Friday, January 15, 2010

முறுக்கு


பொங்கல், தீபாவளி என்றாலே முக்கியப் பலகாரம் முறுக்குதான் ..இந்த முறை ஊருக்குப் போயிருந்தபோது வெற்றிகரமாக முறுக்குப் பிழியும் அச்சு வாங்கிவந்து நானும்(!!?) முறுக்கு சுட ஆரம்பிச்சுட்டேன்.

அம்மா
வீடு,மாமியார் வீட்டில் எல்லாம் இருக்கும் அச்சு கொஞ்சம் பழக்கம்..இந்த எவர் சில்வர் அச்சு எனக்கு பழகவே கொஞ்ச நா....ளானது. அதுவும் இல்லாமல் இதிலே ட்ரெடிலா இருக்கும் மூணு கண் தட்டு, அஞ்சு கண் தட்டு ரெண்டுமே இல்லை! இதில் இருந்த தட்டுக்கள்- வட்டமா பிழிய முடியறது இந்த ஸ்டார் அச்சு மட்டுமே! ஒரே மாதிரி முறுக்கு பிழிய போர் அடிச்சாலும் வேற வழியில்ல!

சரி
, எங்கள போர் அடிச்சது போதும், எங்கே ரெசிப்பி? -ன்னு கேக்கறீங்களா? இதோ..
முறுக்கு
தேவையான பொருட்கள்
அரிசிமாவு - 4 கப்
முழு உளுந்து - 1கப்
பெருங்காயத்தூள்
- 1/4 ஸ்பூன்
எள்ளு - 1/2 கப்
பச்சை மிளகாய் - காரத்துகேற்ப
உப்பு
-ருசிக்கேற்ப
எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு

செய்முறை

உளுந்துப்
பருப்பை அலசி, குக்கரில் வேக வைக்கவும்.

வெந்த பருப்பு ஆறியதும், பச்சை மிளகாயுடன் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

அரிசிமாவு, அரைத்த விழுது, உப்பு, பெருங்காயம்,எள்ளு அனைத்தையும் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். நீர் தேவைப்படாது..அரைத்த விழுது சேர்த்துப் பிசைந்தாலே போதும். தேவைப்பட்டால் சிறிது நீர் தெளித்துப் பிசைந்து கொள்ளவும்.

முறுக்கு
அச்சில் மாவை போட்டு பிழிந்து மிதமான சூட்டில் உள்ள எண்ணெயில் பொரித்து எடுக்கவும். முறுக்கு தயார்.
குறிப்பு :
இந்த
முறுக்கு பொன்னிறமாக வேண்டியதில்லை..பச்சை மிளகாய் சேர்த்திருப்பதால் கலர் கொஞ்சம் வெள்ளையாகத்தான் இருக்கும். எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கவேண்டும். சூடு அதிகமானால் முறுக்கு நிறம் மாறிவிடும்.

Thanks to : My friend Mrs.Vijaya PrasadaRao

9 comments:

 1. இப்படி கஷ்டமான ரெசிப்பியாவே போட்டா நானெல்லாம் எப்ப ட்ரை பண்ண மஹீ? கொஞ்சம் ஈசியா டீ போடறது எப்படி - இந்த மாதிரி சொல்லுங்கோ... :)))

  ReplyDelete
 2. கொஞ்சம் சஜசன்ஸ்.. இன்னும் நிறையா போட்டோஸ் போடுங்க.. ஸ்டெப் பை ஸ்டெப் மாதிரி..

  இருக்கறதயே செய்யற பாட்ட காணம்.. இதுல சஜசன்ஸ் வேறயான்னு முறைக்கறது தெரியுது.. :))

  ReplyDelete
 3. இப்பத்தான் பாத்தேன்.. மத்த போட்டோஸ் ஸ்லைட் ஷோ ல போட்டிருக்கீங்க போல.. இதுலயே வர மாதிரி செய்ய முடியாதா? ஈசி தான்..

  ந்யூ போஸ்ட் ல கம்போஸ் பட்டன க்ளிக் பண்ணி..

  அந்தப் பாக்ஸ் மேல போட்டோ மாதிரி இருக்கற பொம்மைய க்ளிக் பண்ணி...

  ஒன்னொன்னா அப்லோட் பண்ணலாம்..

  இல்லாட்டி பிக்காஸோ ல இருந்து நேரடியாவும் செய்யலாம்..

  ReplyDelete
 4. என்ன இப்படி அண்ணியை டீ போடக் காட்டித்தா, சுடுதண்ணி வைக்கக் காட்டித்தா என்று கொடுமைப் படுத்தறீங்க தண்ணி! ஒரு மரியாதை வேணாமா?

  கொடுக்கிற சஜஷன்ஸ் பார்த்தா எல் போர்ட் மாதிரியே தெரியல. :) எனக்கும் சஜஷன்ஸ் கொடுத்தாங்க மஹி. உங்க தண்ணி ரொம்ப நல்ல பொண்ணு. :)

  செபாம்மா இப்பிடி இனிப்பு முறுக்குதான் பண்ணுவாங்க. ட்ரை பண்ணுறேன்.

  ReplyDelete
 5. மகி, நீங்கள் அனுப்பிய பார்சலுக்காக இவ்வளவு நேரம் வெளியில் காத்திருந்து விட்டு வந்தேன். வரவேயி......ல்லை.
  எனக்கும் இந்த முறுக்கு மாதிரி ஐட்டம் எல்லாம் சாப்பிட மட்டுமே தெரியும். ( சந்தனா, இங்கு அரட்டை கூடாது. மகி, மரக் கரண்டியை எடுத்து சந்தனாக்கு இரண்டு அடி போடுங்கோ)
  வாணி

  ReplyDelete
 6. சந்தனா, இமா & வானதி, நன்றிகள்!

  டீ-யா...ஆ...ஆ? எனக்கும் டீ-க்கும் கொஞ்சம் தூரம்! :) காபி வேணும்னா சொல்லு..உடனே தரேன்!
  ரெசிப்பில போட்டோஸ் தனித்தனியா சேர்க்காம, ஸ்லைட்ஷோ மாதிரி சேர்க்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன்..விரைவில் சேர்க்கப்படும்..பொறுத்தருள்க!

  தண்ணி பாவம், இப்பதானே சமைச்சுப் பழகுது..இப்படித்தான் இருக்கும்..அதெல்லாம் கண்டுக்காம விட்டுடணும் இமா! :) நீங்கள் எனக்கு தரும் சப்போர்ட்டுக்கு ரொம்ப நன்றி! செபா அம்மா இனிப்பு முறுக்கு செய்வாங்களா? ரெசிப்பி சொல்லுங்களேன். நானும் செய்து பாக்கிறேன்.உங்க ப்ளாக் பக்கம் வந்தேன்..செல்லங்கள் மறைவுக்கு அனுதாபங்கள்! பூனைகள் எல்லாம் அழகாக இருக்கு!

  வானதி...வானதி..நேத்துன்னு பாத்து எங்க ஊர்ல ஃபெடெக்ஸ் கால் நாள் லீவு. ;) அதான் உங்களுக்கு வரல போல இருக்கு. சீக்கிரம் வந்துடும்..ஹி,ஹி!!

  ReplyDelete
 7. ஹாய் மஹி.. இந்த ரெசிபி புதுசா இருக்குப்பா.. உளுந்து, பொதுவா வறுத்து, அரைத்து தான் செய்திருக்கேன்...

  கண்டிப்பா செஞ்சு பாக்கணும்.. புக்மார்க் பண்ணிட்டேன்..

  முறுக்கு பார்கவே.... சூப்பர்-ஆ இருக்குங்க.. எனக்கு ரெண்டு முறுக்கு எடுத்துக்கரேன்.. ;-)

  ReplyDelete
 8. ஆனந்தி,இது ஆந்திரா ப்ரெண்ட் ஒருத்தங்க சொன்ன ரெசிப்பிங்க.நான் முறுக்குக்கு உளுந்துபோட்டு செய்ததே இல்ல,பொட்டுக்கடலை மாவுதான் போடுவேன். இது புதுசா இருந்ததுன்னு ட்ரை பண்ணேன்,நீங்களும் செஞ்சு பாருங்க.நல்லா இருக்கும்.

  /எனக்கு ரெண்டு முறுக்கு எடுத்துக்கரேன்.. ;-)/தாராளமா எடுத்துக்குங்க!

  நன்றி ஆனந்தி!

  ReplyDelete
 9. //ஆனந்தி,இது ஆந்திரா ப்ரெண்ட் ஒருத்தங்க சொன்ன ரெசிப்பிங்க.நான் முறுக்குக்கு உளுந்துபோட்டு செய்ததே இல்ல,பொட்டுக்கடலை மாவுதான் போடுவேன். இது புதுசா இருந்ததுன்னு ட்ரை பண்ணேன்,நீங்களும் செஞ்சு பாருங்க.நல்லா இருக்கும்.//

  ....கண்டிப்பா செஞ்சு பாக்குறேன் :)

  //தாராளமா எடுத்துக்குங்க! //

  ...தேங்க்ஸ் பா.. ;-))

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails