Saturday, December 17, 2011

Meetha Semai

செப்டம்பர் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமை என்னவரின் கொலீக் ஒருவர் வீட்டில் ஒரு பார்ட்டி இருந்தது. அவர் சொந்தவீட்டிற்கு குடிபோய் ஆறுமாதங்கள் ஹவுஸை warm பண்ணியபிறகும் விடாமல் எல்லாரும் அவரைத் தொந்தரவு செய்து housewarming பார்ட்டி கொடுக்க வைச்சிட்டாங்க. :)))))

அந்தப் பார்ட்டியில் எல்லா உணவுவகைகளும் ஹோட்டலில் ஆர்டர் செய்துவிட்டு இனிப்பு மட்டும் அவங்களே செய்திருந்தாங்க. நம்ம ரவா கிச்சடி போல, உதிரியா, சாஃப்ட்டா, இனிப்பா, சூப்பரா இருந்தது. இது என்ன ஸ்வீட்னு கேட்டப்ப, "loads and loads of nuts,dry fruits,desi ghee,mawa,sugar and semai"-ன்னாங்க. ஒடனே எனக்கு மண்டைக்குள்ள "பளீஈஈஈஈஈஈஈஈச்"னு ஒரு மின்னல் வெட்டிச்சு.(பல்ப் எரிஞ்சதுன்னே சொல்லி போரடிக்குது,அதான்!! ஹிஹி). ஷீர் குருமா ரெசிப்பிய அங்க இங்க ப்ளாக்ஸ்ல பார்த்து ஜொள்ளுவிட்டு, இண்டியன் ஸ்டோர்ல "Semai"ன்னு ஒரு பேக்கட் கண்ணுல பட்டதும் வாங்கிட்டு வந்து pantry-ல வைச்சிருக்கோமே என்ற மின்னல்தான் அது!!!

ஷீர் குருமா செய்வாங்களே,அந்த சேமியாவான்னதும் ஆமான்னு அவங்களும் அவங்களால முடிஞ்ச அளவு ( அவங்க பிஹாரு,நம்ம கோயமுதத்தூரு!!;)))) ) ரெசிப்பியை விளக்கினாங்க. நம்மள்ளாம் விம்பார் போட்டு வெளக்கினாலும் வெளாங்காத சிறப்பு வாய்ந்த மூளையைக் கொண்டவங்கன்னு அவிங்களுக்கு எங்கே தெரியப்போகுது,பாவம்!!!!!!!

அதுக்கும்பொறகு நானும் என்னமோ என்னமோ செஞ்சு அதுவும் என்ன என்னமோவா ஆகி..அது இது எதுன்னு நான் மண்டையப் பிச்சுகிட்டதும் இல்லாம உங்களையும் மண்டையப் பிச்சிக்க வைச்சதை நீங்க எல்லாரும் மறந்திருக்க மாட்டீங்க! ஒரு தோழி ஒருவாரம் கழிச்சு போன் பண்ணி நீங்க ட்ரை பண்ணியது இதுவா இருக்கலாமோன்னு ஒரு வீடியோ லிங்க் தந்தாங்க. ஒரு பத்துகிலோ பொறுமைய காசுகுடுத்தாவது வாங்கி ஸ்டாக் வைச்சுகிட்டு அந்த வீடியோவை பாருங்கன்னு வார்னிங் வேற குடுத்தாங்க. அவ்வ்வ்வ்! நீங்க தயவு செய்து பாருங்க, அப்ப நான் எவ்வளவு சுருக்கமா ஒரொரு ரெசிப்பியும் தரேன்னு என்னை பாராட்டுவீங்க. ஹிஹிஹி! வீடியோ இங்க இருக்கு.

கரெக்ட்டா அதே வீகெண்ட்ல ஒரு பர்த்டே பார்ட்டில நம்ம பிஹார் அக்காவை மறுபடியும் சந்திச்சனா..மிச்சம் மீதி டவுட்டுகளையும் க்ளியர் பண்ணிட்டு இந்தமுறை தைரியமாக் களமிறங்கினேன்! :)))))))))
~~~~

கைவசம் நெய் இல்லை...வெண்ணைய உருக்கி நெய் காய்ச்சவும் பொறுமை இல்ல..அதனால ஒரு 3 டேபிள்ஸ்பூன் வெண்ணைய உருக்கி, ஒண்ணு ரெண்டாப் பொடிச்ச பாதாம்-முந்திரிப் பருப்புகள் & திராட்சையை வெண்ணெயில வதக்கி எடுத்து வைச்சுகிட்டேன். அதிலயே 11/2கப் semai-ய போட்டு பொன்ன்ன்ன்ன்ன்ன்னிறமா வறுத்தேன். (அடுப்பு லோ ஹீட்/ஸிம்-லயே இருக்கோணும்)

சேமை(!) நல்லா கலர் வந்ததும் ரெண்டு கரண்டி(~1/4கப்) எவாபரேடட் மில்க் ஊத்தி கிளறி..சேமை வெந்ததும்..
அரை கப் சர்க்கரையைப் போட்டு கிளறினேன்.( மாவா/இனிப்பில்லாத பால்கோவா சேர்ப்பதா இருந்தா இந்த ஸ்டெப்ல சேர்க்கணும்.)

முதல்லயே வதக்கிவைச்ச முந்திரி-ஆல்மண்ட்-திராட்சை, நறுக்கிய பேரீச்சை, பொடித்த ஏலக்காய் இதெல்லாம் போட்டு...
நல்லா கிளறிவிட்டு இறக்கினா.... meetha semai /இனிப்பு சேமியா ரெடி!

:))))))))))
~~~
அடுத்த படம் முதல்முறை முயற்சித்த அதுஇதுஎது-வின் போட்டோ டுடோரியல்..கரீக்ட்டா நம்பர் போட்டிருக்கற ஆர்டர்லயே படம் பாருங்க,என்ன?? அப்பதான் நான் முதல்முறை என்ன காமெடி பண்ணேன்னு உங்களால கண்டுபுடிக்க முடியும்...கமென்ட் பாக்ஸிலே வந்து சொல்ல முடியும்..எல்லாருமா சேர்ந்து கும்மியடிக்க முடியும்,ஓக்கை??????
அப்பறம்,சொல்ல மறந்துட்டேனே.. இந்தவாட்டியும் எனக்கு 90% வெற்றிதான் கிடைச்சது..கரெக்ட்டா இது செய்யும்போது ஒரு போன்கால் வந்துதா...பேச்சு மும்முரத்தில ரெம்ப நேஏஏஏரம் கிண்டிட்டேன் போல..ஃபனல் ப்ராடக்ட் உப்புமாக்கு பதில் மிக்ஸராகிருச்சு!!!!!! எவ்வளவோ பார்த்துட்டோம்,,இதுக்கெல்லாம் சளைச்சவங்களா நம்ம? ;))))
கொஞ்சம் பாலை விட்டு 20செகண்ட் மைக்ரோவேவ் பண்ணி ஜூஊஊஊஊஊப்பராச் சாப்ட்டுறமாட்டம்? என்ன சொல்றீங்க?
:)))))))))))

21 comments:

 1. நீங்க மீட்டா செமை செய்த்ததை நகைச்சுவையுடன் விள்க்கி இருந்தது ரொம்பவே இனிப்பா இருந்துச்சு.

  ReplyDelete
 2. இதுதான் அதுவா !!!!!!!!!!!

  இதை நான் சாப்பிட்டிருக்கேன் கல்கத்தா தோழி ஒருத்தர் பீடிங் கிளாஸ்ல
  கொண்டாந்தாங்க .
  இந்த சேமியாவை உப்புமா செய்த அறிவு ஜீவி ஒருவரையும் தெரியும் .நானில்லை இல்லவே இல்லை

  ReplyDelete
 3. //அது இது எதுன்னு நான் மண்டையப் பிச்சுகிட்டதும் இல்லாம உங்களையும் மண்டையப் பிச்சிக்க வைச்சதை நீங்க எல்லாரும் மறந்திருக்க மாட்டீங்க//


  கர்ர்ர்ரர்ர்ர்ர் .

  சாப்பிடாத ஸ்வீட் பேரெல்லாம் சொன்னேனே .எல்லாம் தெரிஞ்ச மாதிரி

  ReplyDelete
 4. அதே கிளாஸ்ல ஒரு குவெய்த் பொண்ணு ஸ்வீட் pizza என்று கொண்டு வந்தா அதன் மேல் இந்த செமை இருந்தது .நான் ஸ்நாக்ஸ் டேஸ்ட் பண்ணுவேன் இனிப்பு அவ்வளவு பிடிக்காது அதனால் ரெசிப்பி கேக்கல
  its called hareesha

  ReplyDelete
 5. :-) superb recipe..very funny to read..looks like you are back on track:-)

  ReplyDelete
 6. ஹலோ மகி I am back!! இப்போ தான் ஊருல இருந்து வந்தீங்களான்னு எல்லாம் கேக்க கூடாது. அப்பவே வந்தாச்சு. ஆனா ப்ளாக் பக்கம் வர முடியல. அதுக்காக உங்க பதிவெல்லாம் படிக்காம இல்லே கம்மென்ட்ட தான் நேரம் இல்லாம போயிடிச்சு. இத்தன நாளா கொழப்பி கொழப்பி இப்போ ஒரு தெளிவான??!! முடிவுக்கு அடியேன் வந்திருக்கேன். அது என்னன்னா என் ப்ளாக் ல பதிவு போடுறது ரெம்ப ரெம்ப time consuming ஆ இருக்கு சோ.. உங்க எல்லார் ப்ளாக்லயும் வந்து அப்பப்ப கும்மி அடிச்சிட்டு போலாமுன்னு முடிவு பண்ணி இருக்கேன்!

  ReplyDelete
 7. //நம்மள்ளாம் விம்பார் போட்டு வெளக்கினாலும் வெளாங்காத சிறப்பு வாய்ந்த மூளையைக் கொண்டவங்கன்னு அவிங்களுக்கு எங்கே தெரியப்போகுது,பாவம்!!!!!!!//

  கொஞ்ச நாள் நான் வரலேன்ன விம் பார் போட்டு வெளக்கரத நீங்க குத்தகைக்கு எடுத்து கிட்டீங்க ?? அந்த பெருமை எல்லாம் எனக்கு மட்டும் தான் நெனைப்புல இருக்கட்டும்:))

  ReplyDelete
 8. //கரீக்ட்டா நம்பர் போட்டிருக்கற ஆர்டர்லயே படம் பாருங்க,என்ன?? //

  விட்டா quiz எல்லாம் வைச்சு prize குடுப்பீங்க போல இருக்கு ??

  அது சரி semai வந்து சேமியா தானே? விம் பார் ப்ளீஸ்

  ReplyDelete
 9. ஆண்டவா ! இப்படி எல்லாம் போட்டு புரட்டி எடுக்கக்கூடாது.நான் மிட்டா சேமையை சொன்னேன்.

  ReplyDelete
 10. வெளாங்காத சிறப்பு வாய்ந்த மூளையைக் கொண்டவங்கன்னு அவிங்களுக்கு எங்கே தெரியப்போகுது...

  உங்களை நீங்களே புகழ கூடாது :))
  ஸ்வீட் சூப்பர்
  கும்மிக்கு ஒருத்தவங்க வந்தாச்சு

  ReplyDelete
 11. semai! sema sweetunga! thorathi pudichu, oru kai paarthu inga kondaandhiteengale! :-)

  ReplyDelete
 12. பார்க்க சூப்பராத்தான் இருக்கு, ஆனாலும் சாப்பிட்டுப் பார்த்த பிறகே முடிவு சொல்லலாம்.... எதுக்கும் சிவாவுக்கு முதல்ல குடுங்க:))..

  நான் போயிட்டு பிறகு வாறேன்.. சோ ரயேட்ட்ட்...

  ReplyDelete
 13. பார்த்தாலே ஸாப்ட்டாக டேஸ்ட்டாக இருக்கும்போல இருக்கே. இது நம்ம சேமியா இல்லை. வட இந்தியாவில் போட்டவுடனே வெந்துவிடும் மெல்லிய ரக சேமியா கிடைக்கும். வறுத்த நிலையில் கூட கிடைக்கும். அதுதான் இது என்று நினைக்கிறேன். நீ செய்திருக்கும் விதம் ரொம்பவே சூப்பர். நெய், மாவா, இனிப்பு, பால் எல்லாம் சேர்ந்து திரட்டிப்பால் ஜாடையில் இருக்கு. உன்னுடைய வர்ணனை வேறு இனிப்பாய் இனிக்கிறது.
  கொட்டுங்களடிப் பெண்கள் கொட்டுங்கடி
  குலுங்கிட கைதனைக் கொட்டுங்கடி.
  கும்மிக்குப் பாட்டு இது.
  .

  ReplyDelete
 14. wow...wonderful presentation..lipsmacking recipe mahi..:)
  Tasty Appetite

  ReplyDelete
 15. பார்த்தா சூப்பரா தான் இருக்கு. ஆனா இந்த செய்முறை தான் கொஞ்சம் கஷ்டம் போல இருக்கே. எனக்கெல்லாம் அந்தளவுக்கு பொறுமை வராது. எங்க பூஸார், ஆமையார் யாராவது செய்வார்களா?

  ReplyDelete
 16. /.looks like you are back on track:-)/நித்து, ஐ யம் ஆல்வேஸ் ஆன் ட்ராக்குங்க! ;)))))) வரவர டைப்பிங் பண்ண வளையறதில்ல,அதனாலயே பல மொக்கை போஸ்ட்ஸ் பெண்டிங்க்! :)
  ~~
  /I am back!!/ தி(கி)ரிஷா;)க்கா,வாங்கோ,வாங்கோ!
  /இப்போ தான் ஊருல இருந்து வந்தீங்களான்னு எல்லாம் கேக்க கூடாது./ச்செ..நீங்க லீவு முடிஞ்சு எப்ப்ப்பவோ வந்துட்டீங்கன்னு எனக்குத் தெரியுமே! பேனா பேப்பர் வச்சி அட்டனன்ஸ் எடுத்ததெல்லாம் ஓல்டு ஏஜு! ப்ளாகுல எதுக்கு லைவ் ட்ராஃபிக் ஃபீட் வைச்சிருக்கேன்னு நினைக்கறீங்க?? ;))))

  /முடிவுக்கு அடியேன் வந்திருக்கேன்./வந்துட்டீங்கள்ல? அப்பச்சரி! என்ன ஒண்ணு, கொக்ககோலா கொழம்பு மாதிரி சூப்பர்ர்ர்ர்ர்ர் ரெசிப்பிகளை மிஸ் பண்ணுவம். எழுதலைன்னாலும் பரவால்ல,அப்பப்ப போட்டோஸாவது போடுங்க ப்ளாக்ல.
  டாங்க்ஸ்!

  /கொஞ்ச நாள் நான் வரலேன்ன விம் பார் போட்டு வெளக்கரத நீங்க குத்தகைக்கு எடுத்து கிட்டீங்க ??//அலோ...அந்த டயலாக்கை ஆரிஜினேட் பண்ணது நாங்க..அதனால எங்கவேணா எப்பவேணா யூஸ் பண்ண முழுஉரிமையும் எங்களுக்கே! ஆங்ங்ங்ங்ங்ங்....!

  சேமை---மெல்லிசா இருக்க டெலிகேட் சேமியாவுங்க. நார்மல் சேமியா மாதிரி 1:2 தண்ணிஎல்லாம் ஊத்தாம 2 கரண்டி தண்ணிலயே வெந்துடும்.
  நன்றிங்க கிரிஜா..அடிக்கடி வாங்கோ!
  ~~
  ஆசியாக்காவுக்கு வரவர சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் கொடிகட்டிப் பறக்குது! சூப்பர் கமென்ட் ஆசியாக்கா! நல்லா சிரிச்சிட்டேன்!தேங்க்ஸ்!
  ~~
  /உங்களை நீங்களே புகழ கூடாது :))/தம்பி சொன்னாச் சரிதேன்! டேங்க்ஸுங்க தம்பி!
  ;)))))
  ~~
  மீரா,ஆமாங்க. நம்மல்லாம் கஜினி முகமது பரம்பரை,அதான் விடா முயற்சில சேமைய இங்கே கொண்டுவந்தாச்சு.:)தேங்க்ஸ்ங்க!
  ~~
  /நான் போயிட்டு பிறகு வாறேன்.. சோ ரயேட்ட்ட்.../பசங்களுக்கு லீவ்னதும் மொதநாள்லயே பூஸம்மா ரயேட்ட்ட்ட்ட்ட்டா? கர்ர்ர்! இருந்தாலும் என்ர ஸ்வீட்டை இப்பூடி சந்தேகப்படக்குடாது அதிரா நீங்க! ;)
  ~~
  சுகந்திக்கா,நீங்க குட் கர்ல்! பார்ஸல் அனுப்பிட்டேன். :)
  நன்றி!
  ~~
  காமாட்சிம்மா, கும்மிப்பாட்டு சூப்பர். நீங்க சொன்னது சரிதான்.சேமை தண்ணி பிடிச்சு வேகறதில்லன்னு அனுபவத்தில(!) தெரிஞ்சுகிட்டேன்! ;)
  நன்றிமா!
  ~~
  வானதி,தோசைப்பொடி அரைக்கற அதே டைம்தான் ஆகும்,செஞ்சு பாருங்க. ;)
  ~~
  ஏஞ்சல் அக்கா,பாவம் உங்களை ரெம்ப டென்ஷன் ஆக்கிட்டேன் போல! டேக் இட் ஈஸி! ஹிஹிஹிஹி!
  ~~
  லஷ்மிம்மா,குறிஞ்சி, ஜே,பது அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!

  ReplyDelete
 17. அலோ...அந்த டயலாக்கை ஆரிஜினேட் பண்ணது நாங்க..// அம்மணி கூல் கூல் நான் டயல்லாக சொல்லல என் மூளைய சொன்னேன் !

  நான் தான் விம் பார் நீங்க எல்லாம் கற்பூரம் ஆச்சே ன்னு மீன் கருவாடு எல்லாம் பண்ணேன் (நான் திரும்ப வராமலே இருந்திருக்கலாமுன்னு நீங்க கார்ருங்கறது கேக்குது !!) இன்னும் பலமா வேண்டுதல் வச்சிருக்கோணும்

  ReplyDelete
 18. ப்ளாகுல எதுக்கு லைவ் ட்ராஃபிக் ஃபீட் வைச்சிருக்கேன்னு நினைக்கறீங்க?? ;))))
  // அடியாத்தீ என்னா ஒரு வில்லத்தனம்!! இதெல்லாம் தெரியாம அப்பாவியா இருந்திருக்கமா இம்புட்டு நாளா?

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails