தேவையான பொருட்கள்
மாங்காய் -1
வெல்லம் - 25கிராம் (சுமாராக)
எண்ணெய் - தாளிக்க
கடுகு -1/2டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
வரமிளகாய் -2
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை
மாங்காயைக் கழுவி தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மாங்காய்த் துண்டுகள், கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு வேகவைக்கவும். மாங்காய் வெந்ததும் கரண்டியால் மசிக்கவும்.
ரொம்பவும் மைய மசிக்காமல் ஒரு சில துண்டுகளை விட்டு மசித்திருக்கிறேன்.
வெல்லத்துடன் கொஞ்சமாக தண்ணீர் விட்டு மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து கரையவக்கவும்.
வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். அதனுடன் மசித்த மாங்காய்க் கலவையைச் சேர்க்கவும். வெல்லக் கரைசலும் மாங்காயும் நன்கு கலந்து சூடானதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
தாளிப்பு கரண்டியில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து, பெருங்காயம், கறிவேப்பிலை, கிள்ளிய வரமிளகாய் தாளித்து பச்சடியில் சேர்க்கவும். கலந்து விட்டு பரிமாறவும்.
சுவையான மாங்காய் பச்சடி தயார்.
குறிப்பு
வெல்லத்தின் அளவை படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளவும். ஒரு அச்சு வெல்லக் கட்டியில் பாதியை சேர்த்திருக்கிறேன்.
வேப்பம்பூ கிடைத்தால் அதனையும் தாளிப்பில் சேர்த்து தாளித்து கொட்டலாம். எனக்கு கிடைக்காததால் சேர்க்கவில்லை.
மாங்காயை நறுக்குவதற்கு பதில் காய் துருவியில் துருவியும் செய்யலாம். குக்கரில் 2 விசில் விட்டு வேகவைத்தும் வெல்லத்துடன் சேர்க்கலாம், அப்படி செய்கையில் மாங்காய் ஜாம் -பக்குவத்தில் பச்சடி கிடைக்கும். :)Recipe Courtesy : HERE
வாவ்.. மாங்காய்(கள்) என்னிடம் இருக்கு. நான் ஸ்ரப் செய்து தேங்காய் அரைத்து இஞ்சி,வெங்காயம்,ப.மிளகாய் சேர்த்துதான் பச்சடி செய்திருக்கேன். உங்க குறிப்பின்படி செய்துபார்க்கிறேன் மகி. பார்க்கவே நல்லாயிருக்கு.!!
ReplyDeleteவெட்டி மி,தூள்,உப்பு தொட்டு சாப்பிடுவதுண்டு.ஹி..ஹி..
//மி,தூள்,உப்பு தொட்டு சாப்பிடுவதுண்டு.ஹி..ஹி..// இது எங்க வீட்டிலும் நடக்கும், ஆனா சாப்பிடுவது நானில்லை..ஹி..ஹி..!! தேங்காய் சேர்த்த பச்சடி ரெசிப்பி பார்த்தேன் அம்முலு, ஆனா மாங்காயின் ஒரிஜினல் சுவை மாறிடுமோன்னு டவுட்டால இது செய்தேன், சூப்பர் டூப்பர் ஹிட்! இனி தேங்காய் சேர்த்து செய்வேனான்னே தெரிலை..நீங்களும் செய்து பாருங்க. நன்றி!
Deleteநல்ல குறிப்பு. மாங்காய் பச்சடி செய்முறை வித்தியாசமாக இருக்கு.
ReplyDeleteஉங்கள் செய்முறை வெங்காய வடகம் செய்து நேற்று தான் பொரித்து சாப்பிட்டேன். சுவை எனக்கு மிகவும் பிடித்து போனது.
வடகம் செய்தீங்களா ஷமீ?? ரொம்ப சந்தோஷம்..நானும் செய்யணும் இந்த வருஷம்..சரியான வெயில் கொளுத்துது இங்கே!!
Deleteமாங்காய்ப் பச்சடி செய்து பாருங்க..சீக்கிரமாவும் செய்திடலாம், ருசியும் சூப்பர்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
இங்க ஃரோஸன் கிடைக்கும். இப்பல்லாம் சமைக்காமலே தான் சாப்பிடுறோம். :-) நான் ப்ரியா சொன்னபடி செய்து சாப்பிடுவேனாம். :-)
ReplyDeleteஆவ்....ஃப்ரோஸன்!! ஊஹும்...ஏன்?? ஏன்?? உங்க ஊர்ல மாங்கா கிடைக்கறதில்ல?!! நாட் அக்சட்டபிள். வீட்டில மாங்கா மரம் வளர்க்கும்படி ஆணையிடுகிறோம். கர்ர்ர்ர்ர்ர்! :)))) ;)))
Deleteஃப்ரோஸன்ல சுவை கொஞ்சம் மட்டுத்தான்..இருந்தாலும் டிரை பண்ணிப் பாருங்கோ இமா! தேங்க்யூ!!
Love this pachadi anytime, even I made it the same way for the new year..
ReplyDeleteEven I make it the same way Mahi..
ReplyDelete:) this is the first time i made this hema!! Thanks for the comment(s)!! :)
Delete