைக்கவைச்சு பிசையணும். மாவு குறைந்தது பத்து நிமிஷமாவது பிசையணுங்க. நான் கால்மணி நேரத்துக்கு மேலே பிசையுவேன்.

    இந்த முறை நீங்க செய்த தப்புகளை சரி செய்து அடுத்தமுறை சரிசெய்து ட்ரை பண்ணிப்பாருங்க.practice makes things perfect. :)
    நன்றி!

    மேனகா,வாழ்த்துக்களுக்கு நன்றி மேனகா!

    /அடுத்த முறை வாழைப்பழத்தின் தோலை எப்படி உறிப்பதுன்னு யாராவது பதிவு போடாம இருக்கணும்./கர்ர்ர்ர்ர்ர்! அதெல்லாம் போட நான் வாழப்பழ சோம்பேறியா,இல்ல படிக்கப்போற நீங்கதான் வாழைப்பழ சோம்பேறியா வானதி? ;)
    நானும் வழக்கமா செய்வதை போஸ்ட் பண்ணமாட்டேன்,இப்படி ஏதாவது புதுசா ட்ரை பண்ணினா போட்டு படிக்கரவங்களை ஒருவழி பண்ணிருவேன்!ஹிஹி!
    நன்றி வானதி!

    வேணி,ரொம்ப பிஸீயாகிட்டீங்க! இங்கே உங்க பதிவுகளைப் பார்ப்பது சந்தோஷம். வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் நன்றி வேணி.

    MCE சார்,கஷ்டப்பட்டு ஏதோ சொல்ல முயற்சிக்கிறீங்கன்னு புரியுது.என்னன்னுதான் விளங்கல!!
    ஆனிவர்ஸரி வாழ்த்துக்கள் சொல்லறீங்கன்னு நானா புரிஞ்சுகிட்டு நன்றி சொல்லிக்கறேன்!

    ReplyDelete
  24. Hi Mahi,

    Blogkku naan puthusunga. Unga recipes and articles romba nalla irukku. En blog la ippothaan oru pathivu pottirukken. Tamil la eppadinga comments type pannurathu unga blog la? Please help.

    ReplyDelete
  25. என் சமையல்,உங்க வீட்டுக்கு வந்து டீ-பிஸ்கட் சாப்ட்டுட்டு கமென்ட்டும் போட்டிருக்கேன்,
    பாருங்க!:)

    இப்பத்தானே ப்ளாக் உலகில் புகுந்திருக்கீங்க,சீக்கிரம் பழகிடும்.உங்களுக்கு உதவி தேவைன்னா தயங்காமக் கேளுங்க. உதவும்கரங்கள் வலையுலகில் நிறைய உண்டு!

    உங்க கருத்துக்கு நன்றி!

    ReplyDelete
  26. ஒன்னும் சொல்லர்த்துக்கு இல்லை!! "நறுக்கின மாம்பழத்தை நொசுக்குவது எப்படி?"னு யாராவது பதிவு போடாம இருக்கனும்!!! மாம்பழம் சாப்பிடும் போது நிஜமான வண்டு உதட்டை கடிச்ச அனுபவம் எல்லாம் நமக்கு உண்டு!

    ReplyDelete
  27. மகி, அது இலங்கையில்தான் இருக்குதாக்கும், நல்ல பெரிய மாம்பழம்.... கடும்பச்சைத்தோலாக இருக்கும் காய், பழுத்தால் கற்கண்டுதான்(சூப்பர் இனிப்பு:)).

    இந்தப்படத்தில கரும்பச்சைத்தோலோடு இருக்கும் பெரிய மாங்காய்தான் க.கொ மாங்காய், பழுத்தால் தோல் மஞ்சளாகும்.

    http://www.google.co.uk/imgres?imgurl=http://www.goviya.lk/enwiki/uploads/images/f/fe/Mango.jpg&imgrefurl=http://www.goviya.lk/enwiki/index.php%3Ftitle%3DMango&usg=__TGtmzsgSGF5Ax8-rLbdc5AKbHmc=&h=350&w=250&sz=65&hl=en&start=116&sig2=Li4KnaMc5XXe5NaBBTSUVQ&zoom=1&tbnid=W11V37gsHL-rEM:&tbnh=137&tbnw=102&ei=zOcMTsbJB8ay8QPrxpS9Dg&prev=/search%3Fq%3Dsrilanka%2Bmango%2Bimages%26hl%3Den%26sa%3DX%26biw%3D1440%26bih%3D747%26tbm%3Disch&itbs=1&iact=hc&vpx=363&vpy=224&dur=7127&hovh=266&hovw=190&tx=92&ty=122&page=5&ndsp=28&ved=1t:429,r:1,s:116

    ReplyDelete
  28. Mambalam narukkuvathrkku oru videova
    ayyoda samy.
    Mahi eluthuvathy than rusi mambalatthaveda.
    viji

    ReplyDelete
  29. மகி, மாம்பழம் வாங்கறது எப்படினு கூட போஸ்ட் போட்டு இருந்தா நல்லா இருந்து இருக்குமோ... ஜஸ்ட் கிட்டிங்... கட்டிங்ல இத்தன மேட்டர் இருக்கா? ஹ்ம்ம்... நான் என்னத்த கண்டேன்... கட் பண்ணி குடுத்தா சாப்பிட தான் தெரியும்...:))

    ReplyDelete
  30. தக்குடு வண்டை சாப்டாம இருக்கரவரைக்கும் ஷேமம்தான்! ;) தேங்க்ஸ் தக்குடு!

    அதிரா,படம் பார்த்தேன். அதிலேயும் இதே மாதிரி கட் பண்ணிவச்சிருக்காங்க பாத்தீங்கதானே? :)

    விஜிம்மா,தேங்க்ஸ்! :)

    புவனா,மாம்பழம் எப்படி வாங்கறதுன்னெல்லாம் தெரியாது,இல்லைன்னா போட்டிருப்பேன்.
    தேங்க்ஸ் புவனா!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails