விஜயலட்சுமி என்னை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார்.."
உங்களைப் பற்றிய ஏழு விஷயங்கள் சொல்லவும் /
கீழ்க்கண்ட வினாக்களுக்கு ஒரு பக்கத்துக்கு மிகாமல் பதில் அளிக்கவும்" -
இந்த ரீதியில் தொடர் பதிவு இருந்திருந்தால் நைசா எஸ்கேப் ஆகியிருப்பேன்,
ஆனால் இந்தத் தொடர்பதிவு "
உங்க அஞ்சறைப் பெட்டியை படமெடுத்து போடுங்க"
என்று சொன்னதாலும்,
அதிர்ஷ்ட வசமாக கோவை கிளம்பும் முன் என் அஞ்சறைப் பெட்டியை தோழி ஒருவருக்கு காட்டுவதற்காக எடுத்த படங்கள் கைவசம் இருந்ததாலும் தொடர்ந்துவிட்டேன்! :)
பேரென்னவோ அஞ்சு அறை பெட்டி என்றாலும்,
இதில் பெரும்பாலும் ஏழு அறைகள்தான் இருக்கும்.(
அது ஏன் என்று தெரிந்தவர்கள் அரைப் பக்கத்துக்கு மிகாமல் கமெண்ட்டவும். ;))
எங்கூருப் பக்கம் இதனை "
செலவுப் பொட்டி"
என்று சொல்வது வழக்கம்.
இப்பொழுதெல்லாம் பிளாஸ்டிக் செலவுப் பொட்டிகள்,
கண்ணாடி போட்ட செலவுப் பொட்டிகள் என்று பலவிதமாகப் புழக்கத்துக்கு வந்துவிட்டன.
முன்பொருமுறை ஊருக்கு வந்தபொழுது,
பாத்திரக் கடைக்கு குக்கர் வாங்க போயிருந்தோம்.
அப்போது என்னவர்தான் அஞ்சறைப் பெட்டி வாங்கிக்கோ-
என்று சொல்லி வாங்கி தந்தார்,
எனக்கு வாங்க வேண்டும் என்று ஸ்ட்ரைக் ஆகவே இல்லை.
ஹிஹி!
ஸோ...
இதாங்க ஏன் அஞ்சறைப் பெட்டி..
நடுநாயகமா கடுகு,
சுற்றியுள்ள 6
கிண்ணங்களிலும் உ.
பருப்பு,
க.
பருப்பு,
சீரகம்,
மஞ்சள் தூள்,
மிளகாய்த் தூள்,
மல்லித்தூள் இவ்வளவுதான் வைச்சிருக்கேன். உங்க வசதிப்படி விரும்பிய சாமான்கள் வைச்சுக்கலாம். :)

~~~~
ஆப்பிளில் வந்த ஆப்பிள்!!!
கொஞ்ச நாள் முன்பு ஒரு ஆப்பிள் கட்டர் வாங்கினேன். அதை வைச்சு ஆப்பிள் கட் செய்ய முயன்ற பொழுது ஏமாற்றமே கிடைத்தது. ஒரு ஆப்பிள் கூட என்னால் நறுக்க முடியவில்லை. கிச்சனில் ஒரு மூலையில் போட்டு வைத்திருந்தேன். அதனைத் தேடித் பிடித்த என்னவர் என்னுடன் டெலிபோனில் "என்னதிது?" என்று கேட்டவாறே அசால்ட்டா ஆப்பிளை கட் பண்ணிவிட்டார். அவ்வ்வ்வ்!
கட் பண்ணியதும் பூ மாதிரியே கட் பண்ணியிருக்கு என்று ஆப்பிள் கட்டருக்கு ஒரு புகழாரம் வேறு சூட்டினார்.
என்னால் நம்பவே முடியாமல்,
அதை போட்டோ எடுத்து அனுப்புங்க என்றேன், "
நீ கேட்பாய் என்று எனக்கு தெரியும்,
அதான் ஐ-
போன்-
ல படமெடுத்து அனுப்பியிருக்கிறேன் என்றார்.
நீங்களும் பார்க்கட்டுமே என்று அந்தப் படங்கள்..

~~~

வாக்கிங் போகையில் ஒரு நாள் அருகில் இருந்த கரும்புத் தோட்டத்தில் கரும்பு வெட்டிக் கொண்டிருந்தார்கள். தைரியமா:) போய், "ஒரு கரும்பு குடுங்களேன்?" என்று ரிக்வஸ்ட் பண்ணினேன், தோட்டத்துக்கார் பாத்தா டேஞ்சர் என்று சொன்னாலும் ஒரு கரும்பை ரெண்டா வெட்டி தந்தாங்க. ;) ஆசை தீர கரும்பு தின்னாச்சு! :) :)

~~~
கோவை ஏர்போர்ட்-
லிருந்து வீட்டுக்கு வரும் வழியிலேயே அங்கங்கே ப்ப்ப்ப்பளீர் வண்ணங்களில் வீடுகள் கண்ணில் அடித்தன.
வாஸ்து கலர் என்ற பெயரில் இதுவரை நான் கற்பனை கூட செய்திருக்காத வர்ணங்களில் வீடுகளுக்கு பெயின்ட் அடித்திருக்கிறார்கள்.
ஒருவேளை,
விற்காத கலர்களை எல்லாம் வாஸ்து பேரைச் சொல்லி இப்படி வித்துடராங்களோ?!
இப்புடித்தான நம்ம யோசிப்போம்? ...
அவ்வ்வ்வ்! ;) ;)
ஆனால் படத்தில் இருக்க ப்ளூ கலர் சூரியனுக்கு உகந்த வண்ணம்
என்ற தகவல் கிடைத்தது.
அப்ப பக்கத்தால இருக்க பீட்ரூட் கலர் எந்த "
கிரகத்துக்கு"
உகந்தது?!
தெரிந்த ஆட்கள் சொல்லுங்களேன்! ;)

~~~
அஞ்சறைப் பெட்டியில் அஞ்சாவது ஒரு விஷயம் சொல்லணும்னு பக்கத்து வீட்டு கத்தரிக்காய் செடி.. :)

கிடைக்கும் நேரத்தில் அட்ஜஸ்ட் செய்து பதிவுகள் போடுகிறேன், மற்றபடி நண்பர்கள் வலைப்பூக்களுக்கு வர முடியவில்லை, அதை மனதில் கொள்ளாது கருத்துக்கள் தரும் நட்புக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்! :)
ம்.. வாரத்துல 7 நாள். ஒவ்வொரு நாளுக்கு ஒரு பெட்டி!!
ReplyDeleteஇல்லல்ல... 5தான். மீதி 2 இட்லி அவிக்க. ;)
இதைவிட சின்ன வட்டமா இருந்தா 5 இருக்கும் உள்ள.
ReplyDeleteஅவ்வ்!! கரும்பூ!! ;P இங்கயும் நட்டு இருந்தேன். இப்ப இல்ல. ;(
5 ரூம் பாக்ஸ்
ஆப்பிள்
கரும்பு
வீடு கலர்
கத்தரிக்கா
6 7 !! ;)
வீட்டுக்கு என்ன கலர் நல்லாத்தானே இருக்கு!! ;D
ReplyDeleteஇங்க ஒரு ஐரோப்பிய நண்பர் இருக்காங்க. அஞ்சறைப் பெட்டி சைஸ்ல கேக் செய்து, உள்ள வைச்சு, அந்த கண்ணாடி மூடியும் போட்டு ஸ்கூலுக்கு கொண்டு வருவாங்க. ;)
ReplyDeleteஐந்தாவது கமண்ட் இது. ;)
ReplyDeleteபகிர்ந்த படங்கள் அருமை.ஆமாம் நான் ஊரில் போனப்ப வீடுகளுக்கு ஆட்காட்டி பச்சை,வயலட்,ஆரஞ்ச்,மஞ்சள் என்று பெயிண்ட் செய்து ஊரே அசந்து இருந்தது.அப்புறம் இந்த ஆப்பிள் கட்டரில் தான் நான் தினமும் கட் செய்கிறேன்,நடுவில் இருக்கும் விதையை நீக்கவேண்டிய பிரச்சனை எல்லாம் இல்லாமல் லட்டு மாதிரி துண்டை எடுத்து சாப்பிடலாம்.துண்டாக வைத்து தோல் சீவுவதும் ஈசி.ஃப்ரூட் சாலட் செய்யும் பொழுது தான் இந்த ஆப்பிள் கட்டரின் மகிமை நமக்கே தெரியும்.ஆப்பிள் கட்டரா கொக்கா?இங்கே பாரு மகி,http://asiyaomar.blogspot.com/2010/05/blog-post_15.html
ReplyDeleteஎன் ஏழு அறைப்பெட்டியில் நான் கடுகு,உ.பருப்பு,சீரகம்,வெந்தயம்,சோம்பு(ஏலம் பட்டை கிராம்பும் அதில் இருக்கும்),கடலைபருப்பு,வற்றல் போட்டு வைத்திருப்பேன்.மகி உங்கிட்ட என் அஞ்சறைப்பெட்டியைக் காட்ட ஆசை வந்து விட்டது.இதோ லின்க்..http://asiyaomar.blogspot.com/2010/12/blog-post_18.html
மொத்தத்தில் சூப்பர் பகிர்வு.
அஞ்சறைப்பெட்டி !!! நான் கூட வச்சிருக்கேன் ..ஆனா பிளாஸடிக் ..
ReplyDeleteஅந்த பீட்ரூட் கலர்வீடு நானும் சென்னைல பார்த்தேன் மகி சைனீஸ் வஸ்து ரொம்பவே படுத்துகின்றது நம் மக்களை .
கரும்பு ....சின்ன வயசு நினைவு வருது ..
ஆப்பிள் கட்டர் ,,எங்கப்பாக்கு மெடிகல் ரெப்ஸ் நிறைய தருவாங்க இந்த மாதிரி :)
ennakum anjaraipetti asai vanthuduchi,katayam vanganum...cutter kooda azhaka irruku:)
ReplyDeleteஅஞ்சறைப்பெட்டி !!! நான் கூட வச்சிருக்கேன் ..ஆனா பிளாஸடிக் ..
ReplyDeleteவணக்கம் மஹி! அஞ்சறை பெட்டி அருமை! அருமை! ரொம்ப நன்றி மஹி என்னுடைய டேகை ஏற்றமைக்கு..... மிகவும் ரசித்தேன்!!! அனைத்து படங்களும் சூப்பர்!!!
ReplyDeleteVIRUNTHU UNNA VAANGA
Mahi, namma Indian spiceskku, oru anjarai petti pathadu, enakku oru aasai, pithalayil anjarai petti kidaithal vaanganum endru, looks like you are having a wonderful time here..
ReplyDeleteஅஞ்சறைப்பெட்டி நல்லா இருக்கு நானும் ஆப்பில் கட்டரில்தான் கட் செய்வேன். படத்தில் காட்டி உள்ளது போலதான் வரும். 2 அஞ்சறைப்பெட்டி வச்சிருப்பேன் ஒன்னுல பொடி வகைகள் எல்லாம் மற்றதில் மசாலா பொருட்கள் எல்லாம்.
ReplyDeletenice photos! even the outer walls in same color!!!..hmmm i think, beet root color chevvai planetukku uganthatu....
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ் இண்டைக்குத்தான் அஞ்சறைப் பெட்டி கண்ணில தெரியுதூஊஊஊஊஊஉ:)).. கத்தரிக்காய்ய்ய்ய்ய்ய்ய் உஸ்ஸ்ஸ்ஸ்... சூப்பர்... நான் பின்பு வாறேன்ன்..
ReplyDelete5 கருத்துக்கள் தந்த இமாவுக்கு ஐஞ்சு ஓ!! :))))
ReplyDelete1 . மீதி 2 இட்லி அவிக்க//// கர்ர்ர்ர்! சஸ்பென்சை உடைக்காதீங்க இமா! ;)
2 . எவ்ளோ சின்ன வட்டமா இருந்தாலும் ஏழு கிண்ணம்தான் இருக்கும் இமா! நான் ஐஞ்சு கிண்ண செலவுப் போட்டியப் பாத்ததே இல்லை! :)
அடுத்த நாளும் போய் இன்னொரு கரும்பும் வாங்கி சாப்ட்டமே! :)
ஏழு அரைக்கும் ஏழு விஷயம் போடலாம்னு நினைச்சேன், ஆனா பதிவின் நீளம் அதிகமாகிரும், படிப்பவர்களும் களைச்சுப் போவீங்க என்று விட்டுட்டேன்! ஹாஹா!
3 . அவ்வ்வ்வ்...என்னது? வீடு கலர் நல்ல்லல்ல்ல்லா இருக்கா? அப்ப அடுத்த பதிவுல DIY - ஹவ் டு பெயிண்ட் அ ஹவுஸ்-னு போட்டோவுடன் போடுங்க! ;)
4 . அஞ்சறைப் பெட்டி சைஸ்ல கேக் செய்து //// :) வட இந்தியத் தோழி ஒருவர் இதே போல பெட்டியில்தான் சப்பாத்தி சுட்டு போட்டு வைப்பார்! மல்டி பர்ப்பஸ் பாக்ஸ்தான் நம்ம அஞ்சறைப் பெட்டி!
5 . :)
~~
ஆசியாக்கா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! ஆப்பிள் கட்டரில் ஆப்பிளை நறுக்க, என் கைக்கு பலம் போதலை அக்கா! ;) அதான் மேட்டரு! :)
விரிவான கருத்துக்கு மகிழ்ச்சி..உங்க அஞ்சறைப் பெட்டியைப் பார்த்தேன். அழகா இருக்கு! :)
~~
ஏஞ்சல் அக்கா, என்னிடமும் பெங்களூரில் பிளாஸ்டிக் அஞ்சறைப் பெட்டி இருந்தது. ஆனா எனக்கென்னமோ எவர் சில்வர்தான் பிடிச்சிருக்கு! :)
படுத்துவது இந்திய வாஸ்து-ன்னு நினைச்சேனே, சைனீஸ் வாஸ்துவா இது? ஆத்தீ...அந்த நவ கிரகங்களும்தான் நம்மை காப்பாத்தணும்! ;)
பாத்து பாத்து கமெண்ட் போட்டுட்டு, கத்தரி செடியப் பத்தி மட்டும் நீங்க ஏதும் சொல்லலையாம், செடி கோவிச்சுகிச்சு....! :)
கருத்துக்கு மிக்க நன்றி அக்கா!
~~
பிரேமா, என்னங்க நீங்க? சிங்கப்பூர்ல இருந்துகிட்டு அஞ்சறைப் பெட்டி இல்லாம இருக்கீங்க? சீக்கிரமா வாங்கிருங்க! ரொம்பவே வசதி இது! :) ஆப்பிள் கட்டர்-அழகா இருக்குதா? ஆமாங்க, அதான் நானும் வாங்கினேன்!
கருத்துக்கு மிக்க நன்றி!
~~
விஜி பார்த்தி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! பிளாஸ்டிக் பாக்ஸ்-னா வெயிட் கம்மியா இருக்கும். :)
~~
விஜி , இன்ரஸ்டிங் ஆன தொடர்பதிவுக்கு அழத்ததுக்கு நாந்தாங்க உங்களுக்கு நன்றி சொல்லணும்! :) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
ReplyDelete~~
ஹேமா, பித்தளை அஞ்சரை பெட்டியா? நினைக்கவே நல்லா இருக்கு, ஆனா அதை கருக்காம விளக்கி கழுவி வைக்கணுமே, அந்த பாயிண்ட்டையும் யோசிச்சுகிடீங்கள்ல? ;)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!
~~
லஷ்மிமா, ரெண்டு அஞ்சறை பெட்டியா? நல்ல ஐடியா தான்! :) என் கை பலமில்லாத அம்மா, அதனால்தான் என்னால் ஆப்பிள் நறுக்க முடிலை, ஆனா கோலம் ஓரளவுக்கு சுமாரா போடுவேன்! ஹிஹி! :)
கருத்துக்கு நன்றிமா!
~~
நீலா, நானும் அப்படி தாங்க நினைக்கிறேன். செவ்வாய்-க்கு சிவப்பு என்று சொல்வாங்க.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
அதிராவ்...வ்வ்வ்..வவ்! என்னதிது..வந்த சுவடே இல்லாம ஓடிட்டீங்க? வேலைகளை எல்லாம் முடிச்சுட்டு சீக்கிரம் வாங்க. :)
எல்லாப் படத்தையும் விட்டுட்டு டைரக்ட்டா கத்தரி-ல லான்ட் ஆகிருக்கீங்க. பார்த்து...கை, கால், வால்...எதையும் வெட்டிக்காதீங்க ! ஹிஹிஹி!
கருத்துக்கு மிக்க நன்றி அதிராவ்!
~~
Super pathuvu. Nannym apple cutter il than cut Severn vela miham parka azkaa irukkum. I have anjarai petti too that is stainless steel. It is very useful.
ReplyDeleteWhere are u? When are u coming.?
சூப்பரான பதிவு...அம்மா இந்த முறை ஊரில் இருந்து வந்த பொழுது இந்த டப்பாவினை வாங்கி வந்து கொடுத்தாங்க...ரொம்ப usefulஆன டப்பா....
ReplyDeleteஇமா said...
ReplyDeleteஐந்தாவது கமண்ட் இது. ;)///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மகி என்ன கேட்டாவோ எண்ணிச் சொல்லுங்க என:))).... என் வாயைக் கிளறாமல் விடமாட்டினம்பொல இருக்கே ஜாமீஈஈஈஈஈ:)))
ஹையோ மகீஈஈஈஈ சேஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப் மீஈஈஈஇ:)))
அஞ்சறைப்பெட்டி எனச் சொல்லிட்டு 7 அறைப் பெட்டி வச்சிருக்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) என்னிடமும் இருக்கு எங்கட மாமா வாங்கித்தந்தவர்...
ReplyDeleteஆப்பிள் கட்டர் அழகா இருக்கு... நானும் ஓன்லைன்ல வாங்கப்போறேன்ன்ன்... கடைகளில் பார்த்ததில்லை.
ReplyDeleteவித்தியாசமான கலர் பெயிண்ட் பண்ணுவதுதான் இப்போ பாஷனாகிட்டுது மகி.
ReplyDeleteஎன் நண்பி best friend இங்கிருப்பவதானே... குடும்பமாக வந்திருந்தபோது.. அவவின் கணவர் சொன்னது:)
“இங்க பாருங்க அதிரா, உங்கட ஃபிரெண்ட்டுக்கு ஒரே கலரில பெயின்ட் அடிக்க வேண்டாமாம் வீட்டுக்கு, அதனால ஹோலுக்கு ஒரேஞ், விசிட்டிங் ஹோல்.. பிங்.. கிச்சின் வெள்ளை... ஸ்ரெப்ஸ் பச்சை.. ரூம்.. நீலம்... இப்படிக் கன கலருகள் வாங்கி வச்சிட்டு வந்திருக்கிறேன்” என்றார்:))))).
எங்க இன்னும் கீரி”ஷா” வைக் காணேல்லை:)) சரி சரி நான் போறனாம்:)) இனிப் பயப்பூடாமல் வந்து கமெண்ட்ஸ் போடட்டாம் எனச் சொல்லிடுங்கோ அஞ்சூ:)).
ReplyDeleteஊ.கு:
மகி ஊரிலிருந்து வரும்போது எனக்கு 4 மயில் முட்டைகள், ஆடாமல், அசைக்காமல் கொண்டுவரவும்:))
படமும் (அழகா இருக்கு) விளக்கமும் அருமை... நன்றி சகோ...
ReplyDeleteNaanum Vachirunthen aanal ingu illai, Indiavill. kadipaga vanguven..
ReplyDeleteமகி இந்த அஞ்சறை பெட்டி ஒரு வருஷம் திருமணம் ஆகி இல்லாம நான் பட்ட அவஸ்தை இருக்கே. ஊருக்கு பேசும்போதெல்லாம் அஞ்சறை பெட்டி வாங்கணும் ன்னு எங்க அம்மாகிட்டயும் மாமியார் கிட்டேயும் புலம்பினதுல ஊருக்கு போகும்போது ரெண்டு பெரும் எவர்சில்வர் அஞ்சறை பெட்டி வாங்கி வெச்சு இருந்தாங்கன்னா நான் எவ்வ்வ்வவ்ளோ புலம்பி இருப்பேன்னு பார்த்துக்கோங்க :))
ReplyDeleteநான் மிளகாய் தூள் மல்லி தூள் எல்லாம் தனியா பாட்டல் இல் போட்டு வெச்சு இருப்பேன். தாளிக்கும் பொருட்கள் தான் அஞ்சறை பெட்டியில்.
ஆப்பிள் கட்டர் அழகா இருக்கு. என்கிட்டே இது போல இல்லே. கையில் வைத்தே அழகா கடிச்சு ஊஊ நாங்க சாப்பிட்ட்ருவோம் ஹீ ஹீ
ReplyDeleteநான் சொன்னது போல அருண் அடுத்து உங்களுக்கு போட்டியா ப்ளாக் ஆரம்பிக்க போறாங்க சோ சீக்கிரம் பிளைட் புடியுங்க வீ மிஸ் யு
போன வருஷம் போர்சுகல் போன பொது அங்கும் இந்த மாதிரி அடிக்கும் கலர் இல் சில வீடுகள் பார்த்தோம் ஒரு வேளை அவங்களும் வாஸ்து நம்புறாங்க போல :))
ReplyDeleteஎங்களை எல்லாம் விட்டிட்டு கரும்பு சாப்புட்டது பத்தாதுன்னு படமும் போட்டு காட்டின மகி க்கு கர்ர்ர்ர் சொல்லாம இந்த மிஸ் பூஷ் போய்ட்டாங்க பாருங்க
ReplyDelete//எங்க இன்னும் கீரி”ஷா” வைக் காணேல்லை:)) சரி சரி நான் போறனாம்:)) இனிப் பயப்பூடாமல் வந்து கமெண்ட்ஸ் போடட்டாம் எனச் சொல்லிடுங்கோ அஞ்சூ:)).//
ReplyDeleteகர்ர்ர்ர் நான் ஏதோ கொஞ்சம் லேட் ஆயிடிச்சு மகியே கண்டுக்கல இந்த மாதிரி போட்டு கொடுத்திட்டு போற பூசுக்கு நைட் அது தான் கனவில வர போகுது:)) அஞ்சு வீட்டுக்கு அப்புறம் வரேன் ன்னு சொல்லிடுங்க என் லஞ்ச ப்ரேக் முடிஞ்சு போயி :)
அஞ்சறைப்பெட்டி நல்லாயிருக்கு. நானும் மசாலாதான் போட்டுவைத்திருக்கிறேன்.
ReplyDeleteகலர்புல் வீடுகள் கலக்கல். கரும்பு தின்ன கூலி கேட்கல்லதானே.ஆப்பிளில் ஆப்பிள் சூப்பர்.
அஞ்சறைப்பெட்டி வந்தாச்சா!தாளிக்கும் பொருள்கள் வச்சாலே அடிக்கடி பொறுக்கவேண்டி வரும்.நீங்க பொடி எல்லாம் வச்சு நீட்டா வச்சிருக்கீங்க. ஊருக்குப் போனபோது கண்ணைப் பறிக்கும் பளீர் வீடுகள் முதலில் ஒரு மாதிரியா இருந்தாலும் பிறகு பிடித்துப்போனது.ஆமாம் எப்போ வரீங்க.
ReplyDeleteUnga Anjarai petti nalla iruku magi and also the apple clicks... Thanks for sharing this...
ReplyDeletehttp://recipe-excavator.blogspot.com
மகி...கரும்பு சாப்பிட்டீங்க ...சரி... அந்த குப்பையை எதுக்கு மெனக்கெட்டு போட்டோ எடுத்து போட்டிருக்கீங்க.... அவ்வ்...... கரும்பு தின்னவே கூலி வேண்டாம்னு சொல்வாங்க... அதிலயும் நீங்க (கிட்டத்தட்ட) கரும்ப சுட்டு சாப்பிட்டிருக்கீங்க..... இது ரொம்ப ஒவரோஓ ஓவர்... :(
ReplyDeleteaccording to meeeeeee......அஞ்சரைப்பெட்டிக்கும் நம்பர் அஞ்சுக்கும் சம்பந்தம் இல்லன்னு நினைக்கிறேன்.... அல்லது அஞ்சா இருந்தது ஏழா மாறியிருக்கலாம்.... அல்லது ஏழரைன்னு சொல்றத விட அஞ்சரைன்னு சொல்றது ஈஸியா இருந்ததனால் இப்படி பெயர் வந்திருக்கலாம்.... (அவ்வ்வ்.... இப்படியெல்லாம் யோசிக்க வச்சிட்டீங்களே.....;((( )
//அந்த குப்பையை எதுக்கு மெனக்கெட்டு போட்டோ எடுத்து போட்டிருக்கீங்க//பானு..அது குப்பை இல்லீங்க! கரும்பு சக்கை! :)) கரும்பை கூட கூகுள் கிட்ட கேட்டா கிடைக்கும், ஆனா கரும்பு சக்கையைப் பார்க்க முடியுமா? அதான் போட்டோ புடிச்சு:) போட்டேங்க! ஹிஹிஹி! :)
ReplyDeleteநீங்க ஒராள் தான் அ.பெட்டிக்கு விளக்கம் தந்திருக்கீங்க,,ஆனா விளக்கம் பார்த்து தெளிவாகறதுக்குப் பதிலா என் காதில ரத்தம் ரத்தமா வருதே...அது ஏன்? ஏன்? ஏஏஏன்?!! :)))
~~
//நீங்க பொடி எல்லாம் வச்சு நீட்டா வச்சிருக்கீங்க// தேங்க்ஸ், தேங்க்ஸ் சித்ராஅக்கா! :) எனக்கு எந்தப் பொருளா இருந்தாலும் கையால் தொடாம எடுத்துப் போட்டாதான் வசதிப் படும். அதான் இப்படில்லாம் மெயின்ட்டெய்ன் பண்ணறேன்! :)
~~
//கரும்பு தின்ன கூலி கேட்கல்லதானே// இல்லைங்க ப்ரியா! இன்ஃபாக்ட் அடுத்த நாள் அக்காவைக் கூட்டிப் போய் இன்னொரு ஆளிடம், இன்னொரு கரும்பு கூட வாங்கி வந்து சாப்பிட்டேன். ஹாஹாஹா! :)
~~
//அருண் அடுத்து உங்களுக்கு போட்டியா ப்ளாக் ஆரம்பிக்க போறாங்க// ஆமாம் கிரிஜா! அத்தி பூத்த மாதிரி ஏதாவது சமைக்கத்தான் செய்யறார், ஸ்டெப் பை ஸ்டெப் படம் வேற அனுப்பி கடுப்பேத்தறார் மை லார்ட்! ;) //சோ சீக்கிரம் பிளைட் புடியுங்க வீ மிஸ் யு // கவுன்ட் டவுன் ஸ்டார்டட்..சீக்கிரம் வந்துருவேன் கிரி! ஐ மிஸ் ஆல் ஆஃப் யு! :-|
~~
// அதனால ஹோலுக்கு ஒரேஞ், விசிட்டிங் ஹோல்.. பிங்.. கிச்சின் வெள்ளை... ஸ்ரெப்ஸ் பச்சை.. ரூம்.. நீலம்..// இது கூட சினிமாவில் பாத்திருக்கேன், சில வீடுகளிலும் பாத்திருக்கேன் அதிராவ். ஆனா இங்க ஒன்லி அவுட்டர் பெயின்ட் மட்டும்தான் இப்படி "ஜிங்குச்சான்" ;) கலர்ல அடிச்சு இருக்காங்க! அவ்வ்வ்வ்.....!
//நானும் ஓன்லைன்ல வாங்கப்போறேன்ன்ன்... கடைகளில் பார்த்ததில்லை.// ஒன் டாலர் ஷாப்-லதான் நான் வாங்கினேன்..ஆன்லைன் ஆர்டர் எல்லாம் வானம், தேடுங்க,கிடைக்கும்! :)
~~
விஜி அக்கா, கீதா, அதிரா, கிரிஜா, ப்ரியா,சித்ரா அக்கா, திண்டுக்கல் தனபாலன், சரஸ், சங்கீதா, பானு...கருத்துகள் தந்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய இனிய நன்றிகள்! :)
ReplyDeleteMiss ur writings ... seekiram vaanga plsssssss.
ReplyDelete