இதை கோதுமை மாவு அடைனும் சொல்லிக்கலாம், கோதுமை தோசைன்னும் சொல்லிக்கலாம், இல்லைன்னா கோதுமை ரொட்டினும் சொல்லிக்கலாம். [பூவை பூ-னும் சொல்லலாம், புய்பம்-னும் சொல்லலாம், இல்லன்னா நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம் காமெடி ரேஞ்சுக்கு கொண்டுவந்துட்டேன் பாருங்க! ஹிஹி..]
பொதுவா கோதுமை தோசைன்னா மாவு தோசை மாவு பக்குவத்தில கரைக்கணும், கட்டி தட்டும், அதில்லாம பொறுமையா கரைக்கணும். தண்ணி போதாதுன்னு கொஞ்சூண்டு எச்சா ஊத்துனா தண்ணி மாதிரி ஆகிரும். ஆனா இந்த ரெசிப்பில அந்த ரிஸ்க் இல்லைங்க. வெங்காயம், மிளகா,கறிவேப்பிலை கொத்துமல்லி எல்லாம் மாவோட சேர்த்து உப்பும் சேர்த்து கொஞ்சங்கொஞ்சமாத் தண்ணி விட்டு ஈஸியா கலக்கிரலாம். இட்லிமாவு மாதிரி இருந்தாப் போதும்.
சப்பாத்திக்குன்னா தண்ணி கரெக்ட்டா ஊத்தி 10 நிமிஷமாவது பிசைந்து 10 நிமிஷமாவது வைக்கணும். அப்புறம்தான் சப்பாத்தி செய்யமுடியும். அப்புறம் சப்பாத்தி/கோதுமைதோசைன்னா அதுக்கு சைட் டிஷ் எதாச்சும் கண்டிப்பா இருக்கணும். வெறுமனே அதை மட்டும் சாப்பிட முடியாது. ஆனா இந்த ரொட்டிக்கு சைட் டிஷ் ஆப்ஷனல். வெறுமனே ரொட்டிய மட்டுமே கூட சாப்பிடலாம், சுடச்சுட சாப்பிட சூப்பரா இருக்கும். :) அவசரமாச் செய்யறதுக்கு சுலபமான ரெசிப்பி இது. சிலர் சர்க்கரை மேலே தூவி சாப்பிடுவாங்கனும் கேள்விப்பட்டிருக்கேன். நேரமிருந்தா காரமா ஒரு சட்னியும் அரைச்சுக்குங்க. நான் செய்திருக்கும் சட்னி ரெசிப்பி இங்கே.
இந்தப் படம் 3 இன் 1!! சட்னி, மாவு, கல்லில் ஊற்றிய அடை மூணுமே ஒரே படத்தில கவர் ஆகிடுச்சு, இருந்தாலும் தனித்தனியா க்ளோஸ்-அப் ஷாட்ஸ் எடுக்கலன்னா கோவிச்சுக்காது? (சட்னி, கரைச்சமாவு, ஊத்தின தோசை எல்லாமேதான்!! ;)) அதனால் ப்ராப்பர் ரெசிப்பி follows!
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு -11/2 கப்
தண்ணீர் -1 கப் to 11/4கப்
வெங்காயம்-1
பச்சைமிளகாய்- 2
கறிவேப்பிலை கொத்துமல்லி இலை -கொஞ்சம்
உப்பு
செய்முறை
வெங்காயம்,ப.மிளகாய், கறிவேப்பிலை-கொத்துமல்லி இலையைப் பொடியாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமைமாவு-தேவையான உப்பு இவற்றுடன் நறுக்கிய பொருட்களையும் சேர்த்து கலந்து, கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீரை விட்டு கலக்கவும்.
தோசைக்கல்லை காயவைத்து 2 கரண்டி (என்கிட்ட இருப்பது சின்னக் கரண்டி..அதனால 2, இல்லன்னா ஒரு கரண்டி மாவே சரியா இருக்கும்) மாவை ஊற்றி கெட்டியான தோசையாக வார்க்கவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, ஒரு புறம் வெந்ததும் திருப்பிப்போட்டு வெந்ததும் எடுக்கவும்.
~~~
Sending this recipe to Bachelor's Feast event happening at Jaleelaa akkaa's Samaiyal attakaasam
இங்கே இருந்து யாரும்ம் வர கூடாதுன்னு நடு ராத்திரி பதிவு போட்டாலும் விட மாட்டோமுல்லே மீ தி first
ReplyDelete//கோதுமை ரொட்டினு டைட்டிலைப் பார்த்ததும் Regular Wheat Bread ரெசிப்பி, பட்டர்-ஜாம் தடவிச் சாப்பிடலாம்னு ஒரு மைக்ரோ செகன்ட்(!) நீங்க நினைச்சாலும், நான் பொறுப்பில்லே! :))))//
ReplyDeleteநான் இது சப்பாத்தி ரொட்டின்னு நெனைச்சேன் . பயப்படாதீங்க உங்கள யாரும் சூ பண்ண மாட்டோம் disclaimer எல்லாம் போட்டு இருக்கீங்க :))
மகி நீங்க எங்கேயோ ஓ போயிட்டீங்க :))
ReplyDelete//எல்லாம் சுட்டு அடுக்கியாச்சு// அப்புராமாச்சும் வந்து சாப்புட்டாரா இல்லே வயத்து வலின்னு ஏதாச்சும் சொன்னாரா? ஹீ ஹீ சும்மா டவுட்டு
கோதுமை தோசை சூப்பர் மகி. அவசரத்துக்கு பண்ணுற டிபன். நீங்க சொன்னது போல இதுக்கு சைட் டிஷ் தேவை இல்லே
ReplyDeleteஅடடே,கிரிஜா, உங்க நடு இரவில் கரெக்ட்டா(!)தான் போஸ்ட் பண்ணிருக்கேன்,அதான் நீங்களே வந்துட்டீங்க! :) [பேக்ரவுண்டில "நானே வருவேன்,நிழலாய்த் தொடர்வேன்!" பாட்டுகூடக் கேக்குதுங்க.]
ReplyDelete///சூ பண்ண மாட்டோம் disclaimer எல்லாம் போட்டு இருக்கீங்க :)) /// வருமுன் காப்பதே என்றும் நல்லதுனு எங்க தமிழ் வாத்தியார் சொல்லிக்குடுத்திருக்காங்க,அதை அப்படியே கடைபிடிக்கிறேன்!:)
சூ..சூ...ஓடாதீங்க கிரிசா!!
/அப்புராமாச்சும் வந்து சாப்புட்டாரா/ எங்க வீட்ல அவருக்குப் பிடிச்ச டிபன் இது!நான் மறந்து போயிருந்த இந்த டிஷை நினைவுபடுத்தினதே அவருதான்!
வருகைக்கும்கருத்துக்கும்நன்றீங்க
நானும் கோதுமை தோசைதான் சாப்பிட்டேன் அது கொடுமை யாக இருந்தது
ReplyDeleteஇங்கே இருந்து யாரும்ம் வர கூடாதுன்னு நடு ராத்திரி பதிவு போட்டாலும் விட மாட்டோமுல்லே மீ தி first
ReplyDelete5 March 2012 16:28// NO NO
MEE THE FIRSTU..
நானும் கோதுமை தோசைதான் சாப்பிட்டேன் அது கொடுமை யாக இருந்தது//ஹாஹா.... பூஸார் பெண் பார்க்கிறதா சொன்னாரே? என்ன ஆச்சு?
ReplyDeleteமகி, தோசை சூப்பர். எங்க வீட்டிலும் ஆபத்துக்கு உதவுறது இந்த தோசை தான். நான் பச்சை மிளகாய் சட்னியோடு சாப்பிடுவேன். என் வீட்டு குட்டிகளுக்கு மிகவும் பிடிக்கும்.
ReplyDeleteHealthy kothumai dosa
ReplyDeleteVery flavorful godhumai dosai or adai or roti (in your style Mahi), I also add jeera to this..
ReplyDeleteஇருந்த கொத்துமல்லி நேற்றுதான் தீர்ந்து போச்சு. இனி அடுத்த ஷாப்பிங் வரை வெய்ட் பண்ணணும். ட்ரை பண்ணிட்டு வரேன் திரும்ப.
ReplyDelete//நானும் கோதுமை தோசைதான் சாப்பிட்டேன் அது கொடுமை யாக இருந்தது// தமிங்கிலத்துல சாப்பிட்டீங்களோ சிவா?
நாங்களும் வந்திட்டோமில்ல.சூப்பர் மகி.நேற்று எங்க வீட்டில் அவசரத்திற்கு டின்னர் இது தான்,நீங்களும் வெல்லலாம் பார்க்க உட்கார்ந்ததால் எதுவும் செய்ய முடியாமல் இதைத்தான் செய்தேன்,இங்கு வந்து பார்த்தால் மகியும் அதே!
ReplyDeleteகோதுமை மாவு எப்பவுமே ஆல் பர்பஸ்தான் அவசரத்துக்கு சப்பாத்தி தோசை, உப்மா எல்லாத்துக்குமே கை கொடுக்கும்
ReplyDeleteகோதுமை தோசை சூப்பர் மகி... நாங்க வேற மாதிரி செய்வோம். கோதுமை மாவு, அரிசி மாவு, மிளகு, சீரகம், உப்பு, கொஞ்சம் தயிர் விட்டு பருப்பு தாளிச்சு கொட்டி, கரைச்சு தோசை செய்வோம். சூப்பர் ரா இருக்கும்
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இது கோதுமை ரொட்டி இல்லை.. தோசை:)). எங்கிட்டயேவா:))...
ReplyDeleteசூப்பர்.... இந்த தோசையும் சட்னியும் எனக்கு ரொம்ப ரொமப் பிடிக்கும்.
இதே முறையில் கொஞ்சம் தேங்காய்ப் பூவும் சேர்ப்போம்.. இறுக்கமாக குழைத்து... ரொட்டியாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து, பொரித்திடித்த சம்பலும் செய்வேன்... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆஆ.. நானும் எங்கேயோ போயிட்டேன்:)).
ReplyDelete//[ "wow,what an explanation??!! மகி,நீ எங்கயோ போயிட்டே"-னு நீங்கள்லாம் புகழ்வது எனக்குக் கேக்குது,டாங்க்ஸுங்கோ! ;)))) ///
திரும்பி வாங்க மகி.. எங்கேயும் போயிடாதீங்க:)).. ஏனெண்டால் எனக்கொரு ஃபலோயர் இல்லாமல் போயிடக்கூடாதெல்லோ:))).. சரி சரி நோ கர் பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)).
இலங்கையர்களிடையே இந்த வெங்காயம் மிளகாய் போட்டுச் சுடும் கோதுமை ரொட்டி பேமஸ்:))..
ReplyDeleteஅப்போ சிவாவுக்கு இலங்கைப் பொம்பிளைதான் பார்க்கப்போறேன்:)))) அப்போதன் இந்த ரொட்டி தோசை எல்லாம் சுட்டூஊஊஊஊஊஊச் சுட்டுக் குடுப்பா:)
ஆஅ.. கீரி எப்பூடி சாமத்தில இங்கின வந்தா:)).. ஒருவேளை சிக் லீவில நிற்கிறாவோ? எனக்கெதுக்கு ஊர் வம்பு:)) வந்தமா பின்னூட்டம் போட்டமா போனமா என இருப்பதுதான் என் வேலையே:)) ஏனெண்டால் நான் 6 வயசிலிருந்தே ரொம்ப நல்ல பொண்ணூஊஊஊஊஊஊ:)).
ReplyDelete// En Samaiyal said...
ReplyDelete//கோதுமை ரொட்டினு டைட்டிலைப் பார்த்ததும் Regular Wheat Bread ரெசிப்பி, பட்டர்-ஜாம் தடவிச் சாப்பிடலாம்னு ஒரு மைக்ரோ செகன்ட்(!) நீங்க நினைச்சாலும், நான் பொறுப்பில்லே! :))))//
நான் இது சப்பாத்தி ரொட்டின்னு நெனைச்சேன் . பயப்படாதீங்க உங்கள யாரும் சூ பண்ண மாட்டோம் disclaimer எல்லாம் போட்டு இருக்கீங்க :))/////
நான் பண்ணுவேன்.. நான் பண்ணுவேன்.. மகியை நான் பண்ணுவேன்.. சூ பண்ணுவேன் என்னேன்:))) உஸ்ஸ்ஸ் ஏன் முறைக்கீனம்:))
vanathy said...
ReplyDeleteமகி, தோசை சூப்பர். எங்க வீட்டிலும் ஆபத்துக்கு உதவுறது இந்த தோசை தான். நான் பச்சை மிளகாய் சட்னியோடு சாப்பிடுவேன். என் வீட்டு குட்டிகளுக்கு மிகவும் பிடிக்கும்//
என்னாது எங்கட பச்சைப்பூவில சட்னியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).. ஆளைக் காணல்லியே என நாங்க தேடிட்டிருக்கிறோம்:))
yummy dosa mahi... looks so delicious.....
ReplyDeleteyummy dosa mahi... looks so delicious.....
ReplyDeleteVery interesting one
ReplyDeleteDosai romba nalla iruku..enaku romba pudikum, but enga veetula itha kanda thoorama oodiyae poiduvar :)
ReplyDelete//அதான் நீங்களே வந்துட்டீங்க! :) [பேக்ரவுண்டில "நானே வருவேன்,நிழலாய்த் தொடர்வேன்!" பாட்டுகூடக் கேக்குதுங்க.]//
ReplyDeleteகர்ர்ர்ர் கேட்டிச்சா பாட்டு கேட்டிச்சா.ஓகே ஓகே மல்லிப்பூ வாசன வரலே? சலங்கை சத்தம் கேக்கலே? இனிமே வரும்ம்ம்ம் பாருங்க :)) மொத ஆளா வந்து கமெண்ட் போட்டா கர்ர்ரர்ர்ர் :))
//சூ..சூ...ஓடாதீங்க கிரிசா!! //
ReplyDeleteநான் எந்த சூ வ சொன்னா என்னையே சூ சூ ன்னு ஹும்ம் என்னத்த சொல்ல? என்ன கமெண்ட் போட்டாலும் இந்த மாதிரி என்னையே கும்மி அடிக்கிறாங்களே? பாவக்காய் ஜூஸ் நெறையா குடிச்சு கிட்னிய டெவெலப் பண்ணனும் :))
//5 March 2012 16:28// NO NO
ReplyDeleteMEE THE FIRSTU //
சிவா முதல் இடம் உங்களுக்கே உங்க கூட நான் போட்டிக்கு வருவேனா:))
//ஆஅ.. கீரி எப்பூடி சாமத்தில இங்கின வந்தா:)).. ஒருவேளை சிக் லீவில நிற்கிறாவோ? //
ReplyDeleteநான் சாமத்தில சோபா இல் உக்கார்ந்துதான் கமெண்ட் போட்டேன் நிக்கலே :))
ஒரேயடியா பேஷன்டா ஆக்கிடுவீங்க போல இருக்கே. நானே யாருக்கும் கமெண்ட் போடலேன்னு எல்லாருக்கும் ஒரு எட்டு போய் கமெண்ட் போட்டு கடமையே கண்ணா இருந்தா என்னைய போயி ! என்ன பண்ணுறது நைட்டு தான் டைம் கெடைக்குது.
அவசரத்திற்கு சுலபமாக செய்துக்கொள்க்கூடிய அருமையான டிபன் மகி.
ReplyDeleteமகி,
ReplyDeleteகோதுமை ரொட்டியும் சட்னியும் நல்லாருக்குங்க.
இதை அப்படியே கொஞ்சம் கெட்டியாக பிசைஞ்சு ரொட்டியா தட்டீருவேன்.
ReplyDeleteஇதுவும் நல்லா இருக்குது.
Mahi, we call this godumai dosai. Looks very tempting. I never added onions. I normally grind ginger, green chilli and add wheat flour, little rice flour, very little ravai, water, salt together, blend it well and make thin dosai. going to try adding onions.
ReplyDeleteஅருமையான ஐடியா இந்த கோதுமை அடை!!
ReplyDeleteநான் ரொம்ப லேட்டா பார்க்கிறேன். அடைக்கு போடறமாதிறி எல்லாவற்றையும் போட்டுக்கூடச் செய்யலாம். நீவழி சொல்லியாச்சு.கற்பனைகள் செய்து யாருக்குஎது பிடிக்குமோ அதைச்சேர்த்து
ReplyDeleteவிதவிதமாகச் செய்ய வேண்டியதுதான். நல்ல நல்ல ரெஸிப்பி.
Godhumai Adai romba nalla iruku...
ReplyDeleteசிவா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! கோதுமை தோசை + தக்காளி சட்னி காம்பினேஷன் சூப்பரா இருக்குமே..BTW,எங்க சாப்பிட்டீங்க தோசை? ;)
ReplyDelete~~
வானதி,பச்சைமிளகாய் சட்னியா?? ஆஹா..பேரே சூப்பரா இருக்குதே,சீக்கிரம் ரெசிப்பியப் போஸ்ட் பண்ணுங்க,செய்து பாத்துடுவோம்! :)
நன்றி வானதி!
~~
அனு,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
ஹேமா,நான் சிலசமயம் சீரகம் சேர்ப்பேன்,சில சமயம் சேர்க்காமலும் செய்வேன்.:)
நன்றிங்க!
~~
புனிதா, அடுத்த ஷாப்பிங் போயிட்டு வந்தாச்சா? நீங்க வீட்டிலயே கொத்துமல்லி வளர்ப்பதா ஒரு பட்சி சொல்லுச்சே,இல்லையா?;)
நன்றிங்க!
~~
ஆசியாக்கா,சேம் பிஞ்ச்னு சொல்லுங்க! :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
லஷ்மிம்மா,தோசை-ரொட்டி ஓக்கே,கோதுமை மாவில் உப்புமாவும் செய்யலாமா?? எப்படினு சொல்லுங்களேன்!
நன்றிமா!
~~
ப்ரியா,நீங்க சொல்வதும் கொஞ்சம் டிபரன்ட்டா இருக்குது..அதையும் ட்ரை பண்ணிருவோம்!;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
அதிரா, சும்மா கர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லக்கூடாது, உங்களுக்குப் புடிச்ச பேர்ல சொல்லிக்குங்கோனு ஆரம்பத்திலயே சொல்லிட்டேன்.சரியா?
ReplyDelete/ரொட்டியாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து, /ஆஹா..டீப் ப்ரைட் ரெசிப்பியா?? அதுக்கு பொரிச்சிடிச்ச சம்பலுமா?? ரெண்டுமே உங்க வீட்டு கிச்சன்ல பார்க்க ஆசையா இருக்கு, அடுத்தமுறை செய்யும்போது படமெடுத்துப் போடுங்களேன், ப்ளீஸ்! :)
/ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆஆ.. நானும் எங்கேயோ போயிட்டேன்:))./திரும்பி வாங்க அதிரா.. எங்கேயும் போயிடாதீங்க:)).. ஏனெண்டால் எனக்கொரு ஃபலோயர் இல்லாமல் போயிடக்கூடாதெல்லோ:))).. சரி சரி நோ கர் பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)).
/அப்போ சிவாவுக்கு இலங்கைப் பொம்பிளைதான் பார்க்கப்போறேன்:))))/ மாப்பிள்ளை சிங்கப்பூர், பொம்பிளை;) இலங்கை, கலியாணம் பிரித்தானியாவிலே,வரவேற்பு அமெரிக்காவிலே!! பூஸ்,திட்டம் சரியாய்இருக்கல்லோ? இதையே ஃபாலோ பண்ணிருங்க!
கிரிசா சொன்ன சூ-வை நீங்க பண்ணப்போறீங்களோ அதிரா? ம்ம்..நல்லா வடிவான லேஸ் வச்ச சூ-வாப் பண்ணி இங்கை அனுப்பிவிடுங்கோ.அட்வான்ஸ் டாங்க்ஸ்! ;))))
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அதிரா!
~~
வித்யா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
ஜெயஸ்ரீ,நன்றீங்க!
~~
ஆர்த்தி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
சுமி, எங்க வீட்டில உல்டா! எனக்கு அவ்வளவாப் புடிக்காது.எப்பவாஆஆஆஆஆவது ஒருநாள்தாங்க செய்வேன்! ;)
நன்றி சுமி!
~~
கிரிசா,எம்புட்டுப் பாசமா முதலிடத்தை சிவாவுக்கே விட்டுக்குடுத்துட்டீங்க! நீங்க எங்கியோ போயிட்டீங்க போங்க!
முதல் கமென்ட்டுக்கு சுடச்சுடப் பதிலும் போட்டா, அதைப் புரிஞ்சுக்காம கர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லறீங்க? பாவக்காய் ஜூஸ் கூட வேப்பிலையும் சேர்த்து அரைச்சு முழுங்குங்க.அப்பதான் கிட்னி டெவலப் ஆகுமாம். :)))))))
நள்ளிரவு நேரத்திலும் கடமையே கண்ணாக வந்து கமென்ட்டின உங்களுக்குப் பாராட்டுக்கள்! நன்றிகள்! போதுமா..இன்னுங்கொஞ்சம் பாராட்டணுமா? ;)
~~
ஸாதிகாக்கா,கரெக்ட்டாச் சொன்னீங்க!:)கருத்துக்கும்,வலைச்சர அறிமுகத்துக்கும் நன்றி! நீங்க அறிமுகப்படுத்தின நேரம், அடுத்த "இட்லி" போஸ்ட் போட இன்னொரு வாய்ப்பு வந்திருச்சு..ஹிஹிஹி! :))))
~~
சித்ராசுந்தர், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
சுகந்திக்கா,கெட்டியாப் பிசைந்து ரொட்டியாத் தட்டுவது, இதை விட கொஞ்சம் வேலை சாஸ்தி;)!! அதான் இப்படிப் பண்ணிடறது! :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
மீரா,உங்க ரெசிப்பியும் நல்லா இருக்குங்க.நானும் செய்து பார்க்கிறேன்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
மனோ மேடம்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
காமாட்சிம்மா,சமையல்ல கற்பனையக் கூட்டி விதவிதமாச் செய்து பார்ப்பதுதானே நம்ம எல்லார் வழக்கமும்?! :)
நன்றிம்மா!
~~
ஷைலஜா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
இது நானும் பண்ணுவேனே!! என்று சொல்ல மாட்டேன். ;) கொத்துமல்லி இருந்தால் கொத்துமல்லி, இல்லாவிட்டால் பார்ஸ்லி. ஆனால் ரகசியமாக ஒரு முட்டை அடித்து ஊற்றிவிடுவேன். என்னோடது கோதுமை தோசை பக்கம்தான் அதிகம் இருக்கும். அடுத்த தடவை நினைவாக இப்படி ஊற்றுகிறேன். மிளகாய் வெண்..;)காயம் போடுவதால் தனியாவே சாப்பிடலாம்.
ReplyDelete//இது நானும் பண்ணுவேனே!! என்று சொல்ல மாட்டேன். ;)// :))) அதான் க்றிஸ் அங்கிள் இருக்காரே உங்க வீட்டில், வெஜ்ஜி. தோசை செய்ய!! அப்புறமென்ன...என்ஸாய்! :)
ReplyDelete//ஆனால் ரகசியமாக ஒரு முட்டை அடித்து ஊற்றிவிடுவேன். என்னோடது கோதுமை தோசை பக்கம்தான் அதிகம் இருக்கும்.// அடுத்தமுறை நினைவாக இப்படி ஊற்றிப் பார்க்கிறேன் இமா!
//மிளகாய் வெண்..;)காயம் போடுவதால் தனியாவே சாப்பிடலாம்.// ஹிஹி...யெஸ்ஸ்ஸ்ஸ்! தேங்க்யூ! :)
உள் வீட்டு ரகசியம்லாம் இப்படிப் பப்ளிக்ல போட்டு உடைக்கிறீங்களே! இது நியாயமா! தர்மமா! ;))))))))
ReplyDeleteரொம்ப நல்லா இருந்துச்சு
ReplyDelete