Friday, August 2, 2013

How to grow Methi at home?-வீட்டில் வெந்தயக் கீரை வளர்ப்பது எப்படி?

வெந்தயம் சீக்கிரமாகவே முளைவிட்டு செழிப்பாக வளரக் கூடியது. முன்பே ஒரு முறை வெந்தயம் வளர்க்க முயற்சித்து சில பாடங்கள் கற்றுக்கொண்டேன், இந்த முறை இன்னும் சில அனுபவப் பாடங்கள். முதல் முறை வெந்தயக்கீரை வளர்க்க விரும்புவோருக்கும் உதவியாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் இங்கே பகிர்கிறேன்.
~~~
தேவையான அளவு வெந்தயத்தை  முதல் நாளிரவே தண்ணீரில் ஊறப்போட்டு வைத்து மறுநாள் விதைக்கலாம். நான் சுமார் 11/2 டேபிள்ஸ்பூன் வெந்தயத்தை ஊறவிட்டேன். [இது ஆப்ஷனல் ஸ்டெப்..வெந்தயத்தை டைரக்ட்டாக தூவினாலும் முளைத்துவிடும்.]
மறுநாள் காலை தொட்டிகளில் மண்ணை 3/4பாகத்துக்கும் கொஞ்சம் குறைவாக நிரப்பி ஊறிய வெந்தயத்தைத் தூவி விட்டு,  மேலே இன்னும் கொஞ்சம் மண்ணையும் தூவி விட்டு தண்ணீர் விட்டேன். விதைத்த மூன்றாம் நாளே சிறு துளிர்கள் வெளிப்பட்டன. பிறகு வெந்தய நாற்றுக்கள் தளிர்த்து வளர ஆரம்பித்தன. 
இரண்டு வாரங்கள் கழித்த பிறகுதான் நான் செய்த கோக்கு-மாக்கு:) பிடிபட்டது எனக்கு. வெந்தயத்தை   மிகவும் நெருக்கமாகத் தூவியிருக்கிறேன். முளைவிட்ட நாற்றுக்கள் உயிர்பிடித்து வளரப் போதுமான இடமில்லாமல் நெருக்கியடித்துக்கொண்டு தழைந்துகொண்டிருந்தன. அவ்வ்வ்வ்வ்வ்வ்!!! ஆனால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. ;) முன்பு வெந்தயம் நட்டபொழுதும் இதே தவறைச் செய்திருந்தேன், அப்ப எவ்வளவு அயகா;) வந்திருக்கு பாருங்க..
சில நாற்றுக்கள் முளைத்த இடத்திலிருந்து பிரித்து நடப்படும்போது நன்றாக வளரும் குணம் கொண்டவை. ஆனால் வெந்தயம் அப்படியில்லை. ஓரிடத்தில் முளைத்தால் அங்கு மட்டுமே வளரக்கூடியது. இடம் மாற்றி நட்டால் அப்படியே வாடிப்போய்விடும். இந்த விஷயம் தெரியாமல் இவ்வளவு அழகாக முளைத்திருந்த நாற்றுக்களைப் பிரித்து மண்ணில் நான்கைந்து இடங்களில் நட்டேன், அப்படியே வாடி வறண்டு போய்விட்டன வெந்தயச் செடிகள்!!
கற்றுக் கொண்ட அனுபவப் பாடத்தால் இந்த முறை வெந்தய நாற்றுக்களை இடம் மாற்றும் எண்ணம் வரவில்லை. இரண்டு மூன்று இலைகள் மட்டுமே வந்திருந்த இந்த நிலையிலேயே வெந்தயக் கீரையைப் பறிக்கலாம் என்றாலும், இப்போது பறித்தால் கசப்பு நன்றாகவே தெரியும் என இணையத்தின் உதவியில் தெரிய வந்தது. சரியென மேலும் 2-3 நாட்கள் விட்டேன். 
அதற்கு மேலும் பொறுமை இல்லாது, கசந்தாலும் பரவாயில்லை என 3 பாகம் கொண்ட தொட்டியில், ஒரு பாகத்துக் கீரையை மட்டும் பறித்துவிட்டேன். :))  தொட்டியில் மண் ஈரமாக இருக்கையில் கீரையை சுலபமாகப் பறித்துவிடலாம். பறித்து, வேர்ப்பகுதியை நறுக்கிவிட்டு மண் போக அலசி..
மேத்தி புலாவ் செய்துவிட்டேன்!! :)

கீரையின் கசப்பு லேசாகத் தெரிந்தாலும், புலாவ் நன்றாக இருந்தது. வெந்தயக் கீரையில் இரும்புச்சத்து அதிகம் என்று சொல்கிறார்கள்.
~~~
வெந்தயம் விதைத்த 17-ஆம் நாள் அறுவடை:)க்குப் பிறகு மீதமிருந்த கீரைகள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன.
இது கடந்த சனியன்று கீரையின் நிலை..
 சற்றே உயரமாக வளர்ந்திருந்த கீரைகளை மட்டும் அலுங்காமல் பறித்து..
படத்தின் பின்ணணியில் தெரிவன "சேனைக்கிழங்குவறுவல்" மற்றும் "சுரைக்காய் பொரியல்". :)

இன்னும் தொட்டியில் கீரை வளர்ந்துகொண்டிருக்கிறது. செடிகள் நெருக்கமாக இருந்த போதிலும் ஓரளவு உயரமாகவே வந்துவிட்டன. அடுத்த அறுவடைக்குப் பிறகு வெந்தயக்கீரையில் அடுத்த உணவுவகையுடன் சந்திப்போம். நன்றி!
:) 

20 comments:

 1. வலைப் பக்கம் வந்திருக்கிறோமா இல்லை வயலும் வாழ்வு நிகழ்ச்சியா என்கிற சந்தேகம் வந்து விட்டது. அவ்வளவு விரிவாக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். உங்களிடமிருந்து நிறைய டிப்ஸ் கிடைத்து விட்டது. சென்னை திரும்பியதும் இந்த வேலை கண்டிப்பாக செய்ய வேண்டும்.
  நன்றி பகிர்விற்கு,

  ReplyDelete
 2. //வலைப் பக்கம் வந்திருக்கிறோமா இல்லை வயலும் வாழ்வு நிகழ்ச்சியா என்கிற சந்தேகம் வந்து விட்டது// :) ஆஹா! :) நன்றி ராஜி மேடம்!

  யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்- என்று எனக்குத் தெரிந்த அனைத்தையும் பதித்துவைக்கிறேன். உங்களுக்கு உபயோகமா இருக்கிறது என்பது மகிழ்ச்சி. சென்னை செல்லும்வரை ஏன் காத்திருக்கணும்? நியூஜெர்ஸி-யிலேயே ஆரம்பிக்கலாமே! அகலமான யூஸ் & த்ரோ பேக்கிங் டிரே ஒன்றும் ஒரு பேக்கட் "பாட்டிங் சாயில்"-ம் வாங்குங்க, கடகடவென வெந்தயக்கீரை வளர்த்திடலாம். பெரிய முதலீடெல்லாம் இல்லை, டாலர் ஷாப்பிலேயே இந்தப் பொருட்கள் கிடைக்கும். :)

  நன்றி மேடம் வருகைக்கும் விரிவான கருத்துக்கும்!

  ReplyDelete
 3. superb post.nicely explained.

  ReplyDelete
 4. மகி :)) கண்ணுக்கு பசேல்னு இருக்கு கீரை அழகா வளந்திருக்கு ....நாநும் இதே கொக்கு மாக்கு செய்தேன் :)) சும்மா அள்ளி குவிச்சு போட்டதில் நெட்டை குட்டை ரெண்டுமா ஒரே இடத்தில வளர இடம் பற்றாம நெருக்கி போச்சு ..ஆனா நான் உங்கள மாதிரி நாற்று நடும் வேலையை செய்யலை :))

  ReplyDelete
 5. நான் இன்னொரு ஐடியா வச்சிருக்கேன் பழைய கார் டயரில் bottom should be closed with a gunny bag and plastic sheet மண் நிரப்பி வளக்கலாம் அல்லது
  ஆப்பில் மற்றும் பழங்கள் வருமே மர boxஅவற்றிலும் மண் நிரப்பி போடலாம் .ஆனா தண்ணி ஓவர் flow ஆகாம பாக்கணும்
  ஆர்வக்கோளாரில் பழைய கிரில் இருந்தது அதில்தன்யா போட்டு வச்சேன் ..ட்ரிப் போய் வந்தா இங்கே மழை கொட்டியதில் கீரை வீனாகிருக்கு ..ஒரு வீடியோவில்பார்த்தேன் food pack செய்வோமே அலுமினியம் trays அதிலும் போட்டாங்க methi சரி அளவா வளர்த்திருக்கு ..இன்னும் சில பல ஐடியாஸ் இருக்கு விரைவில் பகிர்கின்றேன் :)))

  ReplyDelete
 6. Nice mahi ...chedi kodi valarkkum aasaiyai thoondividureenga....ungalin rosappoo padhivellaam paarthuttu en hussukitta enakku chediyellaam vaangithaangannu keaten....avaru nee mudhalla irukkara velaiya olunga seyyunnu poittar. :(( super mahi appadiye dhaniyaavum valarthu podunga or padhivu ....photos nallaa pachaipaselnu alaga stage by stage eduthu irukkeenga.okppa valthukkal.

  ReplyDelete
 7. படங்களுடன் விளக்கம்... என்னவொரு சந்தோசம் வரிகளில்...! வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. கீரை வளர்ப்பும் ரெசிப்பியும் அருமை..பாராட்டுக்கள்..

  ReplyDelete
 9. வீட்டில் வெந்தயக்கீரை வளர்க்க விரும்புபவர்களுக்கான நல்ல பதிவு. இளங்கீரை கசக்கும் என்பது இப்போதுதான் தெரியும்.

  மகி, செடியை வேருடன் பிடுங்காமல் தேவையான அளவுக்கு சிஸரால் கட்பண்ணி எடுத்திடுங்க. மீண்டும் அதிலிருந்து துளிர்த்து செடி அழகாக வளருகிறது. இந்த தடவ எங்கவீட்ல அப்படித்தான் செய்தேன்.விதை & வேலையும் மிச்சமாச்சு.

  டாலர் ஷாப் ஐடியா சூப்பர். நாளைக்கே போய்டுவோமில்ல!

  ReplyDelete
 10. இவ்வளவுதானா வெந்தயக்கீரை வளர்க்கும் வித்தை!...

  நல்ல நல்ல உதவிக் குறிப்புகள்!

  மிகவும் பயனுள்ள பதிவு + பகிர்வு!

  என் நன்றியும் வாழ்த்துக்களும் மகி!

  ReplyDelete
 11. ஆகா மகி வெந்தயக்கீரை பார்க்கவே நன்றாக இருக்கு. நானும் போட்டேன் வளர்ந்தது.ஆனா வாடிவதங்கிவிட்டது. உங்க பிழையைத்தான் நானும் விட்டேன்.
  அதோடு சின்ன pot. இம்முறை தனித்தனி பொட் ல் வைத்துப்பார்க்கப் போகிறேன். வெந்தயக்கீரை உள்ள இடம் நல்ல வாசமாக இருக்கும். நல்ல உதவிக்குறிப்பு மகி ரெம்ப நன்றி.

  ReplyDelete
 12. pachchai keerayal palichidum paarvai! :-) enjoyed the post Mahi.

  I grew it as an indoor plant in a tiny pot in my Kitchen. I sprinkled the seeds an inch inside the soil and they sprouted and made my harvest three months back. Every morning I watered them and kept near my window sil.

  Kitchen garden products taste thani dhan :p :D

  Enjoyed the post Mahi

  ReplyDelete
 13. மீனா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க!
  ~~
  ஏஞ்சல் அக்கா, //ஆனா நான் உங்கள மாதிரி நாற்று நடும் வேலையை செய்யலை :))// சந்தடி சாக்குல கால வாரி விடறீங்களே!! கர்ர்ர்ர்ர்! :) ;)

  பழைய கார் டயர் நல்ல ஐடியாதான். பேக்கிங் டிரே-ல கீரை பெரியதாக வரும்வரை வளர்க்க முடியுமா என சந்தேகமா இருக்கு. டிரை பண்ணிப் பார்ப்போம். எனது கீரைகள் இப்ப நல்லாவே உசரமா வந்துருச்சு. :) இன்னுமிருக்கும் ஐடியாக்களை பகிருங்க. எல்லாருக்கும் உபயோகமாக இருக்கும்.
  நன்றி அக்கா!
  ~~
  கொயினி, //mudhalla irukkara velaiya olunga seyyunnu poittar. :(( //ஓ!! செடிகள் வளர்ப்பது அடிஷனல் வேலை இல்லை என அவருக்குச் சொல்லுங்க கொயினி! :) இது நம் மனசுக்கும் உடலுக்கும் ரிலாக்ஸிங்-ஆன ஒரு விஷயம். சும்மா சின்ன தொட்டிகள் 2 வாங்கி வெந்தயமும், கொத்துமல்லியும் தூவி விடுங்க. தானே வந்துரும்.
  இங்கே கொத்துமல்லி வறுத்ததாக கிடைக்கிறது, முளைக்கிறதில்லை, அதான் நான் வளர்க்கலைங்க.
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கொயினி!
  ~~
  தனபாலன் சார், //என்னவொரு சந்தோசம் வரிகளில்...!//!! :) என் சந்தோஷம் உங்களையும் தொற்றிக்கொண்ட மாதிரி தெரிகிறது. சந்தோஷம்! :)
  நன்றிங்க!
  ~~
  இராஜராஜேஸ்வரி மேடம், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!
  ~~
  சித்ரா அக்கா, //இளங்கீரை கசக்கும் என்பது இப்போதுதான் தெரியும்.// எனக்கும் இணையத்தில் தேடியபோதுதான் தெரிந்தது. நம்ம பெரிய கீரையே கசக்கும் என சொல்வோமே! ;)

  கத்தரியால் கட் பண்ணும் ஐடியா சூப்பரா இருக்கு. நெக்ஸ்ட் அறுவடைக்கு அதையே செய்கிறேன். தேங்க்ஸ் பார் தி டிப்ஸ்! :)

  பேக்கிங் டிரே-ல வளர்க்க ஆரம்பிச்சிட்டீங்களா?
  வருகை-கருத்து-டிப்ஸ் அனைத்துக்கும் நன்றிகள்!
  ~~
  அம்முலு, எல்லாரும் ஆர்வக் கோளாறில் ஒரே தவறைத்தான் செய்திருக்கோம் பாருங்க! :)
  பெட்டர் லக் திஸ் டைம் அம்முலு! கருத்துக்கு நன்றி!
  ~~
  மீரா, //பச்சைக் கீரையால் பளிச்சிடும் பார்வை//? கலக்கிட்டீங்க! :) உங்க கிச்சன் கார்டனும் சூப்பரா இருக்கும் போலவே.
  நம்ம வீட்டில விளைஞ்சதுன்னா அது ஸ்பெஷல் தானே? :)
  ரசித்துப் படித்து கருத்தும் தந்ததற்கு நன்றி மீரா!
  ~~

  ReplyDelete
 14. நானும் வளர்த்திருக்கிறேன். அந்த வாசனை பிடிக்கும். குட்டி மலர்களின் அழகு பிடிக்கும். குளிர்காலம் முடிய மீண்டும் ஆரம்பிக்கவேண்டும் தோட்டவேலை.

  ReplyDelete
 15. வெ.கீரை வளர்த்தால் மணமாக இருக்கும் என அம்முலுவும் இமாவும் சொல்றீங்க, ஆனா எனக்கு எந்த வாசனையும் தெரியலையே!! நோஸ் டெஸ்ட் செய்யணும் போல! ;)

  தொட்டியில் மீதிச் செடிகள் இன்னும் வளர்ந்துட்டேதான் இருக்கின்றன, விரைவில் மஞ்சள் பூக்கள் வரலாம் என நினைக்கிறேன். இல்ல அதுக்குள்ள கீரை கிச்சனை வந்து சேர்ந்துவிடுமோ தெரிலை! :) அடுத்த வசந்தத்தில கலக்கிருங்க இமா! :)

  ReplyDelete
 16. எனக்கு வெந்தயக்கீரை ரொம்ப பிடிக்கும். நான் முன்ன இதுவும் புதினாவும் அழகா வளர்த்தேன். ஊருக்கு போயிட்டு வந்து பார்த்தா எல்லாம் வறண்டு போச்சு :( :( அப்றோம் திரும்ப வச்சேன்.

  ஹி ஹி... நான் கடைல இருந்து வாங்கின புதினா இலைகளை use பண்ணிட்டு , தண்டுகளை மட்டும் நட்டு வச்சேன். இது வரைக்கும் 3 முறை பறித்து சமைச்சாச்சு.... நானும் ஒரு patio கார்டன் வைக்கலாம்னு பாக்குறேன். உங்க தோட்ட பதிவு எல்லாம் inspiration-la இருக்கு மஹி. ஸ்னோவ நினைச்சாதான் எரிச்சலா இருக்கு. அந்த சீசன்-ல எப்படி பாதுகாக்கணும்-னு ஒரு பதிவு போடுங்க மஹி. எனக்கு கண்டிப்பா useful -ல இருக்கும் .

  ReplyDelete
 17. //நான் கடைல இருந்து வாங்கின புதினா இலைகளை use பண்ணிட்டு , தண்டுகளை மட்டும் நட்டு வச்சேன்.// நானும் அதையேதான் செய்தேன், ஆனா என்ன..ஒரு வருஷத்துக்கும் மேல ஆச்சு நட்டு! :)

  //ஸ்னோவ நினைச்சாதான் எரிச்சலா இருக்கு. அந்த சீசன்-ல எப்படி பாதுகாக்கணும்-னு ஒரு பதிவு போடுங்க// ஆஹா!! போட்டீங்களே ஒரு போடு! :) நான் தொட்டிச்செடி வளர்க்கிறதே கலிஃபோர்னியா வந்தபிறகுதான். ஸ்னோ சீஸன்ல எப்படி பாதுகாக்கணும் என்பது பற்றி ஐடியாவே இல்லையே எனக்கு! தனிப்பதிவு போடுமளவு விவரம் தெரில, இருந்தாலும் எனக்கு தோணுவதை சொல்றேன், யூஸாகுதான்னு பாருங்க.

  குளிர் வந்ததுமே அனேகமா செடிகள் வறண்டு போயிரும், ஸ்ப்ரிங் வரும் வரை தொட்டிகளை மண்பகுதிய ப்ளாஸ்டிக் ஷீட் போட்டு கவர் பண்ணி வைச்சுக்கலாம், அல்லது வீட்டுக்குள்ள இடமிருந்தா வெயில் படற இடமாப் பார்த்து வைச்சுக்கலாம். பட், ப்ராக்டிகலி இவை எல்லாம் எப்படி வொர்க் அவுட் ஆகும் என்ற அனுபவம் இல்லை எனக்கு.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மீனாக்‌ஷி!

  ReplyDelete
 18. நல்ல பயனுள்ள பகிர்வு மஹி.
  இவ்வளவு நாள் மிஸ் பண்ணிட்டேனே பார்ப்பதற்கு என நொந்துக்கிட்டேன்.
  அட... ஆமாம் மஹி.ரொம்ப நாளாகும் வெந்தயக்கீரையை வீட்டில் வளர்த்து அதை எடுத்து சமைக்கனும்னு ஆசை.... ஆனால் ரிஸ்க் எடுக்க கூடாதுன்னு விட்டுட்டேன்.
  இப்ப நம்ம மஹி இவ்வளவு தெளிவாக சொன்னதும் செய்யாமல் விட்டுடுவேனா என்ன....
  முயன்று பார்த்துவிட்டு வெற்றியோடு உங்கள் பக்கம் வருகிறேன் மஹி.
  நன்றி.

  அப்சரா.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails