Thursday, November 28, 2013

புதியதோர் உலகம்..

உலகம் சுருங்குதே..உனக்குள் அடங்குதே..! 
நாளென்ன கோளென்ன தெரியவில்லை..
தேதியென்ன கிழமையென்ன கவனமில்லை! 

தொட்டித்தோட்டம் என்னானது? யார் கண்டார்? 
என் நாலுகால்பிள்ளை சாப்பிட்டானா..வாக் போனானா? எவர் கண்டார்? .
வலைப்பூவில் தினசரி வருகையெப்படி? 
தினந்தோறும் உலவும் வலையுலகம் 
வழக்கப்படிதான் சுற்றுகிறதா? நினைக்கவும் நேரமில்லை! 
பால் வாங்கணுமா..கறிகாய் வேணுமா..நீங்களே பாருங்க.

இரவெது பகலெது புரியவில்லை..
நீ உறங்கும் நேரமெல்லாம் பகலானாலும், 
நீ விழித்திருக்கும் இரவுமெனக்குப் பகலே! 

ஆகமொத்தம், என் உலகம் சுருங்கி, 
உன் சின்ன உருவத்துள் அடங்கிவிட்டதடி! 
முகையான நீ மெல்ல மெல்ல மொட்டாகி, 
மலருகையில் நம்முலகும் மலருமடி! 
அப்போது உன் விரல் பற்றியபடி வலையில் 
உலா வருவோம் பழையபடி! 
இனி வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நாங்கள் நன்றி கூற ஒரு மிகப்பெரிய பரிசு கிடைத்து இரண்டு வாரமாகிறது! சின்னப் பெண்ணின் சின்னச் சின்னச் சிரிப்புகளிலும், செல்ல அழுகையிலும், ஏன்  ஒவ்வொரு அசைவிலும் என் இதயம் கசிந்து நன்றி நவில்கிறேன் ஆண்டவனுக்கு!
ஹேப்பி தேங்க்ஸ்கிவிங் எவ்ரிபடி! 
முன்போல என் பதிவுக்கு வரும் கருத்துக்களுக்கு நன்றி கூறவோ, மற்ற வலைப்பூக்களுக்கு வந்து கருத்துச் சொல்லவோ நேரமில்லை, இயலவில்லை! ஆனால் நட்பூக்களின் வலைப்பூக்களை கையிலிருக்கும் தொலைபேசி மூலம் பார்த்துக்கொண்டும் படித்துக்கொண்டும்தானிருக்கிறேன். மகியின் கருத்துக்களைக் காணோம் என யாரும் மனம் வருந்த வேண்டாம்!(கொஞ்சம் ஓஓஓஒவரா இருக்கோ? ;) அடக்கி வாசிக்கிறேன் இனி! ;) :))
எங்களை வாழ்த்திய அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய இனிய நன்றிகள்!

23 comments:

 1. Mahi, enjoy every moment dear, leave this net alone, this will be there always, but those cherished moments, have a happy Thanksgiving Day..

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் தோழி.
  தாயன்பு பொங்கி வழியட்டும்.
  பூமுகத்தில் புதியதோர் உலகம் தெரியட்டும் .

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் மகி!

  கொஞ்சிச் சிரிக்க வந்த தேவதை உன்
  கோகிலம் நானே என்றாளோ?..
  பிஞ்சு விரலில் அடக்கி உன்றன்
  பேச்சினை வென்றே நின்றாளோ?..

  செல்லத் தேவதையும் அவள் அப்பா அம்மாவும் சகல
  சௌபாக்கியங்களுடன் நலமே வாழ்ந்திட வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
 4. இனிமையான தருணங்களை முழுமையாக அனுபவித்து மகிழ்ந்திடுங்கள்...

  ReplyDelete
 5. Hi Mahi, vazhththukkal dear.sinkara thevathayin varukayal mahi maddumalla nanum makilkiren.enjoy the happy motherhood.God may bless you all.

  ReplyDelete
 6. என்ன பெயர் வைத்துள்ளீர்கள் குட்டி மகிக்கு. அருமையான, இனிமையான தருணங்களை அனுபவியுங்கள். வெளியுலகம் எங்கே ஓடி விடப் போகிறது?
  My blessings to you and your family

  ReplyDelete
 7. அடடா அடடா அம்மாவும் மகளும் கதைக்கிறீங்களோ??.. அழகாக கவிதை எல்லாம் வருதே இப்போ???..

  இப்போ புரியுதா.. நாங்க எல்லாம் உடனுக்குடன் ஓடி வர முடியாமல் பிசி பிசி எனப் பல தரம் சொல்வதன் அர்த்தம்:)).. குடும்பம் வளர வளர உலகமே குடும்பமாகிடும்....’’
  வாழ்த்துக்கள்... குட்டிக்கு நகம் நீளமாக இருக்கு.. ச்சோஓ அவ உயரமா வளருவா....

  இன்னொண்ணு முக்கியமான விஷயம் சொல்ல மறந்திட்டனே..... மீயும் அஞ்சுவும் போட்டி வச்சமே.. மகிக்கு என்ன பேபி கிடைக்கும் என:)) ஹா..ஹா..ஹா.. வென்றது ஆரு?:)).. அப்புறமா சொல்றனே:))..

  வாழ்த்துக்கள் மகி.. ரேக் கெயார்.

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் மகி

  ReplyDelete
 9. "பால் வாங்கணுமா..கறிகாய் வேணுமா..நீங்களே பாருங்க" __________ இதையெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க மகி, இன்னும் நல்லா எஞ்ஜாய் பண்ணுங்க, அதாவது இப்போதான் வேலை வாங்க முடியும். ச்ச்ச்சும்மா சொன்னேன்.

  பெரியண்ணாவிடம் கொஞ்சம் பொறுப்பை ஒப்படைங்க. பதவி உயர்வு மட்டும் வாங்கிக்கொண்டு இப்படி தூங்கிக்கிட்டு இருந்தால் என்னாவது?

  அவசரமில்லை, உங்க உலகத்துல நீங்க ரெண்டு பேரும் ஜாலியா சுத்திட்டு மெதுவா வாங்க. புது நகம், விரல்களில் தோலுரிந்து, விடாமல் பிடித்துக்கொண்டு,...... சுற்றிப் போடுங்கோ !

  ReplyDelete
 10. Super, Mahi. Enjoy each moment with her. I miss those days.

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் மகி. மிக்க மகிழ்ச்சியான ,மறக்கமுடியாத அனுபவங்களாக இருக்கும்.

  ReplyDelete
 12. ஆஆவ் மீ லாண்டட் :)
  குட்டி விரல்கள் cute !!!! :)) இதை பார்த்திட்டு அப்படியே அன்னிக்கு தூங்க போனேன் ..பழைய நினைவுகள் மீட்டு கொண்டு வந்தன இந்த பட்டு குட்டி விரல்கள் .!!!.மகி இனி ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு கணமும் கவிதை அருவியா பொழியும் :)) enjoy every moment ..take care da.

  ReplyDelete
 13. Thx everyone for the wishes n comments! :)

  ReplyDelete
 14. Lovely snaps mahi. Enjoy as much as you can with your cute little princess. You can't get this beautiful time later. Take care Mahi.

  ReplyDelete
 15. Oh mahi congrats....kutti fairy eppadi irukkaanga.nallaa udambaiyum parthukonga.happyaa irunga kuttimavudan :))

  ReplyDelete
 16. hi mahi congratulations.

  ReplyDelete
 17. மகி,எஞ்சாய், மகள் வந்த பின்பு பகிர்வெல்லாம் கவித்துவமாய் ஆகிவிட்டதே ! Thanks Giving Art Super.அம்மா கவிதையும், அப்பாவின் ஆர்ட்டும் இனி அடிக்கடி பார்க்கலாம்.

  ReplyDelete
 18. வணக்கம்
  இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ
  எனதுபுதிய வலைத்தளத்தின் ஊடாக கருத்து இடுகிறேன்
  முகவரிhttp://blogintamil.blogspot.com/2013/12/blog-post_5109.html?showComment=1386811096290#c6470624461389458648

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 19. வணக்கம்.. வலைச்சர அறிமுகம் கண்டு வந்தேன்.

  தாய்க்கும் சேய்க்கும் அன்பான நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
 20. அன்பின் மகி - வலைச்சர அறிமுகம் மூலமாக வந்தேன் - http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_5109.html
  அருமையான பதிவு
  //
  இனி வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நாங்கள் நன்றி கூற ஒரு மிகப்பெரிய பரிசு கிடைத்து இரண்டு வாரமாகிறது! சின்னப் பெண்ணின் சின்னச் சின்னச் சிரிப்புகளிலும், செல்ல அழுகையிலும், ஏன் ஒவ்வொரு அசைவிலும் என் இதயம் கசிந்து நன்றி நவில்கிறேன் ஆண்டவனுக்கு!
  //

  தாயும் சேயும் நலமுடன் வாழ நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 21. உங்கள் உலகத்தில் உங்களுடன் ஒரு குட்டி தேவதையும் சேர்ந்துகொண்டது மகிழ்ச்சியான விஷயம் மகி. குட்டி கண்ணம்மாவிற்கு அன்பு ஆசிகள்.

  ReplyDelete
 22. aahaa... pora pokkai paarththaal veettilum kavithaiya thaan pesuvinga pola :) :) :) ... enjoooooooooyyy... :)

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails