Friday, May 4, 2012

ரெய்ன்..ரெய்ன்..கம் எகெய்ன்!

திங்கள் முதல் வெள்ளி வரை மழைவந்தால் என்ன செய்யலாம்??!
  • மீதி இரண்டு நாட்களாவது விடுமுறை தருகிறாரே வருணபகவான் என்று சந்தோஷப் படலாம்!
  • பார்த்துப் பார்த்து தண்ணீர் பாய்ச்சினாலும் காட்டாத செழுமையை மழைநீர் ருசித்துக் காட்டும் தொட்டிச் செடிகளை ரசிக்கலாம்!
  • மழையில் நனைந்த பூக்கள் மெல்லச் சிரிப்பதை சலிக்கச் சலிக்க கேமராவில் சிறை பிடிக்கலாம்!
  • யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்! -என்ற நல்லெண்ணத்துடன் வீட்டுப் பூக்களை வலைப்பூவிலும் பகிரலாம்!

  • முக்கோணமாய் மடிக்கத் தெரியாமல் போராடி ஒரு வழியாய் சுமாராய் வெற்றியும் பெற்று, வெங்காய ஃபப்ஸ் செய்து சுடச்சுட காபியுடன் ருசிக்கலாம்!
  • காரக்கடலை செய்து, அண்ணாச்சி கடையில் இருப்பது போல், கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்து, தினமும் கொஞ்சம் கொறிக்கலாம்!
  • இரண்டையும் படமெடுத்து ப்ளாகில் போட்டு எல்லாரையும் கொஞ்சம் வெறுப்பும் ஏற்றலாம்! :)))))))))

மழை கவிதை கொண்டு வருது, யாரும் கதவடைக்க வேண்டாம்! - ஒரு கறுப்புக்கொடி காட்டி யாரும் குடைபிடிக்க வேண்டாம்! இது தேவதையின் பரிசு, யாரும் திரும்பிக் கொள்ளவேண்டாம்! - என்
வலைப்பூவை ரசிக்க, ஒருவரும் தயக்கம் கொள்ளவும் வேண்டாம்! ;)

ஆல்பத்திலிருக்கும் படங்களை ரசிங்க, காஃபி -ஸ்னாக்ஸ் எடுத்துக்குங்க, ஹேப்பி வீக் எண்ட் எவ்ரிபடி!

34 comments:

  1. Great post Mahi:-) Wonderful tea time snacks as well..love to see the recipes soon.

    ReplyDelete
  2. happy week end mahi :)))))))

    thanks for the coffee and puffs .

    ReplyDelete
  3. very pretty n colorful flowers...beautiful shots too...thanks for sharing !

    ReplyDelete
  4. மகி பூண்டு ஆறு cloves:)))))))
    இதை தமிழில் எழுதி பூஸ்கிட்ட நான் மாட்டிக்க மாட்டேனே .
    எனக்கு ஒரு பஞ்சாபி பெண்மணி சமோசா மடிக்க கற்று தந்தாங்க.
    நான் ட்ரை பண்ணிட்டு சொல்றேன் .ஆனா உங்க சமொசாஸ் அழகா நல்லா வந்திருக்கு

    ReplyDelete
  5. எங்களுக்கு மழை வேணாம் லாஸ்ட் வீக் முழுதும் இங்கே மழைதான் .
    நீங்க நல்லா விளையாடுங்க

    ReplyDelete
  6. aah!ooh!yeehhh!
    Enjoyed very much.Thanks for the visual treat.

    ReplyDelete
  7. //பார்த்துப் பார்த்து தண்ணீர் பாய்ச்சினாலும் காட்டாத செழுமையை மழைநீர் ருசித்துக் காட்டும் தொட்டிச் செடி// இதுதான் எனக்கும் புரியுறதே இல்ல. முளைக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கும் விதைகள் கூட சட்டென்று முளை விட்டு இருக்கும். இயற்கையின் விந்தை! மழை விட்ட மறுநாட்களில் தோட்டத்தை வலம்வர எனக்கும் பிடிக்கும்.

    //மழை கவிதை கொண்டு வருது, யாரும் கதவடைக்க வேண்டாம்! - ஒரு கறுப்புக்கொடி காட்டி யாரும் குடைபிடிக்க வேண்டாம்! இது தேவதையின் பரிசு, யாரும் திரும்பிக் கொள்ளவேண்டாம்! - என்
    வலைப்பூவை ரசிக்க, ஒருவரும் தயக்கம் கொள்ளவும் வேண்டாம்! ;)// sweeeet.

    அனுபவிச்சு இப்புடி எழுத மனசு இறகு மாதிரி இருக்கணும் மகி. ரொம்ப ஹாப்பி மூட்ல இருக்கீங்கன்னு புரியுது. :)

    இந்த தேவைதையின் பரிசை நானும் ரசித்து ருசிக்கிறேன். அந்த சந்தோஷங்கள் தொற்றி எனக்கும் இறகு முளைத்ததே.

    Thanks & enjoy ur weekend without 'வ' ;)))

    ReplyDelete
  8. //இரண்டையும் படமெடுத்து ப்ளாகில் போட்டு எல்லாரையும் கொஞ்சம் வெறுப்பும் ஏற்றலாம்! :)))))))))//

    என்ன திடீருன்னு இப்படி உண்மைய எல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க ?

    ReplyDelete
  9. நாங்க எல்லாம் ரெயின் ரெயின் கோ அவே ன்னு நாங்க எல்லாம் இங்கே பா...டிக்கிட்டு இருக்கோம் அஞ்சு சொன்னத போல எங்களுக்கு மழை வேணாம் அந்த வேர்கடலை மட்டும் அப்புடியே பாட்டிலோட இந்த பக்கம் தள்ளுங்க

    ReplyDelete
  10. நித்து,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..ரெசிப்பி போட்டு போரடிக்குதுன்னுதான் பூ பக்கம் போனேன்! ;) சீக்கிரம் பப்ளிஷ் பண்ணறேன்!
    ~
    சங்கீதா,வருகைக்கும் ரசித்து கருத்து சொன்னதுக்கும் மிக்க நன்றி!
    ~

    ReplyDelete
  11. என் சுவாசகாற்றே பாட்டு சூப்பர் மகி. எனக்கு இந்த படத்தில் வரும் தீண்டாய் பாட்டு ரொம்ப புடிக்கும். என்ன தான் சொல்லுங்க மழைய பார்த்து திட்டிட்டு நான் எல்லாம் ஒண்ணுமே உருப்படியா பண்ண மாட்டேன். இந்த மாதிரி ஒரு மைன்ட் செட் இருந்தா எங்க வேணா சந்தோஷமா இருக்கலாம். ஜமாயுங்கோ.

    ReplyDelete
  12. //முக்கோணமாய் மடிக்கத் தெரியாமல் போராடி// படத்துல போராடின மாதிரி தெரியலையே நல்லாத்தானே இருக்கு ???

    ReplyDelete
  13. //நல்லெண்ணத்துடன் வீட்டுப் பூக்களை வலைப்பூவிலும் பகிரலாம்!//

    அதுக்கெல்லாம் நேரம் நல்லா இருக்கணும் அம்மணி. நான் எல்லாம் இந்த காத்துல மழையில இருந்த செடி எல்லாம் எப்படி கீழே விழுந்து இருக்குன்னு வேணா போடலாம்

    ReplyDelete
  14. /பூண்டு ஆறு cloves:)))))))/ஓஹ்...ஆறு பல்லு?!!! ;);) எங்க ஊர்ப் பூண்டெல்லாம் பல்லு, தலை,வாலு எல்லாம் இருக்கிற பூண்டுதான்,ஸோ மீ டெல்லிங் பல்லூஊஊ ஏஞ்சல் அக்கா! :)

    /எனக்கு ஒரு பஞ்சாபி பெண்மணி சமோசா மடிக்க கற்று தந்தாங்க./ஆஹா! ப்ராக்டிகல் க்ளாஸே கிடைச்சிருக்கு உங்களுக்கு. நானும் வீடியோல பாத்தப்ப சிம்பிளாத்தான் தெரிஞ்சது. ஆனா அன்னிக்குன்னு பார்த்து விதி சதி பண்ணி, பொறுமையில்லாம செய்ததில் கொஞ்சம் சொதப்பல்ஸ்! ;)
    நீங்க எப்படி மடிக்கிறீங்கனு ஃபோட்டோ எடுத்து போடுங்களேன், if possible?

    //நீங்க நல்லா விளையாடுங்க //வீகென்ட் வந்தாச்சு,வெயிலும் வந்தாச்சு. மழையில் விளையாடறதெல்லாம் சினிமா ஹீரோயினுங்க,நான் வீட்டுக்குள்ளதான் இருப்பேன்! குளிர்-க்ளூமி-டிப்ரெஸிங் வெதர்னு ரொம்ப போரடிச்ச மழையின் மறுபக்கத்தை மறக்கத்தான் அழகான இந்தப் பக்கத்தில் கவனத்தை செலுத்திட்டேன். :)))

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஏஞ்சல் அக்கா!
    ~~
    ஆசியாக்கா,யு ஆர் வெரி வெல்கம்! :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    இமா,விஷுவல் ட்ரீட்டை காரக்கடலையும்,காஃபியும் அமுக்கிருச்சோன்னு கொஞ்சம் ஃபீலிங்க்ஸ்ல இருந்தேன்,இப்ப இல்லை! :)))))

    ரசித்து கருத்துக்கள் சொன்னது மிக்க மகிழ்ச்சி..நேற்று மனசு கொஞ்சமே கொஞ்ச நேரம் இறகு போல பறந்தது..அப்பதான் இந்த போஸ்ட்டை உருவாக்கினேன்.உடனே பப்ளிஷ் பண்ணாம ஷெட்யூல் பண்ணிவிட்டுட்டேன்.

    உங்களுக்கும் இனிய வார இறுதி! Enjoy the <>< !!!
    ~~
    கிரிஜா,/என்ன திடீருன்னு இப்படி உண்மைய எல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க ?/ எ.கொ.கி.இ.? எப்பொழுதும் உண்மையே நவிலும் என்னைப் பார்த்து தாங்கள் இப்படி ஒரு வினாவைத் தொடுக்கலாமா? ;))))))

    //எங்களுக்கு மழை வேணாம் அந்த வேர்கடலை மட்டும் அப்புடியே பாட்டிலோட இந்தபக்கம் தள்ளுங்க // சொய்ய்ய்ய்ய்ங்ங்ங்ங்.....ங்ங்க்! தள்ளிவிட்டுட்டேன், பாட்டில் வந்து சேர்ந்துதான்னு சொல்லுங்க! ;))))))
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிரிஜா!

    ReplyDelete
  15. என் சுவாசக் காற்றே-வில் எல்லாப் பாட்டுமே எனக்கு ரொம்ப பிடிக்குங்க கிரிஜா! தீண்டாய்-பாட்டை விடவும் இந்தப் பாட்டுதான் என் ஃபேவரிட்! :)

    நானும் 3 நாள் மழையைத் திட்டினேன்,அப்புறம் நாலாவதுநாளும் மழை தொடரவே, எங்காத்துக்காரர் அப்ரோச்,"Count your blessings"-சடார்னு நினைவு வந்தது, இந்தப் பதிவும் வந்துருச்சு!:)

    உங்க வீட்டுச் செடிகள் எல்லாம் மண்ணில் இருக்கோ? பெரீய்ய புயல்தான் வந்திருக்கும் போல உங்கூர்ல.. take care of the garden!

    //படத்துல போராடின மாதிரி தெரியலையே நல்லாத்தானே இருக்கு ???//ஹ்ஹிஹி..நல்லா இருந்த பஃப்ஸ் மட்டும்தானே படமே எடுத்தேன்?!

    அதாவதுங்க, மொத்தம் 8 பஃப்ஸ் செய்தேன். அதிலே 2 சொதப்பல்ஸ்(அ)ரொம்ப சுமார், 4 சுமார், 2 சூப்பரா வந்தது.
    இப்பூடி உண்மையெல்லாம் சொல்லவைக்கிறீங்களே,இது நியாயமா?

    வெள்ளிக்கிழமையா இருக்கப் போயி நான் பொய் பேசாம..ச்சே,ச்சே,உண்மையை மறைக்காம :) உங்களுக்குப் பதில் சொல்லிட்டு இருக்கேன். ;)))

    ReplyDelete
  16. Those samosas and peanuts look really tempting..

    ReplyDelete
  17. ohoooo....could smell the fresh drizzle breeze here..awesome post Mahi..
    hve fun & enjoy the lipsmacking samosas & fritters..:P
    Tasty Appetite

    ReplyDelete
  18. konjam கொஞ்சம் லேட் ஆனால் மீ தா firstu

    ReplyDelete
  19. வெள்ளை பூக்கள் என்ற பாடல் எப்போது
    மஞ்சள் பூக்கள் இன்று பாட ஆரம்பித்து போல இருக்கிறது புகைப்படங்கள் அருமை
    தோட்டமும் பூக்களும் அழகான சூழ்நிலைதான்

    ReplyDelete
  20. இது தேவதையின் பரிசு, யாரும் திரும்பிக் கொள்ளவேண்டாம்! - என்
    வலைப்பூவை ரசிக்க, ஒருவரும் தயக்கம் கொள்ளவும் வேண்டாம்! ;)////


    nice

    ReplyDelete
  21. மழை கவிதை கொண்டு வருது, யாரும் கதவடைக்க வேண்டாம்! - ஒரு கறுப்புக்கொடி காட்டி யாரும் குடைபிடிக்க வேண்டாம்! இது தேவதையின் பரிசு, யாரும் திரும்பிக் கொள்ளவேண்டாம்! - என்
    வலைப்பூவை ரசிக்க, ஒருவரும் தயக்கம் கொள்ளவும் வேண்டாம்! ;)
    //

    ஆஹா..

    கவிதை பொழிகிறது

    ஒவ்வொரு துளியிலும் மகின் முகம் தெரிகிறது...

    ReplyDelete
  22. sooper mahi... nalla azhagiya rasanai ungaluku!!!

    ReplyDelete
  23. //angelin said...
    மகி பூண்டு ஆறு cloves:)))))))
    இதை தமிழில் எழுதி பூஸ்கிட்ட நான் மாட்டிக்க மாட்டேனே .///

    ஹா..ஹா..ஹா.. இதுக்கு தமிழ் சொல்லாமல் இனிமேல் ஆரையும் சமையல் குறிப்பு தமிழ்ல போட விடமாட்டேன் சொல்லிட்டேன்:)))..கர்ர்ர்ர்ர்ர்:)).

    ReplyDelete
  24. மகிக்கு கவிதை கவிதையா வருதே... என்ன ஆச்சு?:)) மழியில நனைஞ்ச எபெக்ட்டோ? எனக்கு மழையே வாணாம் எண்டு போச்சு... இங்கே மழைதான் அதிகம்.

    விடுமுறை நாட்களில் மட்டும் சோஓஓஓஓஓஒ என்ற அடை மழை பிடிக்கும்... போர்த்துக்கொண்டு படுத்திருந்து மழையோசை கேட்க நல்லா இருக்கும் மற்ற நாட்களில் வாண்டவே வாணாம்....

    ReplyDelete
  25. அங்கு செவ்வந்து பூத்திட்டுதா மகி. இங்கு இப்பத்தான் டபடில் பூத்து முடிவுக்கு வருது ரியூலிப்ஸ்ஸ்ஸ் மொட்டு அழகா விரியுது சூப்பராக இருக்கு... அடுத்த மாதம்தான் செவ்வந்தி மலரும்.

    ReplyDelete
  26. மேலே ஸ்னாக்ஸ்ல குட்டிக்குட்டி உருண்டையாக இருப்பது சிக்கின் பக்கோராவோ? எனக்கு அதுமட்டும்தான் வேணும்ம்ம்ம்ம்ம்... ஆருக்கும் பிச்சுப் பிச்சுக் கொடுக்க மாட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:)))

    ReplyDelete
  27. //Siva sankar said...
    konjam கொஞ்சம் லேட் ஆனால் மீ தா first///

    திரும்பவும் ஆரம்பிச்சுட்டாங்கையாஆஆஆஆஆஆஅ:)))

    ReplyDelete
  28. மழை திரும வரத்தான் போகுது, ஏணெண்டால் மகி இண்டைக்கு உடனுக்குடன் பதில் போட்டிருக்கிறா... மீஈஈஈஈஈஈஈ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்.. தேம்ஸ் என்னைத் தேடுதே:)))

    ReplyDelete
  29. மழையும் செடியும், மலரும் நினைவும்
    கரகர ஸ்னாக்ஸும், கலகல பதிவும்
    கொட்டோ கொட்டுனு,கொட்டும் விஷயமும், ஓ இதெல்லாம் மஹியின் பதிவுகள்.
    புரிகிறது இப்போது.

    ReplyDelete
  30. Mahi,

    மழையில் நனைந்துள்ள அழகானப் பூக்கள்,தேனீ எல்லாமே சூப்பர். மனித முகச் சாயலுடன் இருப்பதால் (முரட்டுக்காமெடி வில்லன்) பூக்களுக்கிடையில் pansy flowers வித்தியாசமாகத் தெரியும்.காரக்கடலை,பப்ஸுடன் வீக்கென்டா! நல்லா என்ஜாய் பன்னுங்க.

    ReplyDelete
  31. ஹேமா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    ஜெயந்தி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! இந்த வாரம் வெயில் கொளுத்துது! ;)
    ~~
    /மீ தா firstu/ இந்த மழலைத் தமிழுக்காகவே ;) சிவாக்கு முதலிடம்தான்! :)

    தோட்டமெல்லாம் இல்லை சிவா,நாலே நாலு தொட்டிதான் இருக்குது! :)

    வருகைக்கும், ரசித்து கருத்து சொன்னதுக்கும் நன்றி சிவா!
    ~~
    ஆஹா,ஸாதிகாக்கா!! :)) உங்களுக்கும் கவிதை தொத்திகிச்சு பாத்தீங்களா? வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    வித்யா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! எல்லாருக்கும் இருப்பதுதானே..நான் எழுதிட்டேன்,நீங்கள்லாம் எழுதாம ரசிக்கிறீங்க.அவ்வளவேதான்! :)
    ~~
    /விடுமுறை நாட்களில் மட்டும் சோஓஓஓஓஓஒ என்ற அடை மழை பிடிக்கும்... போர்த்துக்கொண்டு படுத்திருந்து மழையோசை கேட்க நல்லா இருக்கும் மற்ற நாட்களில் வாண்டவே வாணாம்.... /இதெல்லாமே ப்ராக்டிகல் டிஃபிகல்டீஸ்தான் அதிரா! ஆனாலும் மழையின் மறுபக்கம் அழகாவும் இருக்குதுல்ல? :)))

    /அங்கு செவ்வந்து பூத்திட்டுதா மகி./அது செவ்வந்து இல்லே..மேரிகோல்ட்! செவ்வந்து ;) பாவம்,பூச்சி புடிச்சிருக்கு அதிரா..இனிமேல்தான் தழையும்னு நினைக்கீறேன். எங்க வீட்டுப்பக்கம் ட்யூலிப்,டஃபடில் எல்லாம் அதிகம் இல்லை அதிரா..இங்கே பாப்பி-தான் அதிகம்!

    //மேலே ஸ்னாக்ஸ்ல குட்டிக்குட்டி உருண்டையாக இருப்பது சிக்கின் பக்கோராவோ?// இது சீரியஸா கேக்கறீங்களா,இல்லை காமெடியா?
    சீரியஸ்னா... கர்ர்ர்ர்ர்ர்ர்*100~~~
    காமெடின்னா... :))) *100~~~

    //மழை திரும வரத்தான் போகுது, ஏணெண்டால் மகி இண்டைக்கு உடனுக்குடன் பதில் போட்டிருக்கிறா..//இதுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்*1000~~~ பாருங்க,நீங்க இப்பூடிச் சொன்னதால் 2-3 நாள் கழிச்சுதான் பதில் சொல்லமுடிந்திருக்குது மகியால! ;)))))0

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா!
    ~~
    காமாட்சிம்மா,உங்க ரசனையான கருத்தைப் பார்க்கையில் ஒரு தனி சந்தோஷம்மா! :))))
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    சித்ராக்கா,நீங்க பிக்காஸா ஆல்பம் முழுக்க பாத்திருக்கீங்கன்னு உங்க கருத்தில இருந்தே தெரியுது! ஐ யம் ஹேப்பி! :)))))

    pansy-பூக்கள் bull dog முகம் போல தெரியும் எனக்கு..நீங்க முரட்டுக் காமெடி வில்லனுட்டீங்களே? :))) இதோ, இப்பவே போயி வில்லன் தெரியறாரான்னு பார்க்கப் போறேன். ஹாஹ்ஹா!

    வீகென்ட் வெயில்தாங்க, கடலை-பஃப்ஸ் எல்லாம் மழைவந்தப்ப செய்தது! வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி!

    ReplyDelete
  32. //முக்கோணமாய் மடிக்கத் தெரியாமல் போராடி ஒரு வழியாய் சுமாராய் வெற்றியும் பெற்று, வெங்காய ஃபப்ஸ் செய்து சுடச்சுட காபியுடன் ருசிக்கலாம்//

    My all time favourite no no all time craving'nu sollalaam...:)

    ReplyDelete
  33. Lovely post...Enjoying rains when we are roasting in Kattiri veyil!!!!
    Even I am a mazhai rasigai and my favorite lines are...
    //மழை கவிதை கொண்டு வருது, யாரும் கதவடைக்க வேண்டாம்! - ஒரு கறுப்புக்கொடி காட்டி யாரும் குடைபிடிக்க வேண்டாம்! இது தேவதையின் பரிசு, யாரும் திரும்பிக் கொள்ளவேண்டாம்! - என்
    வலைப்பூவை ரசிக்க, ஒருவரும் தயக்கம் கொள்ளவும் வேண்டாம்! ;)//

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails