Wednesday, September 28, 2011

எதைச் சொல்ல எதை விட?

வருஷம் ரெண்டு போனபின்னே
கோயமுத்தூர் போயி
மாசம் ஒண்ணு தங்கினதச்
சொல்ல நெனச்சா...
எதைச் சொல்லறது..எதை விடறது?

நல்லவனைப் போலிருப்பானாம்
பரம சண்டாளன்-ங்கற
பழமொழியை அனுபவிச்சு
பாம்பே ஏர்போர்ட்டில்
மொபைல் போன் பேட்டரியைத்
தொலைச்ச கதையச் சொல்லவா?

எங்கூருல ஏசி ஹாலிலிருந்து
கையேந்திபவன் வரையும்
தேடிச்சோறு நிதந்தின்ற(!) கதை சொல்லவா?

பக்கத்துவீட்டு முருங்கைமரத்தில்
கீரை பறித்து சுடச்சுட வடைசுட்டு
மழைநாளில் ருசித்ததைச் சொல்லவா?

தோல்சுருங்கியும் பாசம் சுருங்காத
பாட்டிகளுடனும்,
எங்க வீட்டு அரும்புகளுடனும்
நாங்கள் கழித்த கணங்களைச் சொல்லவா?

அத்த வீடு-சித்தி வீடு
அக்கா வீடு-மாமா வீடுன்னு
வீடுவீடாப் போய்
விடுபட்ட சொந்தங்களைப் பார்த்த கதை சொல்லவா?

காக்கா-கழுதைக்குட்டி-பழவண்டி- சொகுசுப் பேருந்து
மிதவைப் பேருந்து- கருவாட்டுப் பாட்டி
R.S.புரம், அவினாசி ரோடு, கோயில்,ஆஸ்பத்திரி,காலேஜுன்னு
கண்டதையும் படம்புடிச்சு, கேமராவில பூச்சி புடிச்சு(!)
ரெண்டு மணி நேரம் போராடி மீட்ட கதை சொல்லவா?

போர்த்திப் படுக்க அம்மா சீலைய
மறக்காம எடுத்துட்டு வரோணும்னு நினைச்சு
மறந்துபோய் இங்கே வந்து நினைச்சதைச் சொல்லவா?

கண்ணீரில் நனைந்து கனத்த
இதயத்துடனும்
காய்ந்த விழிகளுடனும்
கையசைத்து விடைபெற்றதைச் சொல்லவா?

காலநேரப் பரிமாணங்கள் கடந்து
ஊர் சேர்ந்து உடல்நலங் கெட்டு
ஜெட் லாகால் தூக்கங் கெட்டு
வாரமொண்ணு போனபின்னும்
மந்திரிச்சு விட்ட கோழியாய்
நாந்திரியும் சோகக்கதையைச் சொல்ல்ல்ல்லவா?!

~~~~~~~~~

ஆர்வமா வந்து இந்தப் பதிவைப் படித்து(வெறுத்து)ப் புண்பட்ட உங்க மனச எதோ என்னால முடிஞ்சளவு எங்கூரு ஏ1 சிப்ஸும் டீயும் குடுத்து ஆறுதல் படுத்தறேன்! சாப்பிடுங்க,நன்றி!
:)))))))))))))))))

54 comments:

  1. இப்ப அவசரமா வெளிய போகிறேன்
    going to pickup my daughter.
    //கண்ணீரில் நனைந்து கனத்த
    இதயத்துடனும்
    காய்ந்த விழிகளுடனும்
    கையசைத்து விடைபெற்றதைச் சொல்லவா?//
    same feelings .

    ReplyDelete
  2. ha ha ha......orre feeeeeeeeeeellllllllllllllingsa.....

    ReplyDelete
  3. இப்ப சுகமா மகி ??i think its home sick ,you will be alright in another few days .bye cheers .take care.

    ReplyDelete
  4. இங்கயும் அதே கதை தான் மகி...இப்போ சரியாகிடுச்சு.இன்னும் கொஞ்சநாளில் உங்களுக்கும் பழகிவிடும்..

    ReplyDelete
  5. @மேனகா & ஏஞ்சல் அக்கா,
    ஹோம்சிக் தான்! கொஞ்சம் பழகிடுச்சு,இருந்தாலும் அந்த உணர்வுகளை நினைவில் வைச்சுக்க இப்புடி ஒரு பொலம்பல் பதிவு! :)

    /இப்ப சுகமா மகி ??/ 90% சுகம்தான் ஏஞ்சல் அக்கா! ஜலதோஷம் விடாததால் மீதி 10% சுகமில்லாம இருக்கேன். உங்க அன்பான வார்த்தைகளுக்கு நன்றி! :)

    @ப்ரியா(இது எந்தப்பிரியான்னு வேற புரியல!)/ha ha ha......orre feeeeeeeeeeellllllllllllllingsa...../ ஏனுங்க இப்புடி ஒரு சந்தோஷம் உங்களுக்கு?!
    ~~~

    அமெரிக்கா வந்ததும் புயல் அமைதியாயிடுச்சுன்னு எல்லாரும் மறந்துடக்கூடாதே? ஹிஹ்ஹி..

    ReplyDelete
  6. மகி,என் சோகக்கதையை கேளு தாய்க்குலமேன்னு நானும் பாடாத குறை தான்,மகன் வேறு ஊரில்,அப்படியே செயலற்று போய் உட்கார்ந்திருக்கேன்,இல்லையில்லை படுத்திருக்கேன்..வந்தவுடன் நானும் வந்திட்டேன்னு ஏற்கனவே இருந்ததை தேத்தி இரண்டு பதிவு போட்டேன்,இப்ப மனசு எதுலேயும் லயிக்கலை,விரைவில் பதிவிடவேண்டும்.
    ஊர் நினைவுகளை விட்டு மீண்டு வர வாழ்த்துக்கள்.;((((((......

    ReplyDelete
  7. ஆசியாக்கா, ஊருக்கு போயிட்டு வந்த கும்பல் எல்லாரும் இப்புடித்தான் திரிஞ்சுகிட்டு இருக்கோம் போல இருக்கே?

    மைண்டை டைவர்ட் பண்ணி ப்ளாக் பக்கம் வாங்க, எல்லாம் சரியாகிடும். சீக்கிரம் உங்க பதிவுகளை எதிர்பார்க்கிறேன்! :)

    ReplyDelete
  8. சொந்த ஊருக்கு போயிட்டு வீடு (வெளிநாடுக்கு) திரும்பி வரும் மக்களை இப்படிதான் புலம்புராங்க.. பார்க்க கஷ்டமாக தான் இருக்கு... வேற என்ன சொல்லமுடியும்...

    எல்லாம் சில காலம் தான் மாறிவிடும்..

    ReplyDelete
  9. கண்ணில் பட்ட அத்தனையும் க(வி)தையாய்ப் போனது...
    இது போல கதைதானே அனைவருக்கும்...!!

    Mahi, கலக்கிபுட்ட புள்ள..!

    -பருப்பு ஆசிரியன்

    ReplyDelete
  10. @ப்ரியா(இது எந்தப்பிரியான்னு வேற புரியல!)/ha ha ha......orre feeeeeeeeeeellllllllllllllingsa...../ ஏனுங்க இப்புடி ஒரு சந்தோஷம் உங்களுக்கு?!
    இது புது பிரியா ,இதுவர நான் உங்க பதிவுகளை படிச்சுட்டு மட்டும் போயிருவேன் ,இன்னக்கிதான் முதல் தடவ கமெண்ட் எழுதுறேன்.

    நானும் ஊருக்கு போயிடு வந்து இப்படிதான் இருந்தேன் ,அதுக்கப்றம் உங்க ப்ளாக்க sorry,sorry உங்க ப்ளாக்ல வர்ற கமெண்ட்ஸ் படிச்சுட்டு எல்லாதயும் மறந்துட்டேன்

    ReplyDelete
  11. /இது புது பிரியா/ அப்படிங்களா? வாங்க,வாங்க! :)

    என்னோட ப்ளாகுல கமென்ட் போடும் ப்ரியாக்கள் ஆல்ரெடி 5 பேர் இருக்காங்க. அதுல எதாவது ஒரு ப்ரியாவா இருக்குமோன்னு நினைச்சேன்! நீங்க ஆறாவது ஆளா,ஓகே!

    sorry எல்லாம் எதுக்குங்க? நான் ஜெட்லாகில் இருக்கையில் மண்டைக்குள்ளே உதயமான ஃபீலிங்க்ஸ எல்லாம் மறந்துபோறதுக்குள்ள எழுதி வைச்சுக்கலாமேன்னு போஸ்ட் பண்ணினேன்,தட்ஸ்ஆல்!

    எனிவேஸ், தேங்க்ஸ் பார் தி கமென்ட்(ஸ்)!

    ReplyDelete
  12. என் சோக கதைய கேளு .....அப்டின்னு ஒரு பாட்டு நியாபகம் வர்றது (ற entha ra?therialaiey)

    ReplyDelete
  13. பெரிய சகச கதை
    ஒரு சோக ஒப்பாரி கதை -கவிதை வடிவில்
    அழகாய்
    எளிமையாய் தொகுத்து
    (மிச்சரும் சிப்சும் )
    கொடுத்து இருக்கீங்க :)

    ReplyDelete
  14. இந்த சோகத்தில் இருந்து மீண்டு வர வேண்டுகிறோம்
    எல்லாம் வல்ல பேபி அதிரா உங்களுக்கு துணை இருப்பாராக

    ReplyDelete
  15. சகச --தப்பு
    சாகச கதை :)

    ReplyDelete
  16. உட்டா என்னைய சோகக்கடல்ல தள்ளி அமுக்கி,மூழ்கடிச்சிருவீங்க போல இருக்கே??!!!தெரியாம ஒரு போஸ்ட்டை பப்ளிஷ் பண்ணிப் போட்டேன்,ஆள விடுங்க சாமிகளா! :)))))))))

    மக்கா,இதுவும் கடந்து போகும்,இதுக்கு மேல ஆரும் ஃபீலிங்க்ஸ் பண்ணக்குடாது என்ன? பீலிங்க்ஸ் பண்ணாம அயகா:) கமென்ட் போட்டீங்கன்னா அடுத்த போஸ்ட்ல அல்லாருக்கும் எங்க சொந்தக்காரங்க வீட்டுவிருந்து சாப்பாடெல்லாம் கண்ணுல காட்டுவேன்,டீல் ஓக்கே? ;) ;) ;)

    ReplyDelete
  17. /Blogger Mahes said...

    You made me nostalgic :)/
    நம்மூர்க்காரங்களுக்கெல்லாம் நாஸ்டால்ஜிக்-ஆத்தான் இருக்குங்க்கா! என்ன பண்ணறது? சீக்கிரமா அடுத்த ட்ரிப்புக்கு டிக்கட்ட புக் பண்ணுங்க!:)
    ~~~
    சிவா,எழுத்துப்பிழையெல்லாம் நீங்களே சரி பண்ணிக்கிற அளவுக்கு வளந்துட்டீங்களே? வெறி:)குட்!

    /எல்லாம் வல்ல பேபி அதிரா / மதியமே நைஸா எட்டிப்பார்த்துட்டு சைலன்ட்டா ஓடிட்டாக!..கர்ர்ர்ர்ர்ர்ர்!

    பிதாசுதன் பரிசுத்த ஆவியின் பெயரால், எல்லாம் வல்ல பேபி அதிராவை இங்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்,ஆமென்!

    :)))))))))))

    ReplyDelete
  18. வெறி:)???? why entha veri?????

    ReplyDelete
  19. பிதாசுதன் பரிசுத்த ஆவியின் பெயரால், எல்லாம் வல்ல பேபி அதிராவை இங்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்,ஆமென்!
    ///

    repeatu...ஆமென்!

    ReplyDelete
  20. The collage is beautiful and the poetic lines too... but overall it is a memorable and refreshing trip isn't it? The murungai keerai vadai has made me drool..hi.hi.

    ReplyDelete
  21. மகி,சொந்தகாரங்க வீட்டு விருந்த சீக்கிரம் கண்ணுல காட்டுங்க.எதிர்பார்கிறேன்.உங்களுக்கும் ஹோம்சிக் போன மாதிரி இருக்கும்.வர்ற தீபாவளிக்கு பண்ற மாதிரி ஏதும் புது ரெசிபி அதில இருக்கும்னு எதிர்பார்கிறேன்.

    ReplyDelete
  22. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... கோயாம்புத்தூர் போனதிலிருந்து மகிக்கு கவிதையாவே வருதூஊஊஊஊஊ:))).

    என்னாச்சோ.. ஏதாச்சோ:))

    ReplyDelete
  23. //பக்கத்துவீட்டு முருங்கைமரத்தில்
    கீரை பறித்து சுடச்சுட வடைசுட்டு//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நாம மேல இருக்கும்போதே முருங்கை இலை பறிச்சு வடையா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

    ReplyDelete
  24. ///எல்லாம் வல்ல பேபி அதிரா / மதியமே நைஸா எட்டிப்பார்த்துட்டு சைலன்ட்டா ஓடிட்டாக!..கர்ர்ர்ர்ர்ர்ர்! //

    கடவுள்மேல ஆணை, பூஸ்மேல ஆணை... இப்போதான் பார்க்கிறேன், உள்ளே வந்திருக்கிறேன் வந்ததும்... ஊஊஊஊஊஊஊஊஊஊட்டம் போட்டிருக்கிறேன்...

    பார்த்தால் ஒரு சொல்லாவது போட்டிருப்பேன்....

    நேரம் போதாமல் இருக்கு:( கொஞ்சம் பிசியாகிக்கொண்டு போகுது லைவ்:)))).. சன்ரா வரப்போறாரெல்லோ:)) அதுதான் உலகமே கொஞ்ச நாளைக்கு பிசிதானே:)).

    ReplyDelete
  25. //பிதாசுதன் பரிசுத்த ஆவியின் பெயரால், எல்லாம் வல்ல பேபி அதிராவை இங்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்,ஆமென்! //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)மேளம் தாளம் இல்லாமல் வெறும் அழைப்பு மட்டுமெண்டால் எப்பூடி வருவன்?:)) அட்லீஸ்ட் செங்கம்பள வரவேற்பூஊஊஊஊஊஊஊ?:))... சே..சே.. வர வர அஞ்சுவின் தொல்லை தாங்க முடியல்லப்பா.... முதேல் வடை அங்கின போயிடுதூஊஊஊஊஊஊஊஊ:)))).

    ReplyDelete
  26. // மண்டைக்குள்ளே உதயமான ஃபீலிங்க்ஸ எல்லாம் மறந்துபோறதுக்குள்ள எழுதி வைச்சுக்கலாமேன்னு போஸ்ட் பண்ணினேன்,தட்ஸ்ஆல்! //

    ஒண்ணுமே சொல்லமாட்டேன் சாமீஈஈஈஈஈஈ.. சொன்னால் மகி அடிக்கக் கலைப்பா:)))

    ReplyDelete
  27. சிவா இங்கதான் இருக்கிறாரோ?:))) இருங்க வாறேன்..

    //siva said...
    இந்த சோகத்தில் இருந்து மீண்டு வர வேண்டுகிறோம்
    எல்லாம் வல்ல பேபி அதிரா உங்களுக்கு துணை இருப்பாரா//

    இந்தாங்க சிவா பிடிங்க என்னுடையதை:)), நான் மகியுனுடையதை வாங்கி தேம்ஸ்ல போட்டிடுறேன்..:)).. நான் சோகத்தைச் சொன்னேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    .

    ReplyDelete
  28. அட மகி ரொம்ப ரசித்து அனுபவத்தை கவிதையாக படைத்து மனசை வெயிட்டாக்கிட்டீங்கப்பா.

    //நல்லவனைப் போலிருப்பானாம்
    பரம சண்டாளன்-ங்கற
    பழமொழியை அனுபவிச்சு
    பாம்பே ஏர்போர்ட்டில்
    மொபைல் போன் பேட்டரியைத்
    தொலைச்ச கதையச் சொல்லவா?//

    இந்தக்கதையை அவசியமவசியம் பதிவா போடுங்கப்பா.

    ReplyDelete
  29. //மந்திரிச்சு விட்ட கோழியாய்
    நாந்திரியும் சோகக்கதையைச் சொல்ல்ல்ல்லவா?!//

    ஹி..ஹி.... எல்லாம் டிரைனை பிடிச்சு தண்டவாளத்துல ஏத்துர வரைதான் அப்புரம் அதை பிடிக்க முடியாதே...!! டோண்ட் ஓர்ரி ..:-))

    ReplyDelete
  30. ஃபேமிலி ஆளுங்களே இப்பிடி சோக ராகம் வாசிச்சா ...???? அப்புறம் சிங்கிள் ஆளெல்லாம் சிம்பொனிதான் வாசிக்கனும் ...ஹி..ஹி... :-))

    ReplyDelete
  31. சுவீட் தரேன்னு சொல்லிட்டு சிப்ஸ் சிங்கிள் டீயோட விரட்டிட்டீங்களே...!!! அவ்வ்வ்வ் :-))

    ReplyDelete
  32. //ஜெய்லானி said...
    ஃபேமிலி ஆளுங்களே இப்பிடி சோக ராகம் வாசிச்சா ...???? அப்புறம் சிங்கிள் ஆளெல்லாம் சிம்பொனிதான் வாசிக்கனும் ...ஹி..ஹி... :-//

    இது ஜூப்பர்ர்ர்ர்ர்.

    எங்களுக்கு எந்த சொர்க்கம் போனாலும், எங்கட வீட்டுக்குள் வந்து ஏறும்போதுதான் சொர்க்கத்துக்கு வந்ததுபோல ஒரு பீலிங்ஸ்சாக இருக்கும்.

    ReplyDelete
  33. //இதுக்கு மேல ஆரும் ஃபீலிங்க்ஸ் பண்ணக்குடாது// ok. ;)

    ReplyDelete
  34. //இந்தக்கதையை அவசியமவசியம் பதிவா போடுங்கப்பா.//

    ஹும்ம்....கடுபேத்துறாய்ங்க யுவர் ஆனர் ....!!!

    :-))

    ReplyDelete
  35. //நானும் ஊருக்கு போயிடு வந்து இப்படிதான் இருந்தேன் ,அதுக்கப்றம் உங்க ப்ளாக்க sorry,sorry உங்க ப்ளாக்ல வர்ற கமெண்ட்ஸ் படிச்சுட்டு எல்லாதயும் மறந்துட்டேன் //

    மாமீஈஈஈஈ...உங்களுக்கு புதுசா ஒரு ஸ்டூடண்ட் கிடைச்சுட்டாங்க போலிருக்கு அவ்வ்வ்வ்வ் :-))))))

    ((இதுல யாரை நான் மாமீஈஈன்னு சொன்னேன் அடடாஆஆஆ..மறந்துப்போச்சே))

    ReplyDelete
  36. //இமா said...
    //இதுக்கு மேல ஆரும் ஃபீலிங்க்ஸ் பண்ணக்குடாது// ok. ;//

    ithuuuuuuuuuuuuuu அதைவிடப் ஃபீலிங்சாக இருக்கெனக்கு.... :)) டிஷ்யூஊஊஊஉ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:))).

    ReplyDelete
  37. //((இதுல யாரை நான் மாமீஈஈன்னு சொன்னேன் அடடாஆஆஆ..மறந்துப்போச்சே))/

    ஹையோ... கடவுள் மீது ஆனையாக:)) சே என்னப்பா இது ஆணையாக அது என்னை இல்லைஐஐஐஐஐ....:))).

    வரவர ஜெக்கு.... மாமி கூடுதோ? அவ்வ்வ்வ்வ்வ்:)))

    ReplyDelete
  38. tamil font is not working for me! :-{

    konjam irunga, gmail-la type panni eduththuttu varen! :)

    ReplyDelete
  39. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஏதோ ரீயும் வடயும் எடுத்திட்டு வாறமாதிரி சொல்லிட்டுப் போயிருக்கிறா:)))

    ReplyDelete
  40. //ஹையோ... கடவுள் மீது ஆனையாக:)) சே என்னப்பா இது ஆணையாக அது என்னை இல்லைஐஐஐஐஐ....:))).// ஹஹ்ஹா! ஜூப்பர் அதிரா! அதே கடவுள் மீது குதுரையாக:) ச்சே என்னப்பா இது ஆணையாக அது என்னையும்ம்ம்ம்ம் இல்லை! :) :)))))))))))

    ஜெய் அண்ணா,மால்வேர் உங்க தலைமைச் செயலகத்தையும் அட்டாக் பண்ணி மாமி என்பவர் யார்னு மறக்க வைச்சிருச்சா? திஸ் இஸ் டூஊஊஊ பேட்!!!!!!!! ஹாஹ் ஹாஹ் ஹா! ஹ்ஹிஹ் ஹீ !

    ReplyDelete
  41. /ஏதோ ரீயும் வடயும் எடுத்திட்டு வாறமாதிரி சொல்லிட்டுப் போயிருக்கிறா:)))
    / என்ன பண்ணறது அதிரா? ஜிமெயில்-ல தான் தமிழெண்ணை காயுது இன்னிக்கு! அதான் அங்கே வடையும் சுட்டு ரீயும் போட்டு காப்பி(!) பண்ணி இங்க எடுத்துட்டு வரேன்! :)

    ReplyDelete
  42. ///இந்தக்கதையை அவசியமவசியம் பதிவா போடுங்கப்பா.//

    ஹும்ம்....கடுபேத்துறாய்ங்க யுவர் ஆனர் ....!!! :-))///// கரீக்ட்டா சொன்னீங்க ஜெய் அண்ணா! நான் புன்னகை மன்னி ஆன கதையைக் கேக்க என்ன ஒரு ஆர்வம் பாருங்கோ! ;)

    அதுக்காக இல்லாட்டியும் அங்க இருந்த இட்லி.காம் ஹோட்டலுக்காகவாவது ஒரு தனிப் பதிவு போடுவேன்! :)

    ReplyDelete
  43. உங்க எல்லா கதையும் சொல்லுங்கோ சிப்ஸ் கொரிச்சுக்கிட்டே கேப்பேனாக்கும்... பட் காதுல ஹெட்போன் மாட்டிக்கிட்டு பாட்டுகேட்டுக்கிட்டே இருப்பேன்... நீங்க பாட்டுக்கு சொல்லிக்கிட்டே இருக்கனும்... அதிஸ் மியாவ் டீ இன்னும் வர்ல

    ReplyDelete
  44. அப்படியே உங்க போட்டோ ஒன்னையும் எடுத்து போட்டுஇருக்கலாம் .நல்லா இருக்கு மஹி. அவள் விகடன்ல பார்த்தது கிளியரா இல்லை

    ReplyDelete
  45. //போர்த்திப் படுக்க அம்மா சீலைய
    மறக்காம எடுத்துட்டு வரோணும்னு நினைச்சு
    மறந்துபோய் இங்கே வந்து நினைச்சதைச் சொல்லவா?// ம்ம்ம்... ம்ம்ம்.... எங்க அம்மாகிட்ட போறேன்...

    ReplyDelete
  46. பீலிங்க்ஸ் ஓவர் மகி.... அடுத்த போஸ்ட் எப்போ?

    ReplyDelete
  47. ஐ! மகி, காக்கா படமெல்லாம் எடுத்திட்டு வந்திருக்காஹ... அப்பாவி அக்கா, ஓடியாங்க ஓடியாங்க... இந்த படம் கேட்டு ஒரு கதை எழுதி இருந்தீங்க!

    ReplyDelete
  48. நானும் கமெண்ட் போடலாம்னு வந்தா எதை சொல்றது எதை உடறதுனு தெரியாம உன் ஸ்டைல்லையே சொல்லிட்டேன் மகி..:)

    கவிதை பாத்து கண்ணீர் வடித்த
    கொடுமைய சொல்லவா?

    முருங்கைவடை நெனப்புவந்து
    முசுமுசுனு அழுதத சொல்லவா?

    CTCபஸ் போட்டோபாத்து
    சிரிச்ச நெனப்ப சொல்லவா?

    பறவைபருந்தை நீபடுத்தினபாட்டுல
    ப்ளூகிராஸ்வந்த கதையசொல்லவா?

    Last but not least...

    'ஏ'1 சிப்ஸ் பாக்கெட் பாத்து
    'ஓ'னு அழுததசொல்லவா?

    இந்த கமெண்ட் போதுமா... இன்னும் கொஞ்சம் வேணுமா...:)))

    ReplyDelete
  49. //ChitraKrishna said... ஐ! மகி, காக்கா படமெல்லாம் எடுத்திட்டு வந்திருக்காஹ... அப்பாவி அக்கா, ஓடியாங்க ஓடியாங்க... இந்த படம் கேட்டு ஒரு கதை எழுதி இருந்தீங்க!//

    ஐடியா குடுத்ததுக்கு நன்றிங்க சித்ரா.. இதோ ஆரம்பிக்கறேன்...:))

    ReplyDelete
  50. ஹையோ மகியைப் பூஸ் தூக்கிட்டுப் போயிட்டுதூஊஊஊஊஊஊஉ:)))).

    ReplyDelete
  51. Mahi hope you are keeping fine .visit my english and tamil blogs .i've given some links about ribbon embroidery

    ReplyDelete
  52. நீங்க நீடில் வொர்க்கில் க்வீன் அதனால சீக்கிரமா ஒரு ரிப்பன் வொர்க் செஞ்சு உங்க ப்லாக்ல போடுங்க .

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails