Tuesday, September 6, 2011

பார்லி-ப்ரவுன் ரைஸ் தோசை

தேவையான பொருட்கள்
பர்ல் பார்லி(pearl barley)-1/2 கப்
ப்ரவுன் ரைஸ்(brown rice)-1/2கப்
வெந்தயம்-1/2டீஸ்பூன்
உருட்டு உளுந்து-1/4கப்

செய்முறை
அரிசி-பார்லி-வெந்தயத்தை களைந்து 6 மணி நேரம் ஊறவிடவும்.
உளுந்துப் பருப்பை கழுவி 11/2 மணி நேரம் (அரிசி-பார்லியுடன் சேர்த்தே)ஊறவிடவும்.
மிக்ஸி/க்ரைண்டரில் மாவாக அரைத்து 12 மணி நேரம் புளிக்கவிடவும்.
தோசை ஊற்றும்போது தேவையான உப்பு சேர்த்து கலந்து ஊத்தப்பம் போல ஊற்றவும்.
சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும்.
ஸாஃப்ட்டான, ஹெல்த்தியான தோசை ரெடி!
காரசாரமான குழம்பு/சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு
கொஞ்சமாக செய்ததால் பார்லி,அரிசி- உளுந்து எல்லாவற்றையும் ஒன்றாக அரைத்துவிட்டேன். அதிகமாக செய்கையில் உளுந்தை தனியே ஊறவைத்தும் அரைக்கலாம்.
ஊத்தப்பமாக ஊற்றாமல் மெல்லிய தோசையாகவும் சுடலாம், பார்லி சேர்த்திருப்பதால் மிகவும் க்ரிஸ்ப்பாக சூப்பரா வரும். இந்த மாவை இட்லியாகவும் செய்யலாம்,ஆனால் தோசை வேலை சுலபமாக முடிந்துரும் என்பதால் நான் எப்பொழுதுமே தோசையாக ஊற்றிவிடுவேன். இட்லியை விட தோசை டேஸ்டும் பெட்டராக இருக்கும். ;)
அரிசி-பார்லியை அரைக்கையில் கவனமாகத் தண்ணீர் ஊற்றவும், கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்தால் போதும்.

15 comments:

  1. iii thosai enakuthan..

    mee the firstu..

    ReplyDelete
  2. பார்லி-ப்ரவுன் ரைஸ் தோசை செஞ்சி சாப்பிடனும்... டிப்ஸ் நல்லா கொடுத்திருக்காங்க ...வாழ்த்துக்கள்.. அதாரு ஆதிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் தட்டோட எடுத்துக்கிட்டு ஓடிற்ரா ராஜேஷ் ....எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  3. Indha rendume naan try pannadhilla, wish to try, I can eat dosa with anything, and I think this would be better than oats ;D

    ReplyDelete
  4. what a combo of 2 healthy ingredients.nice dosa

    ReplyDelete
  5. very healthy dosai,love the healthy combo and perfect with chutney!!!

    ReplyDelete
  6. Siva,Rajesh,Raji,Jeyasree,Prema thanks a bunch for your comments! :)

    ReplyDelete
  7. இன்னிக்கு அரைச்சு நாளைக்கு செய்யப்போறேன் மகி .செய்திட்டு சொல்றேன்

    ReplyDelete
  8. Nice variety, Mahi. I have barley in my pantry, time to put it to use.

    ReplyDelete
  9. அருமையான தோசை மகி.

    ReplyDelete
  10. அழகா காம்பஸ் வச்சு போட்ட மாதிரி ரவுன்ட் ரவுண்டா தோசை, சாப்பிட ஆசையை தூண்டுது.

    ReplyDelete
  11. //மகி said...

    Siva,Rajesh,Raji,Jeyasree,Prema thanks a bunch for your comments! :)
    //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), தலையை உள்ளுக்குள்ள வச்சுக்கொண்டு, கையை மட்டும் நீட்டிக் கொமெண்ட் போடீனம்:))))

    ReplyDelete
  12. / தலையை உள்ளுக்குள்ள வச்சுக்கொண்டு, கையை மட்டும் நீட்டிக் கொமெண்ட் போடீனம்:)))) / :)உல்டாவா சொல்றீங்க அதிரா! தலை-கை-கால் எல்லாம் வெளியே தான் இருக்கு, அப்பப்ப இன்டர்நெட்டுக்குள்ளே எட்டிப் பாத்து கமெண்ட் போடறேன்!;)

    தேவதை அக்கா,தோசை சுட்டாச்சா,இல்லையா? :)

    மகேஷ் அக்கா,ஸாதிகா அக்கா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ராதாக்கா, சூப்பர் கமென்ட் போங்க! படிச்சதும் காம்பஸ்ல ரவுண்ட் போட்ட ஞாபகம் வந்துருச்சு!;)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails