Tuesday, January 19, 2010

ப்ரூட் கேக்





தேவையான பொருட்கள்
ஆல் பர்ப்பஸ் ப்ளோர் / மைதா மாவு - 1 1/2 கப்
வெண்ணெய் - 115 கிராம்
முட்டை - 3
சர்க்கரை - 1 கப்
ட்ரை ஃப்ரூட்ஸ் & நட்ஸ் - 1 கப்
வெனிலா எஸ்ஸன்ஸ் - 2ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1/2 ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/2 ஸ்பூன்
ஆரஞ்சுப் பழம் - 1




செய்முறை
மாவுடன் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா கலந்து மூன்று முறை சலித்து வைக்கவும்.

முட்டைகளை உடைத்து மஞ்சள் கரு, வெள்ளைக் கரு தனித்தனியாகப் பிரித்து வைக்கவும்.

பாத்திரத்தில் வெண்ணையைப் போட்டு எலெக்ட்ரிக் பீட்டரால் நிமிடங்கள் கலக்கவும்.

அத்துடன் சிறிது சிறிதாக சர்க்கரையைச் சேர்த்து சர்க்கரை நன்கு கரையும் வரை கலக்கவும்.
[இந்நிலையில் வெண்ணெய் +சர்க்கரைக் கலவை உளுந்து மாவு பதத்தில் இருக்கும்.]



மஞ்சள் கரு மற்றும் வெனிலா எஸ்ஸன்ஸ் இவற்றை வெண்ணெய்,சர்க்கரைக் கலவையுடன் சேர்த்து கலக்கவும்.

மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்..விஸ்க் இருந்தால் அதனைக் கொண்டு கலக்கவும். எலெக்ட்ரிக் பீட்டர் எனில் மிகவும் மெதுவான வேகத்தில் கலக்கவும்.




முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு நுரைக்கும் வரை கலந்து அதனை மாவுக் கலவையுடன் கலக்கவும்.



ஆரஞ்சுப் பழத்தின் தோலை, காய் துருவியில் துருவி மாவுக்கலவையுடன் சேர்த்து, பழத்தின் ஜூசையும் பிழிந்து சேர்க்கவும்.



உலர் பழங்கள், நட் வகைகளை ஒரு ஸ்பூன் மைதாவில் புரட்டி கேக் கலவையுடன் கலக்கவும்.




கேக் பானில் வெண்ணெய் தடவி கேக் கலவையை கொட்டி உலர் பழங்களால் அலங்கரிக்கவும்.




350F. ப்ரீஹீட் செய்த அவனில் 35 நிமிடங்கள் வைத்து பேக் செய்யவும். கத்தியால் குத்திப் பார்த்தால் கத்தியில் கேக் ஒட்டாமல் வர வேண்டும். அதுவே கேக் வெந்ததற்கு அடையாளம்.



கேக்கை 2 மணி நேரம் ஆற வைத்து கேக் பானில் இருந்து எடுத்து வைக்கவும்.

குறிப்பு:
முட்டை மற்றும் வெண்ணெயை இரண்டு முதல் மூன்று மணி நேரம் முன்பே பிரிட்ஜ்-லிருந்து எடுத்து வெளியே வைக்கவும்.

Monday, January 18, 2010

அவசரமாய் ஒரு குழம்பு


தேவையான பொருட்கள்
உங்களிடம் இருக்கும் எதாவது ஒரு காய் - சுமார் 100கிராம்
(நான் உபயோகித்திருப்பது பெங்களூர் கத்தரிக்காய்)
வெங்காயம் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 2
எம்
.டி.ஹெச்.மெட்ராஸ் கறி பவுடர் - 1 1/2 ஸ்பூன்
தேங்காய்த்
துருவல் - 1 ஸ்பூன்
கடுகு
, சீரகம் - தலா 1/2 ஸ்பூன்
உப்பு- ருசிக்கேற்ப
கொத்துமல்லி
இலை - சிறிது

செய்முறை

காயை
தோல் சீவி, உள்ளே இருக்கும் விதைப்பகுதியை நீக்கி விட்டு நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம் பச்சை மிளகாய், தக்காளியையும் நறுக்கிக் கொள்ளவும்.

பாத்திரத்தில்
எண்ணெய் காயவைத்து கடுகு,சீரகம் தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

காய் முக்கால் பாகம் வெந்ததும் தக்காளி மற்றும் கறி மசால் பொடியைச் சேர்த்து கொதிக்கவிடவும்.

இறுதியாக
ஒரு ஸ்பூன் தேங்காய்த் துருவல் சேர்த்து, (விரும்பினால்) அரை ஸ்பூன் சர்க்கரையும் சேர்த்து இறக்கவும். கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும்.





நிதானமாய்
குழம்பு வைக்க டைம் இல்லாதப்போ எனக்கு கை கொடுப்பது இந்த அவசர குழம்பு தான்..பிரிட்ஜ்- / ப்ரீசர்ல இருக்கும் ஏதாவது ஒரு காயைக் கொண்டு பத்து நிமிஷத்தில் செய்து விடலாம்..சாதம்,சப்பாத்தி,இட்லி,தோசை எல்லாவற்றுக்கும் பொருத்தமாய் இருக்கும். எங்க வீட்டில் அடிக்கடி செய்வது பீன்ஸ் போட்டு...கட் செய்தே இருக்கும் ப்ரோசன் பீன்ஸ் இருந்தால் இன்னும் சீக்கிரமே வேலை முடிந்துவிடும். [என்ன ஒரு சோம்பேறித்தனம் என்று நீங்க முறைக்கிறது தெரியுது..ஹி,ஹி!!]

Sunday, January 17, 2010

ஈஸி லட்டு

தேவையான பொருட்கள்
கடலை மாவு - 1 கப்
கோதுமை
மாவு - 1/2 கப்
வெள்ளை
ரவை - 1/4 கப்
சர்க்கரை - 1 1/4 கப்
நெய் - 3/4 கப்
திராட்சை
& முந்திரி,பாதாம் - சிறிதளவு.
செய்முறை
கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி கோதுமை மாவையும்,ரவையையும் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

அதே போல கடலை மாவையும் ஒரு ஸ்பூன் நெய்யில் வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
திராட்சை மற்றும் நட்ஸ் வகைகளையும் நெய்யில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் வறுத்த மாவுகள்,சர்க்கரை,நெய் மற்றும் திராட்சை முந்திரியை சேர்த்துக் கலக்கவும்.

கலவையை மைக்ரோவேவில் நான்கு நிமிடம் வைக்கவும்.

கை பொறுக்கும் சூட்டிற்கு மாவுக்கலவை ஆறியதும், உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். விரைவில் செய்யக்கூடிய ஈஸியான லட்டுக்கள் தயார்.

Saturday, January 16, 2010

முறுக்கின் முன்கதை

ஏதாவது புதிய பதார்த்தம் செய்யும்போதெல்லாம் எங்க வீட்டு ரெண்டு கால் எலி:)யின் பாடுதான் திண்டாட்டமா இருக்கும்..ஏன்னா, எக்ஸ்பெரிமென்ட் பண்ணுறது மட்டும்தானே நம்ம வேலை? அதை குடுத்து, ரிசல்ட் எப்படியிருக்குன்னு பார்க்கத்தான் இங்கே ஒரு ஆள் இருக்காரே, அப்புறம் நம்ம எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்??! :)

இந்த முறை முறுக்குக்கு மாவு பிசைந்து வைத்திருந்தேன்..பச்சை மிளகாய் அரைத்துப் போட்டதால் முறுக்கு மாவு கொஞ்சம் வித்யாசமான:) பச்சை நிறத்தில் இருந்தது..அன்றைக்கு இவரும் வொர்கிங் ப்ரம் ஹோம்.

ஊர்ல
கிச்சன் வீட்டின் ஏதாவது ஒரு மூலையில் இருக்கும், இவங்கள்லாம் அங்கே எட்டிக் கூட பாக்க மாட்டாங்க..ஆனா இங்கே ஹாலும் கிச்சனும் சேர்ந்தே தானே இருக்கு? எலிக்கு மூக்கு வேர்த்து, ஆர்வமாக கிச்சனுக்கு வந்தது.
பிசைந்து வைத்திருந்த முறுக்கு மாவைப் பாத்து கொஞ்சம் ஜெர்க்காகி நின்று விட்டது!! இந்த வாரம் தான் மேக்ஸ்- அவதார் வேற பார்த்துட்டு வந்திருந்தோம்..அந்தப் படத்தில வரும் "Pandora'' என்ற கிரகத்தின் தாக்கத்துல இருந்து எலி விடுபடவில்லை..அதனால் மாவைப் பார்த்ததும், சில வினாடிகள்- கேள்வி.. 'ஹையா..பண்டோரா முறுக்கு சுடப் போறியா?'-ன்னு!!

எனக்கு என்ன பதில் சொல்லறதுன்னு தெரில..அவரும் பதில எதிர்பார்த்த மாதிரியும் தெரில..திருப்பியும் ஹாலுக்குப் போயி வேலையைத் தொடர ஆரம்பிச்சிட்டார்..அதுக்கப்புறம் முறுக்கெல்லாம் சுட்டு முடிச்சு, டெஸ்ட் பண்ண, சாரி, டேஸ்ட் பண்ண கொண்டு போய்க் கொடுத்தேன்.

பண்டோரா முறுக்கு சூப்பரா இருக்கு!-ன்னு சொல்லிட்டே சாப்ட்டாரு...ஒரொரு பிரெண்ட் வீட்டுக்கும் குடுக்கும்போதும், என் வைப் பண்டோரா முறுக்கு செஞ்சிருக்காங்க..சாப்பிட்டுப் பாருங்கன்னு தான் இன்ட்ரோ குடுத்துட்டு இருந்தாரு..நேத்து ஒரு நண்பர் வீட்டுல பொங்கல் ஸ்பெஷல் பாட்லக்..அங்கேயும் எல்லார் கிட்டவும் இதே பாட்டு..எங்க நார்த் இண்டியா நண்பர்கள் முதற்கொண்டு அனைவரும் ரசித்து சாப்பிட்டாங்க.. முறுக்கு முழுவதும் காலி !

முறுக்கோட டேஸ்டுக்கு முன்னால பேர் முக்கியமா என்ன? நீங்களே சொல்லுங்க?? :) :) :)

Friday, January 15, 2010

முறுக்கு


பொங்கல், தீபாவளி என்றாலே முக்கியப் பலகாரம் முறுக்குதான் ..இந்த முறை ஊருக்குப் போயிருந்தபோது வெற்றிகரமாக முறுக்குப் பிழியும் அச்சு வாங்கிவந்து நானும்(!!?) முறுக்கு சுட ஆரம்பிச்சுட்டேன்.

அம்மா
வீடு,மாமியார் வீட்டில் எல்லாம் இருக்கும் அச்சு கொஞ்சம் பழக்கம்..இந்த எவர் சில்வர் அச்சு எனக்கு பழகவே கொஞ்ச நா....ளானது. அதுவும் இல்லாமல் இதிலே ட்ரெடிலா இருக்கும் மூணு கண் தட்டு, அஞ்சு கண் தட்டு ரெண்டுமே இல்லை! இதில் இருந்த தட்டுக்கள்- வட்டமா பிழிய முடியறது இந்த ஸ்டார் அச்சு மட்டுமே! ஒரே மாதிரி முறுக்கு பிழிய போர் அடிச்சாலும் வேற வழியில்ல!

சரி
, எங்கள போர் அடிச்சது போதும், எங்கே ரெசிப்பி? -ன்னு கேக்கறீங்களா? இதோ..
முறுக்கு
தேவையான பொருட்கள்
அரிசிமாவு - 4 கப்
முழு உளுந்து - 1கப்
பெருங்காயத்தூள்
- 1/4 ஸ்பூன்
எள்ளு - 1/2 கப்
பச்சை மிளகாய் - காரத்துகேற்ப
உப்பு
-ருசிக்கேற்ப
எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு

செய்முறை

உளுந்துப்
பருப்பை அலசி, குக்கரில் வேக வைக்கவும்.

வெந்த பருப்பு ஆறியதும், பச்சை மிளகாயுடன் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

அரிசிமாவு, அரைத்த விழுது, உப்பு, பெருங்காயம்,எள்ளு அனைத்தையும் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். நீர் தேவைப்படாது..அரைத்த விழுது சேர்த்துப் பிசைந்தாலே போதும். தேவைப்பட்டால் சிறிது நீர் தெளித்துப் பிசைந்து கொள்ளவும்.

முறுக்கு
அச்சில் மாவை போட்டு பிழிந்து மிதமான சூட்டில் உள்ள எண்ணெயில் பொரித்து எடுக்கவும். முறுக்கு தயார்.




குறிப்பு :
இந்த
முறுக்கு பொன்னிறமாக வேண்டியதில்லை..பச்சை மிளகாய் சேர்த்திருப்பதால் கலர் கொஞ்சம் வெள்ளையாகத்தான் இருக்கும். எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கவேண்டும். சூடு அதிகமானால் முறுக்கு நிறம் மாறிவிடும்.

Thanks to : My friend Mrs.Vijaya PrasadaRao

Thursday, January 14, 2010

பாதுஷா

பாதுஷா..மிகச்சிலரைத் தவிர பெரும்பாலானவர்களின் விருப்பமான இனிப்பு ..சந்தேகமில்லாமல் நான் பெரும்பாலானவர் பக்கம்தான்! :)

இங்கே தென்னிந்திய இனிப்புகள் அதிகள் கிடைப்பதில்லை..இணையத்தின் உதவியோடு நான் செய்யும் மூன்றாவது பாதுஷா எக்ஸ்பெரிமென்ட் ...இது தான் பொங்கலுக்கு எங்க வீட்டு ஸ்வீட்! நல்லாயிருக்கா? :)


பாதுஷா
தேவையான பொருட்கள்
மைதா
மாவு / ஆல் பர்ப்பஸ் ஃப்ளோர் - 11/4 கப்
பேக்கிங் சோடா - 1/4ஸ்பூன்
வெண்ணை - 115 கிராம்
சர்க்கரை - 1 1/2கப்
தண்ணீர்
- 1/4 கப்
கேசரி
பவுடர் - 1/4 ஸ்பூன்
எண்ணெய்
- பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை

மைதாவுடன்
பேக்கிங் சோடா சேர்த்து சலிக்கவும்.

வெண்ணையை உருக்கிக்கொண்டு அதனுடன் சலித்த மாவை சிறிது சிறிதாக சேர்த்துக் கலக்கவும்.
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து மாவை நன்றாகப் பிசைந்து கொள்ளவும். [குறைந்தது 15 நிமிடம் :) ]

சர்க்கரையை பாத்திரத்தில் போட்டு ஒண்ணரை கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். பாகு கொதி வர ஆரம்பித்த பின் ஏழு நிமிடங்கள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

பிசைந்த மாவை சம அளவு உருண்டைகளாக உருட்டிக் கொண்டு, ஓரொரு உருண்டையையும் உள்ளங்கைகளின் நடுவே வைத்து அழுத்தி பாதுஷா வடிவம் கொண்டு வரவும்.

மிதமான சூட்டில் எண்ணெயை காயவைக்கவும். சிறிதளவு மாவை எண்ணெயில் போட்டால் சிறிது நேரம் கழித்துத்தான் அது மேலே வர வேண்டும். அதுதான் சரியான பதம். அப்பொழுது எண்ணெய்ப் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி, பாதுஷாக்களை ஒன்றொன்றாக எண்ணெயில் போடவும்.

சிறிது நேரத்தில் அவை எண்ணெயில் மிதக்க ஆரம்பித்ததும் எண்ணெய்ப் பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும்.

பாதுஷாக்கள் பொன்னிறமானதும் எடுக்கவும். [ சுமார் 15-17 நிமிடங்கள் ஆகும்.]

பொரித்த பாதுஷாக்களை மிதமான சூட்டில் உள்ள பாகில் போட்டு பத்து நிமிடங்கள் ஊற விடவும். ஊறியதும் எடுத்து தட்டில் அடுக்கவும்.

2 ஸ்பூன் சர்க்கரையை ஒரு ஸிப்-லாக் கவரில் எடுத்து, அதனுடன் ஒரு துளி மஞ்சள், ஒரு துளி சிவப்பு நிறங்களை சேர்க்கவும். ஸிப்-லாக் கவரை லாக் செய்துகொண்டு வண்ணங்கள் சர்க்கரையுடன் சேரும்படி கலக்கவும்.
சர்க்கரைப்பாகு மீதமிருந்தால் பாதுஷாக்களின் மீது ஊற்றி விட்டு, கலர்ப்பொடி கலந்த சர்க்கரையை மேலே தூவி அலங்கரிக்கவும்.

ருசியான பாதுஷாக்கள் ரெடி!

குறிப்பு :
கொஞ்சம் நேரத்தையும்,பொறுமையையும் தாராளமாகச் சேர்த்தால் சுவையான பாதுஷாக்கள் சுவைக்கலாம்..மாவு பிசையும் நேரமும், பாதுஷாக்களை பொரிக்கும் நேரமும்தான் கொஞ்சம் நீளம்..ஆனால், பைனல் அவுட்கம்-ஐப் பாத்தீங்கன்னா, செலவு செய்த நேரம் வீணாகலைன்னு நீங்களே உணர்வீங்க!

Thanks to : http://jasu.wordpress.com/

LinkWithin

Related Posts with Thumbnails