ஊரில் கடைகளில் விற்கப்படும் ரஸகுல்லா நல்ல இனிப்பாக, கலர் கலராக விதவிதமான வடிவங்களில் soft,spongy,sweet-ஆக இருக்கும். நான் சிலபல முறைகள் ரஸமலாய் செய்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் சர்க்கரைத்தண்ணீரை குக்கரில் கொதிக்கவிட்டு பனீர் உருண்டைகளை அதில் சேர்த்து ஒரு விசில் வைத்து எடுத்து ரஸகுல்லா தயார் செய்துகொண்டு, அதை ரஸமலாயாக செய்துவிடுவதே வழக்கம். இந்த முறையில் செய்கையில் சர்க்கரைத் தண்ணீரில் இனிப்புக் குறைவாக இருப்பதால் அதை ரஸகுல்லா என்று சொல்லவே எனக்கு மனது வராது! ;) அதுவும் இல்லாமல் குக்கரில் வைத்த சர்க்கரைத் தண்ணீர் எதற்கும் பயனில்லாமல் ஒரு அசட்டுத் தித்திப்போடு வெட்டியாக கீழே கொட்டுவது போல ஒரு ஃபீலிங்-ஆக இருக்கும்.
அதனால் இந்த முறை கொஞ்சம் வேறுமாதிரியாக ரெசிப்பியை இணையத்தில் தேடிக் கண்டுபிடித்தேன், ஒரு வழியாக நான் எதிர்பார்த்த மாதிரியான "ரஸகுல்லா" கிடைச்சுருச்சு! இனி அடுத்தமுறை கலரெல்லாம் போட்டு, விதவிதமான ஷேப்லயும் செய்துரலாம் என்ற கான்ஃபிடன்ஸ் வந்துருச்சுங்க! ;)
தேவையான பொருட்கள்
பால்- 2 1/2 கப் ( ~~ 3/4லிட்டர்)
எலுமிச்சம் பழம்-1
மைதா மாவு-1டீஸ்பூன்
சர்க்கரை -1கப்
தண்ணீர்-3/4கப்
ரோஸ் எஸ்ஸன்ஸ் -சில துளிகள்
செய்முறை
எலுமிச்சையை சாறு பிழிந்து வைக்கவும். [பழம் பெரியதாக இருந்தால் ஒரு மூடியே போதுமானது]
1.வாயகன்ற பாத்திரத்தில் பாலைக் காய்ச்சவும்.
2. பால் நன்றாகப் பொங்கிவந்ததும் அடுப்பைக் குறைத்து எலுமிச்சை சாறை ஊற்றி கலக்கவும்.
3.பால் திரிந்ததும் எடுத்து ஒரு வெள்ளைத் துணியில் ஊற்றி வடிகட்டவும். [வடித்த நீரை கீழே கொட்டாம பத்திரமா எடுத்து வைச்சுக்குங்க. சப்பாத்திக்கு மாவு பிசைகையில் இந்த whey water ஊற்றி பிசைந்தால் சப்பாத்தி ஸாஃப்ட் & டேஸ்ட்டியாக வரும்]
4.வடிகட்டிய பனீரை குளிர்ந்த நீரில் 2-3 முறைகள் அலசிவிட்டு தண்ணீரை சுத்தமாகப் பிழியவும்.
5. வெள்ளைத் துணியில் இருக்கும் பனீரை சிறு மூட்டையாக கட்டி ஒரு மணி நேரம் வைக்கவும். அதிகப்படியான தண்ணீர் இருந்தால் வடியும்படி இருக்கட்டும்.
6.தண்ணீர் சுத்தமாக வடிந்ததும் பனீரை எடுத்து ஒரு டீஸ்பூன் மைதா சேர்த்து சப்பாத்தி மாவு போல நன்றாகப் பிசையவும்.
7.பிசைந்த மாவை விருப்பமான வடிவில் உருட்டி வைக்கவும். (உருண்டைகள் விரிசல் விழாமல் ஸ்மூத்தாக இருக்கவேண்டும்)
8.குக்கரில் 4கப் தண்ணீரை கொதிக்கவிட்டு (சர்க்கரை சேர்க்கத் தேவையில்லை, வெறும் தண்ணீரே போதுமானது) பனீர் உருண்டைகளைப் போட்டு ஒரு விசில் விடவும்.
9.குக்கரில் ப்ரெஷ்ஷர் அடங்கியதும் திறந்து சிறிது நேரம் ஆறவைக்கவும். பனீர் உருண்டைகள் வெந்து இருமடங்காக உப்பியிருக்கும்.
10.ஆறிய உருண்டைகளை எடுத்து அதிகப்படி தண்ணீரை பிழிந்துவிட்டு வைக்கவும்.
11.ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரை + 3/4கப் தண்ணீர் ஊற்றி கரையவிடவும்.
12.சர்க்கரைப் பாகு கொதிக்க ஆரம்பித்ததும் சரியாக 6 நிமிடங்களில் பாகு பிசுபிசுவென்று கையில் ஒட்டும் பதம் வந்துவிடும். அப்பொழுது தீயை சுத்தமாகக் குறைத்துவிட்டு ரோஸ் வாட்டர் சேர்க்கவும்.
13.தண்ணீரில்லாமல் எடுத்து வைத்த பனீர் உருண்டைகளை பாகில் சேர்த்து தீயை மிதமாக வைக்கவும்.
14.ரஸகுல்லா பாகை உறிஞ்சி ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
15.அடுப்பிலிருந்து இறக்கிய ரஸகுல்லாவை ஆறவிட்டு ருசிக்க வேண்டியதுதான்!
ரஸகுல்லா அறை வெப்பநிலையிலேயே 3-4 நாட்கள் நன்றாக இருக்கும். விரும்பினால் ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென்றும் சாப்பிடலாம்.
Recipe Inspiration from HERE
Rasagullas from scratch, has come out perfectly..
ReplyDeleteVery nicely turned out mahi
ReplyDeleteஆஹா..மகி என்ன வடிவா ரசகுலா செய்து இருக்காங்க.பார்க்கவே சாப்பிடத்தூண்டுகிறது.
ReplyDeleteone plate parcel...............
ReplyDeleteஆஹா பார்த்தாலே பரவசம் தரும் பதார்த்தம்!
ReplyDeleteம்.. இத்தனை பீஸ் வருதே! நான் மட்டும்தான் சாப்பிடணும். ஃப்ரிஜ்ல எத்தனை நாள் இருக்கும்? சொன்னீங்க என்றால் நாளை செய்யலாமா இல்லையா என்று யோசிப்பேன்.
ReplyDeleteYour rasgullas look perfect, Mahi! Well done. I have planned my next post to be on gulab jamun and was kinda playing with the idea of maybe making rasgullas too but the thing is I have never tasted either of these and I think rasgullas are more difficult to make than gulab jamuns so I wanted to start slowly and be safe. :)
ReplyDeleteI need to ask you two questions though. Do you need a pressure cooker to make rasgullas? I don't have one. Also, do the rasgullas smell sour or so? I once read a comment about that and hopefully you can put my mind on rest on this. :)
இந்த way water//
ReplyDeleteஇதை ப்ரிட்ஜில் வைத்து மீண்டும் அடுத்த முறை பனீர் செய்யும்போது லைமுக்கு பதிலா இந்த வே தண்ணீரை பயன்படுத்துவாங்க எங்க பக்கத்துக்கு வீட்டிலுள்ள பெங்கால் அக்கா .
நீங்க செய்திருக்கும் குல்லாஸ் சூப்பர இருக்கு மகி .
மீண்டும் வருவே
Mahi very nice rasagullas. You are really brave. Will come back when I get home to type in Tamil
ReplyDeleteஇந்த செய்முறை ரொம்ப பிடிச்சிருக்கு...நிச்சயம் செய்து பார்ப்பேன்.ரசகுல்லா ரொம்ப அழகா இருக்கு மகி!!
ReplyDeleteசூப்பரா இருக்கு ரசகுல்லா. படங்கள் எல்லாமே அழகு.
ReplyDeleteரசம் + குல்லா - ரசகுல்லாவா?? எப்பூடி என் கண்டு பிடிப்பு?
அடடா எப்பூடி ரஸகுல்லாவை மிஸ் பண்ணினேன்?:)))... சரி இப்போ அதுவா முக்கியம்... எந்தாப்ப்ப்ப்ப் பெரீய குறிப்பு.. படிச்சே களைச்சுட்டேன்... இம்மாந்துண்டு ரஸகுல்லாவுக்கு, இந்தாப்பெரிய செய்முறையா ஆஆஆஅ?:))...
ReplyDeleteஅதெப்பூடி பால் தேசிக்காயோடு சேர்ந்து ஆறியதும் இவ்ளோ மென்மையாக நன்கு ஒட்டி வருதே நம்ப முடியல்லயே... பால் நன்கு காய்ச்சி, அதில் புளி சேர்த்த உடனேயே... திரைந்து குட்டிக் குட்டிக் கட்டிகள் வந்திடுமே... இது எப்பூடி இபூடி... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))
ReplyDeleteரசகுல்லா ஷேப் சூப்பர்.அருமையாக செய்து காட்டிட்டீங்க.நன்றி மகி.எப்பவாவது செய்வேன்.
ReplyDeleteஎனக்கும் இது ரொம்பப் பிடிக்கும் என்றுதான் நினைக்கிறேன்... பெரீஈஈஈஈஈய பார்ஷல் ஒன்று பிளீஸ்ஸ்ஸ்ஸ்.. கூடவே தொட்டுக்க கொஞ்சூண்டு மொயகாத் தூளும் நீங்களே அனுப்பிடுங்க....:))
ReplyDeletevanathy said...
ReplyDeleteசூப்பரா இருக்கு ரசகுல்லா. படங்கள் எல்லாமே அழகு.
ரசம் + குல்லா - ரசகுல்லாவா?? எப்பூடி என் கண்டு பிடிப்பு//
சுப்பரப்பூஊஊ = சூப்பர் +ஆப்பு:)).. எப்பூடி? எப்பூடி என் கண்டு பிடிப்பு? ஹவ் இஸ் இட்?:)))
ஹேமா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
ReplyDelete~~
ஜெயஸ்ரீ,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
ஸாதிகாக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
சிவா,பார்சல் அனுப்பிட்டேன்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
ஜனா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
இமா,இது ரூம் டெம்பரேச்சரிலயே 3-4 நட்கள் இருந்தது,அப்புறம் காலியாகிடுச்சு!;) ஃப்ரிட்ஜில் தாராளமா ஒரு வாரத்துக்கும் மேல் வைக்கலாம். பீஸஸ் பாத்து நிறைய இருக்குன்னு நினைக்காதீங்க, ஒரு ஆளுக்கு 4 பீஸ்னு கணக்கு போட்டுக்குங்க..ஹிஹி! :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
Rathai,thanks for the elaborate comment! :) Regarding your doubts,
1.Pressure cooker is not compulsorily needed,but it reduces the work a lot. You can use a thick bottomed pan, and cook the rasgulla's. Am trying to make them in that way, once I succeed in it,update it here.
2.Rasgulla's won't smell sour dear! Who gave you this wrong info.? :) After straining the whey water,rinse the paneer with cold water two three times. This will take the sourness of the lemon juice. If you fail to rinse the paneer, rasgullas may smell sour.But who will forget that important step?? definitely not you.. :))
Hope I have cleared your doubts! Thanks again!
~~
/இதை ப்ரிட்ஜில் வைத்து மீண்டும் அடுத்த முறை பனீர் செய்யும்போது லைமுக்கு பதிலா இந்த வே தண்ணீரை பயன்படுத்துவாங்க/நானும் அதை ட்ரை பண்ணினேன் ஏஞ்சல் அக்கா,ஆனா இந்த வே வாட்டர் லெமன் ஜூஸ் அளவுக்கு எஃபெக்டிவா இல்லை!
ReplyDelete2 ஸ்பூன் லெமன் ஜூஸ் ஊத்தற அளவுன்னா, இந்த தண்ணீர் அரைகப் ஊத்தணும் போல இருந்தது எனக்கு..நான் ஏதாவது தப்பு பண்ணினேனோ என்னவோ தெரில! ;) எதுக்கு ரிஸ்க்குன்னு அதை சப்பாத்திக்கு யூஸ் பண்ணினேன்,செமையா வந்தது சப்பாத்தி. :))) சப்பாத்திக்காகவே வே-வாட்டர் ரெடி பண்ணலாமான்னு யோசிக்கற அளவுக்குப் போயிட்டேன்னா பாருங்களேன்! ;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
Mahi very nice rasagullas. You are really brave. Will come back when I get home to type in Tamil ////கிரிஜா,என்னதிது? திடுதிப்புன்னு "யு ஆர் ரியலி ப்ரேவ்"ன்னு சொல்லிட்டு தலைமறைவு ஆகிட்டீங்க? தலையும் புரியல,காலும் புரியலை,சீக்கிரம் வந்து Explain With Reference to the Context! :)))
~~
மேனகா,எனக்கும் இந்த செய்முறை ரொம்பப் பிடிச்சிருச்சுங்க,அதான் இவ்வளவு போட்டோ போட்டு எல்லாரையும் பயமுறுத்திருக்கேன்! ;) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேனகா!
~~
/ரசம் + குல்லா - ரசகுல்லாவா?? எப்பூடி என் கண்டு பிடிப்பு? ////சரியான கண்டுபுடிப்பு வானதி! ரசம்=சர்க்கரைப் பாகு, குல்லா= வெந்த பனீர் உருண்டைகள்! எப்படி என் மொழிபெயர்ப்பூ? :)))))))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானதி!
~~
ஆசியா அக்கா,என்னது? எப்பவாவது செய்வீங்களா?? ஏன்...ஏன்?? இப்பவே செய்யுங்க!! ;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆசியாக்கா!
~~
//அடடா எப்பூடி ரஸகுல்லாவை மிஸ் பண்ணினேன்?:)))...//அதுவா?? "timeanddate.com"- ரெஃபர் பண்ணி, நீங்க குறட்டை பண்ணிட்டிருக்க டைமை கரெக்ட்டா கண்டுபுடிச்சு பப்ளிஷ் பண்ணினேன் அதிரா,அதான் மிஸ் பண்ணிட்டீங்க! :)))...
//எந்தாப்ப்ப்ப்ப் பெரீய குறிப்பு.. படிச்சே களைச்சுட்டேன்... இம்மாந்துண்டு ரஸகுல்லாவுக்கு, இந்தாப்பெரிய செய்முறையா ஆஆஆஅ?:))... // சிம்பிள் குறிப்பை, விளக்க்க்க்க்க்கமாத் தருவதா நினைச்சு பெரூரூஊஊஊ....சாத் தந்திட்டனோ?? ஐ ஸ்பாயில்ட் தி இன்ட்ரஸ்ட் ஆஃப் மை ரீடர்ஸ்? சொந்த செலவில் சூனியம் வைச்சுகிட்டேனோ??...அவ்வ்....வ்வ்!
அடுத்தகுறிப்பு சின்னதா போடறேன் அதிரா,இந்த வாட்டி அஜீஸ்:) பண்ணிக்குங்க!
/அதெப்பூடி பால் தேசிக்காயோடு சேர்ந்து ஆறியதும் இவ்ளோ மென்மையாக நன்கு ஒட்டி வருதே நம்ப முடியல்லயே... பால் நன்கு காய்ச்சி, அதில் புளி சேர்த்த உடனேயே... திரைந்து குட்டிக் குட்டிக் கட்டிகள் வந்திடுமே.../ கரெக்ட்டு அதிரா..குட்டிக் குட்டிகட்டிகளை தண்ணீரில்லாமல் வடித்து ஒட்டப் பிழிந்து, துணியோடு ஒரு மணி நேரம் தொங்கவிட்டால் மாவு போல திரித்திரியாய் ஆகும். அதனை ஒரு ஏழெட்டு நிமிஷம் சப்பாத்தி மாவு பிசைவைது போல பிசைந்தா இப்படி ஸ்மூத்தா ஆகிரும்! ட்ரை இட் ஒன்ஸ் அன்ட் ஸீ! :))))
//ரசகுல்லா ஷேப் சூப்பர்.//நன்றி,நன்றி! ஆக்ச்சுவலி, கொஞ்சம் நீளமா சிலிண்டர் ஷேப் செய்ய ட்ரை பண்ணினேன், ஏனோ வொர்க் அவுட் ஆகல,அதனாலதான் இப்படி ரவுண்டாவே செய்துட்டேன் அதிரா!
//பெரீஈஈஈஈஈய பார்ஷல் ஒன்று பிளீஸ்ஸ்ஸ்ஸ்.. கூடவே தொட்டுக்க கொஞ்சூண்டு மொயகாத் தூளும் நீங்களே அனுப்பிடுங்க....:)) // ரஸகுல்லாவை சாப்பிட்டுப் பார்த்தால் அப்புறம் மொயகாத்தூள் எல்லாம் கேக்கமாட்டீங்க,bet?!
/சுப்பரப்பூஊஊ = சூப்பர் +ஆப்பு:)).. எப்பூடி? எப்பூடி என் கண்டு பிடிப்பு? ஹவ் இஸ் இட்?:))) // ஐன்ஸ்டீன் தோத்தார் போங்க! என்னா கண்டுபுடிப்பு,என்னா கண்டுபுடிப்பு?!!
;)))))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா!
~~
மகி அது ஒண்ணும் இல்லே நீங்க ஏன் பிரேவ் னா இவ்ளோ கஷ்டமான சுவீட்ட இவ்ளோ அருமையா செஞ்சு காமிச்சு இருக்கீங்களே அதான். ரெம்ப தைரியம் தான் அப்படீங்கறத லஞ்ச் ப்ரேக் இல் அவசரமா டைப் பண்ணிட்டு போயிட்டேன்
ReplyDelete//அதுவா?? "timeanddate.com"- ரெஃபர் பண்ணி, நீங்க குறட்டை பண்ணிட்டிருக்க டைமை கரெக்ட்டா கண்டுபுடிச்சு பப்ளிஷ் பண்ணினேன் அதிரா,அதான் மிஸ் பண்ணிட்டீங்க! :)))...//
ReplyDeleteஇந்த சதி ரெம்ப நாளா நடக்குதுன்னு தானே நான் ராப்பிசாசு மாதிரி உக்கார்ந்து இருக்கேன். ரெம் .....ப நாள் கழிச்சு என் லப் டாப் என் கைக்கு வந்து இருக்க்கு ஊஊஊஉ :)) .
ஐ ஸ்பாயில்ட் தி இன்ட்ரஸ்ட் ஆஃப் மை ரீடர்ஸ்? சொந்த செலவில் சூனியம் வைச்சுகிட்டேனோ??...அவ்வ்....வ்வ்!//
ReplyDeleteநோ நோ என்னைய மாதிரி விம் பார்ஸ் நீட பெரீஈஈ யா விளக்கம் ஸோ ஷர்ட் கட்டா சொல்லிடாதீங்கோ பூசுக்கு பயந்துகிட்டு. எனக்கெல்லாம் இதை ட்ரை பண்ணி பார்கலாமொன்னு தோணி இருக்கு. (என்னிக்கு பண்ணுவேன்னு தெரியல
//ஐன்ஸ்டீன் தோத்தார் போங்க! என்னா கண்டுபுடிப்பு,என்னா கண்டுபுடிப்பு?!! //)
ReplyDeleteமகி ஆர் யு ஓகே?
அதாவதூ... பூஸ் கண்டுபிடிக்க இன்னும் நிறைய விஷயம் இருக்காம். கிக் கிக் கீ... ;)))
ReplyDeleteமகி,
ReplyDeleteரஸகுல்லாவின் படங்களைப் பார்த்ததுமே செய்ய வேண்டும்போல் உள்ளது.ஒரு சந்தேகம்_வீட்டில் தயாரித்த பனீரில்தான் செய்ய வேண்டுமா?
/வீட்டில் தயாரித்த பனீரில்தான் செய்ய வேண்டுமா?/ ஆமாங்க,ஃப்ரெஷ் பனீரில் செய்யவேண்டும்.கடைகளில் ஃப்ரோஸன்தானே கிடைக்கும்? பனீர் தயாரிப்பது சில நிமிட வேலைதான். செய்து பாருங்க சித்ராக்கா!
ReplyDelete//அவசரமா டைப் பண்ணிட்டு போயிட்டேன் //அது தெரிஞ்சுது,அதான் விளக்கம் கேட்டேன்! நன்றிங்க கிரிஜா! :)
ReplyDelete//ரெம் .....ப நாள் கழிச்சு என் லப் டாப் என் கைக்கு வந்து இருக்க்கு ஊஊஊஉ :)) .//என்ஸாய்..என்ஸாய்!;)
//எனக்கெல்லாம் இதை ட்ரை பண்ணி பார்கலாமொன்னு தோணி இருக்கு.என்னிக்கு பண்ணுவேன்னு தெரியல //ஆஹா! ஒரு ஆள் இப்படி சொல்றீங்க..ஒரு ஆள் அப்படி சொல்றாங்க..ரெம்ப குழப்பமா இருக்கே! ;)
//மகி ஆர் யு ஓகே? //ஐ யம் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட்டுங்க..உங்களுக்கு என்னாச்சு? றீச்சர் உங்க பின்னாலயே வந்து விளக்கிட்டாங்க,பாத்தீங்களா?! ;) :))))
வருகைக்கும் கருத்துக்கும் கிரிஜா!
~~
றீச்சர்,கலக்கிப் போட்டீங்க,தெளிவான தெளிவுரை,விளக்கமான விளக்கவுரை! :)))
நன்றி!
~~
இமா யாரு! இமால்ல! ;)))
ReplyDeleteமஹி உடனே செஞ்சு பார்கணும் என்ற எண்ணம்
ReplyDeleteதோன்றுகிறது. இனிமையா நினைத்த நேரத்தில் செய்யும்படி குறிப்பும் எளிமையா, அழகா,இனிப்பா இருக்கு.
romba azhaga iruku mahi
ReplyDeleterasmalai seithu kaamiga mahi
unga blog arisi paruppu sadham iruku nu theriyum ana kidaikala link kudukangalean pls naalaiku seiyalam nu paarkurean
naane kandu pudichitean mahi
ReplyDeleteunga english blog la thedunean first kidaikala
athan unga kitta sonnean
இமா,:)))))
ReplyDelete~~~
அனானி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! ரஸமலாய் நிறையவாட்டி செய்ததால் பழகின டிஷ் ஆகிடுச்சு,ரஸகுல்லா புதுசா செய்தேன்,அதனால முதல்ல அதை பப்ளிஷ் பண்ணீட்டேன்.ரஸமலாய் இங்க்லீஷ் ப்ளாக்ல-அடுத்த போஸ்ட்டா வரப்போகுது,கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! :)
அரிசி-பருப்பு சாதம் தமிழ்-லதான் இருக்கு,ஆங்கிலத்தில் குடுக்கலை,சாரி! நீங்களே தேடிக் கண்டுபுடிச்சிட்டீங்க,என்னோட ரெசிப்பிய தேடிக் கண்டுபுடிச்சு சமைக்கவும் ஒரு ஆள் இருக்குன்னு ரொம்ப சந்தோஷமா இருக்குங்க! மிக்க நன்றி!:))
Well I watched an online video on Youtube and one person had supposedly made it wrote that the rasgullas ended up smelling. Maybe, as you said, she didn't rinse it properly. :)
ReplyDeleteஇந்த தடவை ஊர் போகும் போது செய்து அசத்திட வேண்டியதுதான் ..:-)))சரியா ஒர்க்கவுட் ஆனா ரஸகுல்லா சொதப்பினா அதுக்கு பேரு மஹிகுல்லாஸ்ன்னு சொல்லி சமாளிச்சிட வேண்டியதுதான் ஹா..ஹா... :-)))
ReplyDeleteடூ மச் வேலையா இருந்தாலும் படங்கள் சூப்பர் :-)
///என்னோட ரெசிப்பிய தேடிக் கண்டுபுடிச்சு சமைக்கவும் ஒரு ஆள் இருக்குன்னு ரொம்ப சந்தோஷமா இருக்குங்க! மிக்க நன்றி!:)) ///
ReplyDeleteநன்றி நாங்கதான் சொல்லனும் ,..சாதம் குழைந்துட்டா கூட இது மஹிஸ் ஸ்பெஷல்ன்னு சொல்லி தப்பிச்சிடலாம்தானே ஹி..ஹி... :-)))
மகி ரஸகுல்லாவா, நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன் அப்படியே சாப்பிடுவேன்.சூப்பர்......
ReplyDeleteaha! my favourite sweet. very tempting. I tried once but failed as they didn't turn out well. Will try this method and let you know Mahi.
ReplyDelete@ Rathai,try it once &good luck! ;))
ReplyDelete@ஜெய்,வாங்க! பலநாள் கழித்து உங்களை அங்கங்க பார்க்க முடியுது,மகிழ்ச்சி! மஹிகுல்லா நல்லாவே வரும், ஊருக்கு போனதும் கட்டாயம் ட்ரை பண்ணிப் பாருங்க.
/டூ மச் வேலையா இருந்தாலும்/ நோகாம நோம்பி கும்புட முடியாதில்லைங்க? ;)
/படங்கள் சூப்பர் :-) / நன்றிங்க!
/சாதம் குழைந்துட்டா கூட இது மஹிஸ் ஸ்பெஷல்ன்னு சொல்லி தப்பிச்சிடலாம்தானே ஹி..ஹி... :-))) /ஆஹா..இப்புடியும் ஒண்ணு இருக்கோ??!! இந்த வியூவை நான் யோசிக்கவே இல்லையே..அவ்வ்வ்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
@யாஸ்மின், யாருக்கும் குடுக்காம நீங்க மட்டுமே சாப்பிட்டா வயத்து வலி வந்துராதா?? ;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
@மீரா,முடிந்த அளவுக்கு ஸ்டெப் பை ஸ்டெப் படம் எடுத்து சிம்பிளா சொல்ல முயற்சித்திருக்கேன். செய்து பார்த்து சொல்லுங்க.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
So tempting...
ReplyDeleteபண்ணியாச்சு. யமி யமி யமீஈஈ... ;P
ReplyDelete12 பீஸ் வந்துச்சு. மெத்துன்னு இருந்துது. குட்டிக் குட்டித் தப்பு பண்ணிருந்தேன். ஷேப் மட்டும் பர்ஃபெக்ட்டா வரல. அப்பிடியும் யெல்லோ மிர்ச்சில சாப்பிட்டதை விட நல்லா இருந்துது மகி. ரசிச்சு சாப்பிட்டேன். அடுத்த தடவை 200% சரியா பண்ணிருவேன். :)
குறிப்புக்கு மிக்க நன்றி.
190% ;)
ReplyDeletehttp://imaasworld.blogspot.co.nz/2012/06/blog-post_05.html
/190% ;)/ மீதி பத்து சதவீதம் என்ன ஆச்சு?! ;)))))
ReplyDeleteரொம்ப சந்தோஷம் இமா! செய்து பார்த்து படத்துடன் பின்னூட்டம் தருவதில் நீங்கதான் முதலிடம்! :)) மிக்க நன்றி!
உஷா ஸ்ரீகுமார், உங்க கருத்தை கவனிக்காமல் தவறவிட்டிருக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
ReplyDeleteபோக வேண்டிய இடம் போய் என் பங்குக்கு நானும் 2 கர்ர் சொல்லிட்டு வந்துட்டேன் மகி. ;)
ReplyDelete