Thursday, March 22, 2012

காய்கறி இடியாப்பம் - Stringhopper with Vegetables

தேவையான பொருட்கள்
இடியப்பம் - 11/2கப் மாவில் செய்தது
கேரட்-1
பீன்ஸ்-5
உருளைக்கிழங்கு -பாதி
பச்சைப்பட்டாணி - ஒரு கைப்பிடி
வெங்காயம் -1
பச்சைமிளகாய்-1
கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1/2 டீஸ்பூன்
சக்தி கறிமசாலா தூள் -1டீஸ்பூன்
கடுகு -1/2டீஸ்பூன்
க.பருப்பு,உ.பருப்பு -தலா 1 டீஸ்பூன்
சோம்பு -1 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை
இடியப்பத்தை உதிர்த்து வைக்கவும்.
கேரட்-பீன்ஸ்-உருளைக்கிழங்கை கழுவிப் பொடியாக நறுக்கி காய்கள் மூழ்குமளவு தண்ணீர் விட்டு 2 நிமிடங்கள் மைக்ரோவேவ் செய்யவும். சிறிது நேரம் கழித்து காய்களை எடுத்து, அவற்றுடன் ஃப்ரோஸன் பட்டாணி, காய்களுக்குத் தேவையான உப்பு சேர்த்து 30 நொடிகள் மைக்ரோவேவ் செய்து வைக்கவும்.
வெங்காயம்,பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காயவிட்டு கடுகு-சோம்பு பொரியவிடவும். க.பருப்பு-உ.பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு வெங்காயம்-ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் வேகவைத்த காய்களைத் தண்ணீர் வடித்துவிட்டு சேர்த்து,மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தேவையான உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
சக்தி கறிமசாலா சேர்த்து பிரட்டிவிடவும். மசாலா வாசம் அடங்கியதும் உதிர்த்த இடியப்பம் சேர்த்து கிளறவும்.
காய்கறி மசாலாவுடன் இடியப்பம் நன்கு கலந்து சூடானாதும் மல்லி இலை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான வெஜிடபிள் இடியப்பம் தயார்.

விருப்பமான சட்னி/ஊறுகாய் அல்லது தயிருடன் ருசிக்கவும். கீழே படத்தில் இடியப்பத்துடன் இருப்பது தக்காளித் தொக்கு..:P :P
பின்குறிப்பு
காய்களுடன் உப்பு சேர்த்து வேகவைக்கிறோம்,இடியப்பத்திலும் உப்பு சேர்த்திருக்கலாம், சேராமலும் இருக்கலாம், அதற்கேற்ப உப்பு கவனமாக சேர்க்கவும்.
இடியப்பம் ரெசிப்பியைத் தமிழில் பார்க்க இங்கேயும், ஆங்கிலத்தில் பார்க்க இங்கேயும் க்ளிக்கவும்.
 ~~~
Sending this recipe to Bachelor's Feast event happening at Jaleelaa akkaa's Samaiyal attakaasam



24 comments:

  1. நாங்கள் மட்டன் சேர்த்து இவ்வாறு செய்தால் மட்டன் இடியாப்ப பிரியாணி,சிக்கன் சேர்த்து செய்தால் சிக்கன் இடியாப்ப பிரியாணி என்று சொல்லுவோம்.இது எங்கள் ஊரில் ரொம்ப பேமஸ்.இஸ்லாமிய பிரபல உணவுகளில் இதுவும் ஒன்று.நீங்கள் காய்கறிகள் போட்டு செய்துள்ளீர்கள்.அப்போ இது வெஜிடபிள் இடியாப்ப பிரியாணி.

    எங்கள் ஊர் ஸ்பெஷல் இடியாப்ப பிரியாணியை சாப்பிட இங்கேவாருங்கள்

    http://arusuvai.com/tamil/node/11610

    ReplyDelete
  2. Very flavorful and yummy idiyappam. A healthy dish too

    ReplyDelete
  3. my fav. mahi.... healthy dish too... thanks for the idiyappam recipe too... love it.... anytime eatable!

    ReplyDelete
  4. வெஜிடபுள் இடியாப்பம் கலர் புல்லா சூப்பர் ரா இருக்கு மகி... இன்ஸ்டன்ட் இடியாப்பம் -ல ட்ரை பண்ணி பார்க்கிறேன்.

    ReplyDelete
  5. Paarkave supera irukku Mahi..

    ReplyDelete
  6. மகி,

    காய்கறி இடியாப்பம் நல்ல கலர்ஃபுல்லா சூப்பரா இருக்கு.நானும் சமயங்களில் சாதம் கிண்டுவதைப்போலவே இடியாப்பத்தையும் புளி,எலுமிச்சை சேர்த்து கிண்டுவேன்.இது மாதிரியும் ஒரு நாளைக்கு செய்ய வேண்டும்.

    ReplyDelete
  7. semma tempting clips...looks very nice..

    ReplyDelete
  8. வெஜ் இடியாப்பம் கலர்புல்லா,உதிரியாக இருக்கு.பாத்தை பாத்ததும் சாப்பிட தோனுது....

    மகி,நான் மைக்ரோவேவில் உணவ்,பால் சூடுபடுத்துவதற்க்கும்,காய்கள் உடனே வேகவைப்பதற்க்கும் மட்டும்தான் பயன்படுத்துவேன்.சமைக்கமாட்டேன்,அவருக்கு பிடிக்காது.இப்போழுது எனக்கு மட்டும் அதில் தேவையானபோது அவாரத்திற்க்கு சமைத்துக்கொள்கிறேன்...

    ReplyDelete
  9. பார்க்கவே சூப்பர்.

    ReplyDelete
  10. The pictures look awesome. Do you have an English version of the recipe?

    ReplyDelete
  11. என்னைய இட்லி சாப்பிட்டு சாப்பிட்டு வந்து இட்லி ரெசிபி போட்ட பாவத்துக்கு வந்து வாரு வாருன்னு வாரிட்டு போயிட்டீங்க! இப்பெல்லாம் கம்ப்யூட்டர் ஆன் பண்ணாலே எங்கே உங்களுக்கு தெரிஞ்சிடுமோ :)) ன்னு ஒரே ஒதரலா இருக்கு. சோ எதுக்கும் இருக்கட்டுமுன்னு கமெண்ட் போட வந்திட்டேன் :))

    ReplyDelete
  12. நான் எப்பவோ ஒரு தடவை இந்த மாதிரி இடியாப்பம் இட்லி தட்டுல செஞ்சு இருக்கேன். சேமியா இல்லே ரைஸ் நூட்லஸ் வெச்சு இந்த மாதிரி காய் அண்ட் முட்டை போட்டு பண்ணுவேன் வேலைக்கு எடுத்து கிட்டு போறதுக்கு.

    ReplyDelete
  13. plain இடியாப்பம் கூட குருமா தான் எனக்கு புடிக்கும். தக்காளி தொக்கு கூட சாப்பிட்டதில்லே. எனக்கு ஒரு பார்ஸல் ப்ளீஸ். எங்கே பூஸ், வான்ஸ் , சிவா யாரையும் காணோம் ?

    ReplyDelete
  14. very colourful.
    &.. tha.tho again. ;P

    ReplyDelete
  15. புனிதா ஜி,உங்க தமிழே அப்பப்ப புரியாது,இதில த.தொ.எல்லாம் புரியுமா?? அப்படீன்னெல்லாம் சொல்லவே மாட்டேங்க! ;) வேலியில எலக்ட்ரிக் ஒயர் கட்டிக் காப்பாத்தியாவது "த"-வைப் பறிச்சு செய்துருங்கோஓஓஓ! :))))))
    தேங்க்ஸ்!
    ~~
    /plain இடியாப்பம் கூட குருமா தான் எனக்கு புடிக்கும்./ஹ்ம்ம்..எனக்கும் புடிக்கும் கிரிஜா,ஆனா பாருங்க..எங்கூருப்பக்கம் அப்புடிச் சாப்பிடற வழக்கம் கிடையாது..தேங்காப்பால் ஊத்தி சாப்பிடுவோம்,இல்லன்னா இப்படி தாளிச்சுதான் சாப்பிடுவோம். அதனால எங்க வீட்டய்யா குருமா வச்சா நாட் கம்ஃபர்ட்டபிள்! அதான் இப்படி தாளிச்சிடறது!

    /எங்கே பூஸ், வான்ஸ் , சிவா யாரையும் காணோம் ?/ஐ திங்க் எவ்ரிபடி இஸ் என்ஜாயிங் வீகெண்டூஊஊ!

    நான் ஊரில இப்படி இடியப்பம் செய்ததே இல்லைங்க,இங்க வந்துதான் எப்பவாவது செய்வேன்.

    /இப்பெல்லாம் கம்ப்யூட்டர் ஆன் பண்ணாலே எங்கே உங்களுக்கு தெரிஞ்சிடுமோ :)) ன்னு ஒரே ஒதரலா இருக்கு. சோ எதுக்கும் இருக்கட்டுமுன்னு கமெண்ட் போட வந்திட்டேன் :))/ஓஎம்ஜி! சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்துருச்சுன்னு பொய் சொல்லப் புடிக்கல,ஆனால் படிக்கும்போதெல்லாம் ஒரு சின்னப் புன்னகை வருதுங்க!:))))) அந்தப்பயம் எப்ப்ப்ப்ப்ப்ப்பவுமே இருக்கோணும்,சரியா கிரிஜா? ;)

    நன்றிங்க,வீகென்டிலும் வந்து கருத்தைப் பதிந்ததமைக்கு!
    ~~
    @Mirage creations, I do have a recipe for plain Idiyappam in English version. Will update this in English soon! Here is the link for that!
    http://mahiarunskitchen.blogspot.com/2011/10/idiyappam-stringhopper.html

    Thanks for stopping by! :)
    ~~

    ReplyDelete
  16. சூப்பர் ரெசிப்பி மகி. படங்கள் அழகு.
    புனிதா ஜி நீங்க இனிமே என் சிஷ்யை. ஓகேவா?????
    பூஸாரை காணவில்லை. எங்கை கரண்டி கொண்டு திரிகிறாரோ தெரியவில்லை????!!!!

    ReplyDelete
  17. //ஓஎம்ஜி! சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்துருச்சுன்னு பொய் சொல்லப் புடிக்கல//

    உங்களுக்கு சிரிப்பு வரேலேன்னா பறவா இல்லே ஆனா எனக்கு நேத்திக்கு நைட் டாகுட்டர் & சன் பூந்தி தட்டோட திரு திரு கமெண்ட் நெஜம்மா வாய் விட்டு சிரிச்சுட்டேன். சூப்பர் உங்க ஞான கண்ணுல எவ்ளோ கரீக்டா எல்லாம் தெரியுது:))

    ReplyDelete
  18. ///இப்பெல்லாம் கம்ப்யூட்டர் ஆன் பண்ணாலே எங்கே உங்களுக்கு தெரிஞ்சிடுமோ :)) ன்னு ஒரே ஒதரலா இருக்கு//

    நெசமாத்தாங்க ! எனக்கு எப்புடி நீங்க எல்லாம் யாரு வராங்க போறாங்கன்னு பார்க்கறீங்கன்னு தெரியல. லைவ் டிராபிக் feed எனக்கு இன்ஸ்டால் பண்ண தெரியல. சோ சீ சீ இந்த பழம் புளிக்கும்ம்ம் ன்னு விட்டுட்டேன் :))

    ReplyDelete
  19. //புனிதா ஜி,உங்க தமிழே அப்பப்ப புரியாது,இதில த.தொ.எல்லாம் புரியுமா?? //


    ஓ புனிதா ஜி தமிழ் தான் த தொ எழுதி இருக்காங்களா நானும் ஏதோ பரத நாட்டியத்துக்கு ஜதி சொல்லுறாங்க போலே இருக்குன்னு நெனைச்சுகிட்டேன்:)) BTW நல்ல வேளை எனக்கு த தொ பிரிஞ்சிடிச்சு இல்லேன்னா மகிய விம்பார் போட சொல்லி கேட்டு இருப்பேன்

    ReplyDelete
  20. kamatchi.mahalingam@gmail.comMarch 26, 2012 at 2:35 AM

    அருமையான இடியாப்பக் கலவை.ஸத்தான காய்கறிகள். கலரோக்கலர். கமென்ட் போறதோ இல்லையோ. இது 4வது முறை

    ReplyDelete
  21. என்ன மகி...MTR லயிருந்து சக்திக்கு மாறிட்டீங்களா.... இந்த இடியாப்பம் பார்க்கறதுக்கு நூடுல்ஸ் மாதிரியே இருக்கு.... எனக்கு மட்டும் இப்படி எப்பவாவது செய்றதுண்டு... அப்படியே மேல ஒரு முட்டை.... நல்லாருக்கும்.

    ReplyDelete
  22. Mahi ennoda favourite appa.
    Ithu naan poona vaaram kooda seytheen. Sorry enaku tamil front appa appa work aakathu.
    Nalla tiffin.

    ReplyDelete
  23. ரம்யா,ஸாதிகாக்கஜெயஸ்ரீ,வித்யா,பிரியா,ஹேமா,சித்ரா,லாவண்யா,மேனகா,ஆசியாக்கா,வானதி,காமாட்சிம்மா,பானு,விஜி அனைவரின் வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும் நன்றிகள்!

    @ஸாதிகாக்கா,உங்க ஊர் இடியாப்ப்ப பிரியாணியைப் பார்த்துட்டேன்.செம ரிச்சா இருக்கும் போல! ;)

    @மேனகா,நானும் பெரும்பாலும் அதற்குத்தான் மைக்ரோவேவ் உபயோகிப்பேன், ஆனா அதே சமையல் பண்ற மாதிரி நினைப்பு எனக்கு! :) விளக்கத்துக்கு நன்றிங்க.

    @//புனிதா ஜி நீங்க இனிமே என் சிஷ்யை.//வானதி..நீங்களும் இனிமே குருஜி-யா?? :)))

    @கிரிஜா,நீங்க லட்டு ரெசிப்பிலே கமென்ட்டினதைப் படிச்சுத்தான் எனக்கு சிப்பு சிப்பா வந்துச்சு!! :D கெக்கே-பிக்கேன்னு சிரிச்சுட்டு, அப்புறம் இனிமே புன்னகயோட நிறுத்திக்கோணும்னு நினைச்சிருகேன்! ஹாஹா!

    @பானு,/MTR லயிருந்து சக்திக்கு மாறிட்டீங்களா../ ஆமாங்க! இந்த முறை ஊரில இருந்து வரப்ப ஒரு பெட்டி(சூட்கேஸ் இல்ல, துக்கினியூண்டு அட்டப்பொட்டி!;)) நிறைய மசாலாஸ் வாங்கிட்டு வந்துட்டனில்ல? அதான்!! கூடவே இப்பல்லாம் நான் MDH மசாலாசும நிறைய வாங்கிவைச்சிருக்கேன்! :)

    இடியப்பத்துல முட்டை..ம்ஹும், எங்கூட்டுக்காரர் சாப்பிட மாட்டார். அவருக்கு முட்டையைத் தனியாத்தான் சாப்பிடணும், ஏதாவது காய்கள் கூட போட்டாலே முகத்தை சுளிப்பார்! அவ்வ்வ்...

    ~~
    அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails