முதலில் ஆர்வமாகத் துப்பறிந்த சாம்(பி)புகள், டிடெக்டிவ் விவேக்-ரூபலாக்கள், பரத்-சுசிலாக்கள், நரேன் -வைஜெயந்திகள் அனைவருக்கும் நன்றிகள்!!
குட்டிப்பெண்ணை வைத்துக்கொண்டு சமையலில் ஷார்ட்-கட் கண்டுபிடிக்க வேண்டிய தருணம் வந்ததெனக்கு. குக்கர் சத்தம்-மிக்ஸி சத்தம் இவையும் கேட்கக்கூடாது என கடும் வைராக்கியம் கொண்ட லயா விழித்திருக்கையில் முடிந்த அளவு சமையலைச் செய்துவைக்கலாம் என இறங்கியதன் விளைவுதான் நீங்கள் படத்தில் பார்ப்பது. சரி..சரி..பீடிகை போதும், படத்திலிருப்பது என்னன்னா.....
வெயிட்..பதிவைப் படித்த யாரும் கையில் கிடைத்ததை எடுத்து அவங்கவங்க கணிணியை அடித்து உடைச்சிராதீங்க...எங்கூருக்கு ஆட்டோ-வும் அனுப்பிராதீங்க, ஜஸ்ட் ஃபார் ஃபன், ஓக்கே??? ;)
படத்திலிருக்கும் வாத்துக்கள், அரைத்த தேங்காய் வாத்துக்கள்! :)))) மொத்தமாகத் தேங்காயை மிக்ஸியில் அரைத்து, ஐஸ் க்யூப் தட்டுகளில் ஊற்றி, ஃப்ரீஸரில் வைத்து உறையவைத்து எடுத்து வைத்திருக்கிறேன். உறைந்தவற்றை எடுத்து ஸிப்-லாக் கவரில் போடப் போகையில் சட்டென்று க்யூட்டான வாத்துக்கள் கவனத்தைக் கவர...படமெடுத்து இங்கே வந்து உங்களையும் படுத்தியாயிற்று!!

தேங்காய் க்யூப்ஸ் ரெடி...குருமாவிற்கு, அரைத்து விட்ட குழம்பிற்கு..டக்கு-டக்குன்னு ஓரொரு டக்(இங்க duck-க்குங்க! :)) எடுத்துப் போட்டுக்கலாம்னு ஒரு நப்பாசையில் செய்திருக்கிறேன். ஹிஹிஹ்ஹி!
பி.கு. வாத்துவடிவ ஐஸ்கியூப் டிரேக்கள் டாலர் ஷாப்பில் வாங்கியது.
I think, it is cookie dough in duck shape.we have to bake it.
ReplyDeleteபாப்பாவுக்கு வீட்டிலேயே குக்கீ செஞ்சு குடுக்கப் போறீங்க. மாவை 'டக்' ஷேப்டு கட்டரால கட் பண்ணி வச்சிருக்கீங்க. அதை 'பேக்' பண்றதுக்கு
ReplyDeleteநம்ம ஊர் (படங்களில் வரும்) டாக்டர் மாதிரி 24 மணி நேரம் கழிச்சுதான் சொல்ல முடியும்னு சொன்ன பிறகு வெயிட் பண்ணித்தானே ஆக வேண்டும்!
இருவரின் விடையும் சரியான பதிலின் பக்கத்தில் கூட வரவில்லைங்க ஶ்ரீ மற்றும் சித்ரா அக்கா!! வாத்து வடிவம்னு மட்டும் கரெக்ட்டா கண்டுபடிச்சிருக்கீங்க! ;)
ReplyDeleteநன்றிகள்!!
எனக்கு இது கொழுக்கட்டை மாதிரி தெரியுது மகி.வாத்து (வித்தியாசமா இருக்கட்டுமேன்னு) வடிவத்தில செய்திருக்கிறீங்களா.?
ReplyDeleteவெந்திருந்தா ஏதோ ஒரு மாவின் இட்லின்னு சொல்லலாம், ஹ்ம் ...... ஒருவேளை வாத்து டிசைனில் கட் செய்யப்பட்ட சத்துமாவு கொழுக்கட்டை ?
ReplyDeletePriya & Chitra akka, nope! ;)
ReplyDeletecookies thaanee
ReplyDeleteKhulfi ice creams from duck shape moulds?
ReplyDeleteவட்டலப்ப மாவை 'வாத்து மோல்டில் ஊற்றி செய்த மாதிரி இருக்கு மகி. சரியா..
ReplyDeleteஇது சைனீஸ் /வியட்நாமிஸ் /கொரியன் உணவு
ReplyDeleteஸ்டீம் பண்ணி தான் சாப்பிடனும்
ரெட் பீன்ஸ் fill பண்ணியிருக்கு ஆங்கானே தெரியுது :)
நீங்க டக் ஷேப்புக்கு செஞ்சிருகீங்க ..இது நான் சாப்பிட்டிருகேனே :)
நான்தான் கண்டுப்புடிச்சேன் எனக்குதான் பரிசு :)
steamed red bean dumplings :)
ReplyDeleteHome made marshmallow !
ReplyDeleteromba cute irukku mahi...idlya....Where did u find these moulds...
ReplyDeleteInteresting to see all the comments, but no one has found it yet!! :) ;)
ReplyDeleteஇப்படி இருந்தால் சாப்பிட மனம் வராதே...!
ReplyDeleteஎங்கெல்லாம் இருந்து ஐடியா வருது பாருங்க. 'ஷேப்'ப பாத்துட்டு பாப்பாவுக்கான ஏதோ சாப்பிடும் பொருள்னு நெனச்சு ......நேத்துலயிருந்து யோசிச்சு ........ யோசிச்சு ....... !
ReplyDeleteகருத்துக்கள் தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!
ReplyDelete~~
@ஜலீலாக்கா, உங்க ப்ளாக் பார்த்துத்தானே நான் அரைச்சு வைச்சிருக்கேன், உங்களாலும் கண்டுபிடிக்க முடிலையா!? :)
@கீதா, இது இங்கே 99சென்ட் ஸ்டோரில் வாங்கிய ஐஸ் கியூப் டிரேக்கள்.
@சித்ராக்கா, ஜலீலா அக்கா ப்ளாகில்தான் இந்த ஐடியா கிடைச்சது. ஊருக்கு போன் பண்ணிய போது அம்மாவும் இதையே சொன்னாங்களா அதான் டிரை பண்ணிப் பார்ப்போமேன்னு...! :)
கர்ர்ர்ர்ர்ர்ர் :) என்னைய இன்டர்நேஷனல் லெவலில் think பண்ண வச்சதுக்கு உனக்கொரு பரிசு மெயிலில் அனுப்பிருக்கேன் :)
ReplyDelete@chitra sundar ...நீங்கள்ளாவது பரவாயில்லை ..நான் சைனீஸ் எல்லாம் மொழி பெயர்த்து okara dousha பேர் எல்லாம் சொன்னேன் .அவ்வவ்
hello mahi,
ReplyDeleteYour recipies are copied in http://thisaikal.com/news/27 website.
Do you know this?
@Anony, I didn't know, thanks for the info.!
ReplyDelete;)) Great idea.
ReplyDeleteLove u Laya. Keep it up. ;))
Mahi, reading your post with a smile, especially the last line ' inga duck ', :-))
ReplyDeleteAngel akka, Imma & Hema, thanks for the feedbacks! :)
ReplyDeleteமகி... நீங்க ஏன் இதை ஒரு பிஸ்னஸா பண்ணக் கூடாது!! கலாய்க்கல. உண்மைலயே கேட்கிறேன்.
ReplyDelete//கலாய்க்கல. உண்மைலயே கேட்கிறேன்.// grrrrrrrr!
ReplyDelete