மாலைச்சூரியன் அந்திவானத்துக்குள் அமிழும் வேளை..என்ன ஒரு ஏமாற்றம்?!!கதிரோன் மறைந்ததும் மலர்கள் எல்லாமும், இதழ்களை மூடிக்கொண்டு உறங்கத்தொடங்கியிருந்தன. அடுத்தநாள் உச்சிவெயில் நேரமாக இருந்தாலும் பரவாயில்லை என்று, கேமராவுடன் சென்றபோது, என்னை வரவேற்ற வசந்தம்...
வீட்டருகில் இருக்கும் இந்த இரண்டு-மூன்று சாலைகளில் மட்டுமே தலையாட்டும் மஞ்சள் மலர்க்கூட்டங்கள்..என்னைக்காணோம் என்று தேடிக்கொண்டு (அவர்கிட்ட கூட சொல்லாம போயிருக்கியான்னு முறைக்காதீங்க,தூங்கிட்டு இருந்தவரைத் தொந்தரவு செய்யாம, எங்கே போறேன்னு நோட் எழுதிவச்சுட்டுதான் வந்தேன்.கர்ர்ர்ர்ர்ர்) வந்து, இதோ இந்த இடத்தில் என்னைக் கண்டுபிடித்துவிட்டார்.:)
இங்கேயே இத்தனை பூக்களிருக்கே,இன்னும் கொஞ்சதூரம் போய்ப்பார்ப்போமென்று (காரில்தான்) போனோம்,ஆனால் வேறெங்கும் இப்படிப் பூக்களில்லை.
அபார்ட்மெண்டில் ஜனவரியிலிருந்தே புதுப்பூக்கள் நட ஆரம்பித்திருத்தார்கள்.இந்தப்பூக்களின் பெயர் தெரியல, பல்வேறு வண்ணங்களில் ரொம்ப அழகா இருக்கின்றன. அங்கே இங்கே தேடி இந்தப்பூக்களின் பெயர் Ranunculus Flowers என்று கண்டுபிடித்துட்டேன். மேலதிகத்தகவலுக்கு இங்கே க்ளிக்குங்க. பூக்களைப் பார்க்க யாருக்குத்தான் சலிப்பு வரும்??! இரண்டு நாட்களுக்கொருமுறையாவது எல்லாப்பூக்களையும் பார்த்து ஹாய் சொல்லிட்டுதான் இருக்கேன்.:)
இந்தப்பூவின் பெயர் Poppy. இதுவும் பலநிறங்களில் அழகழகா இருக்கு. நீளமான காம்புடன் ஒற்றைக்காலில் நிற்கும் பூக்கள் மட்டுமில்லாமல், மொட்டுக்கள் தலை குனிந்து நிற்பதும் க்யூட்டாக இருக்கும்.
படங்களை எடுக்கும்போதிருந்து இந்தப்பாடல் வரிகள் மனதுக்குள் ஓடிகிட்டே இருந்தது.பாட்டைக் கேட்டுக்கொண்டே எங்க ஊர்ப்பூக்களை ரசியுங்க! வசந்தத்தில் ஓர் நாள்,மணவறை ஓரம்..
வசந்தத்தில் ஓர் நாள்.. |
நன்றி!
இருங்க படிச்சிட்டு வரேன் :-)
ReplyDeleteஅழகா இருக்கு :-))
ReplyDeleteமலர்களும் அழகு. மகி எழுதியிருக்கிற விதமும் அழகு.
ReplyDeleteபிடிச்சிருக்கு. ;)
நீங்க இந்த வீட்டை விட்டுக் கிளம்பு முன்னாடி ஒரு நாளைக்கு அந்தப் பக்கம் வரேன்.
~~~~~~~~~~~~~
கர்ர்ர். வடைக்காக இப்புடி படிக்காம எல்லாம் கமன்ட் போடப் படாது மருமகனே. ;)
arumaiyana malargal....
ReplyDeleteBeautiful click add additional beauty for flower & lovely narration..
ReplyDeleteNice pictures Mahi..love your way of writing..
ReplyDeletestart
ReplyDeletecamera
action...
ஒரு நல்ல
ReplyDeleteஒளிப்பதிவளர வர வேண்டிய
எல்லா திறமையும் இருக்கு மகிமா
ஒரு வேலை நானும் ஒரு DIRECTER ஆகி
எனது திரைப்படத்தில்
வாய்ப்பு தருகிறேன்
படங்கள் நல்ல இருக்கு
படங்கள் மகி கண்ணிற்கு இதமாக மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கு.
ReplyDeleteபடங்களும் அழகு. விவரித்த விதமும் அழகு.
ReplyDeleteஅந்த சிவப்பும் மஞ்சளும் சேர்ந்த பூ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! படங்கள் அத்தனையும் நல்ல க்லாரிடி! :)
ReplyDeleteமஹி, இதெல்லாம் இப்போ பூத்திருக்கா? அது எப்பூடி? எங்களுக்கு இன்னும் ஸ்னோ முடிந்துதா என்றே தெரியவில்லை, மரமெல்லாம் காம்போடுதான் நிற்குது, ஒரு வீட்டில மட்டும் பார்த்தேன் பட்டமரம்போல பலமரத்துக்குமத்தியில கொஞ்ச இலையோட பல கொத்துப்பூக்கள் வந்திருக்கு, என் கண்ணையே நம்ப முடியவில்லை.
ReplyDeleteஅதென்ன “அங்க்” வசந்த மாளிகை, இங்க வசந்தம்... தலைப்பைப் பார்த்துப் பயந்திட்டேன் ஏதும் பேய்த் தொடரோ என....
ஐ... நான் மாமிக்கு(ஜெய்யின் முறையில:)) கர்ர்ர் சொன்னா, மாமி ஓடிவந்து ஜெய்க்கு கர்ர்ர் சொல்றா... ஆஅ... இனிதான் 24 மணித்தியாலத்தாலதான் வருவேன்...
மஹி, மீண்டும் எனது ரசனைக்கேற்ற பதிவு, மிகவும் ரசித்தேன்... அழகிய புகைப்படங்கள். ஒவ்வொரு படமும் ஒரு கவிதையாய் தெரிகிறது.
ReplyDeleteAwesome!!!
ReplyDeleteஅழகான பூக்கள் மகி பார்த்துகிட்டே இருக்கனும் போல இருக்கு..
ReplyDeleteஎல்லா படங்களுமே கவித்துவமாக , மகிக்கு பிடித்தது அல்லவா மஞ்சள் நிற பூக்கள்.
ReplyDeleteநல்ல பாட்டு நல்ல போஸ்ட் ரெண்டுமே .சூப்பர்
ReplyDeleteVery nice pictures and interesting post..
ReplyDeleteபாட்டு பிரமாதம். டவுன்லோடு செய்து விட்டேன்.
ReplyDeleteமகி, அழகா இருக்கு. இங்கு வசந்தம் வர 2 வாரங்களாவது ஆகும்.
ReplyDeleteஅதீஸ், ஜெய்யை நினைச்சா நடுங்குது. அங்கே அகோரி, இங்கே ஏதோ ஒரு மாளிகையாம். ஒரு வேப்பமரத்தை ஊரிலிருந்து பார்சலில் அனுப்பினா தான் சரி வரும் போல இருக்கு.
படங்களை புகைப்படவடிவில் பார்க்கவே எத்தனை ரம்யமாக உள்ளது.
ReplyDeletevanathy said...
ReplyDeleteஅதீஸ், ஜெய்யை நினைச்சா நடுங்குது. அங்கே அகோரி, இங்கே ஏதோ ஒரு மாளிகையாம். ஒரு வேப்பமரத்தை ஊரிலிருந்து பார்சலில் அனுப்பினா தான் சரி வரும் போல இருக்கு.///
ஹா..ஹா..ஹா.. வான்ஸ்ஸ்... ஆடுற மாட்டை ஆடிக்கறக்கோணும், பாடுற மாட்டைப் பாடிக்கறக்கோணும்:), ஜெய் க்கு வே.ம சரிவராது, ஒரு சிஷ்யை அல்லது ஒரு அயகான நேர்ஸ்ஸ்ஸ்.. அனுப்பினால்தான் சரிவரும்... கடவுளே... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
//அதீஸ், ஜெய்யை நினைச்சா நடுங்குது. அங்கே அகோரி, இங்கே ஏதோ ஒரு மாளிகையாம். ஒரு வேப்பமரத்தை ஊரிலிருந்து பார்சலில் அனுப்பினா தான் சரி வரும் போல இருக்கு.//
ReplyDeleteஆ.... வேப்ப மரமா..??? இப்பதான் நினைவுகள் வருது ..ஓக்கை...!!
//ஹா..ஹா..ஹா.. வான்ஸ்ஸ்... ஆடுற மாட்டை ஆடிக்கறக்கோணும், பாடுற மாட்டைப் பாடிக்கறக்கோணும்:), ஜெய் க்கு வே.ம சரிவராது, ஒரு சிஷ்யை அல்லது ஒரு அயகான நேர்ஸ்ஸ்ஸ்.. அனுப்பினால்தான் சரிவரும்... கடவுளே... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்//
ஹி..ஹி... அதுவும் வந்துகிட்டே இருக்கு என் அடுத்த பதிவில் பாருங்க :-))
ஜெய், இப்படி எடுத்தற்கெல்லாம் அடுத்த பதிவு வரும், அடுத்த பதிவு வரும்ன்னு சொல்லி திரியப்படாது. ஓக்கை????
ReplyDeleteபூ எல்லாமே ரொம்ப அழகா இருந்தது மேடம். பூ மாதிரி லேசான மனசு உள்ளவர்களால தான் பூவை ரசிக்க முடியும்.
ReplyDeleteஉங்க ஆத்துக்காரர் தூங்கும் போது பக்கத்துல என்ன எழுதி வச்சேள்? "எனக்கு வெளில போனும் கொஞ்சம் எழுந்து வாங்கோ! நீங்க வரலைனா நான் தனியா போய்ட்டு வந்துடுவேன்" அப்பிடின்னு தானே??..;))
மலர்களே மலர்களே இது என்ன கனவா..... அப்படின்னு பாட தோணுது மகி. எல்லா பூக்களும் அருமை.உங்களோட எழுத்து நடையும் அருமை.
ReplyDeleteBeautiful
ReplyDeleteஹாய் மஹி...,அருமையான மலர்களை அற்புதமாக உங்கள் கேமராவில் க்ளிக் செய்தது மிக அருமை.
ReplyDeleteநல்ல இயற்க்க ரசிப்புதன்மை உங்களுக்கு.நானும் ரசிப்பேன்.ஆனால் வளைத்து வளைத்து இது போன்று படம் பிடித்தது கிடையாதுங்க...
வித்தியாசமான இது வரை பார்க்காத மலர்களை எங்கள் கண்ணுக்கும் விருந்தாக கொடுத்திருக்கீங்க..
இரண்டாவது,மூன்றாவது படம் மிகவும் அழகான வித்தியாசங்களோடு பார்க்க அருமையாக உள்ளது.
எனது பாராட்டுக்கள் மஹி.
அன்புடன்,
அப்சரா.
vanathy said...
ReplyDeleteஜெய், இப்படி எடுத்தற்கெல்லாம் அடுத்த பதிவு வரும், அடுத்த பதிவு வரும்ன்னு சொல்லி திரியப்படாது. ஓக்கை????
//// haa..haa... haa.. shake hands vaanssssss...
//ஜெய், இப்படி எடுத்தற்கெல்லாம் அடுத்த பதிவு வரும், அடுத்த பதிவு வரும்ன்னு சொல்லி திரியப்படாது. ஓக்கை????//
ReplyDeleteஇப்படி சமாளிச்சிட்டு திரும்ப மலை உச்சிக்கி போலாமுன்னு பார்த்தால் விட மாட்டீங்க போலிருக்கே ..!! அவ்வ்வ்வ் :-)
ஜெய் அண்ணா,தேங்க்ஸ்!
ReplyDeleteஇமா,தேங்க்ஸ் இமா! கட்டாயம் வாங்க.இன்னும் அழகான இடங்களும் இங்கே நிறைய இருக்கு.
தேங்க்ஸ் அகிலா!
பாராட்டுக்கு நன்றிங்க சரஸ்!
வெகுநாட்களுக்குப் பின் உங்களைப் பார்த்தது மகிழ்ச்சி நித்து! :)
சிவா,எனக்கு ஸ்டில்போட்டோஸ் ஏதோ கொஞ்சம் சுமாரா எடுக்கத்தெரியும்.அதுக்குள்ள ஒளிப்பதிவாளர்னு சொன்னா எப்படி? :) தேங்க்ஸ் சிவா!
ஆமாம் ஆசியாக்கா,எனக்கு தினமும் பார்த்தாலும் பார்த்துகிட்டே இருக்கணும் போல இருக்கும்.அதுக்குத்தான் இப்படி போட்டோக்களா சேமிக்கிறேன். :)
பாலா,எனக்கும் அந்த காம்பினேஷன் ரொம்ப பிடிக்கும்,ஆனா என்னால ஒரிஜினல் கலரை கேப்ச்சர் பண்ண முடியலை/தெரியலை! :-|
அதிரா,இதெல்லாமே இப்போ,இங்கேதான் பூத்திருக்கு.:)
ReplyDeleteயு.எஸ்.ல ஈஸ்ட் கோஸ்ட்ல(வானதி-சந்தனா இவிங்கள்லாம் இருக்கும் இடம்,:)) இன்னும் வின்டர்தான்.எங்களுக்கும் இன்னும் கொஞ்சம் குளிர் இருக்கு.இந்த க்ளைமேட்டில்தான் இப்படி அழகுப்பூக்கள் வருமாம்,இன்னும் கொஞ்சம் வெயில் அதிகமானா வேற வெரைட்டி பூக்கள் நடுவாங்கன்னு நினைக்கிறேன்.
வசந்தமாளிகைல பேயிருக்கும்னு சமீபத்திலேதான் தெரிந்துகிட்டேன்.;) நாங்கள்லாம் அதை பேய்வீடுன்னுதான் சொல்லுவோம். இங்கே வசந்தம் என்றால் வசந்தம் மட்டுமே!
நீங்க மாமிக்கு கர்ர்ர்ர்ர்ர்ர் சொல்ல,மாமி ஜெய்-க்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்ல..ஜெய் யாருக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லறார்?? சொன்னபடியே 24 மணித்தியாலம் கழித்து வந்ததுக்கு நன்றி அதிரா! :)
ப்ரியா,ரசித்தமைக்கு நன்றி ப்ரியா!
குறிஞ்சி,நன்றி!
மஹா,/பார்த்துகிட்டே இருக்கனும் போல இருக்கு../ஆஹா,எனக்கும் அப்படியே!
சேம் பின்ச்!!:)
சாரு,அதெப்படியோ எத்தனை கலர்ல பூ இருந்தாலும், மஞ்சள்தான் என்னை இழுக்குது.:) தேங்க்ஸ் சாரு!
சௌம்யா,தேங்க்ஸ் சௌம்யா!
காயத்ரி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
கவுண்டரய்யா,உங்களுக்குப் பிடித்த பாட்டா இது? வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
வானதி,/அங்கே அகோரி/அகோரி,அப்படின்னா என்னது?? வேப்பமரமே பார்சலா? நல்லாத்தான் யோசிக்கிறீங்கப்பா! :)))))
ஸாதிகாக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ReplyDelete/ஜெய் க்கு வே.ம சரிவராது, ஒரு சிஷ்யை அல்லது ஒரு அயகான நேர்ஸ்ஸ்ஸ்.. அனுப்பினால்தான் சரிவரும்../ இதை ஜெய் அண்ணாவின் பெட்டர்ஹாப் பாக்கணுமே!!LOL!ROTFL!! :D
அதிரா,சும்மா கலக்கறீங்க போங்க!
ஆமையை எப்புடிப்போட்டு அடிச்சாலும் தாங்கும்ணு சொன்னீங்க ஜெய் அண்ணா,கரெக்ட்டாப்போச்சே?! சைக்கிள் கேப் கிடைச்சாலும் உங்களை கும்மு-கும்மு-கும்முன்னு கும்மறாங்களேஏஏஏ!!
/இப்படி எடுத்தற்கெல்லாம் அடுத்த பதிவு வரும், அடுத்த பதிவு வரும்ன்னு சொல்லி திரியப்படாது. ஓக்கை????/ கிக் கிக் கி! நோ கமெண்ட்ஸ்!
தக்குடு,ஐஸ் வைச்சாலே தாங்காது,இப்படி இமயமலையையே என் தலைல வச்சா நான் என்னத்துக்காவேன்?! ஹச்,ஹச்,ஹச்சூ!:)
/"எனக்கு வெளில போனும் கொஞ்சம் எழுந்து வாங்கோ! நீங்க வரலைனா நான் தனியா போய்ட்டு வந்துடுவேன்" அப்பிடின்னு தானே??..;))/எக்ஸாட்லி!நான் எழுதினதை பக்கத்திலே இருந்து பார்த்தமாதிரியே கரெக்ட்டா சொல்லிட்டே தக்குடு! :)
தேங்க்ஸ்!!
ப்ரியா,அந்தப்பாட்டு என்னவரின் ஃபேவரிட் பாட்டு! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா!
தேங்க்ஸ் வேணி!
/ஆனால் வளைத்து வளைத்து இது போன்று படம் பிடித்தது கிடையாதுங்க.../:) அப்ஸரா,என்னவர் சொல்றமாதிரியே சொல்றீங்க! இங்கே ஓரொரு சீஸனுக்கும் விதவிதமா பூக்கள் வரும்.எனக்கு நல்லாவே பொழுது போகும்.நன்றிங்க,வருகைக்கும் கருத்துக்கும்!
ReplyDelete/இப்படி சமாளிச்சிட்டு திரும்ப மலை உச்சிக்கி போலாமுன்னு பார்த்தால் விட மாட்டீங்க போலிருக்கே ..!! அவ்வ்வ்வ் :-)/ இப்ப கடலடியில் இல்லையா? மலையுச்சிக்கு போறீங்களா? எங்கே போனாலும் விடாம வருவம்ல மகளிரணி எல்லாரும்!! :)
( Agoris )
ReplyDeleteஜெய், அந்த லிங் கொஞ்சம் சொல்லுங்களேன். ஆனா பார்க்க முன்னாடி அதன் மீனிங் தெரிஞ்சுகிட்டு பாருங்கப்பா. பிறகு ஈஸ்ட் கோஸ்ட் முழுக்க என்னைத் தேடி அலைஞ்சா நான் பொறுப்பில்லை.
வான்ஸ்..அதெல்லாம் மஹி தைரியச்சாலிதான் முழு வீடியோவையும் பார்த்துட்டு இங்கே சொல்லுவாங்க பாருங்க ...!! :-)))
ReplyDeletehttp://www.myspace.com/video/vid/51330032#pm_cmp=vid_OEV_P_P
என்ன சொல்லுவீங்கதானே..!!
//அதெல்லாம் மஹி தைரியச்சாலிதான் முழு வீடியோவையும் பார்த்துட்டு இங்கே சொல்லுவாங்க பாருங்க ...!! :-)))
ReplyDelete//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! எதுக்கு ஜெய் அண்ணா இப்பூடி புரளியெல்லாம் கிளப்பி விடறீங்க?! அந்த வீடியோவ 10 செகண்ட் பாத்ததுமே என்னன்னு தெரிஞ்சுடுச்சு.அத்தோட க்ளோஸ் பண்ணிட்டேன்.ஹிஹி!
நான் கடவுள்----இல்லைங்கோஓஓஓஓ!