
சிலபல மாதங்களுக்கு முன் இந்த பேன்ஸி (
Pansy flowers) பூக்களை எம்ப்ராய்டரி செய்ய ஆரம்பித்த பொழுது, இந்த சீஸனுக்கு இதே பூக்களை வாங்கி வளர்ப்போம் என்று நினைக்கவே இல்லை. :)
பாதி தைத்து வைத்து கிட்டத்தட்ட மறந்தே போயிருந்த நிலையில் தொட்டிப் பூக்கள் பூத்து துணியில் பூத்த எங்களை அப்படியே நிறுத்திவிட்டாயே என்று நினைவூட்டின! தைத்து முடித்து உங்களுடன் பகிர்ந்துகொள்ளவும் வந்துவிட்டன பூக்கள்.

இந்தப் பூக்கள் இணையத்தில் கிடைத்தவைதாம்..பூவை துணியில் ட்ரேஸ் செய்த நிலையில்..

மூன்று பூக்களும் சங்கிலித்தையலில் அவுட்லைன் தைத்த நிலையில்...

இந்த டிசைனை நான் எடுத்த காரணமே லாங் & ஷார்ட் ஸ்டிச்-ல் தைக்கலாம் என்றுதான். ஒரு பூவில் முக்கால்வாசி முடிந்து, அடுத்த பூவுக்கும் தையல் ஆரம்பித்த நிலையில்..
அடுத்து சில க்ளோஸ்-அப் படங்கள்..



லாங் & ஷார்ட் ஸ்டிச்சில் முக்கியமான விஷயமே பொருத்தமான வண்ண நூல்களை அழகாகக் கலந்து தைப்பதுதான். அதில் கொஞ்சம் கோட்டைவிட்டுவிட்டேன் என்றுதான் தோன்றுகிறது, இலைகளையும் பூக்களையும் பார்க்கும்போது.

ஒரு பூவின் மகரந்தங்களுக்கு ஃப்ரென்ச் நாட் தைத்தேன், மற்ற இரண்டு பூக்களும் ஸாடின் ஸ்டிச்-சிலேயே தைத்தாயிற்று..

ம்ம்ம்...இதுக்கும் மேல் எங்களைக் கொடுமைப்படுத்தாதே என்று இந்த மூணு பூக்களும் கெஞ்சுவது போல தோன்றவே, இத்தோடு (இப்போதைக்கு) நிறுத்தியிருக்கிறேன்.

என்னதான் சொல்லுங்க, நிஜம் நிஜம்தான்! நிழல் நிழல்தான்! :)))))
~~~
இது என்னுடைய 250வது பதிவு! ஆதரவு தரும் அன்புள்ளங்கள் அனைவருக்கும்...
எனது இனிப்பான நன்றிகள்!
avv!! me da 1stttttttttttttttttttt haiyaa!!!
ReplyDeleteசிவாப்பையா... ஹி! ஹி!
ReplyDeleteஅழகா இருக்கு மஹி. அதிலயும்... அந்த ஆரஞ்சு கலர் பூ. சீக்கிரம் மீதியையும் தைச்சு முடிங்க.
ReplyDeleteஸ்வீட்.. முழுக்க எனக்கே எனக்குத்தான். ;)
250... 300 ஆகி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
மகி,
ReplyDeleteசீக்கிரமே 300 வது பதிவை எட்டிப்பிடிக்க வாழ்த்துக்கள். பூக்கள் எல்லாமே அழகாகவே உள்ளன. சரியான நிறத்தில்,ஜூஸியான குலோப் ஜாமுனும் நல்லாருக்கு.
இமா,முதல் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி! சிவா கமென்ட்டை நீங்க போட்டுட்டீங்க, ஆனாலும் சிவா இதேதான் சொல்லப்போறார். :)
ReplyDeleteஇப்போதைக்கு இந்த பூக்கள் அப்படியேதான் இருக்கும். இதுக்கு மேலே வேற என்ன செய்வதுன்னு தெரியவில்லை. :)
~~
சித்ராக்கா, நீங்க சொன்னா சரிதான்! ஒரு angle-ல பார்த்தா அழகாத்தான் இருக்கு! ;)
வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள்!
~~
மகி, சூப்பரோ சூப்பரப்பு. என் ஆ.காரர் பார்த்துட்டு வெரி ப்யூட்டிஃபுல்லா இருக்கு என்றார். கொஞ்சம் சந்தேகம் இருக்கு. இங்கனை கேட்டால் புஷ் சிரிக்கும். நான் அப்பாலிக்கா மெய்ல் அனுப்பி கேட்கிறேன்.
ReplyDeleteபூக்களும் அருமை
ReplyDeleteபூக்கள் விட
கோலாப் ஜாமுன் சூப்பர்
...ரெண்டுமே கை வண்ணம்தான்
அடுத்து அட என்னது 250வது பதிவா வாழ்த்துக்கள்.
மகிமா
வாழ்க வாழ்க வளமுடன்
இன்னும் பல பதிவு எழுதி
பதிவு உலகம் மகிழ்ச்சி அடைய வேண்டுகிறோம்
எனது வடையை தூக்கி சென்று விட்டனர்..
அவ்வவ்
globe jammun எனக்கு மட்டும் பேபி அதிராவுக்கு தெரியாமல் பார்சல்....
ReplyDeleteஎனக்காக சிவாக்குட்டி விட்டுக் கொடுத்துட்டாங்க, எப்புடி!! தாங்ஸ் ஷிவ்ஸ்.. ;)
ReplyDeleteஎம்பிராய்டரி கண்ணை பறிக்கிறது மகி.கூடவே 250 பதிவுக்கு குலாப்ஜாமூன் பரிமாறி இருக்கீங்க.வாழ்த்துக்கள் 250க்கு.விரைவில் 2500 ஆவது பதிவு போட வாழ்த்துக்கள்.
ReplyDeleteமஹி எம்ப்ராய்டரி ஒர்க்கில் பூக்கள் கண்ணைப்பறிக்கின்ரன.
ReplyDeleteமேலே உள்ள குலாம்ஜாமூன் மீது சத்தியமா இது மஹி போட்ட எம்ப்ராய்டரி யா இருக்கவே முடியாது :-)))).
ReplyDeleteஒரு பூக்கூட மஞ்சள் நிறத்திலேயே இல்லையே ஹா..ஹா.. :-))
ReplyDeleteஆஹா...இனி வான்ஸுக்கு போட்டி நம்ம மஹிதான் :-))
ReplyDelete//vanathy கொஞ்சம் சந்தேகம் இருக்கு. இங்கனை கேட்டால் புஷ் சிரிக்கும். நான் அப்பாலிக்கா மெய்ல் அனுப்பி கேட்கிறேன்.//
ஒரே ஒரு இலை போட்டதைதான்னு நினைக்கிறேன் .குருவே ஆசிர்வாதம் செய்துட்டார் ஜமாய்ங்கோ :-))
250, 2500000 ஆ வர வாழ்த்துக்கள் ..வாழ்த்துக்கள் :-))
ReplyDeleteCongrats on 250th post.. Fantastic post mahi... loved it!! enaku romba pidithathu unga stitching and flower... super... lovely colorful!! samayal matum illama stitching layum kalakareenga... vaazhga valamudan!!!
ReplyDelete//ஜெய்லானி said...
ReplyDeleteமேலே உள்ள குலாம்ஜாமூன் மீது சத்தியமா இது மஹி போட்ட எம்ப்ராய்டரி யா இருக்கவே முடியாது :-))))//
ஹா..ஹா..ஹா.. மீயும்...மீயும் இதை “வலி மொலிகிறேன்”:)
மகி சூப்பர் மகி.. இதை எதுக்குப் போட்டீங்க? நான் எப்பவோ தொடக்கம் சொல்லிட்டே இருக்கிறேன்ன்... இபோ பூ முடித்துவிட்டேன், ஆனா தலையணைக் கேஸ் ஐயும் தைத்து முடித்தபின் போடலாமே என நேற்றுக்கூட பாதி தைத்தேன்ன்..
ReplyDeleteசரி என் கதை இருக்கட்டும்...
Congrats Mahi:-) Wonderful embroidery..lovely flowers.
ReplyDeleteVazhthukkal Mahi.
ReplyDeleteCongratulations Mahi. The pani flower embroidery is so beautiful. The shades and finish are very nice. The colours of the real pansy flowers are so bright and they are beautiful. Thanks for the sweet treat :)
ReplyDelete250 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் மகி!! எம்ப்ராய்டரி மிக அழகா இருக்கு...
ReplyDeleteசே..சே.. ரைப்பண்ணிப் பாதியிலயே கட்டாப்போச்சு.. சட்டவுன் ஆகிட்டுது விட்டிட்டேன்:((
ReplyDeleteநான் எப்பவும் உள்ளே தையல் போட்ட பின்பே வெளி வட்டம் சுற்றித் தைப்பேன், ஆனா நீங்க வெளியிலதான் முதல்ல போட்டிருக்கிறீங்க.. எது சரியோ?:))..
குலாப் ஜாமூனோ? எனக்குப் பிடிக்கும்:)).
//இமா said...
avv!! me da 1stttttttttttttttttttt haiyaa!!///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * றீச்சர்:)
250 ஆவதுக்கு வாழ்த்துக்கள் மகி...
ReplyDelete//இங்கனை கேட்டால் புஷ் சிரிக்கும். நான் அப்பாலிக்கா மெய்ல் அனுப்பி கேட்கிறேன்.//
ReplyDeleteஹா...ஹா...ஹா.... சிரிப்பெல்லாம் வராது.. ஆனா அந்த பாஆஆஅ...பு:)) படம் போட்டிடுவேன்:))
அடடா !!!!!!!! அழகோ அழகு மகி .மகி எதை செய்தாலும் அழகா இருக்கு
ReplyDeleteநிஜ பான்சிஸ் மாதிரியே இருக்கு .
250 பதிவுக்கு வாழ்த்துக்கள்
ஹா...ஹா...ஹா.... சிரிப்பெல்லாம் வராது.. ஆனா அந்த பாஆஆஅ...பு:)) படம் போட்டிடுவேன்:))//
ReplyDeleteவேணாம் பூஸ் ..அப்புறமா நான் இரட்டைகிளவி அடுக்குதொடர்லாம்:))))))
சொல்லி கொடுப்பேன் ..கசட தபர யரல வழல
;)))))))) சூப்பர் ஏஞ்சல். ;)) பூஸ் புளியில ஏறப்போறார்ர்ர். ;))
ReplyDeleteஅஞ்சூஸ்ஸ்.. உங்களுக்கும் சந்தேகமோ!! எனக்கு வாயில நுழைய மாட்டுதாம் அது. ;)) மாட்டிட்டீங்கள். ஏ'ற'ப்போகுது பூஸ்ஸ்ஸ். சந்தோஷம் பொய்ங்கி... இமாவுக்குப் பாட வருகுதே! என் செய்வேன் நான்!!!
ReplyDeleteலா ல லா... லழளா! ழளலாஆஆ... ;))))))))
ஆ ஆ !!!!!!!! பூஸ் கண்ல ழ மேட்டர் பட்டுவிட்டதா ??
ReplyDeleteஅவசரத்தில் டைப் செய்தேன் ;))))))))
மகி சாரி ஐ ஆம் லேட் !! நிஜமும் நிழலும் சூப்பர். பூக்கள் அழகோ அழகு. நீங்களே அது நல்லா இல்லேன்னு கற்பன பண்ணிக்கிட்டு பாதியில நிறுத்தாதீங்க. பில்லோ கேஸ் இல்லே சோபா கவர் போட்ட்ருங்கோ. மீதிய முடிச்சிட்டு ஒரு பதிவா போடுங்க. கலர்ஸ் மிக்ஸ் பண்ணியது என் கண்ணுக்கு நல்லாத்தான் இருக்கு. ஸோ கண்டின்யு .
ReplyDelete250 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் மகி. இன்னும் பல்லாயிரம் பதிவுகள் போட அட்வான்ஸ் வாழ்த்துக்கள். என்னைய மாதிரி எத்தன பேருக்கு நீங்க இன்ச்பிரஷன் ஆ இருந்திருக்கீங்க. (எதுக்கும் கொஞ்ச நாளைக்கு நீங்க தலை மறைவாவே இருந்துக்குறது நல்லதுன்னு நெனைக்கிறேன்:))
ReplyDelete//ஸ்வீட்.. முழுக்க எனக்கே எனக்குத்தான். ;)// நோ நோ டீச்சர் தனியா சாப்பிட்டீங்கன்னா வயிறு வலிக்கும்:)) ஸோ எனக்கு பாதி நான் வனிலா ஐஸ் கிரீம் கூட சாப்பிடணும்.
ReplyDelete//இங்கனை கேட்டால் புஷ் சிரிக்கும்// அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் நீங்க பயப்புடாம கேழுங்கோ வான்ஸ். இந்த மாதிரி பூ.க.எ.நெ. தலைவி ன்னு சொன்னதுக்கு அப்புறம் இப்புடி பயந்து அசிங்கப்படுத்த கூடாது ஆமா :))
//கசட தபர யரல வழல// அஞ்சு ஊ ஊஊ மகி கிட்டே சொல்லி இந்த கமெண்ட் எ கிளிச்சுட:)) சொல்லுங்கோ புஷ் பார்த்திட போறாங்க :))
//சந்தோஷம் பொய்ங்கி... இமாவுக்குப் பாட வருகுதே! என் செய்வேன் நான்// பாட்டுத்தான் பாடணும் நீங்க அதை கேட்டு நாங்க எல்லாம் படணும் :))
Congrats and beautiful embroidery..
ReplyDeleteஇந்த 250 -வது பதிவை இப்ப தானே பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்.அழகான கைவேலைப்பாடு,நிஜப் பூ வாடிவிடும்,ஆனால் இந்த அழகான எம்பிராய்டரி பூக்கள் என்றும் பத்திரமாக வைத்துக் கொள்ளலாம். சூப்பர்.
ReplyDeleteவாழ்த்துக்கள் பலகோடி மஹி.
ReplyDeleteவித்யா,வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க! உங்க அளவுக்கு ப்ரொஃபஷனல் வொர்க் எல்லாம் இல்லை என்னுது..ஜஸ்ட் ஒரு இன்ட்ரஸ்டில் செய்வது! :)
ReplyDeleteநீடில் பெயின்டிங்-- எனக்கு ரொம்ப பிடிக்கும், ஆனா ரொம்ப நேரமெடுக்கும் வேலை! ரொம்ப சந்தோஷம் வித்யா!
~~
நித்து,வருகைக்குக் கருத்துக்கும் மிக்க நன்றி!
~~
ஆச்சி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! என்ன இப்படி ஆளே காணாமப் போயிட்டீங்க? :)
~~
மீரா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! நிஜப் பூக்கள் எல்லாமே பளீர் நிறங்கள்தான்! அவற்றுடன் பார்க்கையில் என் கையில் உருவான பூக்கள் கொஞ்சம் டல்லாத்தான் இருக்கு! ;)
~~
மேனகா, வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேனகா!
~~
அதிரா,//ஹா..ஹா..ஹா.. மீயும்...மீயும் இதை “வலி மொலிகிறேன்”:) // ச்சே,ச்சே,என்னா மாதிரி தமில்;) பேசறீங்க? சூப்பர் போங்க! உங்க ரெண்டுபேருக்காகவுமே ஒரு மஞ்சப்பூ தைக்கணும் போலிருக்கே? :)
/இதை எதுக்குப் போட்டீங்க? /அது எனக்கு இன்னும் தெளிவாத் தெரியலை அதிரா! உங்க கமென்ட் பாதியிலயே கட் ஆகிருச்சுன்னு நினைக்கிறேன்.
//எப்பவும் உள்ளே தையல் போட்ட பின்பே வெளி வட்டம் சுற்றித் தைப்பேன், ஆனா நீங்க வெளியிலதான் முதல்ல போட்டிருக்கிறீங்க.. எது சரியோ?:))..
// இதில சரி தவறு எல்லாம் எதுவும் இல்லை அதிரா..நாம் செலக்ட் பண்ணும் பூக்கள், தையல்கள் இவற்றைப் பொறுத்து தைக்கணும் என்று நினைக்கிறேன்.
நான் பள்ளியில் படிக்கையில் இருந்து முதலில் அவுட் லைன், பிறகு உள்ளே நிரப்புவது என்றுதான் செய்வது வழக்கம். நீங்க சொன்ன ஆர்டரில் தைச்சதில்லை, உங்க டிஸைனையும் போஸ்ட் பண்ணுங்க,நீங்க எப்படி தைச்சிருக்கீங்க என்று பார்ப்போம்.
வாழ்த்துக்கு மிக்க நன்றி! சரம் சரமான கருத்துக்களுக்கும் நன்றி! அதற்கு நான் பதில் சொல்லாததுக்கு செல்லமாய் குட்டியதுக்கும் நன்றி! :)))
~~
ஏஞ்சல் அக்கா, ரொம்ப நன்றி! கிட்டத்தட்ட நான் செய்யும் எல்லா வேலைகளுமே ரசித்துச் செய்வதுதான்! :) ப்ளாகில் கமென்ட் போடுவது உள்பட!
~~
ஏஞ்சல் அக்கா,/அப்புறமா நான் இரட்டைகிளவி அடுக்குதொடர்லாம்:))))))
சொல்லி கொடுப்பேன் ..கசட தபர யரல வழல / :)
உங்களுக்கு டீச்சர் வேற சப்போர்ட்! எனக்கு முதலில் படிச்சு, நீங்க என்ன பேசறீங்க என்றே புரிலை! இன்ஃபாக்ட், இன்னமுமே புரியலை! எல்லாரும்சந்தோஷமா இருந்தாச் சரிதான்! :)
~~
கிரிஜா,/ பில்லோ கேஸ் இல்லே சோபா கவர் போட்ட்ருங்கோ./ இது ரெண்டுக்குமே ஒத்துவராத சைஸ் பூக்கள் அவை! அதனால அதோடு நிறுத்திட்டு அடுத்த ப்ராஜக்ட்(!) ஆரம்பிச்சுட்டேன்! ஆறுதலான கருத்துக்கு நன்றிங்க! :)
என்னைய மாதிரி எத்தன பேருக்கு நீங்க இன்ச்பிரஷன் ஆ இருந்திருக்கீங்க. (எதுக்கும் கொஞ்ச நாளைக்கு நீங்க தலை மறைவாவே இருந்துக்குறது நல்லதுன்னு நெனைக்கிறேன்:)) /// ஆஹா,..இப்பூடி சொல்லியே எல்லாரையும் கெளப்பி விடறாங்களே! இனி மாஸ்க் போட்டுட்டுதான் வீட்ட விட்டு வெளியே போகணும் போலிருக்குதே? அவ்வ்வ்வ்.... :)))))
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கிரிஜா!
~~
ஹேமா,வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க!
~~
காமாட்சிம்மா, வாழ்த்துக்கு நன்றிம்மா!
~~
ஆசியாக்கா, நீங்க சொன்னது சரிதான். தொட்டிப் பூக்கள் வாடிப்போகும்! :) இதைப் பத்திரமா எப்படி வைப்பதுன்னு யோசித்துக்கொண்டிருக்கேன்.
மிக்க நன்றி ஆசியாக்கா!
~~
வானதி,என் மனமார்ந்த நன்றியை திரு.வானதிக்கு சொல்லிருங்க. ரொம்ப சந்தோஷம் உங்க கமென்ட்டைப் பார்த்து! உங்க மெயிலை எதிர்பாத்துட்டே இருக்கேன், இன்னும் வரலையே?!
ReplyDeleteநன்றி வானதி!
~~
சிவா,உங்களது வடையை தூக்கிச் சென்று விட்டார்களா? ஐயகோ..என்ன கொடுமை?! :) போனாப்போகுது விடுங்க, கோலப்;) ஜாமூன் அனுப்பிட்டேன்,வந்து சேந்ததா? வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சிவா!
~~
றீச்சர், வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! அந்த ஆரஞ்ச் பூ தைக்கும்போது கலர் காம்பினேஷன் ரொம்ப ஸ்ட்ராங்(!)கா இருக்குமோ என்று நினைச்சுட்டே தைச்சேன், தொட்டிப் பூக்களைப் பார்த்ததுமே அந்த சந்தேகம் தீர்ந்துருச்சு, இப்ப நீங்களும் சொல்லிருக்கீங்க! :)
~~
வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஸாதிகாக்கா! உங்களது வாக்கு பலிக்கட்டும்! :)
~~
லஷ்மிம்மா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா!
~~
/மேலே உள்ள குலாம்ஜாமூன் மீது சத்தியமா இது மஹி போட்ட எம்ப்ராய்டரி யா இருக்கவே முடியாது :-)))).
ஒரு பூக்கூட மஞ்சள் நிறத்திலேயே இல்லையே ஹா..ஹா.. :-)) / :) :) மஞ்சள் பூக்கள்தானே, இனிமே போட்டுரலாம்! எனக்கு இந்த பாயின்ட் ஸ்ட்ரைக் ஆகவே இல்லைங்க, நினைவு படுத்தியமைக்கு மிக்கநன்றி! :) குலாப் ஜாமுனாவது நான் செய்ததுதான்னு ஒத்துகிட்டீங்களே! ;)
வானதியின் சந்தேகம் இன்னும் வரவே இல்லையே..ஒருவேளை குரு ஆசீர்வாதம் செய்ததில் சந்தேகம் தீர்ந்து "தெளிவா" ஆகிட்டாங்களோ? :)
வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க ஜெய்!
~~
அன்பின் மகி - 250 வது பதிவினிற்கு நல்வாழ்த்துகள் - குலாப் ஜாமூன் சூப்பர் - எச்சி ஊறுது .... பூத் தையல் - நிழலும் நிஜமும் - ப்டங்களுடன் அருமை - நல்வாழ்த்துகள் மகி - நட்புடன் சீனா
ReplyDeleteWow 250 postaaaaa?
ReplyDeletegreat.
Adhu seri nejam andavan padaippu. AVAN therthedutha colour.
Enga ethu Mahi padipoo. Mahien colour choice.
So both are great. Of course neat and pretty embroidary Mahi.
viji
சீனா ஐயா, விஜிமா வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!
ReplyDelete