அவற்றில் ஒரு சில விளம்பரங்கள் சிரிப்பு மூட்டும், ஒரு சில விளம்பரங்கள் முகம் சுளிக்க வைக்கும்..சிலது எரிச்சலை மூட்டும்..சிலது அப்பொழுதே சேனலை மாற்றவைக்கும் அளவுக்கு சோகமாய்/பயமுறுத்துவதாய் இருக்கும். அப்படியான விளம்பரங்களில் சிலதை நீங்களும் பார்க்கணுமே....
ஹலோ,ஹலோ..நில்லுங்க,நில்லுங்க! சொல்லாமக் கொள்ளாம ஓடுனா எப்புடி,நம்ம என்ன அப்படியா பழகிருக்கோம்?? ஒரு ரெண்டு நிமிஷம் நின்னு பார்த்துட்டுப் போங்க! ;))))
******
இந்த விளம்பரம் "Chase" பேங்கினுடையது..சமீபத்தில் நடந்த கையால பந்துவீசிட்டு அதையக் கால்பந்துன்னு சொல்லிக்கிற(!!) "Super Bowl"சமயத்தில் வெளியானது. பையன் பந்தை உதைக்க, அது அக்கம் பக்கத்து வீடுகளில் கண்ணாடிகளை, காரை உடைக்கிறதாம்..உடனே அப்பா சேஸ் இன்ஸ்டன்ட் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் ஒவ்வொருத்தருக்கும் $200 டாலர் இன்ஸ்டன்ட்டா அனுப்பிருவாராம்! $200 டாலர் இன்ஸ்டன்ட் ட்ரான்ஸ்ஃபர்..அதுவும் 2-3 பேருக்கு! கொஞ்சம் ஓஓஓஓஓஓவரா இல்ல?? :))))))இதைப் பார்த்தபொழுது எனக்கு ஒரு நம்மூர் விளம்பரம் நினைவு வந்தது. தாத்தாவும் பேரனும் வீட்டுக்குள் கிரிக்கெட் விளையாடி கண்ணாடிகள் உடையும். பேரன் உடைக்கையில் அவன் அம்மா வர, தாத்தா பேரனிடம் இருந்து பேட்டைப் பிடுங்கிட்டு "நான் தான் பேட் செய்தேன்" என்று சொல்லுவார். மருமகளும் பேசாமல் போய்விடுவார். அடுத்து தாத்தா பேட்டிங்கில் ஜன்னல் கண்ணாடி உடைய..பாட்டியிடம் தான் உடைத்ததாக பேரன் சொல்லிவிடுவான். உடைந்தது கண்ணாடியாய் இருந்தாலும் உடையாதது பாசப்பிணப்புன்னு சொல்வது போல இருக்கும் அந்த விளம்பரம்.:)
*********
இந்த விளம்பரத்தைப் பார்த்தாலே எரிச்சலாய் இருக்கும், உடனே சேனலை மாத்திடுவேன். இப்பக்கூட இதை ப்ளாக்ல போடணுமான்னு ரெம்ப திங்க் பண்ணித்தான் போட்டிருக்கேன்! ;) :)
மெத்தை விளம்பரத்துக்கு இப்படியுமா விளம்பரம் செய்வாங்க?? இந்த மாதிரி க்ரேஸி ஐடியாவெல்லாம் எப்படித்தான் இவங்களுக்குக் கிடைக்குமோ?? இந்த விளம்பரம்னு இல்ல, இந்த "Sit n Sleep"ன் எல்லா விளம்பரங்களுமே கொஞ்சம் இப்படித்தான் இருக்கும்!
:-} :-}
***************
இது JCPenny-கடையின் விளம்பரம். சமீபத்தில் அங்கு எல்லாப் பொருட்களுக்கும் கொள்முதல் விலைக்கு கொஞ்சமே கொஞ்சம் லாபம் வைத்து விற்பனை ஆரம்பித்தாங்க. அப்ப வந்தது இது!
மற்ற துணிக்கடைகளில் பலபேர்களைச் சொல்லி ஏமாத்தறாங்களாம்..JCPenny-ல Fair & Square-ஆம்!! இவர்களிடம் இதே சீரிஸ்ல இன்னும் பல போரடிக்கும் விளம்பரங்கள் உண்டு!
ராஜ்மஹால் பட்டுப்புடவைகளுக்குன்னு ஒரு விளம்பரம் வருமே..அதிலே ஒரு காதலி தன் காதலன் பெற்றோர்களை விதவிதமான அழகழகான பட்டுச் சேலைகளை உடுத்திப்போயே திருமணத்துக்குச் சம்மதம் வாங்குவாள். ஆனா இவிங்க எடுக்கற விளம்பரங்கள் பாத்தம்னா கடைக்குப்போகணும்னே தோணாதுங்க..விளம்பரம் முடியறதுக்குள்ள நாமளும் தூங்கிருவம்ல?? அப்புறம் எப்படிக் கடைக்குப் போக??! :)))))))
***********
ப்ரோக்ரெஸோ சூப்பின் விளம்பரங்கள் ஓரளவு சிரிக்க வைப்பது மாதிரி பரவாயில்லாமல் இருக்கும். இந்த விளம்பரம் உலகில் உள்ள ஆல் ரங்கமணிகளைக் குறிவைத்து எடுக்கப்பட்டது! ஒரு உண்மையை காமெடியாச் சொல்லியிருப்பாங்க. என்னதான் சொல்லுங்க..பெண்கள் மனசை ஆண்களுக்குப் புரிய வைப்பது பெரும்பாடு,சரிதானே?? ஹாஹாஹா!!
*********
அடுத்து வரும் விளம்பரம் எனக்கு மிகவும் பிடித்த விளம்பரம். cat food-க்கான விளம்பரத்துடன் ஒரு அழகான காதல் கதையைச் சொல்லியிருப்பாங்க..நீங்களும் பாருங்களேன்!
காதலி காதலனை அறிமுகப்படுத்த அவள் அம்மா வீட்டுக்கு கூட்டிப்போவாள். அங்கே இருக்கும் பூஸாரை விட்டுவிட்டு வர மனசே இல்லாமல் வருவாள். (இந்த ஊர்ல அப்பா-அம்மா தனியே பிள்ளைகள் தனியே இருப்பதுதான் வழக்கம்! ) காதலிக்குப் பூனைக்குட்டி பிடிக்கும் என்பதைக் கவனித்த காதலன் பூனைக்குட்டியை வாங்கி திருமணத்துக்குப் propose செய்வதுதான் இந்த விளம்பரம்.
காதலி வீட்டுக்கு முதல் முதல் போவதில் இருந்து ப்ரபோஸ் செய்து, கல்யாணம் முடிவுசெய்து, கலியாணம் செய்து, ஹனிமூன் ப்ளான் செய்வது வரை தொடர்ச்சியாக விளம்பரங்கள் இருக்குது. நேரமிருந்தா யு ட்யூப் போய் Fancy Feast adds என்று தேடிப்பார்த்து ரசியுங்கோ! :)))))
நன்றி வணக்கம்!
//ஹலோ,ஹலோ..நில்லுங்க,நில்லுங்க! சொல்லாமக் கொள்ளாம ஓடுனா எப்புடி,நம்ம என்ன அப்படியா பழகிருக்கோம்?? ஒரு ரெண்டு நிமிஷம் நின்னு பார்த்துட்டுப் போங்க! ;)//
ReplyDeleteநாம டிவில விளம்பரம் போடுகிற நேரத்தில் தான் ப்ளாக் பார்க்கிறது,இப்ப ப்ளாக்கில் விளம்பரமா? என்ன கொடுமை சார் இது?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் வட போச்ச்ச்ச்ச்ச்:)) ஆசியாவுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
ReplyDeleteஅச்சச்சோ பூஸுக்குட்டீஈஈஈஈ எனக்கும் அப்பூடி வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:))புஸுபுஸெண்டு இருக்கப்பா:))
ReplyDeleteஇதையெல்லாம் விளம்பரம் செய்ய, மகிக்கு எவ்ளோ குடுத்திருக்கிறாங்க எனச் சொல்லுங்கோஓஓஓஓஒ:))
ReplyDeleteமகி..அந்த நிறுவனங்களிடம் இருந்து இதைக்காட்டியே கல்லா கட்டி விட வேண்டியதுதான்.எப்பூடீ?
ReplyDeleteMee 6th uuuuu!!! I will come back later for proper comments
ReplyDeleteவித்தியாசமான பதிவு மகி. விளம்பரத்தில் வர்ற பூஸ் எனக்கும்ம் உங்களுக்கும்ம் தெரிஞ்ச பூச விட அயகா வும் அமைதியாவும் இருக்கு இல்லே ? (கொஞ்சம் சீண்டி விட்டா தானே பொழுது போகும் :))
ReplyDeleteநிச்சயமா வித்தியாசமான இடுகைதான்.
ReplyDeleteஅந்த பூஸ்குட்டி எனக்கு வேணும்ம். அழ..கு.
எனக்கு விளம்பரங்கள் என்றாலே எப்பவும் அலர்ஜி தான். முதல் இரண்டும் நான் பார்த்ததில்லை. ப்ரோகிரஸோ சூப் விளம்பரம் பார்க்க பிடிப்பதில்லை. ஏனோ அந்த ஜீன்ஸ் அணிந்த பெண்ணைப் பார்த்தால் எரிச்சல் வருது.
ReplyDeleteபூனைக்குட்டி விளம்பரம் எதோ பரவாயில்லை ரகம்.
இந்த Ellen DeGeneres aunty நடிச்சு ஒரு விளம்பரம் JC PENNY க்கு வருமே அது பிடிக்கு. எனக்கு எலன் பிடிப்பதால் விளம்பரம் பிடித்திருக்கு என்று நினைக்கிறேன்.
மகி ஏதோ ஒரு ஸபஜெக்ட் எடுத்துண்டோம்ன்ற மாதிரி இல்லாம இன்ட்ரஸ்டிங்காக சொல்லியிருக்கிற விதம் அசத்தல். ஆமாம். உனக்கு இப்படியெல்லாம் எழுத எப்படி யோசனை வருதுன்னு நான் ஆராய்ச்சி பண்ணல்ம்னு நினைக்கிறேன். இனி விளம்பரதாரர்களெல்லாம் மகி என்ன நினைப்பார்களென யோசனை செய்யும் காலம் வந்தாலும் வரும்.
ReplyDeleteஉங்களுக்கும்ம் தெரிஞ்ச பூச விட அயகா வும் அமைதியாவும் இருக்கு இல்லே ////
ReplyDeleteYES YES VERY CUTE.....
Karrrrrrrrrrrrrrrrrrr:))
ReplyDeletehihi mahi
ReplyDeleteithathana vilamparaththukku evla koduththaangka , hihi
ஆசியாக்கா,சூப்பர் கமென்ட் போங்க! கலக்கிட்டீங்க!:))))))
ReplyDeleteஇது அமெரிக்க விளம்பரம்ல,நீங்க துபைலதானே பார்த்திருப்பீங்க,அதனால எல்லாம் பேலன்ஸ் ஆகிரும். எல்லா வீடியோவும் பாத்தீங்களா இல்லையா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ;)
தேங்க்ஸ்!
~~
/இதையெல்லாம் விளம்பரம் செய்ய, மகிக்கு எவ்ளோ குடுத்திருக்கிறாங்க எனச் சொல்லுங்கோஓஓஓஓஒ:))/ரொம்பவெல்லாம் எதுவும் குடுக்கல அதிரா! பாருங்களேன் 13 கமென்ட்டுத்தான் வந்திருக்கு.சனமெல்லாம் பாத்துப்போட்டு அப்பூடியே ஓடிப்போகினம்! ;))))
பூஸ் குட்டி அயகா இருக்கில்ல? ஒருநாள் பொழப்புக்கெட்டு அந்த சீரிஸ்ல எல்லா விளம்பரமும் பாத்தேன்! :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா!
~~
ஸாதிகாக்கா,ஐடியா ஜூப்பரு! ஆனா இம்ப்ளிமென்ட் இப்போதைக்கு பண்ண முடியாது. ஒரு 1000+ பாலோவர்ஸாவது வரட்டும், அப்புறம் கெத்தா பிஸினஸ் பேசிருவோம்! ஹா...ஹா!
நன்றி~
~~
கிரிசா,6வது ஆளா வருகை தந்ததுக்கு மிக்க நன்றிங்கோ. விளம்ப்பரத்தில வாரது அஞ்சறிவுப் பூஸ்...நம்ம பூஸுக்கு ஆறறிவு அல்லோ?அதான் அப்புடி! கிக்கிகி!! :)))))
~~
புனிதா,என்னாது?? அந்த பூஸ் குட்டியா??அது இந்நேரம் வளர்ந்து பெரீஈஈஈஈய்ய பூஸ் ஆகிருக்குமே,பரவால்லியா?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க!
~~
வானதி, எல்லன் வரும் விளம்பரம் இந்த சீரிஸ்-க்கு அப்புறம் வந்தது.எனக்கும் அது புடிக்கும்.
நன்றி வானதி!
~~
காமாட்சிம்மா,உங்க கமென்ட் படிச்சதும் எங்கயோ போயிட்டேன்! ;) ரொம்ப சந்தோஷம்மா..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
அதிரா,கிரிசாவுக்கு நான் பதில் போட்டிட்டேன்,ஸோ நோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ப்ளீஸ்! ;))))))
~~
ஜலீலாக்கா, எதிர்பாத்ததை விட கம்மியாத்தான் கிடைச்சிருக்கு. ஹிஹி! :))))))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~