Thursday, March 6, 2014

பண மரம்..

எனது தோட்டப்பைத்தியம் உங்களுக்கெல்லாம் நன்றாகவே தெரிந்ததுதான்!! ஒவ்வொரு முறை தொட்டிச்செடிகள் வாங்கும்போதெல்லாம் "எதற்கு செடிகளாய்ச் சேர்க்கிறாய்? ஏற்கனவே 30 தொட்டிக்கு மேல இருக்கு!" என்ற செல்ல முணுமுணுப்பு கேட்கும், இருந்தாலும் மெல்ல மெல்ல அவரையும் என் பக்கம் இழுத்துவிட்டேன் என்பதற்குச் சான்று இந்தப் பணமரம்! :) 

ஒருநாள் காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போன என்னவர் வரும்போது இந்த மரத்துடன் வந்தார்.  "Money Tree" என்ற லேபிளுடன் காஸ்ட்கோவில் விற்பனைக்கு இருந்திருக்கிறது, இவரும் வாங்கிவந்துவிட்டார். இப்போது அவரின்  அலுவலக அறையை அலங்கரிக்கிறது இந்த மணி ட்ரீ!
இந்த மரம் ஆசியாக் கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டது, "போன்சாய்" வகையைச் சேர்ந்த ஒன்று. 1980களில் தைவான் நாட்டில் உருவாக்கப்பட்டது. அதிர்ஷ்டத்தையும், பணவரவையும் கொண்டுவரும்  என்ற நம்பிக்கை உள்ளது. இதன் இலைகள் நமது உள்ளங்கை போல 5 இலைகளைக் கொண்டிருக்கும்.  சில மரங்களில் 7 இலைகளும் உள்ளனவாம், அவை இன்னும் அதிர்ஷ்டம் வாய்ந்த மரங்களாகக் கருதப்படுகின்றன. [எங்க மரத்தில 7 இல்ல, 5 தான்! :)].

1980களில் தைவான் நாட்டைச் சேர்ந்த ட்ரக் டிரைவர் ஒருவர் பல்வேறு மரங்களின் தண்டுகளை இப்படி ஜடை போல பின்னி இந்தப் புதுவகை மரத்தை உருவாக்கியதாக கதை சொல்லப்படுகிறது. "ஃபெங் சுய்" நம்பிக்கையின்படி வீட்டில் பவர்ஃபுல்லான இடங்களில் இந்த மரத்தை வைப்பது நல்லதாம். உயிருள்ள பொருட்களை வீட்டில் வைப்பது நன்மை பயக்கும் என்பதும் ஒரு நம்பிக்கை.

பணமரத்துக்கு அதிக வெயில் தேவையில்லை. இன்டைரக்ட் சன்லைட் போதுமானது. ஒவ்வொரு முறையும் தொட்டியில் மண் நன்றாகக் காய்ந்தவுடன் தண்ணீர் ஊற்றினால் போதும். புது இலைகள் வந்திருக்கிறது படத்தைப் பார்த்தாலே தெரியும், ஆகக்கூடி எங்கூட்டுலயும் பணமரம் வளருதுங்கோ! ;)))
ஜீனோ: இது பணங்காய்க்கற மரமாமே, காய்க்குமா? சில்லறை வருமா, நோட்டாக் காய்க்குமா? ;) 
:)
~~~
பதிவில் ஜீனோவின் படம் வந்ததால் இன்னும் சில ஜீனோ'ஸ் டைம்ஸ்!!
லயாவிற்கு தொட்டில் கட்டியதும் ஜீனோவிற்கு மிகவும் ஆச்சரியமாகப் போய்விட்டது. தொட்டிலுக்குக் கீழேயே உட்கார்ந்து அண்ணாந்து வேடிக்கை பார்ப்பதும், சமயம் கிடைக்கையில் 2 கால்களில் நின்று:) பாப்புவை எட்டிப்பார்ப்பதும் அவன் வழக்கமாக இருந்தது. சில நாட்களுக்குப் பிறகு ஐயா பழகிவிட்டார். இப்ப தொட்டில் பக்கம் அவ்வப்போது விஸிட் அடிப்பதுடன் சரி! :) 
ஒரு நாள் பகலில் கரடி பொம்மையுடன் சுவாரசியமாக விளையாடிக்கொண்டிருந்தார் ஜீனோ. அப்போது தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அமைதியாக இருந்த வீட்டில் திடீரென டெலிஃபோன் மணி ஒலிக்கவும் ஜீனோவுக்கு கையும் ஓடல, காலும் ஓடல! ;)
வானேஜ் பெட்டியில் ஆரஞ்ச் நிற லைட் எரியும், அங்கேதான் ஏதோ நடக்கிறது என அதனைப் போய்ப் போய்ப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்... :))))
பேசாமல், தொலைபேசியை எடுத்து பதில்சொல்ல:) பழக்கிடலாமா ஜீனோவுக்கு என்று சீரியஸாகத் திங்க் பண்ணிக் கொண்டிருக்கேன். ஹிஹிஹி..
~~~
ரவா கிச்சடி & ரவா கேசரி 
ஏன் அது ரெண்டும் சண்டை போட்டு, கோவிச்சுட்டு தள்ளித் தள்ளி உட்கார்ந்திருக்கு என என்னவர் மாதிரி கோக்கு மாக்கா கேள்வி கேக்காம அமைதியாச்  சாப்புடுங்க என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்! 
:))) 

12 comments:

  1. சூப்பர்ர் மகி,பாப்பாவுக்கு தொட்டில் கட்டி போட்டிருக்கீங்க,இதுதான் ரொம்ப நல்லது,சவுகரியம்னு அம்மா சொல்வாங்க...நாங்க யாருமே பிள்ளைகளுக்கு தொட்டில் கட்டி போட்டது இல்லை.இப்ப உங்க படத்தை பார்க்கும் போது மிஸ் பண்ணிட்டேன்னு தோனுது...

    ReplyDelete
  2. அப்புறம் சொல்ல மறந்துட்டேன்,அந்த பணமரத்தைக்கூட எங்க வீட்டுக்கார் வாங்கி வந்தார்..ஹி ஹி ஆனா அந்த செடி வந்ததிலிருந்து 2 பேருக்கும் எப்பவும் டிஷ் டிஷ்யூம் தான்..அதை தூக்கி போட்ட பிறகு சமாதானம் ஆகிட்டோம்..ஹா ஹா

    ReplyDelete
  3. ஜீனோ எண்ணம் ரசனை...! வாழ்த்துக்கள்...

    2 ரவாவிற்கு நன்றி....

    ReplyDelete
  4. பணமரம் நாத்து நட்டு ஒன்றுக்கு இரண்டா ஆக்கிடுங்க.ஜீனோவும் தொட்டில் ஏற ஆசை படாமல் இருந்தா சரி.

    ReplyDelete
  5. பணக்காய்கள் காய்த்து, பழுத்து ஹார்வெஸ்ட் மெஷின் கொண்டுவந்து உலுக்கி அண்ணனும், தங்கையும் சேர்ந்து பொறுக்கியெடுக்க வாழ்த்துக்கள் மகி.

    வலையில் ஜீனோ உலா வருகிறார் என்றால் பாப்பா தூளியில் தூங்கி அம்மாவுக்கு நேரத்தை மிச்சப்படுத்தியிருப்பது தெரியுது.

    ஒன்னு ரவை, இன்னொன்னு சேமியான்னு இருந்திருந்தா ஒத்துமையா இருந்திருப்பாங்களோ !!

    ReplyDelete
  6. Money tree! Mmmm.. Don't have to work. I love it.
    Cradle is cute.

    ReplyDelete
  7. ஏன் அது ரெண்டும் சண்டை போட்டு, கோவிச்சுட்டு தள்ளித் தள்ளி உட்கார்ந்திருக்கு?????????

    ReplyDelete
  8. //பேசாமல், தொலைபேசியை எடுத்து பதில்சொல்ல:) பழக்கிடலாமா // ம்.. அது என்ன உங்க வீட்டு கேட்டா?

    ஒண்ணு பண்ணலாம்... 'நாய் குரைக்கும் கவனம்'னு ஒரு வாய்ஸ் மெசேஜ் வைச்சுட்டு ஜீனோவையும் பேசப் பழக்குங்க. ;)

    ReplyDelete
  9. நானும் இப்பிடியெல்லாம் பின்னிப் பார்த்து இருக்கேன். பிறகு செடி வளருறப்ப சமனில்லாம ஒரு தண்டு குண்டாவும் ஒண்ணு மீடியமாவும் ஒண்ணு ஒல்லியாவும் வந்துருது. ஒல்லியா இருக்கிறது காலப் போக்கில என் கவனத்துல இருந்தே மறைஞ்சுருது. ;(

    ReplyDelete
  10. ஸ்வீட் பாத் அண்ட் காரா பாத் அருமை..!

    ReplyDelete
  11. பணமரம் அழகா இருக்கு.இங்கு இது பெயருக்கேத்த மாதிரி விலை ஜாஸ்தி. நான் பார்த்து இருக்கேன்.
    //பேசாமல், தொலைபேசியை எடுத்து பதில்சொல்ல:) பழக்கிடலாமா ஜீனோவுக்கு//பேசாம ஜீனோவுக்கு பழக்கிடுங்க.
    கேசரி,கிச்சடி அருமை.

    ReplyDelete
  12. மேனகா, தொட்டில் இங்கே ஒரு நண்பர் சொன்னதைக் கேட்டு என்னவர் கொஞ்சம் மூளையைக் கசக்கி ஒரு மாதிரியா அட்ஜஸ்ட் பண்ணினோம். :) என்னதான் இந்த ஊர் ஸ்விங்ல தூங்கினாலும் தொட்டில் போல வருமா..நீங்களும் முயற்சித்திருக்கலாம், சரி விடுங்க..போயிட்டு போகுது.
    பணமரம் வந்ததும் சண்டையா?? ஆஹா! :) எங்க வீட்டில வந்தன்னிக்கு எங்க வைக்கிறதுன்னு கசமுசன்னு பேசினோம், அதுக்கப்பறம் ஓகேவா போகுது, டச் வுட்! ;) வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க!
    ~~
    டிடி சார், ஜீனோவை ரசித்துக் கருத்துச்சொன்னதற்கு மிக்க நன்றிங்க!
    ~~
    அமுதா கிருஷ்ணா, தங்கள் இனிய வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றிகள்! :) ஆரம்பத்தில ஜீனோ க்யூரியஸா இருந்தார்தான், அப்ப தொட்டில்ல வைச்சிருந்தா உட்கார்ந்து ஆடியிருப்பான்! ஹஹாஹா!! :)
    ~~
    சித்ராக்கா, ஹார்வெஸ்ட் மெஷின்??!! :)) உங்க வாக்கு பலிக்கட்டும். :)

    போஸ்ட் எல்லாம் பாப்பா தூங்கற டைம்ல கொஞ்சம் கொஞ்சமா உருவாக்கி சிலபல நாட்கள்ல பப்ளிஷ் பண்ணறதுதான். ;)

    சேமியா கிச்சடி..ரவா கேசரி? ரவா கிச்சடி..சேமியா கேசரி?? எது நல்லாருக்கும்னு சொல்லுங்..அடுத்த முறை செய்துடலாம்.
    நன்றி அக்கா கருத்துக்கு!
    ~~
    வானதி, நீங்க வேற..பணமரம் வந்த நேரம் இவருக்கு ஆஃபீஸ்ல வொர்க் அதிகமாகிருச்சு..அவ்வ்வ்வ்!
    கருத்துக்கு நன்றி வானதி! நீங்க தொட்டில் கட்டினீங்களா, இல்லையா? :)
    ~~
    //ஏன் அது ரெண்டும் சண்டை போட்டு, கோவிச்சுட்டு தள்ளித் தள்ளி உட்கார்ந்திருக்கு?????????// கொர்ர்ர்ர்ர்ர்! "தொட்டுக்கொள்ள.." எதுவும் இல்லையேன்னுதானாம் இமா..எனி சஜஸன்ஸ்? ;) :)

    //'நாய் குரைக்கும் கவனம்'னு ஒரு வாய்ஸ் மெசேஜ் வைச்சுட்டு ஜீனோவையும் பேசப் பழக்குங்க. ;)// தேங்க்யூ..விரைவில் முயற்சிக்கிறோம், அப்ப நீங்கதான் முதல் கால் பண்ணனும், ஓக்கே? ;)
    நன்றி ஹை..வருகைக்கும் கருத்துக்கும்! :)
    ~~
    இராஜராஜேஸ்வரி மேடம், நன்றி!
    ~~
    அம்முலு, இது என்ன விலைன்னு நான் கேட்கவே இல்லையே..அவ்வ்வ்வ்!!
    ஜீனோக்கு போன் அட்டண்டிங் ஜாப் குடுத்துரலாம்ங்கறீங்க நீங்களும்? ஓகேஏஏஏஏ!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்முலு~
    ~~

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails