Wednesday, February 8, 2012

தவா புலாவ்/ Tawa Pulao

தேவையான பொருட்கள்
உதிரியாக வடித்த சாதம் -11/2கப்
நறுக்கிய காய்கறிகள் -1கப்
(1 கேரட், 5 பீன்ஸ், காலிஃப்ளவர், பட்டாணி, கலர் குடைமிளகாய்)
தக்காளி -1
மஞ்சள்தூள்-1/4கப்
மிளகாய்த்தூள்-1டீஸ்பூன்
பாவ்பாஜி மசாலா- 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு -1டேபிள்ஸ்பூன்
கொத்துமல்லி இலை கொஞ்சம்
சீரகம்-1டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு

செய்முறை
காய்களை கழுவி நடுத்தர துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

தக்காளியைப் பொடியாக நறுக்கவும்.

கேரட்-பீன்ஸ்-பட்டாணியை சிறிது தண்ணீர் தெளித்து மைக்ரோவேவில் 2 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்துவைக்கவும்.

கடாயில் எண்ணெய் காயவைத்து காலிஃப்ளவரை லேசாக வறுத்து, வேக வைத்த காய்களையும் சேர்த்து 2 நிமிடம் வதக்கி எடுத்துவைக்கவும். (குடைமிளகாயை வதக்கத் தேவையில்லை)

அதே கடாயில் இன்னும் சிறிது எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் தேவையான உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,பாவ் பாஜி மசாலா சேர்த்து காய்களையும் சேர்க்கவும். 2-3 டேபிள்ஸ்பூன் தண்ணீர் விட்டு வதக்கவும். தீயை ஹை ஃப்ளேமில் வைத்து செய்யவும். காய்கள் முழுவதும் வேகாமல் கொஞ்சம் crunchy-ஆக இருந்தால் நல்லா இருக்கும்.

சில நிமிடங்கள் கழித்து சாதம் சேர்த்து கிளறி..
சாதம் காய்கறி கலவையுடன் கலந்து சூடானவுடன், கொத்துமல்லி இலை தூவி அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சை சாறு பிழிந்து விடவும்.
சுவையான தவா புலாவ் தயார். தயிர் - வெள்ளரி பச்சடியுடன் சாப்பிட அருமையாய் இருக்கும். மீதமான சாதத்தை காலி செய்ய இது ஒரு இன்ட்ரஸ்டிங் ரெசிப்பி! :) அதுக்காக பழைய சாதத்திலயேதான் செய்யோணும்னு இல்லீங்க..நீங்க புதுசா சாதம் செய்தும் செய்யலாம். பாஸ்மதி அரிசியில் செய்தால் படத்தில் இன்னும்அழகா(!) வந்திருக்கும். இது (எங்க ரெகுலர்) புழுங்கல் அரிசி சாதத்தில் செய்தது. ;)
~~~
தவா புலாவ் மும்பையிலே மிகவும் பிரபலமான உணவுவகை..சாலையோரக் கடைகளில் தவா புலாவ் சூடாக செய்து தருவாங்களாம்..இந்த முறை ஊருக்கு போயிட்டு வரும்போது மும்பை வழியாக வந்தோம், அப்பொழுது சில(பல) மணி நேரம் ட்ரான்ஸிட் டைம் இருந்தது. விமான நிலைய பணியாளர்களுக்கான கேன்டீன் என்று நினைக்கிறேன், எங்க ஏர்லைன் கேட்டைத் தேடியதில் அந்த கேன்டீனைக் கண்டுபிடித்து மதிய உணவு முடித்துவிட்டு மூட்டை முடிச்சுக்களுடன் வெயிட்டிங் ரூமில் உட்கார்ந்திருந்தோம்.

இரவு உணவுக்கு மறுபடியும் பெட்டிகளை எடுத்துக்கொண்டு போகமுடியாது..ஓரொருவராகத்தான் போய் சாப்பிட்டுவரவேண்டும் என்று நினைத்து மண்டை காய்ந்துகொண்டிருந்தப்ப ஒரு ஆள் ரூமில் தேநீர் விற்றுக்கொண்டு வந்தார். டீ வாங்கிய பொழுது இரவு உணவு வேண்டுமானால் நானே கேன்டீனில் இருந்து வாங்கிவந்து தருகிறேன், என்ன வேண்டும் என்று ஆர்டர் பண்ணுங்க..உணவைக் கொடுத்துவிட்டு பணம் வாங்கிக்கொள்கிறேன் என்றார். ஆஹான்னு ஒரு தவா புலாவ், பனீர் கறி மற்றும் நான் ஆர்டர் செய்தோம், வாங்கிவந்து கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
பனீர் கறி, தவா புலாவ் அழகா பேக் பண்ணி, சுட்ட அப்பளம் தனியே ஒரு கவரில்..இன்னொரு கவரில் வெங்காயத்துண்டுகள், எலுமிச்சைத் துண்டுகள், Naan தனியா ஒரு கவரில்,பேப்பர் ப்ளேட்,ஸ்பூன் தனியே என்று நீட்டாக கொண்டுவந்து தந்தார். சாப்பாட்டை குடுத்த உடனே பணம் தர பர்ஸை எடுக்க, "அவசரமில்லை, சாப்பிட்டு முடிங்க..நான் வந்து வாங்கிக்கறேன்" என்று சொல்லிப்போனவர் பின்னிரவில் வந்து வாங்கிக்கொண்டார். காசும் ரொம்பவெல்லாம் இல்லை..ரீஸனபிளாதான் இருந்தது.

மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம்...ரொம்ப சுத்த்தமாக இருந்தது என்று சொல்ல முடியவில்லை..ஆனா இந்த சர்வீஸ்(!) சூப்பர்! Mumbaikar rocks! :) :)

மும்பை ஸ்பெஷல் தவா புலாவை வீட்டில் செய்து ருசித்ததும் கொஞ்சம் கொசுவர்த்தியும் சுத்தியாச்சு. Hopefully you guys enjoyed as usual! ;))))))))

40 comments:

  1. மகி ஒண்ணு சொல்லுவேன் கோச்சுக்கப்படாது.ஒகேவா....!?

    ReplyDelete
  2. ஐ..புலாவ் எனக்கே எனக்கா?

    ReplyDelete
  3. அதில்லை மேட்டர்...நீங்க செய்த தவா புலாவைவிட மும்பயில் கேண்டீனில் வாங்கி வந்த புலாவ் அழகா ப்நீள நீளமான சாதத்துடன் பர்ர்க்கவே ரொம்ப அருமையாக இருக்கு.மீ த எஸ்கேப்....

    ReplyDelete
  4. தவா புலாவ் சுட்ட அப்பளம், பன்னிர் கறி சம வெட்டு வெட்டியிருக்கிங்க.. ருசியாக இருக்கு மகி

    ReplyDelete
  5. Superb pulav, nicely explained.Thanks for sharing.

    ReplyDelete
  6. /நீங்க செய்த தவா புலாவைவிட மும்பயில் கேண்டீனில் வாங்கி வந்த புலாவ் அழகா ப்நீள நீளமான சாதத்துடன் பர்ர்க்கவே ரொம்ப அருமையாக இருக்கு./ ஆமாம் ஸாதிகாக்கா,நான் பாஸ்மதி அரிசில செய்யலையே,புழுங்கரிசி சாதத்துல செய்திருக்கேன்,அதுமில்லாம,கேன்டீன் புலாவ்ல எவ்வ்வ்வ்வ்வ்வளவு;) எண்ணெய் மினுக்குது பாருங்க! அதான் அப்படி இருக்கு!:))))

    கோவமெல்லாம் இல்லை,நானே இதை பதிவிலயே சொல்லியிருகிறேன்.பாருங்கோ!:)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸாதிகாக்கா!
    ~~
    சிநேகிதி,ஆமாங்க..ஒரு வெட்டு வெட்டினோம்! ;))))) நன்றி!
    ~~
    சிட்சாட்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

    ReplyDelete
  7. Paakave super tempting a irukku, sure have to try! :)

    ReplyDelete
  8. மகி,
    நல்ல யோசனைதான்.நீங்க பாவ்பாஜி மசாலா சாதம் கிண்டிட்டீங்க.நான் புளித்தண்ணீர் தெளித்து அடுத்த நாள் கிண்டிவிடுவேன்.ஒருதடவை இப்படியும் செய்திட‌வேண்டியதுதான்.
    படத்தில் மசாலா சேர்த்திருக்கீங்க.ஆனால் எழுத்தில் வரவில்லையென நினைக்கிறேன்.

    ReplyDelete
  9. தேங்க்ஸ் ராஜி! செய்து பாருங்க. :)
    ~~
    சித்ரா மேடம்,ஆமாங்க..டைப் செய்ய மறந்திருக்கேன்.இப்ப சேர்த்துட்டேன்,சொன்னதுக்கு மிக்க நன்றி..கவனிக்காம விட்டிருந்திருக்கேன்.:)

    புளிசாதம் எல்லாம் செய்ய சோம்பேறித்தனம்தான், இது கொஞ்சம் ஃபேன்ஸியா இருக்கில்ல,வீட்டுக்காரரும் வாயத்திறக்காமச்(!) சாப்புட்டுருவார்,அதான்! ;))
    தேங்ஸ்ங்க!

    ReplyDelete
  10. Hi, first time visitor here.. All recipes looks awesome, but one biggest problem is that I do not understand Tamil (I guess this is Tamil).. However, the stepwise pictures are very informative.

    ReplyDelete
  11. Amarendra,you are right,this is my Tamil blog..I do have another blog in english..if time permits please check it.

    Thanks a bunch for the 1st visit and the lovely comment.

    ReplyDelete
  12. Aha! Mahi, you have passed by my place!!! Yes, Tava Pulao is very famous but delicious ones are available only in selected places. Seems the one you tried in the airport should be a good one which made you prepare it in your kitchen :-) the colourful vegetables peeping out of the pulao is really very attractive. Hm....again you won!.....I am craving & droooooolinggg... Mahi :p

    ReplyDelete
  13. yummy puloa and flavorful rice with pav bhaji masala

    ReplyDelete
  14. ஆஹா இன்னிக்கு மும்பை ஸ்பெஷல் தவா புலாவா தனியேவா சாப்பிட்டீங்க?

    ReplyDelete
  15. மகி, சூப்பரா இருக்கு புலாவ். நானும் பெரும்பாலும் புழுங்கல் அரிசி தான். பாஸ்மதி ஒத்துக் கொள்வதில்லை எனக்கு. தொண்டையில் வலி, ஒரு வித எரிச்சல் உணர்வு ஏற்படும் பாஸ்மதி சாப்பிட்டா. என் வோட்டு புழுங்கல் புலாவுக்கே!!!!!

    ReplyDelete
  16. Loved reading your blog, especially your mosquito coil rewinding, made your tawa briyani even more interesting, I wud love to comment in Tamil, but my written Tamil is very rustic, following U dear, do drop by my space..

    ReplyDelete
  17. தவா புலாவ் பார்க்கவே ரொம்ப அருமையா இருக்கு,வெங்காயம் கூட தேவையில்லை போல..சீக்கிரமே இந்த வாரம் செய்துட்டு சொல்றேன் மகி!!

    ReplyDelete
  18. பாவ் பாஜி மசாலா சேர்த்து புலாவ்.நிச்சயம் டேஸ்ட் வித்தியாசமாக இருக்கும்.தவா புலாவ் சூப்பர்.

    ReplyDelete
  19. புலாவ் சூப்பராக இருக்கு மகி. அனைத்து மரக்கறியும் சேர்த்தால் குழைந்ததுபோலாகிவிடும் என்பதால் வீட்டில் பிடிக்காது, லீக்ஸ், கரட், கோவா, பீஸ், கோர்ன் மட்டும் சேர்த்து, ஒட்டாமல் பிரியாணிபோல செய்தால்தான் வீட்டில் இறங்கும்.

    ReplyDelete
  20. kandipa seivean mahi...

    thanks
    asiya ku forward pannathuku...

    ReplyDelete
  21. தவா புலாவ் ரொம்ப அருமையா இருக்கு. நானும் இதே போல கொஞ்சம் வித்தியாசமா செய்வேன். இந்த புலாவில் ரொம்ப காரம் சேர்க்காம தான் பண்ணுவேன் அதனால வேலையில ஏதாச்சும் பங்க்ஷன் அப்புடின்னா இந்த புலாவ் அண்ட் சிக்கன் குருமா தான் செஞ்சு எடுத்துகிட்டு போவேன். சூப்பர் ஆ சேல்ஸ் ஆயிடும் என்ன சந்தேகமாவே பார்க்குறீங்க ?? நெசமாத்தாங்க :))

    ReplyDelete
  22. //Mumbaikar rocks! :) :)// கண்டிப்பா ராக்ஸ் !! இந்த காலத்துல இப்புடி ஒருத்தங்களா?? ஆச்சர்யமா இருக்கு. என்ன நானெல்லாம் இந்த மாதிரி தவா புலாவ எங்கிருந்து சாப்புடுறது? இங்கிருந்து பிரிட்டிஷ் எயர்வேய்ஸ் சொயிங்குன்னு ட்ரான்சிட் இல்லாம எறக்கி விட்ட்ருவான்களே ? ஒரு தடவ பண்ணி பார்த்திட்டு சொல்லறேன்.

    ReplyDelete
  23. Romba nalla iruku Mahi. Try panni pakren

    ReplyDelete
  24. kamatchi.mahalingam@gmail.comFebruary 11, 2012 at 5:30 AM

    ஆமாம். மைக்ரோவேவ் செய்த காய்கறிகள் போட்டு செய்தால் கலர் மாறாமல் ருசியாகவும், பார்வையாகவும் இருக்கு. இது மும்பை விசேஷமா?எனக்குத் தெறியாது. ஆனால் ஃப்ரைட் ரைஸ் பேரிலே மும்பையில் நான் ஒரு சாதம்பண்ணி
    போட்டோவெல்லாம் வைச்சிருக்கேன்.
    அப்புறம் போட்டால் போகிறது. உன்னுடயதும் ரொம்பவே ருசிக்கிறது

    ReplyDelete
  25. மீ ரிடன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :-))

    ReplyDelete
  26. //உதிரியாக வடித்த சாதம் -11/2கப்//

    இதுல எந்த (ஸைஸ்)கப்புன்னு கண்ணுல காட்டிடுங்க ..இல்லாட்டி பாதி வயத்தை காலி போட்ட பாவம் உங்களைதான் சேரும் ஹா..ஹா.. :-)))))

    ReplyDelete
  27. //மீதமான சாதத்தை காலி செய்ய இது ஒரு இன்ட்ரஸ்டிங் ரெசிப்பி! :)//

    இறைவா....இதை வீட்டு அம்மினிகள் யாரும் பாத்திடக்கூடாது ....!! :-))))

    ReplyDelete
  28. புலாவ் கலர் ஃபுல் , அதே நேரம் போட்டோவும் சூப்பர் :-)

    ReplyDelete
  29. //சித்ராசுந்தர் said...

    மகி,

    படத்தில் மசாலா சேர்த்திருக்கீங்க.ஆனால் எழுத்தில் வரவில்லையென நினைக்கிறேன்.//


    இதுக்குதான் சீகிரமே வரனுங்கிறது ..நான் என்னைய சொன்னேன் ... வடைப்போச்சே....அவ்வ்வ்வ் :-)))

    ReplyDelete
  30. Looks really super... parkavey romba nalla irukku.. thxs for visiting my site & ur lovely comment dear..

    ReplyDelete
  31. மீரா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.உங்க ஊர் வழியாத்தான் வந்தோம். :)
    ~~
    ஜெயஸ்ரீ,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    லஷ்மிம்மா,தனியா இல்லை,நாங்க 2 பேருமாத்தானே சாப்ட்டோம்? ;) நன்றிமா!
    ~~
    வானதி,பாஸ்மதி அரிசி புலாவ்/பிரியாணிக்கு மட்டும் யூஸ் பண்ணுவேன், ரெகுலர் சாதத்துக்கு புழுங்கலரிசிதான். அதுதான் நம்ம குழம்பு-ரசத்துக்கு ஒத்துப்போகுது!நீங்களும் புழுங்கலரிசிதான் வாங்கறீங்களா?
    சேம் ரைஸ்! :) நன்றி வானதி!
    ~~
    ஹேமா,முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. தொடர்ந்து வாங்க.
    ~~
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆர்த்தி!
    ~~
    அனு,நன்றீங்க!
    ~~
    மேனகா,செய்து பாருங்க. நான் வெங்காயம் இல்லாம சமைக்கவே மாட்டேன்,இந்த சாதத்தில் அந்த குறையே தெரியாது! ;)
    நன்றி மேனகா!
    ~~
    ஆசியாக்கா,நன்றி!
    ~~
    அதிரா,இந்த புலாவ் நீங்க சொன்னது போலவே தான் இருக்கும். பாவ்பாஜி மசாலா சேர்வதுதான் கலர் & டேஸ்ட் கொடுக்குது..செய்து பாருங்க.
    நன்றி!
    ~~
    அனானி,அப்ப நீங்க 'அதே'அனானிதானா? ஒண்ணு மட்டும் புரியல, என்னை எதுக்கு மெஸஞ்சரா யூஸ் பண்ணறீங்க? ஙேஙேஙே!!??! ;) :)
    கருத்துக்கு நன்றிங்க!
    ~~

    ReplyDelete
  32. //என்ன சந்தேகமாவே பார்க்குறீங்க ?? நெசமாத்தாங்க :))/ சந்தேகமெல்லாம் இல்லீங்கோ.நம்பிட்டன்!;)))))))

    /இங்கிருந்து பிரிட்டிஷ் எயர்வேய்ஸ் சொயிங்குன்னு ட்ரான்சிட் இல்லாம எறக்கி விட்ட்ருவான்களே ?/ஹும்! நாங்கள்லாம் 30மணி நேரம் பற...அஅஅஅஅ..ந்து போகணுமேன்னு நொந்து நூடில்ஸ்;) ஆகிட்டு இருக்கோம், இவிங்களுக்கு என்ன ஒரு கவலை பாருங்க...கர்ர்ர்ர்ர்ர்ர்!

    அடுத்த பார்ட்டிக்கு செஞ்சு கொண்டுபோங்க கிரிஜா! தேங்க்ஸ்! :)
    ~~
    ஷைலஜா,செஞ்சு பாருங்க,நன்றி!
    ~~
    /இது மும்பை விசேஷமா?எனக்குத் தெறியாது./ஆஹா,காமாட்சிமா நீங்க "மும்பைகார்"னு நினைச்சிட்டு இருக்கேன், தெரியாதுன்னு சொல்லிட்டீங்களே?? :) ஃப்ரைட் ரைஸ் போஸ்ட் பண்ணுங்க.பார்க்கறேன்! ;)
    நன்றிமா!
    ~~
    பச்சைரோசா அண்ணே, "பில்லா ரிடர்ன்ஸ்" ரேஞ்சுக்கு சவுண்டு குடுத்துட்டு வந்திருக்கிங்க,வாங்க,வாங்கஅஅஅஅ! :))))

    /இதுல எந்த (ஸைஸ்)கப்புன்னு கண்ணுல காட்டிடுங்க ../ஹ்ம்ம்...அடுத்த பதிவுக்கு மேட்டர் தேறிடுச்சு.டாங்ஸூ! [மக்களே,இப்பவே சொல்லிட்டேன், அடுத்து மொக்கை தாங்காம ரத்தக்கண்ணீர் வடிச்சீங்கன்னா,அதுக்குப் பொறுப்பு முழுக்க முழுக்க பச்சைரோசா அண்ணே-தான்! அக்காங்....:)))) ]

    /இதை வீட்டு அம்மினிகள் யாரும் பாத்திடக்கூடாது ....!! :-))))/டூ லேட்!!எல்ல்ல்ல்ல்லாரும் பாத்துட்டாங்களாம்.இனி நீங்க ஊருக்குப் போகைல தினமும் தவா புலாவ்தானாம் உங்களுக்கு!

    /இதுக்குதான் சீகிரமே வரனுங்கிறது ..நான் என்னைய சொன்னேன் ... வடைப்போச்சே..../ ஹாஹாஹா! எனக்கு ஒரு அண்டா கேசரி சாப்ட்டமாதிரியே சந்தோஷமா இருக்கு!! :D
    நன்றி ஜெய்அண்ணா!
    ~~

    ReplyDelete
  33. ஸ்ரீகர்'ஸ் கிச்சன்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    மஹேஸ் அக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்களுக்குதான் ப்ரெஷோப்ரெஷ் தக்காளி கிடைக்குதே,செய்துபாருங்க. ;) :)

    ReplyDelete
  34. :)

    எனக்கு வேணாம்
    ஒரே காரமா இருக்கும் போல
    பேபி அதிர்வுக்கு பார்சல்

    ReplyDelete
  35. awwwwwwww where s my comment?????

    ReplyDelete
  36. The first and the last clicks are really tempting me. I'm hoping there will come some new posts from you this weekend, even if it's not necessarily about food. What about flowers? You love beautiful scenery, gardens and flowers. Don't you have any beautiful pictures stored on the computer? :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails