வழக்கம்போல, டிசைனை பேப்பரில் ட்ரேஸ் பண்ணி, ஃபெல்ட் க்ளாத்தில் ரன்னிங் ஸ்டிச்சில் தைத்து முடித்தாச்சு.
இந்த டிஸைனில் முதலில் என்னைக் கவர்ந்தது அந்தக் குட்டிக் குட்டிப் பூக்கள்தான்..ஒரிஜினல் படத்தைப் பார்க்கையிலேயே அந்தப்பூக்கள்-உதிர்ந்துகிடக்கும் இதழ்கள் இவை எல்லாம் லேஸி-டெய்ஸி தையலில் தைத்தால்..ஆஹா,எவ்வளவு அழகா இருக்கும்?! அந்தக் காட்சி அப்படியே மனசுக்குள் வந்துவிட்டது. :)
ஆனால், துணியில் ட்ரேஸ் பண்ணுகையில் இந்தப் பூக்களைத்தான் எப்படி ட்ரேஸ் பண்ணுவதுன்னு குழப்பம்..கொஞ்சமா மண்டையப் பிச்சுகிட்டு, கடைசியில் ஒவ்வொரு இதழுக்கும் ஒரு ஸ்ட்ரெய்ட் ஸ்டிச்சை தைத்தேன்.அந்த லைனை வைத்து பூக்களை கொண்டுவந்துவிடலாம் என்ற நம்பிக்கையில்! அதனை முடித்து பேப்பரை முழுக்க கிழித்து எடுத்த பின்னர்..
ஒரொரு ஸ்ட்ரெய்ட் ஸ்டிச்சும் இதழ்களின் நடுவில் வருவது போல லேஸி-டெய்ஸி தையலில் பூக்கள் உருவானது.மிகவும் ஈஸியான இந்தத் தையல், பூவுக்கும் அழகாகப் பொருந்தியது. பூக்களின் நடுவில் ஃப்ரென்ச் நாட்,பறவைகளின் உடலுக்கு சங்கிலித்தையல்..இறகு மற்றும் வால்பகுதிகளில் ஸ்ப்ளிட் ஸ்டிச் என்று தைத்த நிலையில்..
ஒரு பறவைக்கு பச்சை உடல்,மஞ்சள் இறகுகள், இன்னொன்றுக்கு மஞ்சள் உடல்,பச்சை சிறகுகள் இப்படி கான்ட்ராஸ்ட்டாக கலர்களை செலக்ட் பண்ணியிருந்தேன். பச்சைப்பறவையின் வால்ப்பகுதியில் மஞ்சள் நிறத்தில் ஸாடின் ஸ்டிச்..முதலில் டைரக்ஷனுக்கு சிலதையல்கள் தைத்துக்கொண்டு முழுப்பகுதியையும் தைத்தால் சுலபமாக இருக்கும். மரக்கிளைக்கு மரக்கலரில் ஸ்டெம் ஸ்டிச்சிலேயே கிளை முழுக்க ஃபில் பண்ணினேன்.
நம்ம போட்டோகிராபி தெறம உங்க எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்,அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க! ;) (நிழல் விழுகாம எடுக்க ட்ரை பண்ணினேன்,தையல்கள் தெளிவாத்தெரியாம போயிட்டது,அதனால் இதுவே பரவாயில்லைன்னு விட்டுட்டேன்.)
பறவைகள் இரண்டுக்கும் கால் மற்றும் அலகுப்பகுதியையும் ஸாடின் ஸ்டிச்சிலே தைத்து முடித்து, ஃப்ரென்ச் நாட்டில் கண்ணை திறந்துவைச்சிட்டேன். :)
ஒரிஜினல் படம் இதோ..
நன்றி!!
வாவ் கொள்ளை அழகு
ReplyDeleteநல்லா வந்திருக்கு மகி.. நிறங்களும் எடுப்பாக இருக்கு.. குருவியோட உடல் மட்டும் காலியாக இருப்பது போல இருக்கு.. அதுல இன்னும் கொஞ்சம் நிரப்பியிருந்தா இன்னும் பளிச்சுன்னு இருக்குமோ?
ReplyDeleteவெரி நைஸ் மகி. :)
ReplyDeleteஎவ்வளோ நேரம் ஆச்சு இத முடிக்க?!( எல்லாம் ஒரு ஜெனரல் நாலேட்ஜுக்காகத் தான்.. ஹி ஹி.. )
அழகான சிட்டுக்கள் அற்புதமாக உள்ளது மகி
ReplyDeletewow very nice n perfect mahi
ReplyDeleteSuperb Mahi! Keep rocking...
ReplyDeleteமகி மிக்க அழகு.ரொம்ப பொறுமையாக அருமையான வேலைப்பாடு..
ReplyDeleteசொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல மஹி, சுப்பர் என்கிறதைத் தவிர. எனக்கு அனுப்பிருறீங்களா! பத்திரமா ஃப்ரேம் போட்டு வச்சுப்பேன்.
ReplyDeleteஆஹா ரெண்டு குருவிங்க. ஒன்னு நீங்க இன்னும் ஒன்னு அருண் சார் தானே ? ரொம்ப பொறுமை மகி உங்களுக்கு. உங்களோடது பார்க்கும் போது எல்லாம் நானும் ஒன்னு ட்ரை பண்ணனும்னு நினைச்சு கிட்டே இருக்கேன்.அருமையா இருக்கு.இதுக்கு எப்போ பிரேம் போட போறீங்க ?
ReplyDeleteseyyum avalai thoondi iruku
ReplyDeletethanks
அழகா அற்புதமாக இருக்கு மகி!
ReplyDeleteரொம்ப்ப்ப்ப அழகா இருக்கு மகி,நல்லாவும் வரைந்திருக்கீங்க.இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteமஞ்சள்குருவி மஹியா? ;)
ReplyDeleteWow!!!!!!!!!!!!!!
ReplyDeleteSuper dear.
The stitches are very neat.
Just like your write up the selection of motiff is also so poetic.
I am imaging you and your husband as the sittukurives.
O.K.
God bless you dear.
viji
கலக்குறிங்க மகி...ரொம்ப நல்லா இருக்கு..
ReplyDeleteமகி, நல்லா இருக்கு. எனக்கு சங்கிலித் தையல் மிகவும் பிடிக்கும். பறவையின் உடம்பில் பொருத்தமா இருக்கு. நானும் வண்ணத்துப்பூச்சி சங்கிலி தையல் மட்டும் தைச்சேன். மிகவும் அழகா வந்திருக்கு. பூக்கள், பறவைகள் எல்லாமே கொள்ளை அழகு.
ReplyDeletevery cute, Mahi. Good job!
ReplyDeleteசௌம்யா,நன்றி!
ReplyDeleteசந்தனா,குருவியின் உடல் பகுதி ஒரு மாதிரி ஷேப்ல இருக்கு..அதுக்குள்ள என்ன தையல் போடுவதுன்னு புரியல.அதுவுமில்லாம அப்படி தைச்சா,அந்த இறகுகளின் அழகு எடுபடாமல் போயிடும்னு தோணுச்சு,அதனால்தான் இப்படி!! :)
பாலாஜி,நல்லா கேட்டீங்களே ஒரு கேள்வி!அதுவும் எங்கிட்ட!!?! ஒரு போஸ்ட்ட போட்டு சாவகாசமா ஒரு வாரங்கழிச்சுத்தான் மறுபடி வந்திருக்கேன்..இதுலயே தெரியுதுல்ல நான் எவ்வளவு ஒரு சோம்பேறின்னு? :)
ஆக்ச்சுவலி,இந்த டிஸைனில் தையல்கள் எல்லாமே எளிமையானது.ஒழுங்கா உட்கார்ந்து தைச்சா,7-8 மணி நேரத்தில் முடிஞ்சுரும். ஆனா நான் எந்தப்பூவுக்கு என்ன கலர்னு ரெண்டுமூணு நாள் யோசிப்பேன்.அப்போ முழுசா தைச்சு முடிக்க??! நீங்களே முடிவு பண்ணிக்குங்கோ! :) :)
நன்றி பாலாஜி!
ஸாதிகா அக்கா,நன்றி!
ReplyDeleteசினேகிதி,நன்றி!
குறிஞ்சி,நன்றி!
ஆசியா அக்கா,நன்றி!
இமா,நன்றி! அட்ரஸ் குடுங்,அனுப்ப முயற்சிக்கிறேன்.;)
ப்ரியா,என்னமா கண்டுபுடிச்சிட்டீங்க? சூப்பர்ப்பா! :))))) இதுக்கு இன்னும் ப்ரேம் வாங்கல.முடித்ததும் சொல்லறேன்.
நன்றி ப்ரியா!
புதுகைத் தென்றல்,செய்துபாருங்க. மிக்க நன்றி!
ப்ரியா,தேங்க்ஸ் ப்ரியா!
மேனகா,தேங்க்ஸ் மேனகா!/நல்லாவும் வரைந்திருக்கீங்க/ ஒரிஜினல் டிஸைனை நான் ட்ரேஸ் பண்ணியதை சொல்றீங்களா? ;)தேங்க்ஸ்!
இமா,ஸ்ட்ரிக்ட்லி நோ கமென்ட்ஸ்! ;)
விஜிமா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
கீதா,நன்றி!
விருதுக்கு நன்றி மேனகா!
வானதி,ஆமாம் வானதி,பறவை உடலுக்கு இந்தத்தையல் அழகா இருக்கு.உள்ளேதான் என்ன செய்வதுன்னு தெரியாம ப்ளாங்க்-ஆ விட்டுட்டேன்!:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
மஹேஸ்,நன்றீங்க!
lovely stitches...good combination akka..keep it up..
ReplyDeleteஎல்லாரும் சொல்லிட்டாங்க நன் வேற என்ன சொல்ல :) ரொம்ப நல்ல இருக்கு மகிமா
ReplyDeletehey romba romba nalla irukku onga embroideryum
ReplyDeleteanandhirajan