Thursday, July 12, 2012

வெங்காயத் தாமரை

வெங்காயத்தை நறுக்கி தட்டில் வைத்ததும் பார்க்கிறேன், தாமரை தெரிந்தது! பச்சைமிளகாயை நறுக்கி, தண்டாக வைத்துவிட்டேன்! எப்படி இருக்கு என் வெங்காயத் தாமரை? :)))

இன்னிக்கு ஒரு நார்த் இண்டியன் ஸ்டைல் மீல்... ஸ்பூன், ஃபோர்க், பவுல், ப்ளேட், நாப்கின் எல்லாம் எடுத்துக்கோங்க...ரெடி..ஸ்டெடி...
ஒன்..
டூ..
த்ரீ...!

தட்டில் ஜீரா ரைஸ் - புல்கா ரொட்டி - பக்கத்தில மட்டர் பனீர் எடுத்து வைச்சுக்குங்க. பவுல்ல, தால் எடுத்து ஊத்திக்கோங்க. அப்படியே தட்டில் இருக்கும் வெங்காயத்துண்டுகள், பச்சைமிளகாய்த் துண்டுகளும் கொஞ்சம் எடுத்துக்கோங்க. வசதியா உட்கார்ந்து சாப்பிட்டு முடிங்க. :)

புல்கா - எண்ணெயில்லாமல் செய்யப்படும் வட இந்திய ரொட்டி வகை. புல்காவை தோசைக்கல்லில் போட்டு, மறுபுறம் திருப்பி போடும்போது கேஸ் ஸ்டவ்-ல் டைரக்ட் ஆக தணலில் காட்டினால் பூரி போல உப்பி வரும். என்னிடம் எலக்ட்ரிக் ஸ்டவ் என்பதால் அதற்கு வழியில்லை. சப்பாத்தியை சீராகத் தேய்த்து, காய்ந்த தோசைக்கல்ல போட்டு, சில விநாடிகளில் திருப்பி விட்டு..பேப்பர் டவலால் மென்மையாக அழுத்திவிட்டால்...

புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று பொங்கிவரும் புல்கா ரொட்டி! :)
அடுத்து
ஹோம் மேட் பனீரில் செய்த மட்டர் பனீர்..
பொதுவாக வட இந்திய உணவு வகைகளுடன் இப்படி வெங்காயம் - பச்சைமிளகாய் பரிமாறப் படுவதுண்டு. நான் அதிகம் சாப்பிடமாட்டேன், ஆனால் என்னவர் உணவகங்களுக்கு போகையில் இதை கேட்டு வாங்கி சாப்பிடுவார். அதனால் இப்பொழுது வீட்டிலும் செய்ய ஆரம்பித்துவிட்டேன்.

பச்சை மிளகாயை விதையை நீக்கிவிட்டு மெல்லியதாக நறுக்கி, வெங்காயத்தையும் நீளமாக நறுக்கி, கொஞ்சம் எலுமிச்சை சாறு பிழிந்துவிட்டு, ரொட்டி-தால் சாப்பிடும்போது இடையில் ஒரு வாய் இதையும் கடிச்சுகிட்டா.. யம்,யம்!! :) ;)

டிஸர்ட்டுக்கு பசும்பால் சேர்த்து ஏலக்காய் வாசனையுடன் கூடிய கடல்பாசி! டபுள் கலர் போட்டு டபுள் டக்கர் பஸ் மாதிரி டூயல் கலர் அகர்-அகர்~~ ஹெல்ப் யுவர் ஸெல்ஃப்! :)
~~
இது கோயம்புத்தூரில் பூத்த மூக்குத்திப் பூ,வெட்டுக்காயப் பூடு...கள்ளிப் பூட்டாந் தழை.. தாத்தா தாத்தா காசு குடு பூ!!

சம்பந்தமே இல்லாம சாப்பாட்டுக் கூட இந்தச் செடியும் பூவும் எதுக்கு என நீங்க யோசிக்கலாம்..என் மொக்கையப் பொறுக்க முடியாம உங்க தலைய பக்கத்தில இருக்க சுவரில்/டேபிளில் மோதி உங்களுக்கு இப்ப வெட்டுக்காயம் ஆகலாம், அல்லது முன் எப்பவாவது ஆகியிருக்கலாம், அல்லது எதிர்காலத்தில் ஆகக் கூடும்! எப்படியாப்பட்ட வெட்டுக் காயம்னாலும் இந்த கள்ளிப்பூட்டாந் தழையை கசக்கி சாறு பிழிந்தால் காயம் விரைவில் ஆறிவிடும். அதனால அனைவருக்கும் பயன் தரும் வகையில் இந்தப் படம் இங்கே வந்திருக்கிறது. எப்பவுமே மக்களுக்கு உபயோகமான பதிவாப் போடவேண்டும் என்பதே என் லட்சியம்! :)))))) [ஆஆஆஆவ்...என்னது இது? டுமீல்...டமார்! அவுச்ச்ச்ச்ச்! $$$$&&!!***###....
ஜோடா பாட்டில் பறந்து வருது?!! ஸ்பீச் முடிஞ்சதும் ஜோடாவை பதமா ஒடச்சு அயகா கையில் குடுக்கோணும், இப்பூடி விட்டெறியப் படாது! ;)]

நீளமான காம்புள்ள இந்தக் கள்ளிப்பூட்டாஞ்செடிப் பூவினை சின்னப்பசங்க பாட்டுப் பாடியவாறே, வெடுக்வெடுக்-னு பிடுங்கிப் போடுவாங்க. :) ஸோ...வெட்டுக்காயம் எதுவும் ஆகலன்னா, நீங்களும் இந்தப் பூவை ரசிங்க..குழந்தைத்தனமான மனமிருந்தா..
" தாத்தா...தாத்தா...காசு குடு!
குடுக்க மாட்டேன்.
குடுக்கலன்னா தலய வெட்டுவேன்! "
என்று பாடியவாறே பூவைப் பிச்சுப் போடுங்க. ;) கொஞ்சநாட்கள் முன் ஏஞ்சல் அக்கா ப்ளாகில் இது பற்றி பார்த்ததும், கடந்த ட்ரிப்பில் நான் போட்டோ எடுத்து வந்தது நினைவில் வந்து இங்கே போஸ்ட் பண்ணிட்டேன். :)

36 comments:

  1. sorry Mahi i cant get tamil and so no comment..but i loved your vegetable carving the onion lotus so much..i had done many such veg: carvings when i was H.sc student..i always like that posh arrangement on dining table..thanks for sharing..

    ReplyDelete
  2. Leelagovind said... /// The vegetable carving was an accident actually! I dare not to call it as a carving! ;) Glad you liked the dining table and the onion lotus!

    Thanks very much for the instant comment! :)

    ReplyDelete
  3. மகி !!! அந்த தாமரை தட்டை கிளாக் வைஸ்ல திருப்பிபார்த்தா
    என் கண்ணுக்கு ஒரு பூஸ் உக்காந்து குனிஞ்சு அந்தா சாப்பாடு வேறைடிஸ் எல்லாத்தையும் உத்து பாக்கிற மாதிரி இருக்கு :))))

    .புல்கா யம் யம் .மை டாட்டர்ஸ் ஃபேவரிட் :)))
    ஐ தாத்தா பூ ..... தாத்தா தாத்தா காசுகுடு

    ReplyDelete
  4. /பூஸ் உக்காந்து குனிஞ்சு அந்தா சாப்பாடு வேறைடிஸ் எல்லாத்தையும் உத்து பாக்கிற மாதிரி / அட,அட,அட!! என்னே ஒரு கற்பனை! அசத்தல்! :)))

    நீங்க சொன்னதால ப்ளூ கலர் ஊத்தி ஸ்டார் பண்னிருக்கேன், அதை கண்டுக்காம விட்டுட்டீங்க ஏஞ்சல் அக்கா? கர்ர்ர்ர்ர்ர்! அந்த கருப்பு கண்ணாடிய ஒரு நிமிஷம் கழட்டிப் போட்டு போட்டோஸ்லாம் பாருங்க. ;))))

    ReplyDelete
  5. Cute vellai vengaya thamarai...spread excellent a irukku..

    ReplyDelete
  6. அழகான படங்களுடன் கூடிய அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. என் மொக்கையப் பொறுக்க முடியாம உங்க தலைய பக்கத்தில இருக்க சுவரில்/டேபிளில் மோதி உங்களுக்கு இப்ப வெட்டுக்காயம் ஆகலாம், அல்லது முன் எப்பவாவது ஆகியிருக்கலாம், அல்லது எதிர்காலத்தில் ஆகக் கூடும்! எப்படியாப்பட்ட வெட்டுக் காயம்னாலும் இந்த கள்ளிப்பூட்டாந் தழையை கசக்கி சாறு பிழிந்தால் காயம் விரைவில் ஆறிவிடும். அதனால அனைவருக்கும் பயன் தரும் வகையில் இந்தப் படம் இங்கே வந்திருக்கிறது.//

    உங்கள் சேவை தொடரட்டும் மகிமா

    பூசார் கற்பனை சூப்பர்...அஞ்சு அக்கா

    ReplyDelete
  8. தட்டில் ஜீரா ரைஸ் - புல்கா ரொட்டி - பக்கத்தில மட்டர் பனீர் எடுத்து வைச்சுக்குங்க. பவுல்ல, தால் எடுத்து ஊத்திக்கோங்க. அப்படியே தட்டில் இருக்கும் வெங்காயத்துண்டுகள், பச்சைமிளகாய்த் துண்டுகளும் கொஞ்சம் எடுத்துக்கோங்க. வசதியா உட்கார்ந்து சாப்பிட்டு முடிங்க. :)// ஏங்க இப்படி...பசிய கிளப்பி விடுறீங்க...

    தாமரை பூ ... சூப்பருங்க அம்மணி...

    ReplyDelete
  9. மகி
    விருந்து அருமை...வெங்காயத்தாமரை very creative...
    இந்தபூவை பார்த்து எவ்வளவு நாளாச்சு!
    அது சரி ,சிட்டி பூராவும் concrete...
    இந்தப்பூவின் தலையை சுண்டி பிய்த நினைவுகள் வருது :)))

    ReplyDelete
  10. Beautiful presentation. Yummy dishes.

    ReplyDelete
  11. Love ur LotusOnion... Nice recipe list.... U Rock...

    http://recipe-excavator.blogspot.com

    ReplyDelete
  12. நானு.... படிச்சுட்டு நிஜம்ம்மா முட்டிட்டேன். ;))) பூவு பார்சல் ப்ளீஸ். ;))))

    ReplyDelete
  13. நீல நிற அ கர் அ கர் :)))) சூப்பர் மகி .
    நேற்று பார்த்தேன். கலர் சிவப்பை விட ரொம்ப நல்லா வந்திருக்கு :)))

    ReplyDelete
  14. ம்ம் மஹி கலக்கி. நல்லா இருக்கு. பசிக்குது போயிட்டு அப்புரமா வரேன்

    ReplyDelete
  15. Lovely presentation and love your sense of humor..

    ReplyDelete
  16. Hey Mahi, I got it in India, you'll find it in Indian stores in US too, if you have a electric burner, buy this, if you have gas one go for one which is slightly raised, not flat like this one..

    ReplyDelete
  17. சமையலுக்குக் காய் நறுக்குவதைக்கூட கலைநயத்துடன்,ரசித்துச் செய்வதால் சமையலின் சுவையைச் சொல்லவேத் தேவையில்லை. வெங்காயத்தாமரை அழகா வந்திருக்கு.

    உங்க ஊரிலும் இந்த தாத்தா பூண்டு இருக்கா!

    ReplyDelete
  18. @Hema, I bought one mesh pan back home and left it there only. I don't think this pan available in the Indian stores near to my place here. Will check it next time! thanks for the prompt answer dear! :)

    @சித்ராக்கா,/உங்க ஊரிலும் இந்த தாத்தா பூண்டு இருக்கா!/ ஆர் யூ சீரியஸ்..ஆர்(இது வேற ஆர்..or) சிரியஸ்? ;)))) தமிழகத்தில் மோஸ்ட்லி எல்லா ஊர்களிலும் தாத்தா பூ இருக்கும்னுதான் நினைக்கீறேன். கோவை இஸ் நாட் எக்ஸப்ஷனல்! :)

    வெங்காயத்தாமரை பற்றிய கருத்துக்கு நன்றி! அப்படியே ஜில்ல்ல்ல்ல்ல்-னு இருக்கு! :))))

    @லக்ஷ்மிம்மா, அப்புறமா மறக்காம வரணும்! ;) கருத்துக்கு நன்றிம்மா!

    @ஏஞ்சல் அக்கா, ஆமாம்..பால் சேர்ப்பதால் டார்க் ப்ளூவா வராமல் மைல்டா ஆகாயநீலத்தில் அழகான கலரா வந்தது! :)

    @விஜி, நீங்க இந்த பூவில் விளையாடினது இல்லையா? :) கருத்துக்கு நன்றிப்பா!

    @ /நானு.... படிச்சுட்டு நிஜம்ம்மா முட்டிட்டேன். ;))) பூவு பார்சல் ப்ளீஸ். ;)))) / றீச்சர், நிஜம்ம்ம்ம்மாவா சொல்றீங்க?! பூவை வைச்சு புண்ணுக்கு மருந்து போடமுடியாது, மூக்குத்திதான் போடலாம்! if that's okay, I will send the flower! ;))))

    @சங்கீதா, வெங்காயத்தாமரை உங்களுக்கும் பிடிச்சுதா?! சந்தோஷம்ங்க,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    @அடடே,நித்து! :) வாங்க..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    @உஷா மேடம், ஆமாங்க..சிட்டி பூராவுமே கான்க்ரீட், இதிலே செடி-கொடி எல்லாம் கண்ணுல படுவதே அபூர்வமாகிட்டுது. இந்த பூ கூட சிட்டிக்கு அவுட்டர்ல எடுத்ததுதான். நீங்களும் பூவைப் பிச்சு வெளாடினீங்களா?! :)
    கருத்துக்கு நன்றி!

    @கோமதி,/தாமரை பூ ... சூப்பருங்க அம்மணி... /உங்க கமென்ட் பார்த்ததும் "தாமரப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னிக்கும் சண்டையே வந்ததில்லே"--பாட்டு நினைவு வந்துட்டுது! ;))
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமதி!

    @/உங்கள் சேவை தொடரட்டும் மகிமா/ தேங்க் யூ சிவா! உணவு வகைகள் ஏதும் பிடிக்கலை போலிருக்கு?! டைரக்ட்டா சேவையைப் பாராட்ட வந்துட்டீங்க? :)

    @கோபு சார், அதிகாலையில் வந்து பாராட்டியதுக்கு மிக்க நன்றி! :)

    @ரம்யா,தேங்க்ஸ்ங்க!

    ReplyDelete
  19. //எப்படி இருக்கு என் வெங்காயத் தாமரை? :)))//

    முடியல்ல:)

    ReplyDelete
  20. வெள்ளைத் தாமரைப் பூவே
    உன் இதழில் எத்தனை காயங்கள்
    பக்தை நானே பூஸு ஆனேன்
    உறங்கவில்லை சில வாரங்கள்..

    ஹாஅ...ஹா... அது நிட்திரைக்கே நேரம் கிடைக்கவில்லை:)) பிறகெப்பூடியாம் பின்னூட்டம் போடுவது..?:).

    ReplyDelete
  21. angelin said...
    மகி !!! அந்த தாமரை தட்டை கிளாக் வைஸ்ல திருப்பிபார்த்தா
    என் கண்ணுக்கு ஒரு பூஸ் உக்காந்து குனிஞ்சு அந்தா சாப்பாடு வேறைடிஸ் எல்லாத்தையும் உத்து பாக்கிற மாதிரி இருக்கு :))))//

    ஹா..ஹா..ஹா.. மகி கஸ்டப்பட்டு டாம்ரை:) செய்து போட்டா... அதைப் புஸ் எனப் பூஸ் ஆக்கிட்டா டங்க:) மீன்:).

    ReplyDelete
  22. Siva sankar said...

    பூசார் கற்பனை சூப்பர்...அஞ்சு அக்கா///

    அவ்வ்வ்வ்வ்வ் குட்டி சிக்கம்:), டாக்டர் சிவா வாழ்க:).

    ReplyDelete
  23. அகர் அகர் சூப்பர். நாந்தான் இன்னும் செய்யாமலே இருக்கிறேன்.

    ReplyDelete
  24. புல்கா பார்க்கவே சூப்பர் ரா இருக்கு.... இந்த பூ வச்சு நாங்க கூட இப்படி பாடி தான் விளையாடுவோம். காலேஜ் படிக்கும் போது தான் இந்த செடியின் சாற்றை காயத்துக்கு போட்டால் சரியாகும்னு தெரியும். தாமரை சூப்பர்....

    ReplyDelete
  25. wow... sooper padivu mahi... kalakiteenga!

    ReplyDelete
  26. வெங்காய தாமரை அழகோ அழகு மகி

    //ஸ்பூன், ஃபோர்க், பவுல், ப்ளேட், நாப்கின் எல்லாம் எடுத்துக்கோங்க..//

    எந்த ஊருக்கு போனாலும் எந்த சாப்பாட்ட சாப்பிட்டாலும்ம் கையால சாப்பிடுற சுகம் வருமா??? ஸோ எனக்கு போர்க் எல்லாம் வேண்டாம்.!!

    //ரெடி..ஸ்டெடி...ஒன்..டூ..த்ரீ...!//

    இத பார்த்தா சாப்புட கூப்புடுற மாதிரி தெரியலையே. சமைச்சு வெச்சிட்டேன் எல்லாம் எடுங்க ஓட்டம் :)) அப்படீங்குற மாதிரியே இருக்கே ???

    ReplyDelete
  27. சாப்பாடு எல்லாம் எப்பொழுதும் போல ரொம்ப நல்லா இருக்கு மகி. இது என்ன சண்டே லஞ்சுக்கு செஞ்சது போல இருக்கு? இல்லேன்னா எப்பவும் ரைஸ் அண்ட் டிபன் பண்ணுவீங்களா

    ReplyDelete
  28. மகி தப்பா நெனைச்சுக்காதீங்க திரும்பவும் வந்து மீதி கமெண்ட் போடுறேன் ஓகே

    ReplyDelete
  29. அழகான படங்களுடன் கூடிய அருமையான பகிர்வு.
    வெங்காய தாமரை அழகோ அழகு...

    ReplyDelete
  30. Mahi beautiful carving creatiion.
    Samayalum carvingum paarthavudan direct visit unga veedula thaan.

    ReplyDelete
  31. அதிரா, / முடியல்ல:)/ :)))) முடியல்ல-ன்னு சொல்லிப்புட்டு சிரிக்கிறீங்களே?! இடுக்கண் வருங்கால் நகுக-ன்னா இதானா?! ஹாஹ்ஹா! :D

    /பக்தை நானே பூஸு ஆனேன்
    உறங்கவில்லை சில வாரங்கள்../ ஆஹா..ப்ரமாதம்! கவித,கவித!![கண்மணி, அன்போட காதலன்.."குணா-கமல்" ஸ்டைல்ல படிங்கப்பா! :))]

    /நிட்திரைக்கே நேரம் கிடைக்கவில்லை:)) பிறகெப்பூடியாம் பின்னூட்டம் போடுவது..?:)./ஓ...இப்பத்தான் புரியுது! நிட்திரை;) இல்லாமல் கவித கொட்டிருச்சு போல!

    /மகி கஸ்டப்பட்டு டாம்ரை:) செய்து போட்டா... அதைப் புஸ் எனப் பூஸ் ஆக்கிட்டா டங்க:) மீன்:)./ டாம்ரை:)-ன்னா என்ன? பூஸ்-னா என்ன? எனக்கு ரெண்டும் ஒண்ணு தான் அதிரா! ;))))))

    /குட்டி சிக்கம்:), டாக்டர் சிவா வாழ்க:)./ ஓஎம்ஜி! சிங்கத்தை சிக்கல்ல மாட்டி விட்டிருவீங்க போல இருக்கே! ;)))

    நித்திரை துறந்து அகால நேரத்தில ப்ளாக் ப்ளாக்கா தாவிக் குதிச்சு கமென்டுப் போடும் அதிரா வாள்;)க! :)) றீச்சர் ப்ளாகில நீங்க போட்ட கமென்ட் மறையும் முன் நான் பார்த்துட்டனே! ;)))))

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி அதிரா!
    ~~
    ப்ரியா, உங்க புல்கா-வுக்கு முன்னால என்னுது புஸ்ஸுன்னு(!) போயிருச்சே! சீக்கிரமா ப்ளாகில போஸ்ட் பண்ணுங்க! :))
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    வித்யா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    /எந்த ஊருக்கு போனாலும் எந்த சாப்பாட்ட சாப்பிட்டாலும்ம் கையால சாப்பிடுற சுகம் வருமா???/ நமக்கு அது தெரியுது! ஆனா தென்னிந்தியர்களைத் தவிர யாரும் ஃபோர்க்-ஸ்பூன் இல்லாமச் சாப்பிட மாட்டேன்றாங்களே கிரி? ;)

    /சமைச்சு வெச்சிட்டேன் எல்லாம் எடுங்க ஓட்டம் :)) அப்படீங்குற மாதிரியே இருக்கே ???/ எல்லாரும் கிழக்கே போனா..நீங்க மட்டும் மேற்கே போவீங்களோ?! மாத்தி யோசி-கிரிஜா என்ற அடைமொழி குடுத்துரலாமா உங்களுக்கு?! ;)))

    /இது என்ன சண்டே லஞ்சுக்கு செஞ்சது போல இருக்கு? / இல்லைங்க..இது ஒரு நாள் டின்னருக்கு செய்தேன்.

    /இல்லேன்னா எப்பவும் ரைஸ் அண்ட் டிபன் பண்ணுவீங்களா/ அது...சப்பாத்தின்னா கூடவே கொஞ்சம் சாதமும் வைக்கிறது பழகிப்போச்சு. ;))

    /மகி தப்பா நெனைச்சுக்காதீங்க திரும்பவும் வந்து மீதி கமெண்ட் போடுறேன் ஓகே /ஓகே! டைம் கிடைக்கும்போது திரும்ப வாங்க..இதில தப்பா நினைக்க எதுவுமே இல்லைங்க! :)
    மிக்க நன்றி!
    ~~
    விஜிபார்த்தி, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!
    ~~
    விஜிக்கா,வெகுநாள் கழிச்சு உங்க கருத்துக்கள் பார்த்து சந்தோஷம்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~

    ReplyDelete
  32. mahi, Un venkaya thamarai kalaika mane varalai. Athanla nan roti mattum sapitukiran seriya?
    viji

    ReplyDelete
  33. என்னே உங்கள் பூ பக்தி ?
    உபயோகமான பதிவுகள் .
    உங்களை அறிமுகப்படுத்திய இளமதிக்கு
    என் மனமார்ந்த நன்றிகள் ! உங்கள் தளத்தில்
    உறுப்பினராக இணைந்ததற்கு நான் மிகவும்
    சந்தோஷப் படுகிறேன்.அகர்அகர் நான் கேக் போல டயமண்ட் ஷேப்பில் தான் வெட்டுவேன்.
    இந்த டபிள் டக்கர் எப்படி செய்தீர்கள் ?
    மிக அழகாக உள்ளது.

    ReplyDelete
  34. @ஸ்ரவாணி, உங்க கருத்தைப் பார்த்து மிக மகிழ்ச்சியாக உள்ளது. நன்றிங்க! :)
    //இந்த டபிள் டக்கர் எப்படி செய்தீர்கள் ?// பெரிய வேலையெல்லாம் இல்லைங்க, அகர்-அகர் சேர்த்து கரைந்த பின்னர் வடிகட்டி, இரண்டாகப் பிரித்து ஒரு பகுதிக்கு மட்டும் நீல நிறம் சேர்த்தேன். அச்சுக்களில் முதல் நிறத்தை(வெள்ளை) பாதி அளவுக்கு ஊற்றி சிறிது நேரம்(5 டு 10 நிமிடங்கள்) ஃப்ரிட்ஜில் வைத்தேன். நீலநிறம் அறைவெப்பநிலையிலேயே இருந்தது. பிறகு ஃபிரிட்ஜில் வைத்த அகர்-அகரை எடுத்து விரல்களால் தொட்டுப்பாருங்க, கையில் ஒட்டாத நிலைக்கு அது வரவேண்டும். அப்போது நீலநிறத்தை அச்சுக்களில் நிரப்பி மீண்டும் ஃப்ரிட்ஜில் வைங்க. குளிர்ந்த பிறகு எடுத்து பரிமாற வேண்டியதுதான். :)
    படிப்படியான படங்களுடன் ரெசிப்பியை (ஆங்கிலத்தில்) பார்க்க இங்கே பாருங்க.
    http://mahiarunskitchen.blogspot.com/2012/07/agar-agar-milk-pudding-cardamom.html
    நன்றி!
    ~~
    @விஜிம்மா, மிக்க நன்றி!

    ReplyDelete
  35. thanks for the immediate reply dear !

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails