Thursday, February 10, 2011

காலிஃப்ளவர்-ப்ரோக்கலி பொரியல்

காலிஃப்ளவர்-ப்ரோக்கலி பொரியல்னு டைட்டில் இருக்கு,ஆனா போட்டோல வெறும் காலிஃப்ளவர் மட்டும்தானே தெரியுதுன்னு நீங்க நினைக்கறீங்கன்னு எனக்கு தெரியுமே! :)

இந்தப் பொரியல் தனியா காலிஃப்ளவர்ல செய்தாலும் நல்லா இருக்கும்,ரெண்டு காயும் சேர்த்து செய்தாலும் நல்லா இருக்கும். இது காலிஃப்ளவர் மட்டும் செய்தபோது எடுத்த போட்டோ.

தேவையான பொருட்கள்
காலிஃப்ளவர்-ப்ரோக்கலி பூக்கள்-1கப்
வெங்காயம்(சிறியதாக)-1
பச்சைமிளகாய்-1
மிளகுத்தூள்-1/2ஸ்பூன்
சோம்புத்தூள்-1/
Dry தேங்காய் பவுடர்-3/4டேபிள்ஸ்பூன்
உப்பு
தாளிக்க
கடுகு-1/2டீஸ்பூன்
சீரகம்-1/2டீஸ்பூன்
கடலைப்பருப்பு,உளுந்துப்பருப்பு-தலா 1 டீஸ்பூன்
எண்ணெய்
அரைக்க
பாதாம்-10
இஞ்சி-சிறுதுண்டு
பூண்டு-2 இதழ்கள்

செய்முறை
பாதாமை வெந்நீரில் ஒரு மணிநேரம் ஊறவைத்து தோலுரிக்கவும். அதனுடன் இஞ்சி-பூண்டு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மைய அரைத்துவைக்கவும்.

வெங்காயம்,பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கவும்.

கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு,சீரகம்,க.பருப்பு-உ.பருப்பு தாளித்து வெங்காயம்,ப.மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அரைத்த பாதாம்-இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும்.

காலிஃப்ளவர்-ப்ரோக்கலி துண்டுகளை சேர்த்து உப்பு,மிளகுத்தூள்,சோம்புத்தூள் சேர்த்து அதிக தீயில் 4-5 நிமிடம் கடாயை மூடிவைத்து வேகவிடவும்.

தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுவையான காலிஃப்ளவர்-ப்ரோக்கலி பொரியல் ரெடி.
இதில் காய்கள் முழுவதும் வெந்திருக்காமல் க்ரன்ச்சியாக இருக்கும். சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். சாதத்துடனும் சாப்பிடலாம். நான் இந்தப் பொரியலைத் தனியாவே சாப்பிட்டுடறது வழக்கம். ஹிஹி!நீங்க உங்க வசதிப்படி சாப்பிடுங்க. :)

26 comments:

  1. இப்பதான் அங்கே கேட்டுட்டு வரேன் அதே கேள்வி

    காலி ஃப்ளவர் பூவா ..? இல்லை காய்கறியா விளக்கம் தேவை

    ReplyDelete
  2. //ஆனா போட்டோல வெறும் காலிஃப்ளவர் மட்டும்தானே தெரியுதுன்னு நீங்க நினைக்கறீங்கன்னு எனக்கு தெரியுமே! :)//

    இல்லையே மர ஸ்டாண்டும் தட்டுமுல்ல தெரியுது

    ReplyDelete
  3. //நான் இந்தப் பொரியலைத் தனியாவே சாப்பிட்டுடறது வழக்கம். //

    ஒத்தைக்கு தனியா சாப்பிடாதீங்க வயத்த வலிக்கும் ....பாவம் மாம்ஸ்..!!

    ReplyDelete
  4. //காலி ஃப்ளவர் பூவா ..? இல்லை காய்கறியா விளக்கம் தேவை//காலிஃப்ளவர்ங்கறது காய்கறியா யூஸ் பண்ணும் பூ! இது எப்பூடி ஜெய் அண்ணா?!! :)

    நீங்க பாடிய 'ஆசை' பாட்டு கேட்டேன். குரல் நல்லா இருக்குது,ARR உங்கள மிஸ் பண்ணிட்டாரே!தமிழ் கூறும் நல்லுலகமே உங்க குரலை மிஸ் பண்ணிடுச்சே..இன்னும் நிறையப் பாட்டு பாடுங்கோ!

    /இல்லையே மர ஸ்டாண்டும் தட்டுமுல்ல தெரியுது/ டேபிள் க்ளாத் தெரிலயா? பொரியல் இருக்க கிண்ணம் தெரியலயா? கண்ணுக்கு புது சோடாபுட்டி போட்டுட்டு சரியாப் பாருங்க.:)

    ReplyDelete
  5. /ஒத்தைக்கு தனியா சாப்பிடாதீங்க வயத்த வலிக்கும் ....பாவம் மாம்ஸ்..!!/நீங்க வேற! அவர் சாப்பிட்டதுக்கப்புறம் இருக்கற மிச்சம்-மீதியைத்தான் சாப்பிடுவேன் நானு! நாங்கள்லாம் 'கணவரே கண்கண்ட தெய்வம்'னு இருக்கற நல்ல புள்ளைங்களாக்கும்!

    ReplyDelete
  6. மகி, நல்லா இருக்கு. அடுத்த முறை செய்து பார்க்கணும்.

    வந்துட்டார்ப்பா கேள்வியின் நாயகன். ஜெய்க்கு பயந்தே நான் ரெசிப்பிகள் போடுறதில்லை ஹிஹி...

    ReplyDelete
  7. healthy version Mahi..thanks for ste by step pictures

    ReplyDelete
  8. காலிபிளவர் ப்ரோகோலி சேர்த்து செய்த பொரியல் வித்தியாசமாக இருக்கு மகி.

    ReplyDelete
  9. ப்ரோக்கோலி + காலிப்ளவர் சேர்த்து செய்தது நன்றாக இருக்கின்றது...நான் இரண்டுமே சேர்த்து செய்வது கிடையாது...நல்லா இருக்குமே என்ற பயம் தான்...இப்போ தான் பார்த்தாச்சு இல்ல...இனிமேல் செய்து விட வேண்டியது தான்...

    ReplyDelete
  10. நல்ல குறிப்பு.
    நல்ல சந்தேகம்; நல்ல பதில்கள். ;))))

    ReplyDelete
  11. ஆஹா பார்க்கவே அழகாக இருக்கு,ருசியும் சூப்பர் தான்,அதுவும் பாதாம் எல்லாம் சேர்த்தால் கேட்க வேண்டுமா?வித்தியாசமான குறிப்பு.

    ReplyDelete
  12. //வந்துட்டார்ப்பா கேள்வியின் நாயகன். ஜெய்க்கு பயந்தே நான் ரெசிப்பிகள் போடுறதில்லை ஹிஹி...//


    நான் என்னங்க செய்ய ...நீங்க சொல்ற மெத்தர்ட் அப்படி இருக்கே..

    இங்கே இது திறக்க லேட் ஆகுது. இதுவே மூஞ்சி புக்கா இருந்தா அதிரடி கேள்விகள் ஆயிரம் வரும் :-))))

    ReplyDelete
  13. nice stepwise expanations and adding curd sounds new to me

    ReplyDelete
  14. அப்படியே சாப்பிடறமாதிரி நன்னாயிருக்கு. சுலபமாகவும் இருக்கே.

    ReplyDelete
  15. Very yummy poriyal.Nalla eludhureenga, Mahi.

    ReplyDelete
  16. ம்ம்ம்... மஹி மிகவும் சத்தான குறிப்பு கொடுத்து அசத்தியிருக்கீங்க.... நான் இதுவரை ப்ரொக்கோலி வாங்கி சமைத்தது கிடையாது.... என்னவர் என்னை நம்பி வாங்கிடாதே...வாங்குனா நீயே சாப்பிடு என்றிடுவார்.... அதனாலேயே பார்த்துட்டு வந்திடுவேன்.
    நீங்க சொல்வதுபோல் இரண்டும் சேர்த்து உங்க மெத்தடில் செய்து பார்த்திட வேண்டியதுதான்...
    வாழ்த்துக்கள் மஹி...

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete
  17. Both are my kids favorite mahi,the recipe is sounds very nice,shall try some time!

    ReplyDelete
  18. நல்லாயிருக்கு மகி,2ம் சேர்த்து பொரியல் செய்ததில்லை...தனித்தனியாகதான் செய்திருக்கேன்...

    ReplyDelete
  19. Nice Mahi, haven't tried both together yet.

    ReplyDelete
  20. எனக்கு பிடித்த காம்பினேஷன்!!

    ReplyDelete
  21. naanthan first

    nethu vanthen net pbm

    hm

    ella kottukkum entha formulavey

    pinpatrukiren..

    ReplyDelete
  22. எல்லாம் நல்ல இருக்கு
    அதனால எனக்குதான்
    இந்த கூட்டு போர்முல
    எல்லா காய்கறிக்கும் பயன்படுத்துகிறேன்
    நண்பர்களும் நல்ல இருக்கு என்று
    என்னை உசுபேத்தி விடுகிறர்கள்

    நல்ல இருக்கு அக்கா கொஞ்சம் வேகமா
    கொழம்பு வைப்பது எப்படி.

    ReplyDelete
  23. இந்தப் பொரியல் வித்தியாசமா இருக்கு மஹி.. செய்து பார்த்துட்டுச் சொல்றேன்!!

    ReplyDelete
  24. /ஜெய்க்கு பயந்தே நான் ரெசிப்பிகள் போடுறதில்லை ஹிஹி.// :) :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானதி!

    சரஸ்,நன்றிங்க!

    ஸாதிகாக்கா,செய்துபாருங்க,நல்லாஇருக்கும். ரெண்டும் ஒரே குடும்பம்தானே?சேர்த்து செய்தா நல்லாவே இருக்கு. :)

    நல்லா இருக்கும் கீதா,தைரியமா செய்யுங்க.நன்றி!

    /நல்ல குறிப்பு.
    நல்ல சந்தேகம்; நல்ல பதில்கள். ;))))/ நல்ல கருத்து,நல்ல நன்றி இமா! ;)

    ஆசியாக்கா,கருத்துக்கு மிக்க நன்றி!

    /இங்கே இது திறக்க லேட் ஆகுது. இதுவே மூஞ்சி புக்கா இருந்தா அதிரடி கேள்விகள் ஆயிரம் வரும் :-))))/அவ்வ்வ்வ்வ்! இதுக்கு பயந்துதான் நான் அங்கே வாரதே இல்ல! :)

    ஜெயஸ்ரீ,அவசரத்துல போட்டோ மட்டும் பாத்துட்டீங்க போல?!:) அது தயிர் இல்லைங்க,பாதாம்-இஞ்சி-பூண்டு பேஸ்ட்!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

    ReplyDelete
  25. காமாட்சி அம்மா,கை தவறி உங்க இன்னொரு கருத்தை டெலிட் பண்ணிட்டேன்,சாரி! :-| தங்கள் கருத்துக்கு நன்றி!

    நன்றி சாரு,காயத்ரி!

    அப்ஸரா,ப்ரோக்கலி எனக்கும் முதல்ல பிடிக்காமதான் இருந்தது,இப்பதான் சாப்பிட ஆரம்பிச்சிருக்கேன்,நல்லா இருக்குங்க.சத்துள்ள காய்கறி,குழந்தைகளுக்கு குடுங்க.நன்றி அப்ஸரா!

    ராஜி,மேனகா,மஹேஸ் அக்கா,சுகந்தி அக்கா,சிவா அனைவரின் கருத்துக்கும் நன்றி!
    சிவா/நல்ல இருக்கு அக்கா கொஞ்சம் வேகமா
    கொழம்பு வைப்பது எப்படி./இப்புடி கஷ்டமான கொஸ்டின்லாம் கேட்டா எப்படி சிவா? :) ;) ம்ம்ம்..சீக்கிரம் எனக்குதெரிந்ததை சொல்லறேன்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சந்தனா!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails