Wednesday, September 21, 2011

எச்சரிக்கை!

~~~~~~~

|
|
|
|
V
|
|
|
|
V
|
|
|
|
V
|
|
|
|
V
|
|
|
|
V
கொங்குநாட்டில் புறப்பட்ட இளம்புயல், மும்பை அருகே அரபிக்கடலைக் கடந்து, மத்திய கிழக்கு நாடொன்றில் சற்றே இளைப்பாறி, வட அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் தரையிறங்கி, தற்பொழுது மேற்குக் கடற்கரையில் நிலைகொண்டுள்ளது. அதன் காரணமாக இனி இந்த வலைப்பூவில் தங்குதடையின்றிப் பொங்கிவரும் கோவைப்புதுவெள்ளமாய் பதிவுகள் வெளியாகும் என்ற அபாய எச்சரிக்கையே இந்தப் பதிவு! ;) ;) ;)
~~~~~~~~~

பி.கு. பலரின் வலைப்பூக்களைப் பார்க்க நேரமில்லாமல் நான் எஸ்கேப்பூ:) ஆனபோதும், இங்கே ஷெட்யூல் செய்திருந்த பதிவுகளைப் படித்து கருத்தும் பதித்த அன்பு நட்பூ:)க்களுக்கு என் மனமார்ந்த நன்றி! வெகேஷன் முடிஞ்சு வீடு வந்து சேர்ந்தாச்சு, be prepared மக்கள்ஸ்!

பி.கு. 2 கூகுள் இமேஜஸ்ல "i am back"-னு தேடும்போது இந்தப் பதிவில் இருக்கும் முதல் படம் கண்ணைக் கவர்ந்தது, ஒரு ஆளையும் நினைவு படுத்தியது,அதான் போட்டோவை சுட்டு யூஸ் பண்ணிட்டேன்! :)

38 comments:

 1. பெரிய பீடிகையா இருக்கு, பயமா இருக்கே?!

  ReplyDelete
 2. வாங்க தேவதை அக்கா! உங்க பீச் புகைப்படமெல்லாம் பார்த்தேன், அடையாளமே தெரியாத மாதிரி அழகா(கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) போட்டோ எடுத்து போஸ்ட் பண்ணிருக்கீங்க!

  டாக்டர் ஐயா,பீடிகையெல்லாம் இல்லீங்க, ச்சும்மா ஒரு பில்ட்அப்-தேன்! மத்தபடி நான் ஆரையும் பயமுறுத்தற மாதிரி பதிவெல்லாம் போட்டதா சரித்திரமே இல்லீங்கோ!:)

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஏஞ்சலின் அக்கா & டாக்டர் ஐயா!

  ReplyDelete
 3. வரும் போது ஒரு லாலி பாப்பாவது போடுவீங்கன்னு பார்த்தேன் .இப்பிடி ஏமாத்திட்டீங்களே....அவ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 4. வெல்கம் பேக்...(இது வேற பேக் ) :-)))

  ஸ்கூட்டிய உருட்டிகிட்டு போவது நீங்களா ஹி...ஹி... :-)))

  ReplyDelete
 5. /ஸ்கூட்டிய உருட்டிகிட்டு போவது நீங்களா ஹி...ஹி... :-))) / நீங்க வேற ஜெய் அண்ணா! எங்க வீட்டுப்பக்கத்தில ரோடு இருக்க கண்டிஷனைப் பார்த்தா இப்படில்லாம் கேக்க மாட்டீங்க! :)

  இந்த முறை பேருக்கு ஒரு 2 கி.மீ. எக்ஸல் சூப்பர் ஓட்டியதோட சரி.அப்புறம் எல்லாம் என்(ட்ரை)வருடன்தான் எல்லாப் பயணமும்!ஹிஹிஹி!

  /வரும் போது ஒரு லாலி பாப்பாவது போடுவீங்கன்னு பார்த்தேன் .இப்பிடி ஏமாத்திட்டீங்களே....அவ்வ்வ்வ்வ்வ்/ லாலிபாப் என்ன..ஸ்வீட் காரம் காஃபி டிபன் சாப்பாடு எல்லாமே வெயிட்டிங்! வெயிட் பார் தி விஷுவல் ட்ரீட்! :)

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெய் அண்ணா!
  ~~
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா!

  ReplyDelete
 6. வாங்கோ..வாங்கோ!
  வருக வருக என்று வரவேற்கிறோம்.

  ReplyDelete
 7. மஞ்சள் கலர் பூங்கொத்து கொடுத்து புயலை வரவேற்கிறோம்
  வருக வருக வருக


  இப்படிக்கு பேபி அதிரா ரசிகர்மன்றம்

  ReplyDelete
 8. பூனை உறுமுது பூனை உறுமுது பாடல் தான் நினைவுக்கு வருது முதல் படம் பார்த்த உடன்
  அனைத்தும் வரிகளுக்கு ஏற்ற படங்கள் :)

  ReplyDelete
 9. புயல் பூந்து விளையாடட்டும்... புயலை வரவேற்கிறோம்...வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. வணக்கம் _()_ வருக வருக.

  பாஸ்போர்ட்ட காணமேன்னு தேடுறப்போ கொஞ்சம் கரிசனமா "என்ன தேடுறீங்க?" என்று கேட்டு தேடிக் கொடுக்காம... காமராவே கண்ணா இருந்து இருக்கீங்க. ;)

  ReplyDelete
 11. டமில்... டமில்.....

  இலக்கணத்தில் தவறுள்ளது:))....

  //கொங்குநாட்டில் புறப்பட்ட இளம்புயல்//

  அது இளம்புயலா?:))))) ஹையோ முடியல்ல சாமீஈஈஈஈஈஈஈஈஈஈ:)))))

  ReplyDelete
 12. படம் பார்த்ததுமே நான் நினைச்சேன்... ஜெய் கேட்டிட்டார்.. எப்பூடி?:)))

  //ஸ்கூட்டிய உருட்டிகிட்டு போவது நீங்களா ஹி...ஹி... :-))//

  ReplyDelete
 13. ஆரது... ஒரு அப்பாவிப் பூஸுக்கு அடி கொடுத்து சிரிக்க வச்சது.... உது வரவேற்புச் சிரிப்பல்ல:)))))..... வந்திட்டாய்யா... வந்திட்டா... எனப் பூஸ் பபபபபயத்தில சிரிக்குதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ:))).

  ReplyDelete
 14. வாங்க மகி, பயந்திடாதீங்க நாங்கதான் கெ.கி கூட்டமாச்சே... சோஓஓ இப்பூடித்தான் இருப்போம்... ரெஸ்ட் எடுத்திட்டால் இப்பவே வாங்க பழகலாம்... பட் மீ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கப்போறேன்..

  //siva said...
  மஞ்சள் கலர் பூங்கொத்து கொடுத்து புயலை வரவேற்கிறோம்
  வருக வருக வருக


  இப்படிக்கு பேபி அதிரா ரசிகர்மன்றம்//

  கரெக்ட்... ரிப்பீட்டூஊஊஊஊ:)).

  ReplyDelete
 15. நிரூபன்,நன்றிங்க!
  ~~
  சிவா,மலர்க்கொத்துக்கு நன்றி! :) ரசிகர்மன்றமாஆஆஆஆஆ? ஊருக்கு போயிட்டு வரதுக்குள்ளே என்னென்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னமோ நடந்திருக்கே?

  பூனை பாட்டுநான் கேட்டதில்லே சிவா..நல்லா இருக்குமா அந்தப் பாட்டூ?! ;) ;)

  நன்றி
  ~~
  ஆசியாக்கா,வாங்க வாங்க! நன்றி!
  ~~
  மாய உலகம், புயல் இப்ப இருக்க நிலைமைல பூந்து விளையாட கொஞ்சம் டைமாகும்,அதுவரை பொறுமை ப்ளீஸ்! :)
  நன்றி ராஜேஷ்!
  ~~
  /பாஸ்போர்ட்ட காணமேன்னு தேடுறப்போ /இல்லை, எல்லாம் பத்திரமா பேக்லே வைக்கிறப்ப!

  /கொஞ்சம் கரிசனமா "என்ன தேடுறீங்க?" என்று கேட்டு தேடிக் கொடுக்காம... /உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...ஸப்பா!! கரிசனமாவது,தரிசனமாவது? வீடு வந்தா போதும்னு இருந்தது இமா,நீங்க வேற!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

  /காமராவே கண்ணா இருந்து இருக்கீங்க. ;)/அது வேணா கரீக்ட்டு! நியூயார்க்லே ஆர்வக்கோளாறுல படமெடுத்து,லிஃப்ட்டை மிஸ் பண்ணி காணாம போயிட்டேன்,அப்புரம் கிடைச்சுட்டேன்.ஹிஹி!

  நன்றி இமா!
  ~~
  /ஹையோ முடியல்ல சாமீஈஈஈஈஈஈஈஈஈஈ:)))))/சுட்டாறின மினரல் வாட்டர் தெளிக்க பூஸ்கூட்டமே வெயிட்டிங்,டோன்ட் வொர்ரி! ;) ;)

  /படம் பார்த்ததுமே நான் நினைச்சேன்... ஜெய் கேட்டிட்டார்.. எப்பூடி?:)))/நான் அங்கயே பதிலும் சொல்லிட்டேன்.நீங்களும் படிச்சிட்டீங்கதானே? :)

  /வந்திட்டாய்யா... வந்திட்டா... எனப் பூஸ் பபபபபயத்தில சிரிக்குதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ:)))./பயமோ,பரவசமோ...பூஸுக்குத்தான் தெரியும், எங்களுக்கெங்க தெரியும்?! :P

  /ரெஸ்ட் எடுத்திட்டால் இப்பவே வாங்க பழகலாம்... பட் மீ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கப்போறேன்../ இதான் இள:)க்கன:)ப் பிழை அதிரா! :) :)

  நான் ஜெட் லாக்ல இருக்கறதால இப்ப தூக்கம் வரலை,ஆனா நீங்க ரெஸ்ட் எடுக்கப் போறதால் நானும் இருமல் மருந்து குடிச்சாவது(!) தூங்கப் போறேன். நாளை பேசுவோம்.

  நன்றி!

  ReplyDelete
 16. மஹி வாங்க வாங்க.

  ReplyDelete
 17. என்னா பில்டப்பூஊஊஊஊ

  ReplyDelete
 18. Welcome back, Mahi! Will wait for interesting posts. How is our CBE?

  ReplyDelete
 19. - பூனைய பாத்ததும் பயமா இருந்தது
  - கோயம்புத்தூர் ஏர்போர்ட் போர்டு பாத்ததும் ஆனந்த கண்ணீர் வந்தது
  - அப்புறம் என்னமோ பில்டிங் கட்ரீங்கனு புரிஞ்சது...:)
  - அப்புறம் ஜிலேபிய ரிவர்ஸ்ல எழுதினது படிச்சு கண்ணு வலிச்சது..
  - அப்புறம் ஏதோ tubelight tubelightஆ தெரிஞ்சுது... (உங்களை ஒண்ணும் சொல்லல மகி..:)
  - பொறவு யாரோ ஒருத்தர் பெட்டி எல்லாம் சரி பாத்துட்டு இருக்கார்..

  புயல்னு நீங்களே ஒத்துக்கிட்டப்புறம் நாங்க சொல்றதுக்கு என்ன இருக்கு...வாம்மா மின்னல்...:)))

  //பி.கு. 2 // - அங்க ஒண்ணும் காணோமே... டைப் பண்ண விட்டு போச்சோ.. சரி விடுங்க... நாங்களே கற்பனை பண்ணிக்கறோம்...:)

  Welcome back Mahi... missed you...

  ReplyDelete
 20. ////பி.கு. 2 // - அங்க ஒண்ணும் காணோமே... டைப் பண்ண விட்டு போச்சோ.. சரி விடுங்க... நாங்களே கற்பனை பண்ணிக்கறோம்...:)//


  ஹா..ஹா... அப்பாவீஈஈஈ.வாங்கிய சூப்பர் பல்ப் இது ஹா..ஹா... ஹய்யோ..ஹய்யோ....

  ReplyDelete
 21. இது எங்களோட கோட் வேர்ட் ஹி...ஹி...:-)))))) ஹைலய்ட் செய்து பாருங்க புவ்ஸ் :-)))

  ReplyDelete
 22. //ஜெய்லானி said... ஹா..ஹா... அப்பாவீஈஈஈ.வாங்கிய சூப்பர் பல்ப் இது ஹா..ஹா... ஹய்யோ..ஹய்யோ....//

  y brother y... y this kola veri...awwwwwwwww...:)

  ReplyDelete
 23. லக்ஷ்மிம்மா,நன்றி!
  ~~
  ஸாதிகாக்கா,நன்றி! பில்ட்-அப் எல்லாம் பலமாக் குடுத்தாச்சு, ஆனா அதுக்கப்புறம் ஒண்ணும் வராதில்ல?! ;)
  ~~
  சித்ரா ஆச்சி, பெல்ஜியத்தில் மாவு பொங்கறதில்லையா? சீக்கிரம் அதுக்கு ஒரு டிப்ஸ் சொல்லறேன்.
  நன்றிங்க!
  ~~
  மஹேஸ் அக்கா,வாங்க! நம்மூரு வழக்கம்போல கலக்கலாத்தான் இருக்கு. :) மனசே இல்லாம கிளம்பி இங்க வந்திருக்கேன். :-{
  நன்றி!
  ~~
  காயத்ரி,நன்றிங்க!
  ~~
  Agape tamil writer,தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
  ~~
  விஜிக்கா,நன்றி!
  ~~
  சுகந்திக்கா, நாங்க பொள்ளாச்சி போனோமே! :) சும்மா சொல்லக்குடாது, தென்னந்தோப்பு, ரோட்டோரப் புளியமரமெல்லாம் இன்னும் மீதி வைச்சிருக்காங்க..பசுமையா இருக்குது! :):)

  நன்றி!
  ~~
  புவனா,என்னைய மின்னல்னு சொன்னீங்க சரி..உங்களையும் வடிவேலு ரேஞ்சுக்கு ஜெய் அண்ணா சும்மா போட்டுத்தாக்கிட்டாரே!! :)

  இந்த ஹைலைட்டிங் டெக்னிக் பலகாலமா யூஸ் பண்ணறோம்,உங்களுக்கு இப்பதான் தெரிஞ்சிருக்கா??!! ஹிஹிஹி!

  /பொறவு யாரோ ஒருத்தர் பெட்டி எல்லாம் சரி பாத்துட்டு இருக்கார்.. /கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அதென்ன யாரோ ஒருத்தர்?? சாட்சாத் எங்காத்து ரங்கமணியேதான்!!

  இன்னிக்கு காலைல (உங்க கமென்ட் பாத்துட்டு) கொஞ்சம் அர்ச்சனை கிடைச்சது! புவனா அட்ரஸ் வாங்கிருந்தா ஊர்ல அவங்க வீட்டுக்குப் போய்ப் பாத்துட்டு(!) வந்திருக்கலாமில்லன்னு திட்டு விழுந்தது! அடுத்தமுறை ஊருக்குப் போறதுக்குள்ளயாவது அட்ரஸ் குடுத்திருங்க,சரியா? :)
  ~~
  ஜெய் அண்ணா,உங்க மாமி ரேஞ்சுக்கு ரோசாப்பூ எல்லாம் எனக்கு டைப்படிக்கத் தெரியாது. நம்ம அப்பாவிய மெய்யாலுமே அப்பாவியாக்கினதுக்கு பாராட்டுக்கள்! :)
  ~~
  இதனால் எல்லாருக்கும் அறிவிச்சுக்கிறது இன்னான்னா, ச்சீ,என்னன்னா, பருவநிலை மாற்றங்களால், கொங்குப்புயலின் உடல்நலம் கொஞ்சம் பாதிக்கப்பட்டு ரெஸ்ட்டில் இருக்கிறது. தட்பவெப்பம் சீரானதும் அடுத்தவாரம் வாக்கில் அடுத்த பதிவு வெளியிடப்படும்!
  நன்றி,வணக்கம்!

  ReplyDelete
 24. //கொங்குப்புயலின் உடல்நலம் கொஞ்சம் பாதிக்கப்பட்டு ரெஸ்ட்டில் இருக்கிறது. தட்பவெப்பம் சீரானதும் //

  இதுக்குதான் சொன்னாங்களா ””புயலுக்கு பின் அமைதி”” -ன்னு . அப்போ சமையல் மாம்ஸ்தானா ஹா..ஹா.. :-)))

  ReplyDelete
 25. நாங்க பொள்ளாச்சி போனோமே!//
  did u go to top slip?
  சில வருஷம் முன் நாங்க போனப்ப மான் கூட்டமே ஈவ்னிங் ஓடி வந்தது கொள்ளை அழகு .okay take care mahi .see you later .

  ReplyDelete
 26. இன்னைக்கி கணக்குக்கு இன்னும் பல்ப் வரலியேனு இருந்தேன்... என் குறை தீர்ந்தது... வாழ்க ஜெய்... அவ்வ்வவ்வ்வ்....
  (ஜெய்லானி பிரதர், இந்த நாள் உங்க காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோங்க...:))))


  //அடுத்தமுறை ஊருக்குப் போறதுக்குள்ளயாவது அட்ரஸ் குடுத்திருங்க,சரியா? :) //

  நானும் உங்க ஈமெயில் அட்ரஸ்'ஆச்சும் கிடைக்குமானு ரெம்ப நாளா facebookல உங்கள தேடிட்டு இருக்கேன்... முடிஞ்சா என்னை add'ங்கோ... இதே அப்பாவி தங்கமணி'ங்கற பேர்ல தான் அங்கயும் இருக்கேன்... :))  //நம்ம அப்பாவிய மெய்யாலுமே அப்பாவியாக்கினதுக்கு பாராட்டுக்கள்!//

  என்னா ஒரு வில்லத்தனம்...கிர்ர்ர்ரர்ர்ர்ர்

  ReplyDelete
 27. //did u go to top slip?
  சில வருஷம் முன் நாங்க போனப்ப மான் கூட்டமே ஈவ்னிங் ஓடி வந்தது கொள்ளை அழகு //

  நான் கூட கொஞ்சம் தப்பா நினைச்சுட்டேன் ...யாரையாவது கூட்டிகிட்டு போய் தள்ளிவிட்டுட்டீங்களோன்னு அவ்வ்வ்வ் :-)))

  ReplyDelete
 28. //(ஜெய்லானி பிரதர், இந்த நாள் உங்க காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோங்க...:))))//

  யாராவது ஒருத்தர் அடிச்சா நினைவு வச்சுக்கலாம் ..தினமும்தான் யாராவது எங்காவது பிடிச்சு வச்சு கும்முறீங்களே அப்புறம் எப்படி ஹ்ஹி...ஹி.. :-)))))))))))))))))

  ReplyDelete
 29. //
  நானும் உங்க ஈமெயில் அட்ரஸ்'ஆச்சும் கிடைக்குமானு ரெம்ப நாளா facebookல உங்கள தேடிட்டு இருக்கேன்...//


  ஒரு வேளை மஞ்சள் மஹின்னு கிடைச்சாலும் கிடைக்கலாம் ஹா..ஹா.. :-))

  ReplyDelete
 30. /இதுக்குதான் சொன்னாங்களா ””புயலுக்கு பின் அமைதி”” -ன்னு . அப்போ சமையல் மாம்ஸ்தானா ஹா..ஹா.. :-)))/ கரெக்ட்டாச் சொல்லீட்டீங்க ஜெய் அண்ணா! மாம்ஸ் சமைச்சுக் குடுத்து என்னை தேத்திட்டாருல்ல? :)
  ~~
  /did u go to top slip?/இல்லைங்க ஏஞ்சல் அக்கா,நாங்க சொந்தக்காரங்க வீட்டுக்குப் போனோம், ட்ரிப் போகவெல்லாம் நேரமில்லை.டாப்ஸ்லிப் சூப்பரா இருக்கும். அடுத்த முறை போயிடவேண்டியதுதான்! :)
  ~~
  /ரெம்ப நாளா facebookல உங்கள தேடிட்டு இருக்கேன்... முடிஞ்சா என்னை add'ங்கோ.../நான் அங்கே இல்லீங்கம்மிணி!
  ~~
  /ஒரு வேளை மஞ்சள் மஹின்னு கிடைச்சாலும் கிடைக்கலாம் ஹா..ஹா.. :-))/ஜெய் அண்ணா,மஹிஅருண்-னு தேடினாலே கிடைச்சாலும் கிடைக்கலாம், ஆனா அங்கிட்டு நான் இருக்கமாட்டேன். ஹா..ஹா.. :-)

  /யாரையாவது கூட்டிகிட்டு போய் தள்ளிவிட்டுட்டீங்களோன்னு அவ்வ்வ்வ் :-)))/ எப்பப்பாரு இப்புடி கோக்குமாக்காவே பேசிகிட்டுத் திரிஞ்சா //தினமும்தான் யாராவது எங்காவது பிடிச்சு வச்சு // கும்மி எடுக்காம என்ன பண்ணுவாங்களாம்? ஹ்ஹி..ஹி.. :-)))))))

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails