Wednesday, December 11, 2013

ரசித்த பாடல்கள்..

கோவை வானொலியில் தினமும் காலை 6 மணி முதல் 6.45 வரை "பக்தி இசை" ஒலிபரப்பாகும். இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் பாடல்கள் தலா ஒவ்வொன்று ஒலிபரப்புவார்கள். அப்படி வரும் பாடல்களில் ஒன்றுதான் இது. பின்னணி இசையோ, வேறு எந்த இசைக்கருவிகளோ இல்லாமல், எஸ்.பி.ஷைலஜா அவர்களின் தேன் போன்ற குரலில் இனிமையானதொரு பாடலிது. பாடலைக் கேட்கையில் மனதில் ஒரு அமைதியையும் நிறைவும் தோன்றுமெனக்கு. பலநாட்களாக இணையத்தில் தேடியும் ஒலி வடிவமோ, வரி வடிவமோ அகப்படவில்லை! என் அதிர்ஷ்டம்,  ஊரிலிருந்து மாமா-அத்தை வந்தவர்கள் மனதில் மனப்பாடமாக இருந்த பாடல் வரிகள் கிடைத்தன! :) நான் ரசித்தவற்றை பகிர்வது வழக்கம் என்ற வகையில், நீங்களும் ரசிக்க அந்த வரிகள் இதோ...

அழகெல்லாம் தவழ்கின்ற அற்புதமே வணக்கம்..
அன்னை கன்யாகுமரி கண்மணியே வணக்கம்!

தாமரைத் தாள்களையே ஏழை மனம் நினைக்கும்..
செண்பகப்பூ மணக்கும் அம்பிகையே வணக்கம்!

காலிலிரு கிண்கிணிச் சதங்கைமணி ஒலிக்கும்..
தாளலய பேதமதில் கோலங்கள் பிறக்கும்!

இடைதுவள சிற்றாடை எழில் காட்டும் உன்னை..
இருவிழிகள் இமையாது பருகுவதும் உண்மை!

வளைகுலுங்க வளைந்தசைந்து அலைபுரளும் கரங்கள்..
வரமளிக்க அருகழைக்கும் நவமணிச் சரங்கள்!

கொத்துவட முத்துக்கள் கொஞ்சுகின்ற மார்பு..
கொடுக்கின்ற குளிர்ச்சியல்லால் வேறேது சால்பு?

கற்றைஒளி ரத்தினங்கள் கழுத்தாட ஆடும்..
காதணியைக் கண்கள் என்று கருவண்டு தேடும்!

மாணிக்க மூக்குத்தி மஞ்சள்முகம் மின்ன..
தேனிதழ்கள் விரிந்திருக்கும் செம்பவளம் என்ன?

பால் வழியும் புன்னகைக்கு ஏதுமில்லை ஈடு...
பார்வதி நீ தவம் செய்யும் காரணம்தான் ஏது?

அழகெல்லாம் தவழ்கின்ற அற்புதமே வணக்கம்..
அன்னை கன்யாகுமரி கண்மணியே வணக்கம்!

-----
பாடல் வரிகளில் ஒரு சில வார்த்தைகள் மாறியிருக்க வாய்ப்பிருக்கலாம். சிலவரிகள் காணவில்லையா, அல்லது முழுப் பாடலும் இதுதானா என்ற கேள்வியுமிருக்கிறது. தெரிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும். சொல்வீர்கள் என நம்புகிறேன்! :)
-----
அடுத்து வரும் பாடல் பி.சுசீலா அவர்கள் குரலில் இன்னொரு இனிய பாடல்..

"என் மூச்சில் சுவாசிக்கும் புல்லாங்குழல்"- வந்தபின் அவளுக்காய்த் தேடியபோது சிக்கிய இசைமுத்துக்கள் இவை..என் மனப்பெட்டகத்தில் சேமித்ததுடன் வலைப்பெட்டகத்திலும் சேர்த்துவைக்கிறேன்! :)

அப்பா பாசத்தை அழகாய்ச் சொல்லும் சில பாடல்கள்...
இளையராஜாவின் இனிய இசையில் இன்னொரு இனிமையான தாலாட்டு...

எனக்குப் பிடித்த பாடல்கள் உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன். அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி!  

15 comments:

  1. இனிமையான பாடல்கள்... ரசிப்பிற்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
  2. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_5109.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  3. அழகெல்லாம் தவழும் அற்புதாமான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete
  4. அருமையான பாடல்கள்... மண்ணில் வந்த நிலவே... எனக்கும் பிடித்த பாடல்...

    ReplyDelete
  5. எல்லாமே மிக இனிமையான,எனக்கும் பிடித்த பாடல்கள் மகி. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.Take care.

    ReplyDelete
  6. அருமையான பாடல்..மகி இப்ப பாடல் எல்லாம் கேட்டு ரசிக்க நேரம் இருக்கா?

    ReplyDelete
  7. Good collections Mahi. All are my favorite too. How are you and your princess doing? Take care Mahi.

    ReplyDelete
  8. பாடல்களை ரசித்து, கருத்துக்கள் தந்த அனைவருக்கும் எங்கள் நன்றிகள்! :)

    //மகி இப்ப பாடல் எல்லாம் கேட்டு ரசிக்க நேரம் இருக்கா?// :) குட்டிப்பெண்ணைத் தூங்க வைக்க என்று முன்பே கேட்டு ரசித்து மனதில் பதித்த பாட்டுக்கள் அக்கா! இது ச்சும்மா...ஒரு ரெஃபரன்ஸுக்கு! ;)

    ReplyDelete
  9. குழந்தைகளுக்குத் தாலாட்டுப் பாடித் தூங்கவைப்பது ஒரு பெரும் கலை. தங்களுக்கு அந்த ஆர்வமும் ரசனையும் இருப்பது குறித்து மகிழ்ச்சி. குட்டிப்பெண்ணுக்கு என் ஆசிகளும் நல்வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  10. அருமையான பாடல்கள், சூப்பர்,அசத்துங்க அம்மா.

    ReplyDelete
  11. Mahi - Congratulations! The list reminds my parenthood with my daughter. She is 4 now. So except last song, we used all the songs as lullaby for our little one. Some more are also good - 1. Kanjivaran 2. Varam Thantha Samikku 3. Thene Thenpandi (though boy version) and 4. Vaa vaa en thevadhaiye. Happy motherhood!

    ReplyDelete
  12. கருத்துக்கள் தந்த அனைவருக்கும் நன்றிகள்!
    ~~
    அனானி, வரம் தந்த சாமிக்கு- இந்தப் பதிவில் இணைக்க மறந்து மறுபடி இணைக்க நேரம் கிடைக்காமல் போயிருந்த பாடல்! :)
    கஞ்சிவரன்(சரியா ட்ரான்ஸ்லேட் பண்ணிருக்கேனா? :) ) -என்பது என்ன பாடல் என்று தெரிலையேங்க??!
    தேனே தென்பாண்டி மீனே..- கேட்டிருக்கிறேன், ஆனால் கொஞ்சம் சோகமா இருப்பதால் அதிகம் கேட்கவில்லை!
    வா வா என் தேவதையே-வில் கவிதை நன்றாக இருக்கு, ஆனால் இசை என் மனதில் பதியவில்லை, அதனால் அந்தப் பாட்டும் இந்த லிஸ்டில் சேரலை.
    வருகைக்கும், வாழ்த்துக்கும் பாடல்களைப் பகிர்ந்தமைக்கும் நன்றிங்க!
    உங்கக் குட்டி தேவதை எப்படி இருக்காங்க? அவங்களுக்கு என் வாழ்த்துக்கள்!
    ~~

    ReplyDelete
  13. Thank you Mahi. It was typo. It should be Kanjivaram. And the song is Ponoonjal Thottilile (http://www.youtube.com/watch?v=CcgaMID91oU). Yeah she is really doing great. Thanks for checking!!!!

    ReplyDelete
  14. Dear mahi can you pl share the song azhagellamazthavalk8ndra arputham vanakkam

    ReplyDelete
    Replies
    1. I already did in the post...got to know few more lines from a friend and i am adding it up now. :) Thank you!

      Delete

LinkWithin

Related Posts with Thumbnails