விதவிதமாக சாம்பார் வைத்தாலும், வெறுமனே ஒரு காய் மட்டும் சேர்த்து வைக்கும் சாம்பாருக்கு ருசி அதிகம்தான். அதிலும் வெள்ளை முள்ளங்கி சாம்பாரில் போட்டால் தனி ருசியாக இருக்கும். வெகுநாட்களாக இங்கே வெள்ளை முள்ளங்கி வாட்டசாட்டமாக படா சைஸில் பயமுறுத்தும். அதனால் சின்னச்சின்ன சிவப்பு முள்ளங்கிக் கொத்துகள் மட்டுமே வாங்குவது வழக்கம். சமீபத்தில் சில நாட்களாக இந்தியன் ஸ்டோரில் ப்ரெஷ்ஷாக வெள்ளை முள்ளங்கிகளைப் பார்க்கிறேன்.
காய்கறிகள் பக்கம் போகையிலே பசேலென்ற கீரையுடன் வெள்ளைவெளேர் முள்ளங்கி என்னை வாங்கிட்டுப்போய் சாம்பார் வையேன்-னு கெஞ்சற மாதிரி(!)யே இருந்ததா..வாங்கிட்டு வந்து சாம்பாரும் வைச்சு சாப்புட்டாச்சு! :)
தேவையான பொருட்கள்
வேகவைத்த துவரம்பருப்பு -1/4கப்
முள்ளங்கி - பாதி (நறுக்கிய காய் அரைகப் வருமளவு)
புளிக்கரைசல் -1/4கப்
வெங்காயம்-1
தக்காளி-2
பச்சைமிளகாய்-1
சாம்பார் பொடி-2டீஸ்பூன்
மஞ்சள்பொடி-1/4டீஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
சீரகம்-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை-ஒரு கொத்து
தேங்காய்த்துருவல்(விரும்பினால்) -1 டீஸ்பூன்
சர்க்கரை-1/2டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை
முள்ளங்கியை கழுவி வில்லைகளாக நறுக்கவும்.
வெங்காயம்,ப.மிளகாய்,தக்காளியை பெரிய துண்டுகளாய் நறுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவிட்டு கடுகு-சீரகம் தாளித்து வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
நறுக்கிய முள்ளங்கி சேர்த்து, மஞ்சள்தூள் உப்பு சேர்த்து சிலநிமிடம் வதக்கவும்.
புளிக்கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும்.
காய் வெந்ததும் வேகவைத்து மசித்த பருப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
இறுதியாக தேங்காய்த்துருவல், சாம்பார்தூள் சேர்த்து நுரைக்கட்டி லேசாகக் கொதிவந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும்.
சேப்பங்கிழங்கு வறுவல்
இது சித்ராசுந்தர் வலைப்பூவில் பார்த்து செய்தது. முதல்முறை கிழங்கு குழைந்தது..இரண்டாம் முறை ஓரளவுக்கு சுமாரா(!) வேகவைத்து செய்துவிட்டேன். :) ரெசிப்பிக்கு நன்றிங்க!
தேவையான பொருட்கள்
சேப்பங்கிழங்கு -3
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/8டீஸ்பூன்
உப்பு
பூண்டு- 2 பற்கள்
தயிர் -1டேபிள்ஸ்பூன்
எண்ணெய்
செய்முறை
சேப்பங்கிழங்கை வேகவைத்து தோலுரித்து வட்டமான வில்லைகளாக நறுக்கவும்.
மிளகாய்தூள்-உப்பு-பெருங்காயத்தூள் மூன்றையும் ஒன்றாகக் கலக்கி, கிழங்கு வில்லைகள் மீது சீராகத் தடவி அரைமணி நேரம் ஊறவிடவும்.
தோசைக்கல்லை காயவைத்து 1 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சேப்பங்கிழங்குத் துண்டுகளை பரவலாக அடுக்கவும். பூண்டை நசுக்கிப் போடவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு வேகவிடவும்.
ஒருபுறம் வெந்ததும், மறுபக்கம் திருப்பி விட்டு கட்டியில்லாமல் கலக்கி வைத்த தயிரை ஸ்பூனால் தடவவும். இன்னும் சிறிது எண்ணெய் விட்டு முறுகவிடவும். பிறகு அடுத்தபக்கம் திருப்பி தயிரைத் தடவி முறுகவிட்டு எடுக்கவும்.
சுவையான சேப்பங்கிழங்கு வறுவல் ரெடி!

முள்ளங்கி சாம்பார்-சாதம்-சேப்பங்கிழங்கு வறுவல்! ஹெல்ப் யுவர்செல்ஃ~~ :)
Saambarum, kizhangu varavalum, amarkalama irrukku Mahi..
ReplyDeleteநல்ல காம்பினேஷன்.
ReplyDeleteSemma jodi!!!
ReplyDeleteGreat combination and my favorite too :). I sometimes add the greens from the mulangi also to the sambhar, the ones from the red round radhish really tastes good in sambhar :)
ReplyDeleteஅருமையான காம்பினேஷன்.
ReplyDeleteappadiyee antha plate a ippadi thallungka
ReplyDeleteமுள்ளங்கியுடன் கூட அதன் ஒன்றிரண்டு துளிரான இலைகளையும் நான் போடுவேன். இப்படி காம்பினேஷனாக சமைத்ததை இங்கிருந்து எப்படி சாப்பிடறது?பார்த்தேன். ரஸித்தேன்.சுவைப்பேன்.ஜோரா இருக்குமகி.
ReplyDeleteசூப்பர் காம்பினேஷன்.அப்படியே பொல பொலன்னு சூடாக வடித்த சாதத்துடன் நினைக்கவே நாஊறுது! இப்படி வெஜ் சமையல் செய்து யாராவது எனக்கு தரமாட்டாங்களான்னு இருக்கு.
ReplyDeleteபடங்கள் பார்க்கும்போதே பசிக்குது சாப்பிட வரவா?
ReplyDeletemahi...almost lunch time aga pogudhu ingae...ennala mudiyalae..My fav mulangi sambar and chepamkelangu roast....neenga super poonga
ReplyDeleteசூப்பர்ர் காம்பினேஷன்,அப்படியே இங்க பார்சல் அனுப்பிடுங்க..
ReplyDeleteமுள்ளங்கி சாம்பார் எனக்கு ரொம்ப புடிச்ச சாம்பார். இங்கேயும் படா சைஸ் இல் தான் கிடைக்கும். நான் பாதிய பிரிஜ் இல் வெச்சு ரெண்டு வாரம் செய்வேன். சேப்பங்கிழங்கு வறுவல் புது மாதிரி செஞ்சு காட்டி இருக்கீங்க. இந்த காம்பினேஷன் நல்லா இருக்கு மகி
ReplyDeletevery yummy and interesting .... healthy too
ReplyDeletewww.sriyafood.blogspot.com
மகி,
ReplyDeleteநல்ல காம்பினேஷனில் சமைச்சிருக்கீங்க. பார்க்கவே சாப்பிட வேண்டுமாய் இருக்கு. கிழங்கை குழையாம வேகவச்சி சூப்பரா பன்னிட்டீங்க.என் பெயரை வேற போட்டிருக்கீங்க.மிக்க மகிழ்ச்சி.
இரண்டுமே சூப்பர்.
ReplyDeletei am on fasting today, this one is tempting me a lot. what a wonderful combo mahi
ReplyDeleteenga veetlayum nethu mullangi sambar. Chepankizhangu roast pudhumaya irrku. never tried that as it produce gas. But now reading the recipe I am getting tempted so planning to buy a little in this week's veg market :-)
ReplyDeleteசூப்பர் காம்பினேஷன்.
ReplyDeleteThe mullangi looks so crispy and delicious both in the curry and as poriyal/varuval. We have as a matter of fact, never bought it but seeing your dishes would make anyone want this. Will check out if there are any mullangi available next time I go grocery shopping.
ReplyDelete*Oops. I meant to say both the curry and the poriyal/varuval looks delicious.
ReplyDelete