ஊரை விட்டு இங்கே வந்ததும் வந்த மாற்றங்களில் முக்கியமானது உணவுப்பொருட்கள்..அதிலே பர்ட்டிகுலரா தேங்காய்! (:-/அவங்கவங்களுக்கு ஆயிரத்தெட்டுக் கவலை/வேலை, இவிங்களுக்கு தேங்கா பத்தி கவலைன்னு நீங்க முகவாய்க்கட்டைய தோள்ல இடிச்சுக்கறது தெரியுது..ஹிஹி! பாத்து...மெதுஉஉ....ஊவா இடிச்சுக்குங்கோ,வலிக்கப்போகுது! :-\ ;) )
இங்கே இண்டியன் ஸ்டோர்ல கிடைக்கும் ப்ரோஸன் தேங்காய்த்துருவல் பெரிய சதுரக்கட்டியா இருக்கும். ஒரு முறை யூஸ் பண்ணறதுக்கு கொஞ்சூண்டு உடைச்சு எடுக்கறது எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்தது. முழு பேக்கையும் ஒரு 30செகண்ட் மைக்ரோவேவ் பண்ணிட்டு தேவையானளவு எடுக்கலாம்,ஆனா அப்படி செய்யறது சரியில்லை, ப்ரீஸரில் இருந்து எடுத்து thaw பண்ணிய பொருட்களை மறுபடி ப்ரீஸர்ல வைப்பது உடலுக்கு நல்லதில்லைன்னு படிச்சேன்.
முதல் முறை thaw பண்ணியதுமே சின்னச் சின்னத் துண்டுகளா உடைச்சு வைச்சுக்குங்கன்னு சொன்னாங்க, அப்படி செய்தாலும் எனக்கு அது வொர்க் அவுட் ஆகல. என்னதான் உடச்சு வச்சாலும் அடுத்தமுறை அவசரமா எடுக்கும்போது எலும்பு மாதிரி ஆகிருது! :-|
வெறுத்துப்போய் என்னவர் ஆலோசனைப்படி ட்ரை கோக்கனட்பவுடர் வாங்க ஆரம்பிச்சேன். பொரியல், குழம்புக்கு அரைச்சுவிட, வறுத்து அரைக்கும் சட்னி இதுக்கெல்லாம் ஓக்கேவா இருந்தாலும் "தேங்காச் சட்னி"ன்னு நம்ம ஃபேவரிட் ஐட்டத்தை மிஸ் பண்ணறமாதிரியே இருந்தது!
வந்த புதுசில் ஒருமுறை தெரியாமல் இனிப்புத்தேங்காய்த் துருவலை வாங்கிட்டேன். என்ன செய்யறதுன்னு தெரியாம திண்டாடி [இப்பல்லாம் மக்ரூன் அது இதுன்னு செய்துடலாம்,வந்த புதுசுல எதுவுமே தெரியாதே..] தோசைமேலே எல்லாம் போட்டு ஸ்வீட் தோசை சுட்டு காலி பண்ணினேன். :)
தேங்காய்த் துருவல் வகைகள்
இப்படி இருக்கையில்தான் பக்கத்திலிருந்த ஒரு மதுரைக்காரத் தோழி "நாங்க முழுசா தேங்காய் வாங்கி உடைச்சு தோண்டி எடுத்து ப்ரீஸர்லே வச்சுப்போம்"னு சொன்னாங்க. அப்ப அது என்னமோ ஒரு பெரிய மலை போல வேலையாத் தெரிந்தது எனக்கு! ட்ரை கோக்கனட்டிலேயே காலத்தை ஓட்டினேன். அங்கிருந்து சால்ட் லேக் சிட்டி போய்ச்சேர்ந்தோம். ஏதோ ஹார்ட்வேர் வேலை செய்வதற்காக என்னவர் வாங்கியிருந்த சுத்தியும் எங்ககூடவே வந்து சேர்ந்தது.வீட்டுப்பக்கத்திலேயெ இருந்த வால்மார்ட் சூப்பர் சென்டரில் தேங்காயைப் பார்த்ததும் ஏதோ ஒரு தைரியத்தில் வாங்கிட்டு வந்துட்டேன். முதல் முறை வாங்கி உடைத்து சட்னி அரைத்ததும் தைரியம் வந்துட்டது.. நானும் முழுத்தேங்காய் வாங்க ஆரம்பித்துட்டேன். :) யூட்டாலயே கிடைக்கற தேங்கா கலிஃபோர்னியால கிடைக்காம இருக்குமா? இங்கே கொஞ்சம் ஈஸியாவே கிடைச்சது. இந்த டெக்னிக்கை (தாமஸ் ஆல்வா எடிசன் ரேஞ்சுக்கு பந்தா வுடறியேன்னு நீங்க முணுமுணுக்கறது கேக்குது,ஹிஹி) இங்கே பக்கத்தில் இருந்த ப்ரெண்ட்ஸ்கிட்ட எல்லாம் பரப்பினேன்.. அவிங்களும் இப்ப என்னோட மெத்தடுக்கு மாறிட்டாங்க. நீங்களும் ட்ரை பண்ணிப்பாருங்க..ஏதோ எனக்குத் தெரிந்த ஒரு சில விஷயங்களை சொல்லறேன். கண்டிப்பா உங்களுக்கு உபயோகமா இருக்கும்.:)
தேங்காய் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் சிலது..
1.நல்லா ப்ரவுன் கலரா இருக்கற காயா பாத்து எடுக்கணும். [வெள்ளைகலர் எடுத்தீங்கன்னா இளநியாவும் இல்லாம தேங்காயாவும் இல்லாம பல்ல இளிக்கும்,ஜாக்கிரத!]
2.தேங்காயின் மூணு கண்ணும் நல்லா இருக்குதான்னு பாத்து எடுங்க. நல்ல தேங்காய்னா கண்கள் அழுகிப்போகாம, வெள்ளை படிந்து பூசணம் பிடிக்காம க்ளீனான கண்ணோட இருக்கும்.
3.மூச்சு விட்ட காய் இல்லாம பாத்து எடுக்கணும். [அதாவது தேங்காய் ஓடு வெடிப்பு விடாம இருக்கோணும்,ஹிஹி]
4. தேங்காயின் உள்ளே தண்ணி நல்லா ஆடணும்.[குச்சுப்புடியா,ப்ரேக் டான்ஸான்னு கேக்காதீங்க..நல்ல நல்ல பாயின்ட் சொல்லும்போது தொந்தரவு பண்ணக்குடாது.கர்ர்ர்ர்ர்ர்ர்]
இந்த பாயின்ட்டை எல்லாம் சொல்லறதுக்காகத்தான் இந்த போட்டோவ எடுத்தேன். க்ளிக் பண்ணும்போதே தேங்கா பரிதாபமா முழிக்கிற மாதிரி தெரிஞ்சுதா..அதான் கேப்ஷன் போட்டு உங்களையெல்லாம் கொஞ்சம் பயமுறுத்த வேண்டியதாப் போச்சு! :)
தேங்காயை இடது கையில் புடிச்சுகிட்டு வலதுகையில் இருக்கும் சுத்தி(அல்லது உங்க வசதிக்கேத்த ஆயுதத்தால) கவனமா உடையுங்க. அரிதாக சில சமயம் சரிபாதியா உடையும், பல சமயம் கோணல் மாணலா உடையும்..இட்ஸ் ஓக்கே, நாம என்ன உடைச்ச தேங்காய அழகிப்போட்டிக்கா அனுப்பப் போறோம்? ;)
தேங்காய் வாங்கி உடைக்கறதில் இன்னொரு அட்வான்டேஜ் என்னன்னா போனஸா சில்லுன்னு ஒரு கப் தேங்காத்தண்ணியும் கிடைக்கும். கஷ்டப்பட்டு உடைச்ச களைப்புத்தீர நீங்களே அதைய குடிச்சுக்கலாம், இல்லாட்டி பத்திரமா எடுத்துவச்சு ஆப்பத்துக்கு மாவரைக்கையிலே ஊத்தி அரைக்கலாம், அல்லது நீங்க அந்தப்பக்கம் திரும்பின சைக்கிள் கேப்புல வீட்டுல இருக்கர யாராவது நைஸா எடுத்து குடிச்சு டம்ளரை காலி பண்ணவும் வாய்ப்பு இருக்குது,பாத்துக்குங்க.
சிலருக்கு தேங்காத்தண்ணி குடிச்சா சேராது, சளி பிடிச்சுரும்னு பயப்படுவாங்க. அதுக்கும் ஒரு டெக்னிக் இருக்கு,உடைச்ச தேங்காய்ல இருந்து ஒரு சின்னத்துண்டு தேங்காய தேங்காத்தண்ணிக்குள்ள போட்டு தண்ணியக் குடிச்சுட்டு தேங்காயையும் சாப்டுட்டா சளி புடிக்காதுன்னு சொல்லுவாங்க,ஆல் த பெஸ்ட்! ;)
ஓக்கே, வெற்றிகரமா உடச்சாச்சு, நல்ல கூர்மையான கத்திய வச்சு சின்னத்துண்டுகளா தேங்காயத் தோண்டி எடுத்துருங்க. முத்தின தேங்காயா இருந்தா அது ஜஸ்ட் எ பீஸ் ஆப் கேக்! ரொம்ப ஈஸியா வந்துரும். ஒரு சிலது வரமாட்டேன்னு அடம்பிடிக்கும், டென்ஷன் ஆகாம ரெண்டு மூடி தேங்காயையும் சிலமணி நேரம் ப்ரிட்ஜ்ல வைச்சிருங்க.
அப்புறம் தோண்டினா முரண்டு பிடிச்சதெல்லாம் கூல் டவுன் ஆகி ஈஸியா வந்துரும். ஒரு சிலர் இதே ஸ்டேஜிலயே ப்ரீஸ் பண்ணுவாங்க, ஆனா நான் கையோட சின்னச் சின்னப்பல்லா நறுக்கிடுவேன். கொழுக்கட்டை,அடை,அரிசிம்பருப்பு சாதத்துக்கெல்லாம் போட வசதியா இருக்கும், மிக்ஸில அரைக்கவும் ஈஸியா இருக்கும்.
ரெண்டு மூடி தேங்காயையும் தோண்டி எடுத்து நறுக்கியாச்சு...
நறுக்கிய தேங்காய்ப் பல்லுகளை எல்லாம் ஒரு டப்பால சேகரிச்சு(!) மூடி ப்ரீஸர்லே போட்டுடுங்க,அம்புட்டுதான்!
இது ப்ரீஸர்லே வைக்கறதுக்கு முந்தி..
இது அடுத்து சிலநாட்கள் கழித்து...
கொஞ்சம் வேலை இருக்கறமாதிரி தெரிந்தாலும் இதிலே அட்வான்டேஜஸ் அதிகம்..ப்ரீஸர்லே இருந்து தேவையான அளவு தேங்காயை மட்டும் எடுக்கலாம். தேங்காய்த் துண்டுகள் தனித்தனியா இருப்பதால் ஈஸியா வந்துரும். மைக்ரோவேவ் பண்ணவேண்டிய அவசியம் இல்ல. கொஞ்சம் சுடுதண்ணில போட்டம்னா ப்ரெஷ் தேங்கா ரெடி.
ஒரு தேங்கா வாங்கினா (எனக்கு) 2 வாரத்துக்கும் மேல வரும். உங்க பர்ஸையும் கடிக்காது,டேஸ்ட்டும் நல்லா இருக்கும். எல்லாம் நல்லா நடந்தா(!) ஜஸ்ட் அரை மணி நேர வேலைதான். மேக்ஸிமம் ஒன் அவர் இழுக்கலாம், பட் இட்ஸ் வொர்த் இட்! ;)
அவ்வ்வ்வ்வ்வ்...யாரது?? ஆரா இருந்தாலும் சரி, இப்புடியெல்லாம் டென்ஷன் ஆகப்படாது,உடம்புக்கு நல்லதில்ல..உங்க கண்ணில படுவது நானில்ல, என் ப்ளாகுதான்! தக்காளி-முட்டை எல்லாம் பறந்து வர மாதிரி ஒரு மாயை தெரியுதே..உங்க கம்ப்யூட்டர் பாழாகிரும்,கூல் டவுன்ன்ன்ன்ன்! நான் ரெம்ப உஷாரு,உங்க கண்ணிலெல்லாம் படமாட்டேன்,
அதிராவுக்கு மஞ்சக்கலர் சாறி அனுப்பி ஐஸ்வச்சு கருப்பு பூனைப் படைப் பாதுகாப்புடன்தான் இப்பல்லாம் சுத்திட்டு இருக்கேன். எதுக்கு சம்பந்தமில்லாம இதை சொல்லறேன்னு பாக்கறீங்களா... எல்லாம் ஒரு பாதுகாப்பு ஏற்பாடுதான்! ச்சே,ச்சே,பயமா...எனக்கா அதெல்லாம் இல்லீங்க!!
" மாம்பழம் நறுக்குவது--தேம்பழம்(?!!!) நறுக்குவது-- (அடுத்து ஒரு பழம் கியூல வெயிட்டிங்)" இது போன்ற உபயோகமான பலபதிவுகள நான் சலிக்காமப் போடுவதற்கு உங்க எல்லாரின் அன்பும் ஆதரவும்தான் முழு முதல் காரணமா இருந்தாலும் அப்பப்ப கொஞ்சம் கை காலெல்லாம் உதறுற மாதிரியே இருக்குல்ல..அக்கம் பக்கம் இருக்க ஆட்களில் யாராவது பொறுத்தது போதும்னு பொங்கி எழுந்து டெரராப் பொறப்பட்டு எங்க ஏரியாவுக்கு வந்துட்டீங்கன்னாலும் பூனைகளைத் தாண்டி வரமுடியாது,be ware of black cats!???
எனவே NRI தென்னிந்திய மக்களே, நீங்க எல்லாரும் ப்ரெஷ்ஷா முழுத்தேங்கா வாங்கி உபயோகிப்பதை இந்தப் பதிவின் மூலம் கன்னா-பின்னான்னு என்கரேஜ் பண்ணுகிறேன். மற்றும் இந்தியதிருநாட்டு மக்கள் உட்பட யார் வேணும்னாலும் ப்ரீயா இந்த தேங்காப்பல் ப்ரீஸிங் டிப்ஸ் &டெக்னிக்ஸ்-ஐ உபயோகிச்சுக்கலாம். கட்டணமெல்லாம் கிடையாது, ஆனா காப்பிரைட் வாங்கிவச்சிருக்கேனாக்கும். ;) :)
இதிலே உங்களுக்கு ஏதானும் அதிருப்தி இருந்தா தேங்காய் சாப்பிடறதை நிறுத்திருங்க,ஆனா என் ப்ளாகுக்கு வந்து படிப்பதை ரசிப்பதை சிரிப்பதை நிறுத்திராதீங்க, டீல் ஓக்கேவா? ;)
Adapavi acca. Idli maami is better. he he
ReplyDeleteவாங்க சுனாமி! :)
ReplyDeleteஇம்புட்டு உபயோகமா(!) ஒரு பதிவு போட்டுருக்கன்,அதைப்பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லல்லியே? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அதுசரி....சமையல்னா உங்க ரூமீஸ்-ஐ இல்ல கேக்கணும்,நீ வேற ஏரியாவாச்சே? ;)
ஹல்லோ வந்த நாள்ல இருந்து என்னோட ஹோமீஸ் (ரூமீஸ் இல்ல. அப்புறம் தப்பாயிடும் ஹி ஹி) ஆன 3 வானரங்களுக்கும் நான் தான் சமையல்காரி. ஐ மீன், கழுவுறது வெட்டுறது, துடைக்கறது, எல்லாம் அவங்க வேலை. அதை எல்லாம் அலாக்கா தூக்கி அடுப்பில போட்டு (ஓக்கே ஒக்கே சட்டியில போட்டு) சமைச்சு கொடுக்கறது என்னோட வேலை. இங்க துருவின தேங்காய் கிடைக்கும். பட் தேடிப் பிடிக்கிறது ரொம்ப கஷ்டம் தான்.
ReplyDeleteஅப்புறம் இங்க இருக்கற ஒரு மெக்கானிக் ஷெட்ல நான் வேலை பாத்த போது (4 வருசம் என்னத்த படிச்சு கிழிச்சும் கிடைக்காத அறிவு அங்க வேலை செஞ்ச ஒரு மாசத்தில கிடைச்சுதுன்கிறதை இங்க பதிய விரும்புகிறேன்.) பக்கத்தில இருந்த வெல்டிங்க டிப்பார்ட்மென்ட் ஆளுங்க கிட்ட சொல்லி நானே ஒரு துருவலை செஞ்சு எடுத்தேன். பழைய கால துருவலை இருக்கே, ஒரே ஒரு தட்டையான பல்லுடையது. அது மாதிரி செஞ்சு எடுக்கவே பென்ட்டு கழன்டுடுச்சு. ஹி ஹி. அதை கழுவி எடுக்க உயிர் போய் வந்தது வேற கதை. நானாக ஒரு பலகையை அதுக்கு ஸ்டான்ட்டாக கொடுத்தேன். ஊர்ல செய்யாத வேலை எல்லாம் இங்க செய்யறேன்னு எனக்கு ரொம்ப பெருமை. ஹா ஹா ஹா.
பின்ன என்னக்கா, ஊர்ல இருந்து ஒரு துருவலையை கொண்டு வர அம்மா விடல. துணிகளோட பெரிய லக்கேஜ்ல போடறேன்னாலும் விடல. எங்க ஊர்ல எல்லாத்துக்குமே தேங்காப்பால் விடுவோம். எல்லா வறைக்கும் (பொரியல்) தேங்காய் பூ போடுவோம். சட்னி இல்லாமல் தோசையோ இட்லியோ இறங்காது. அதனால நானே களத்தில இறங்கிட்டேன்.
அப்புறம் இரண்டு வருசத்துக்கு அப்புறம் இங்க தெரிஞ்சவங்க ஒருத்தர் எங்கேயோ கிடைச்சுத்துன்னு ஒரு துருவளை வாங்கி கொடுத்தார். அது ஊல இருக்கற மாதிரி ஸ்டாங்கானது இல்லை.
அப்புறம் நான் இப்படித்தான் காய்கறிகளை எல்லாம் வெட்டி ஃபோரோஸ் பண்ணுவேன்னு சொல்லி இருக்கேன். ஹி ஹி.
http://reap-and-quip.blogspot.com/2010/02/4-bachelors-1.html
உண்மையச் சொல்லனும்ன்னா, நீங்க இப்படி கட் பண்ணி எனக்கு பார்சல அனுப்பினால் ஈசியாக இருக்கும். எனக்கு கட் பண்ணற பொறுமை இல்லை. ஹி ஹி ஹி ஹி. உங்க மாங்காய் டிப்ஸ் படி தான் இப்ப நான் மாங்காய் கட் பண்ணுவேன். பின்னூட்டம் போட்டேன்னு நினைச்சேன். போடலைய்யா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் கண்டுக்காதீங்க. ஹி ஹி. ஓக்கேக்கா டேக் ஹேர். பாய் பாய்
ReplyDeleteஎனக்கு ப்ரோஷன் தேங்காய் துருவல் பிடிக்கவே பிடிக்காது. இப்பெல்லாம் முழுசா வாங்கி, உடைத்து, துருவல் எடுப்பேன். கிட்டத்தட்ட 1 மாசத்துக்கு மேலை வரும். போன வாரம் வாங்கிய 2 தேங்காயும் அழுகிப் போய் வயித்தெறிச்சல் தான் போங்கள். கொரியன் சூப்பர் மார்க்கெட்டில் ஆயிரம் ரூல்ஸ் பேசுவார்கள். அடுத்த முறை இந்தியன் கடையில் வாங்கணும்.
ReplyDelete:) என்ன ரியாக்ஷன் வரும்னு நினைச்சு சொன்னேனோ,அது நடந்துடுச்சு! வெறி.சாரி,வெற்றி..வெற்றி! ;)
ReplyDeleteஅம்மா வீட்டில் இருக்கும் தேங்காத்துருவியும் இப்படி ஒர்க்ஷாப்ல கஸ்டமைஸ் செய்து(!) வாங்கினதுதான்,சூப்பரா இருக்கும். ஆனாலும் இரும்பையே உருக்கி அடிச்சு தேங்காத்துருவி செய்திருக்கியே சுனாமி,குட் ஜாப்! :)
கொஞ்சம் வேலை இருக்கு..அப்புறம் வந்து மீதிப் பின்னூட்டத்தைப் போடறேன்.
வானதி,நான் சொன்ன டிப்ஸ்-ஐ நினைவு வைத்து வாங்குங்க அடுத்தமுறை..எல்லாம் அனுபவத்தில் கிடைத்த டிப்ஸாக்கும்! :)
பர்ட்டிகுலரா தேங்காய்!??????? அது என்ன பர்ட்டிகுலரா..
ReplyDeleteதேங்காயப்பற்றி ரொம்பவே சிந்தித்து பயனுறும் வகையில் பகிர்ந்துள்ளீர்கள் மகி.
ReplyDelete//ரொம்பவே சிந்தித்து பயனுறும் வகையில் பகிர்ந்துள்ளீர்கள் // ஆஹா..ஸாதிகாக்கா,சீரியஸா சொல்றீங்களா, சிரியஸா சொல்றீங்களான்னு புரியலையே!அவ்வ்வ்வ்வ்வ்வ்!
ReplyDeleteநன்றி ஸாதிகாக்கா!
//அது என்ன பர்ட்டிகுலரா..//தம்பி சிவா, அது particular-ஆ! ஊருவிட்டு வந்தபுதுசுல கொஞ்சம் கண்ணைக்கட்டி காட்டிலவிட்டமாதிரி இருக்கும்ல..அதான்! ஓக்கேவா? ;)
யாருமே போடாத மாதிரி ஒரு இடுகை. ;) போஸ்டிங் ;)) கமண்ட்ஸ் ;))
ReplyDeleteVery interesting post. I like your sense of humour very much. Unga post padicha romba nalla sirippu varudhu. Keep it up!
ReplyDeleteநான் இப்படிதான் வெட்டி சின்ன சின்ன ப்ரீசர் பாகில் போட்டு வைப்பேன் .எடுக்க ஈசியா இருக்கும் .
ReplyDeleteஅடுத்த பதிவு பழம் பற்றி (அடுத்து ஒரு பழம் கியூல வெயிட்டிங்)" என்று HINT தந்திருக்கீங்க .
soooooo !!!!!!!!! i hope it is Anar /Pomegranate ...ROFL!!!!!!!LOL!!!!
அதே மாதிரி தேங்காயை காது(நம்ப) பக்கத்துல வச்சுண்டு சுண்டி பார்த்தாக்க சத்தம் கனீர்னு வரனும்.
ReplyDeleteநாளுக்கு நாள் மஹியோட சமூக சேவை எல்லாரையும் பிரமிக்க(!!) வைக்குது...:))
//எனவே NRI தென்னிந்திய மக்களே, நீங்க எல்லாரும் ப்ரெஷ்ஷா முழுத்தேங்கா வாங்கி உபயோகிப்பதை இந்தப் பதிவின் மூலம் கன்னா-பின்னான்னு என்கரேஜ் பண்ணுகிறேன்.//
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் *கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
சே..சே... முடிவைப் படிச்சதும் சொல்ல வந்ததும் மறந்து போச்செனக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))
தேங்காயானபின், இவ் இளனியைக் குடித்தால் வாதம் வரும் எனச் சொல்வார்கள், அதனால் தேங்காய் இளனியை நாங்க பாவிப்பதில்லை... அப்பத்துக்கு+ பாவற்காய்க் கறிக்கு மட்டும் பாவித்ததாக நினைவு.
ReplyDeleteநான் ஏசியன் கடைகளில் தேங்காய் வாங்குவதேயில்லை, buy 1 get 1 free என்பதுபோல:) ஒன்று... நன்றாக இருக்கும், ஒன்று.. கூடாமல் இருக்கும்..:).
ஆனால் இங்கத்தைய சூப்பமார்கட்டில் சூப்பராக இருக்கும், நல்ல அடப்பமாகவும் இருக்கும். அதை வாங்கி(3/4) ஒரேயடியாகத் திருவி, பிரீஸ் பண்ணி விடுவேன்.
எமேஜென்சிக்காக ரெடிமேட் பூவும் வைத்திருப்பேன். ஏனெனில் நான் சுண்டலும், புட்டும் கிட்டத்தட்ட டெய்லி/ 2 நாட்களுக்கொருக்கால் செய்வோம்.
தேய்காயை உடைச்சாச்சு... அடுத்து எதை உடைப்பதாக உத்தேசம்?:))).. நல்ல வேளை இதை தொடர்ப்பதிவாக்கேல்லை:))).
ReplyDeleteI suck at selecting coconut,will see and choose for long time ,but if i break it would have been spoilt! will follow these instructions next time :)
ReplyDeleteமகி,தேங்காயை உடைத்ததும் துன்டு போடாமல் 3 மணிநேரம் அல்லது 1 நாள் முழுக்க வைத்திருந்து துண்டு போட ரொம்ப சுலபமா இருக்கும்..
ReplyDeleteuseful tips Mahi. Having coconut piece along with the water is a new thing to me. But luckily so far i am enjoying the coconut water without any problem.
ReplyDeleteInitially i used to make pieces using knife, but after I heard from my MIL that the dark brown portion (endocrap just below the white portion)cause health problems hence i scrape the coconut and store it in freezer and take it whenever required.
அவ்வ்வ்வ்வ்வ்...யாரது?? ஆரா இருந்தாலும் சரி, இப்புடியெல்லாம் டென்ஷன் ஆகப்படாது,உடம்புக்கு நல்லதில்ல..உங்க கண்ணில படுவது நானில்ல, என் ப்ளாகுதான்! தக்காளி-முட்டை எல்லாம் பறந்து வர மாதிரி ஒரு மாயை தெரியுதே..உங்க கம்ப்யூட்டர் பாழாகிரும்,கூல் டவுன்ன்ன்ன்ன்! //
ReplyDeleteச்சே ச்சே உங்களைப்பார்த்து டென்ஷன் எல்லாம் மக்கள் ஆக மாட்டாங்க ஏன்னா என்னிக்கு உங்க ப்ளோக்ல தேங்காய் படத்த பார்த்தாங்களோ அன்னிக்கே இந்த மாதிரி எல்லாம் நடக்கும்ன்னு எதிர்பாத்திருப்பாங்க
யாருக்கெல்லாம் கொலேஸ்டேரோல் ஜாஸ்தியா இருக்குதோ அவங்க எல்லாம் தேங்காய கம்மியா use பண்ணுங்க. இது ஜோக் இல்லேங்க நேஜம்ம்மா . ஸோ நானு தேங்காய் எல்லாம் வாங்கறதில்லேங்க ...கொழுப்ப்பூஊ கொஞ்சம் ஜாஸ்தி நமக்கு ஹீ ஹீ நான் வியாதிய சொன்னேன் நீங்க என்ன நெனைச்சீங்க ?? dessicated coconut தாங்க உபயோகப்படுத்தறது .
ReplyDeleteகிரைண்டருடன் தேங்காய்த் துருவதற்கும்
ReplyDeleteதுருவி கிடைப்பதை யாரும் வாங்கவில்லையா. மகி நீ செய்து வைத்திருக்கும் ப்ரோஸன் துண்டுகளை வெளியில் சிறிது நேரம் வைத்துவிட்டு மிக்ஸியில் பொடி செய்தால் எதற்கு வேண்டுமோ அதில் பொடியாகவேத் தூவி விடலாம். துருவலைவிட நைஸாகக் கிடைக்கும். நீயும் எல்லாவற்றையும் சுலபமாக்க யோசனை சொல்லிக் கொடுக்கிறாய்.
//அதிராவுக்கு மஞ்சக்கலர் சாறி அனுப்பி ஐஸ்வச்சு கருப்பு பூனைப் படைப் பாதுகாப்புடன்தான் இப்பல்லாம் சுத்திட்டு இருக்கேன்.//
ReplyDeleteஅடடா... இப்பத்தானே இது என் கண்ணுக்குப் பட்டுது:)).. இலைமறை காயெல்லாம் கண்டுபிடிக்கிற நியூ ஆன்ரியாலயும் கண்டு பிடிக்க முடியேல்லை அவ்வ்வ்வ்வ்:))).
ஊசிக்குறிப்பு:
சாறி இன்னும் வந்து சேரவில்லை, இந்தக் கிழமைக்குள் வராதுவிட்டால்.... கறுப்புப் பூனை படையிடமே கடிக்கச் சொல்லி ஓடர் கொடுத்திடுவேன்... எதுக்கும் சாக்ர்ர்ர்ர்ர்ர்ரதையாக இருங்க:))).
//இப்பத்தானே இது என் கண்ணுக்குப் பட்டுது:)).. //நீங்களே கண்டுபுடிக்கட்டும்னுதான் அமைதியா இருந்தேன்.ஹிஹி!
ReplyDeleteகுரியர் பாய் வந்து பாத்தப்ப நீங்க வீட்டிலே இல்லையாமே,நேஸறி போயிட்டீங்கள் போல? ;)
பார்சல் ரிடர்ன் வந்துட்டது,மறுபடி அனுப்பறேன்.அதுக்குள்ளே பூனைப்படைக்கு ஓடர் ஏதும் குடுத்துடாதீங்கோ! ;)
சாறி கைக்கு வராமல், நான் விண்கலத்திலகூட கால் வைக்கமாட்டேன்... நாசாவுக்கும் சொல்லிட்டேன்..., அவிங்களும் சொல்லிட்டாங்க, சாறியை வாங்கிட்டே வரட்டாம், தாங்க வெயிட் பண்ணீனமாம்..:))
ReplyDeleteஅதிராவோ கொக்கோ.... என்னை ஏமாற்றப்பார்க்கினம் அவ்வ்வ்வ்வ்:)).
Useful tip for me who is a beginner. Enjoyed your post as well. It is like someone is talking to me when i read this. :-)
ReplyDeleteCheers,
Uma
http://umaskitchenexperiments.blogspot.com
அட...அட...என்னா ஒரு விளக்கம் :-) அடுத்தது பச்சை மிளகாயை வெட்டிதான் போடனுமா இல்ல வெட்டாம போடனுமான்னு ஒரு பதிவு போடுங்க எங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்
ReplyDeleteஆஆஆஆ மறந்து போய்ட்டேன் சாப்பாடு குழம்பில உப்பை கழுவி போடனுமா இல்ல கழுவாம போடனுமா..? விளக்கம் பிளீஸ்
ReplyDeleteவெல்டன்.....இப்பதான் பதிவெல்லாம் நம்ம ரேஞ்சுக்கு வருது :-))))))))))))))
ReplyDeleteசூப்பர் :-)
மகி நல்ல உபயோகமான குறிப்புங்க..நான் என்ன செய்கிறேன் தெரியுமா இங்க சிலநேரங்களில் 3 தேங்காய் £1.25 க்கு கிடைக்கும்.அதை வாங்கி வந்து அப்படியே முழு தேங்காயை ஃப்ரிட்ஜிக்குள் வைத்து விட்டு எப்போது தேவையோ அப்பொ எடுத்து உடைத்துக்கொள்வேன்.ஆனால் உடைத்த பிறகு அதை என்ன செய்வது என இப்போ நீங்க சொல்லீட்டீங்க இனிமேல் இதுமாதிரியே செய்யனும்.நன்றி.
ReplyDeleteMahi...unga blog romba supera irruku...Happy to follow you :)
ReplyDeleteTime kidacha ennoda blog ku vaanga :
http://cookingwithloveandforlove.blogspot.com/
இமா, நன்றி இமா!
ReplyDeleteகாயத்ரி,நல்லா சிரிச்சீங்களா? சந்தோஷம்! நன்றிங்க! :)
/அடுத்த பதிவு பற்றி HINT தந்திருக்கீங்க/keen observer-ஆ இருக்கீங்க ஏஞ்சலின். அடுத்தடுத்து ஒரே மாதிரி பதிவா போட்டா போரடிக்கும்ல படிக்கிறவஙக்ளுக்கு? நீங்க அதைப்பத்தி மறந்ததும் போஸ்ட் பண்ணிடறேன்! ;)தேங்க்ஸ்ங்க!
/தேங்காயை காது(நம்ப) பக்கத்துல வச்சுண்டு சுண்டி பார்த்தாக்க சத்தம் கனீர்னு வரனும்./கரெக்ட்டு தக்குடு,இந்த பாயின்ட் நானும் கேள்விப்பட்டிருக்கேன்.ஆனா எல்லாத்தேங்காயும் கணீர்னுதான் சத்தம் வரமாதிரி ஃபீலிங் எனக்கு.அதான் அதை சேர்க்கலை!
/நாளுக்கு நாள் மஹியோட சமூக சேவை எல்லாரையும் பிரமிக்க(!!) வைக்குது...:))/ஹிஹி,டாங்ஸு! ;)
அதிரா,தப்பா நினைச்சுடாதீங்க!கொஞ்சம் catchy-யா இருக்கட்டுமேன்னு அப்பூடி டைட்டில் வச்சேன்,மத்தபடி என்னோட மொக்கைக்கு தேச எல்லைகள் எல்லாம் கிடையாதுங்க. :)
நானும் நீங்க சொல்வது மாதிரியேதான் சொல்லிருக்கேன்,துருவி வைப்பதுக்கு பதிலா நறுக்கி,அம்புட்டுதேன்! ட்ரை தேங்காப்பூவும் எப்பவும் வைச்சிருப்பேன்.
/அடுத்து எதை உடைப்பதாக உத்தேசம்?:)))/அதான் மண்டைய உடச்சு திங்க் பண்ணிட்டு இருக்கேன் அதிரா..சீக்கிரம் ஐடியா கிடைக்க உங்க ஊர் புள்ளையார்கிட்ட நேர்ச்சை வைச்சிடுங்க.ப்ளீஸ்! ;)
நன்றி அதிரா!
அடுத்த முறை நல்ல தேங்காவா வாங்க வாழ்த்துக்கள்! கருத்துக்கு நன்றி ராஜி! :)
ReplyDeleteமறந்துபோன பாயின்ட்டை எடுத்துக் குடுத்ததுக்கு நன்றி மேனகா! பதிவில் சேர்த்துட்டேன். :)
மீரா,நீங்க சொன்னமாதிரி அந்த ப்ரவுன் கலர் பகுதியை யூஸ் பண்ணக்கூடாதுன்னு நான் கேள்விப்பட்டிருக்கேன்,ஆனா எங்க வீடுகள்ல அவ்ளோ ஸ்ட்ரிக்ட்டா அதை பாலோ பண்ணறதில்லை! ;)
இங்கே என்னிடம் தேங்கா துருவி இல்ல,அதனால இப்படி செய்து வைச்சுக்கறேன். நன்றிங்க!
என் சமையல்,/இந்த மாதிரி எல்லாம் நடக்கும்ன்னு எதிர்பாத்திருப்பாங்க/ அப்படீன்றீங்க? நீங்க சொன்னா சரிதான்! :) நீங்களே உங்க இமேஜ டேமேஜ் பண்ணிகிடறீங்க,நாங்களும் வியாதியத்தானே நினைச்சோம்.;) ;)
நன்றிங்க!
காமாட்சிம்மா, க்ரைண்டருடன் துருவி வந்தது. ஆனா அதிலே தேங்காய் துருவ ரெம்ப பயம்ம்ம்ம்ம்மா இருக்கே! கொஞ்சம் ஏமாந்தாலும் கைய துருவிடும்!!! அதனால அதை யூஸ் பண்ணறதில்லை.
நீங்க சொன்ன யோசனை நல்லா இருக்கும்மா..நான் கோக்கனட் பவுடர் ட்ரையா வாங்கி வச்சிருப்பதால் இது பத்தி யோசிக்கலை,நீங்க சொன்னபடி செய்து பார்க்கிறேன்.
உமா,முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. பெரும்பாலும் நான் எழுதுவது என் ப்ரெண்ட்ஸ் கூட பேசற நடையிலேதான் இருக்கும். :)
/அடுத்தது பச்சை மிளகாயை வெட்டிதான் போடனுமா இல்ல வெட்டாம போடனுமான்னு ஒரு பதிவு போடுங்க எங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்/ஹிஹி! வெட்டிப் போட்டாலும் வெட்டாமப் போட்டாலும் ஒரு டப்பா பாலிடால்ல முக்கி சமையல்ல போடுங்க ஜெய் அண்ணா! இருந்தாலும் நீங்க கேட்டதுக்கப்புறம் போடாம இருக்க முடியுமா? சீரியஸா திங்க் பன்ணிட்டுஇருக்கேன். ;)
ReplyDelete/சாப்பாடு குழம்பில உப்பை கழுவி போடனுமா இல்ல கழுவாம போடனுமா..?/ஒரு ஸ்பூன் உப்புக்கு ஒரு கப் Tide வாஷிங் பவுடர் என்ற அளவில் சேர்த்து ஊறவைச்சு,கழுவி, வடிச்சு போடுங்க,சூப்பரா இருக்கும்.ஹிஹீ!
/இப்பதான் பதிவெல்லாம் நம்ம ரேஞ்சுக்கு வருது :-))))))))))))))/ ரொம்ப புகழாதீங்க,கூச்சமா இருக்குது. நீங்கள்லாம் பெரீஈஈஈஈய்ய ஆளு..உங்க ரேஞ்ச் எங்கே..நாங்களாம் எங்க? ;):)
நன்றி ஜெய் அண்ணா!
/3 தேங்காய் £1.25 க்கு கிடைக்கும்./வாவ்!! கொயினி,உங்க ஊர்ல ரொம்ப சீப்பா இருக்குங்க. இங்கே ஒரு தேங்காயே $1.50!! நான் ப்ரிட்ஜில் வாங்கி வைச்சதில்ல..வாங்கினதும் ஒடச்சிருவேன்,வைச்சிருந்தா கெட்டுப் போயிடும்னு பயம்! ;) நன்றி கொயினி!
வர்ஷினி,முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! சீக்கிரம் உங்க ப்ளாகுக்கு வரேன்.:)