Tuesday, July 17, 2012

உழவர் சந்தை


இந்த முறை உங்களை எல்லாம் ஒரு உழவர் சந்தைக்கு கூட்டிப்போறேன், வாங்க! வெயில் கொஞ்சம் அதிகமாய் இருக்கு, சன்ஸ்கிரீன் லோஷன் பூசி, சன் க்ளாஸஸ் எல்லாம் மறக்காம எடுத்துகிட்டு வந்துருங்க. கடைக்குள்ள போகும்வரை சூரியனிடம் இருந்து எஸ்கேப் ஆகவேணாமா?! :) :)

இங்கே உழவர் சந்தைகள் வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில்/நேரத்தில் நடைபெறும். கடைகளை விட விலைகள் சற்றே அதிகமாய் இருந்தாலும் காய்கறி-பழங்கள்- கீரை வகைகள் எல்லாமே ப்ரெஷ்ஷாக இருக்கும். இடைத்தரகர் இல்லாமல், டாக்ஸ் இல்லாமல் விவசாயிகளுக்கு வருமானமும் கிடைக்கும். :) சித்ரா சுந்தர் அடிக்கடி ஃபார்மர்ஸ் மார்க்கெட் போய்வந்து, படங்களைக் காட்டி டெம்ப்ட் பண்ணி விட்டுட்டே இருக்காங்க! :) கூகுளாண்டவரிடம் விசாரித்தபோது, எங்கூர் மார்க்கெட் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் 1 மணிவரை என்று தகவல் தந்தார். வார இறுதி என்றால் சந்தைக்குப் போக வாய்ப்புக் கிடைக்கும், வெள்ளிக் கிழமை எங்கே போக என்று விட்டாச்சு.

இப்படி இருக்க ஒருநாள் சனிக்கிழமை சப்-வே சென்று ஒரு சாண்ட்விச் வாங்கிச் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தபோது, பக்கத்துக் கடை இந்த "Sprouts Farmers Market"! பொதுவாக உழவர் சந்தை என்றால் திறந்த வெளியில், டென்ட் போட்டு கடைகள் வைத்த சந்தைகள் போலதான் இருக்கும், ஆனால் ஸ்ப்ரௌட்ஸ் அப்படி இருக்காது என்பதால் நான் அதை ஃபார்மர்ஸ் மார்க்கட் ஆகவே கன்ஸிடர் பண்ணவில்லை, போகவேண்டும் என்று நினைத்ததும் இல்லை. அன்று என்ன தோன்றியதோ, உள்ளே நுழைந்துவிட்டோம்.

காய்கறிகள்-பழங்கள் பகுதி பெரிதாக என்னைக் கவரவில்லை, எல்லாம் வழக்கம் போலவேதான் இருந்தது. அசுவாரஸ்யமாய் நடந்து கொண்டிருக்கையில் என்னவரின் உற்சாகக் குரல் என்னை அழைத்தது. என்னன்னு பார்த்தால்...!!

பொருட்கள் எல்லாம் பெரிய பெரிய பேரல்களில் கொட்டி வைத்திருக்கிறார்கள். நமக்குத் தேவையான அளவு கவரில் எடுத்துப் போட்டுக்கலாம். ஆங்காங்கே எடை போட தராசுகளும், ப்ளாஸ்டிக் கவர்களும், அவற்றை சீல் செய்ய காகிதங்களும் இருந்தன. கவரில் பொருட்களைப் எடுத்து, சீல் செய்ததும், அருகிலேயே இருக்கும் பேனாவை எடுத்து அந்தப் பொருளின் code number-ஐ மறக்காம எழுதிக்கணும். அதைப் பார்த்து பில் போட்டு தந்துவிடுகிறார்கள்.

ஓட்ஸில் பலவகைகள், தானியங்களில் பல வகைகள், கார்ன் மீல், மாங்காயில் இனிப்பு-காரம் சேர்த்து ப்ரிஸர்வ் செய்தது, தேங்காய், மெக்ஸிகன் கடலை, அரிசியில் பலவகைகள்...இப்படி பலப்பல பொருட்கள்~~ மசாலாப் பொடிகளும் விதிவிலக்கில்லை..அவற்றை தனியாக ஒரு ஷெல்ஃபில் வைத்திருந்தார்கள்.

வெளியே செடிகளும் விற்பனைக்கு இருந்தன. அதில் என்னைக் கவர்ந்தது குட்டியாய் இருந்த ஒரு பைனாப்பிள் செடி/மரம்?! தக்குணூண்டு இருந்த செடியில் அப்பவே பைனாப்பிள் பிஞ்சு தெரிந்ததுதான் ஹை லைட்டே! :)) [ஒருவேளை நான்தான் ஓவர் ஹைப் குடுக்கிறனோ!! என்னனாலும், பைனாப்பிள் செடியை என் வாழ்க்கையில் முதன் முறையா பார்த்திருக்கேன், இது கூட சொல்லலன்னா எப்பூடி!?! ;) ;)))]

மினி ரோஸ்-கார்ன் மீல்-ஸ்னாக்ஸ் என்று ஷாப்பிங்-கை முடிச்சுட்டு வந்து...கார்ன் மீல் இட்லியும் செய்து சாப்பிட்டாச்சு. யெல்லோ கார்ன் மீல்...மஞ்சள் நிற ரவை போலவே இருநதது. 3:1 என்ற ரேஷியோவில் கார்ன்மீல் : உளுந்து மற்றும் ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து 3-4 மணி நேரம் ஊறவைத்து (உளுந்து +வெந்தயத்தை மட்டும்) அரைச்சு, கடைசியாய் ஊறவைச்ச கார்ன் மீலையும் போட்டு 2 சுத்து விட்டு எடுத்து..
......
....
ஒரு நிமிஷம் இருங்க, மூச்சு வாங்கிக்கறேன்! :)))))))))

ஆங்...எங்க விட்டேன்??! மாவை அரைச்செடுத்து, புளிக்கவைச்சு, இட்லி சுட்டு சாப்பிடவேண்டியதுதான்! ரவா இட்லி போலவே இருந்தது.

ரெசிப்பி கர்ட்டஸி: கீதா ஆச்சல்

26 comments:

  1. Naan kooda oru thadavai antha idli try panni irukean, Florida ville irukkum pothu every week farmers market thaan povoam. Back to memories...

    ReplyDelete
  2. Its my regular grocery store in texas,Try farina there better than indian rava, They have really wide variety of organic products & produce

    ReplyDelete
  3. மகி அக்கா உங்களுடைய எழுத்து கற்பனைத்திறன் மிக்க சுவாரசியமாக இருக்கிறது . படிக்கும் போது அடுத்து என்ன எழுதி இருக்காங்க என்று சிந்திக்க வைக்கிறது.... நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்..
    கார்ன்மீல் இட்லி பார்க்கும் பொழுதே சாப்பிட தூண்டுகிறது..... அருமை...
    நான் உங்களை அக்கா என்று கூப்பிடவா ..இல்லை மகி என்று கூப்பிடவா.... சொல்லுங்க ...

    ReplyDelete
  4. Take Big Breath Mahi... That's wonderful post... Thanks for sharing...

    http://recipe-excavator.blogspot.com

    ReplyDelete
  5. அனு, உங்க நினைவுக் குளத்தில் கல்லை எறிந்துவிட்டேனா?! அலை பலமாவே அடிக்குது போலிருக்கு! ;)))) நியூஜெர்ஸிலயும் ஃபார்மர்ஸ் மார்க்கெட் இருக்கான்னு செக் பண்ணிப் பாருங்களேன் அனு!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    அனானி, ஆமாங்க..ஆர்கானிக் காய்கள் நிறைய்ய்ய்ய்ய இருந்தது. கசகசா-கூட கிடைக்கும்னு இன்னொரு ஃப்ரெண்ட் சொன்னாங்க, நீங்க ரவை கிடைக்கும்னு சொல்லிருக்கீங்க..நெக்ஸ்ட் டைம் போகும்போது இதெல்லாம் மறக்காம நினைவில் வைச்சுக்கிறேன். தகவலுக்கு நன்றி! :)
    ~~

    ReplyDelete
  6. சங்கீதா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! ரொம்ப சந்தோஷம், உங்க கருத்தைப் பார்த்து! :)

    ReplyDelete
  7. உங்க பகிர்வின் மூலம் தெரியாமல் இருந்த பல விஷயங்கள் தெரிஞ்சுக்க முடிஞ்சது மஹி நன்றி வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. இட்லி ,சூப்பர்...இதுக்கு என்ன சட்னி செய்தீங்க மகி.

    ReplyDelete
  9. good to read yours... excellent and idli is very nice....

    tell me how to write comments in tamil...i would like to post my comments on tamil for you....
    VIRUNTHU UNNA VAANGA

    ReplyDelete
  10. ஃபார்மர்ஸ் மார்க்கெட் அழைத்துப் போனதற்கு நன்றி.இட்லி ஒரேமாதிறி அழகாகவும், ருசியாகவும் இருக்கு. நல்ல நல்ல குறிப்பு.

    ReplyDelete
  11. Loved reading your farmers' market experience, the corn meal idlis look simply superb..

    ReplyDelete
  12. /நான் உங்களை அக்கா என்று கூப்பிடவா ..இல்லை மகி என்று கூப்பிடவா.... சொல்லுங்க ... / மகி என்றே கூப்பிடுங்க விஜி! :)

    ReplyDelete
  13. லஷ்மிம்மா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா!

    //ராதா ராணி said...இட்லி ,சூப்பர்...இதுக்கு என்ன சட்னி செய்தீங்க மகி.// கீதா ப்ளாக் பார்க்கலியா நீங்க? அவங்க சொல்லியிருக்கும் பூண்டு-தக்காளி சட்னிதான் செய்தேன்ங்க. :)
    ~~
    காமாட்சிம்மா, ஃபார்மர்ஸ் மார்க்கட்டை ரசித்ததுக்கு நன்றிமா! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
    ~~
    ஹேமா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!
    ~~

    ReplyDelete
  14. /tell me how to write comments in tamil.../ விஜி, NHM writer, ekalappai இப்படி தமிழ் சாஃப்ட்வேர் பல இருக்கின்றன. அவற்றில் ஏதாவதொன்றை உங்க கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துக்கோங்க. பிறகு ஈஸியா தமிழில் எழுதலாம். :) அல்லது, ஜிமெயில்-ல இருக்கும் தமிழ் ட்ரான்ஸ்லேட்டர் மூலம் தமிழில் கருத்துகளை டைப் செய்து இங்கே காப்பி பேஸ்ட் செய்யலாம்.ட்ரை பண்ணிப் பாருங்க.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விஜி!
    ~~

    ReplyDelete
  15. இந்தக்கடை இங்கேயும் இருக்கு.கடை திறந்த அன்று போனதுதான்.தானியங்கள் வைத்திருந்த விதம் நன்றாக இருந்தது.வாங்கிய பாக்கெட் காலியாகனுமேனு திரும்பத்திரும்ப,அடிக்கடி சமைச்சு,போரடிக்காமத் தேவையான அளவுக்கு எடுத்துக்கொள்ளலாம். கார்ன்மீல் இட்லி நல்லாருக்கு. என் ப்ளாக்கிற்கு மீண்டும் ஓரறிமுகம்.நன்றி மகி.

    ReplyDelete
  16. romba nall iruku Idli, Iam trying to find a farmers market over here, yet to find one:)

    ReplyDelete
  17. மகி !!! உழவர் சந்தைக்கு போனீங்களா .
    இங்கெல்லாம் எவ்ரி டே சந்தைதான்:))
    (பேபி) காரன்:)) மீல் மீடியம் வெரைட்டி வாங்கி கீதா சொன்னமாதிரியே தோசைமாவுடன் கலந்து சுட்டேன் .கர கர மொரு மொரு பேப்பர் ரோஸ்ட் .
    இந்த இட்லிஸ் ரொம்ப அழகா வந்த்ருய்க்கு .செய்திடறேன்

    ReplyDelete
  18. உழவர் சந்தை சூப்பர். இங்கும் நிறைய இருக்கு ஏனோ போக நினைப்பதில்லை. கனடாவில் bulk ஸ்டோர் என்ற பெயரில் நிறைய இருக்கு. விரும்பிய அளவு எடுத்துக் கொள்ளலாம். நட்ஸ், தானியங்கள் என்று எல்லாமே இருக்கு. விலையும் அதிகம் இல்லை. இட்லி குஷ்பு போல குண்டா இருக்கு.

    ReplyDelete
  19. உழவர் சந்தையா? அழகாகத்தான் இருக்கு.
    எனக்கும் எப்பவுமே சூப்பர்மார்கட்டில் பக் பண்ணியபடி வாங்குவது அலுத்து விட்டது.
    ஆசைக்கு அள்ளிப்போட்டு எங்கட ஊர் மார்கட்போல வாங்கோணும் என ஆஆஆஆஆஆஆசை.

    இங்கும் அடிக்கடி நடக்கும் ஃபாமேர்ஸ் மார்கட் என. போக நினைப்பதுதான், எங்கள் வீட்டுக்கு கிட்ட இருக்கும் சூப்பர்மார்கட் கார் பாக்கிலும் நடந்துது, போக வில்லை. அது ரைமுகு எழும்பி ஓடிச்செல்ல அலுப்பாகிடும்.

    இட்லி, மகியின் கைபட்டால்.... இட்லி பூப்போலத்தானே ஆகும். நீங்க இட்லிக்கடை ஆரம்பியுங்கோ மகி.

    ReplyDelete
  20. Hi Mahi akka you are having wonderful award in my blog please accept it as token of my love...
    YOUR AWARD

    ReplyDelete
  21. thank u for ur kind information about writing in tamil...
    VIRUNTHU UNNA VAANGA

    ReplyDelete
  22. மகி, நான் அடிக்கடி போறது Sproutsதான். எல்லா பொருள்களுமே நல்லா இருக்கும்.

    ReplyDelete
  23. சித்ராக்கா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! நானும் ஒரு முறை தான் போயிட்டு வந்தேன், அடுத்த முறை போகும்போது இன்னும் சில பொருட்கள் வாங்கணும். :) உங்க பதிவுகள் இன்ஸ்பையர் பண்ணினதில் நானும் ஃபார்மர்ஸ் மார்க்கட் போயிட்டு வந்துட்டேனே!
    ~~
    சுமி, கண்டுபுடிச்சீங்களா ஃபார்மர்ஸ் மார்க்கட்டை?! வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    தேங்க்ஸ் நித்து!
    ~~
    /இங்கெல்லாம் எவ்ரி டே சந்தைதான்:))/அடேங்கப்பா...என்சாய் பண்ணுங்க ஏஞ்சல் அக்கா!
    /(பேபி) காரன்:)) மீல் / :))))))) பேபிகாரன்-காரங்களை காணோம், பிஸி போல! நான் தோசையில் கலந்து செய்யலை..என்னவருக்கு ரவா தோசை / ரவா இட்லி அவ்வளவா புடிக்காது! ;)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    வானதி, பசங்களை கூட்டிட்டு போயிட்டு வாங்க..நல்லா என்ஜாய் பண்ணுவாங்க. பாப்கார்ன் சூப்பரா புடிக்கும் அவங்களுக்கு!
    /இட்லி குஷ்பு போல குண்டா இருக்கு./ஹாஹா! :))) thank you! :)))
    ~~
    /ஆசைக்கு அள்ளிப்போட்டு எங்கட ஊர் மார்கட்போல வாங்கோணும் என ஆஆஆஆஆஆஆசை./ என்ன அதிரா இப்படி சொல்லிட்டீங்க? 3 மணி நேரமாவது நடக்காது மார்க்கெட்? போயிட்டு வாங்களேன் ஒரு முறை, பிறகு விட மாட்டீங்க, அடிக்கடி போவீங்க!

    /நீங்க இட்லிக்கடை ஆரம்பியுங்கோ மகி./ :D :D ஆரம்பிச்சிருவோம் அதிரா! முதல் போணி;) உங்களுக்குதான்! எப்ப வாறீங்க?! :))))
    ~~
    விஜி, விருதிற்கு நன்றி! வாழ்த்துக்கள்!
    ~~
    சுகந்திக்கா, எப்படி இருக்கீங்க? இப்படி மொத்தமா abscond ஆனா ஒத்துக்க மாட்டோம்! அப்பப்ப ப்ளாகை அப்டேட் பண்ணுங்க! ;) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~

    ReplyDelete
  24. உழவர் சந்தை தலைப்பு பார்த்த ஒடனே ஒரு படத்தில் விவேக் டிவிடி smuggle பண்ணிட்டு கோட் word உழவர் சந்தை வாழ்க உள்ளூர் சந்தை வாழ்க ஓவர் ன்னு சொல்லுறது ஞாபகம் வந்திடிச்சு ஹீ ஹீ :)) இவ்ளோ நாளும் என் கமெண்ட் எ காணோமுன்னு எதிர்பார்த்து இருந்திட்டு இப்போ இதுக்கு மொறைச்சா எப்படி :))

    ReplyDelete
  25. நான் farmers மார்கெட் போனதில்லே மகி. இங்கே இருக்குற இந்தியன் ஷாப் & சூப்பர் மார்கெட் ஷாப்பிங் முடிக்குறதே அடிச்சுக்கோ புடிச்சுக்கோ ன்னு இருக்கு :)) உங்க மார்கெட் நல்லா இருக்கு. எனக்கும் பைன் ஆப்பிள் மரம் ரொம்ப புடிச்சு இருக்கு. நீங்க வாங்கிட்டு வந்து இருப்பீங்கன்னு பார்த்தா இப்படி ஏமாத்திட்டீங்களே :))

    கார்ன் மீல் இட்லி சூப்பர். வான்ஸ் சொன்னது போல குஷ்பூ இட்லி நீங்க மட்டும்தான் பண்ணுவீங்க. பூசுக்கு அடுத்ததா நானும் கஸ்டமர் ஆ ஜாயின் பண்ணிக்குறேன் நீங்க பயப்புடாம ஆரம்பியுங்கோ கடைய

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails