கடந்த பதிவில் லோக்கல் ஃபார்மர்ஸ் மார்க்கட் போக முடியவில்லை என்று சொல்லியிருந்தேன். இன்று பக்கத்திலிருக்கும் தோழி "ஃபார்மர்ஸ் மார்க்கெட் போலாமா?" என்று கேட்டு போன் பண்ணினார். பிறகென்ன..கடகடன்னு கிளம்பி, குடுகுடுன்னு :) போயிட்டு வந்துட்டோம்.
முற்பகல் 11 மணி..கொளுத்தும் வெயில்! காய்-கனி-கீரை இவற்றோடு சேர்ந்து வியாபாரிகளும் வாடி வதங்கியபடி வாடிக்கையாளர்களுக்காய் காத்திருக்கிறார்கள். கூட்டம் நிறைய என்று சொல்ல முடியாவிட்டாலும் மக்கள் இருந்தார்கள்.
கோடைக்கேற்ற பீச், ப்ளம்ஸ், ஸ்ட்ராபெரி, கேன்டலூப், தர்பூசணி என்று விதவிதமாக நிறையப் பழவகைகள் பெரும்பான்மையான கடைகளில் இருந்தன. வெள்ளரி, மக்காச்சோளமும் நிறைய கண்ணில் பட்டது.
ஃப்ரெஷ் ஹெர்ப்ஸ் செடிகள் விற்பனைக்கிருந்த இடத்தை கேமராவில் க்ளிக்க...கடைக்காரர் ஆர்வமாக(!) வந்து, 'சோளக்கொல்லை பொம்மை' போஸ் கொடுத்தார்! :))
அழகழகான மலர்கள்..சூரியகாந்தி, ரோஜா, ஜின்னியா, செவ்வந்தி என்று அணிவகுத்து நிற்கின்றன..
மார்க்கட்டின் ஒரு ஓரத்தில் கேக், ப்ரெட் வகைகள், பாதாம்-முந்திரி போன்ற நட்ஸ், பாப்கார்ன் கடைகள் என்று உணவுப் பொருட்கள் ஏரியாவாக இருந்தது. மெக்ஸிகன் சாப்பாட்டுக் கடைகள் கூட இருந்தன.
காய்கறி கடைகளில் வெள்ளரி, மக்காச் சோளம், வெங்காயம், தக்காளி, காலிஃப்ளவர், ப்ரோக்கலி, முட்டைக் கோஸ்..வெய்ட், வெய்ட்!! லிஸ்ட் போட்டுகிட்டே போனா??!! லிஸ்ட் முடியலையே..."எல்ல்ல்ல்ல்லாக் காய்கறிகள்"-னு ஒரே வார்த்தையில் சொல்லிரலாம்ல? படிக்கிற உங்களுக்கும் போரடிக்காது! ;)
ஸோ....எல்ல்ல்ல்ல்ல்லாக் காய்கறிகள், ஃப்ரெஷ் பேஸில், கொத்துமல்லி, kale, என்று நிறைய இருந்தன. ஒரே ஒரு கடையில் மட்டுமே வெண்டைக்காய், பீர்க்கங்காய், பாகற்காய் இருந்தன. கத்தரியில் ஒரு வித்யாசமான வகையும், குட்டிப் பாகற்காயும் என்னை ரொம்ப அட்ராக்ட் பண்ணிருச்சு! :)
காய்களை எடுத்துக்கொண்டு தராசுக்குப் பக்கத்தில் வந்தால்...முருங்கைக் கீரை அழகா pack பண்ணி வைச்சிருந்தாங்க..அதையும் எடுத்தாச்சு! மேலே உள்ளது மார்க்கட்டில் உள்ள காய்களின் படங்கள்..கீழுள்ளது வீட்டுக்கு வந்த காய்களின் படங்கள்..
ஷாப்பிங் போயாச்சு..வெயிலுக்கு இதம்மா, சில்லுன்னு பழங்கள்..
சிறு துண்டுகளாக நறுக்கிய peach/plums/ peach+plums இரண்டும் சேர்ந்த மிக்ஸ் பழங்கள் வித் டூத்பிக்..அப்படியே ஸ்டைலா எடுத்துச் சாப்பிடுங்கோ! :))
ஹேவ் எ நைஸ் வீகென்ட் எவ்ரிபடி!
//ஆர்வமாக போஸ் கொடுத்தார்!// ;)) அழகான ஸ்கேர் க்ரோ. ;)) பின்னால இருக்கிறவர் சிரிப்பைப் பாருங்க.
ReplyDeleteஇனி என்ன? சமையல், அடுத்த குறிப்பு!! வாழ்க. ;)
மஞ்சள் பூ வாங்கல!!!!!!! ;)
ReplyDeleteThanks for the comments Imma&Vanathy..will reply u tomorrow. :)
ReplyDeleteunga ooru market is super.... all r fresh fruits and veggies....
ReplyDeleteVIRUNTHU UNNA VAANGA
உழவர் சந்தை... ரெண்டு போஸ்டும் பார்த்தேன் மகி... உங்க ஊரு உழவர் சந்தை நல்லா இருக்கு... பூக்கள் சூப்பர் ரா இருக்கு....
ReplyDeleteம்ம்ம் நினைத்தபடி லோக்கல் ஃபார்மர்ஸ் மார்க்கட் போய்வந்தாச்சு மகி .... அனைத்து படங்களும் அருமை... குறிப்பாக சோளக்கொல்லை பொம்மை சூப்பர்... காய்கறிகள் பூக்கள் அனைத்தும் சூப்பர்... அடுத்தது என்ன சமையல் தான் ..
ReplyDeleteரொம்ப நாள் ஆசை நிறைவேறிடுச்சு."எப்படி இருக்குங்க எங்கூர் மார்க்கட்?"_ நல்லாருக்கு மகி. ஆனால் கூட்டமில்லாமல் வெறிச்சோடி இருக்கு.
ReplyDeleteகாய்கறி&கீரையெல்லாம் ஃப்ரெஷ்ஷா வாங்கியாச்சு. இந்த வார சமையல் ஜம்ஜம்னு இருக்கப்போகுதுன்னு சொல்லுங்க.
I too like to visit like this market at Kansas.
ReplyDeleteThanks dear. You made my memories afresh.
viji
ஆவ்வ்வ்வ்வ் இது போனதடவையை விட சூப்பர் மகி.
ReplyDeleteநம்மூர் கத்தரி பாவலும் கிடைக்குதே.. ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்...
ரெண்டு பகுதியும் ஒரே மூச்சில் பார்த்துவிட்டேன்.உழவர் சந்தை ரொம்ப அழகாக உள்ளது மகி
ReplyDeleteஓஹோ ஓபன் மார்க்கெட் என்று ஜிநிவாவில் இரண்டொரு முறை போயிருக்கிறேன். உன் பதிவின் போட்டோக்களைப் பார்த்ததும் நினைவுக்கு வருகிறது.
ReplyDeleteஆனால் பாகற்காய், முதலானவைகளைப் பார்க்க தமிழ்க் கடைகளுக்குத்தான் போகவேண்டும்.ருசிக்க, ருசிக்க காய்கள் வாங்கியுள்ளாய். மணக்க, மணக்க சமையல் ஆகிக்கொண்டிருக்கும். பதிவும் கமகம என்று இருக்கிரது.
Foreign "Uzhavar Santhai" is super dooper.... :P
ReplyDeletehttp://recipe-excavator.blogspot.com
Even I love going to farmers' market..
ReplyDelete/அழகான ஸ்கேர் க்ரோ. ;))/ இருங்க,இருங்க..மிஸஸ்.ஸ்கேர் க்ரோ வரப்போறாங்க உங்களையும் வானதியையும் "என்ன?"ன்னு கேக்க! ஹாஹ்ஹாஹா! :))))
ReplyDelete/இனி என்ன? சமையல், அடுத்த குறிப்பு!! வாழ்க. ;) / இல்லையே!;) any-ways,வாழ்த்துக்கு மிக்க நன்றி இமா!
இமா said...மஞ்சள் பூ வாங்கல!!!!!!! ;) //////// மஞ்சள் பூவுக்கே மஞ்சள் பூவா என்று மேலிடம்(!) கேள்வி எழுப்பியதால் வாங்கல இமா! வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்!
~~
வானதி, மறுபடியும் வருவேன்னு சொன்னீகளே? ஆளையே காணமே? ;))))))
தேங்க்ஸ் வானதி!
~~
விஜி, ப்ரெஷ் தாங்க, ஆனா பாவம் வெயில்ல கொஞ்சம் வாடி வதங்கிப் போச்சு! கருத்துக்கு நன்றி விஜி!
~~
ப்ரியா, பூக்கள் ரொம்ப அழகா இருக்குதுல்ல? என்னவர் கூட போயிருந்தா நிதானமா இன்னும் நிறையப் படம் எடுத்திருப்பேன். கூட வந்த ப்ரெண்ட கடுப்பேத்தக் கூடாதுன்னு டீசன்ட்டா வந்துட்டேன் இந்த முறை! ஹிஹி! :) ;)
நன்றிப்பா வருகைக்கும் கருத்துக்கும்!
~~
/அடுத்தது என்ன சமையல் தான் ../ விஜிபார்த்தி, சமையல் எல்லாம் சனிக்கிழமையே ஆரம்பிச்சுட்டேன். பாதிகாய்கள்-கீரை முடிந்தது! :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
நிறைய விஜி--இருப்பதால் உங்களை விஜிபார்த்தி-ன்னே கூப்பிடப் போறேன்! :)
~~
/நல்லாருக்கு மகி. ஆனால் கூட்டமில்லாமல் வெறிச்சோடி இருக்கு./ ஆமாம் சித்ராக்கா! சம்மர் என்பதால் இப்படி வெறிச்சோடி இருக்குன்னு நினைக்கிறேன். உங்க ஊர்ப்பக்கம் கூட்டம் நிறைய இருக்குமோ? நீங்க போட்டிருந்த மிளகாய் வகைகள், மற்ற காய்கள் எல்லாம் இங்கே கண்ணில படவே இல்லை! முடிந்தா உங்க மார்க்கெட்டையும் போட்டோ புடிச்சு;) போடுங்களேன்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
விஜிம்மா, உங்க நினைவுகளை ரீஃப்ரெஷ் பண்ணிட்டேனா? எப்ப அடுத்த ட்ரிப் வரப்போறீங்க?! :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
/நம்மூர் கத்தரி பாவலும் கிடைக்குதே.. ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்... / இதென்னது இவ்ளோ பெரிய ஆவ்?! கொட்டாவியா அதிராவ்?! ;)))))) இங்கே இன்னும் நம்மூர்காய்கள் நிறையக் கிடைக்குமாம்! அடுத்த வாரம் போக முடியுதா என்று பார்க்கலாம்.
நன்றி அதிரா!
~~
ஸாதிகாக்கா, ரெண்டு பதிவுகளையும் படிச்சுட்டீங்களா? ரொம்ப நன்றி அக்கா!
~~
காமாட்சிம்மா, ஜெனிவா-ல நம்ம காய்கள் கிடைக்காதோ? இருந்தாலும் ஓபன் மார்க்கெட் போவது ஒரு நல்ல அனுபவம்தானே..சம்மரில் போயிட்டு வாங்க! வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமா!
~~
சங்கீதா, சூப்பர்-டூப்பர் சந்தையா? ஹாஹா! தேங்க்ஸ்ங்க!
~~
ஹேமா, தேங்க்ஸ் ஹேமா!
~~
முருங்கை கீரை ரெண்டு கட்டு வாங்கி பார்ஸல் ப்ளீஸ். பாவக்காய் குட்டியா அழகா இருக்கு மகி. எல்லா காயும் பிரெஷ் ஆ இருக்கு.
ReplyDelete