இந்த வருஷம் வசந்தம்(மார்ச் 20) வருவதற்கு ஒரு நாள் முன்பாகவே ஹோம் டிப்போ-விலிருந்து மலர்ச்செடிகளை வீடு சேர்த்துவிட்டேன். :) கடைக்குள் நுழைந்ததும் கண்ணைக் கவர்ந்து மனதைக் கட்டிப்போடும் வண்ணம் வண்ண வண்ணப் பூக்கள்!! எதை வாங்க எதை விட என ஒரே குழப்பம்..எல்லாவற்றையும் வாங்கிப்போய்விடலாமா என அலைபாயும் மனம்..வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் தொட்டில்ப்பூவை நினைத்து அவசரஅவசரமாக வாங்கிவந்த மலர்ச்செடிகள்தான் நீங்கள் பார்ப்பவை! Viola, Marigold, Snapdragon, Poppy, Matthiola என்று 5 வகை மலர்கள் வீடு வந்தன.
இந்தப் பதிவில் வயோலா மலர்களின் படங்களைப் பகிர்கிறேன். பல பூக்கள் இருந்தாலும், இந்த வயோலா பூக்களின் மீது ஏதோ ஒரு தனிப்பாசம்! ;) அவற்றைப் பார்க்கையில் "pug" வகை பைரவர்களின் முகச்சாயல் தெரியும் எனக்கு. மனித முகம் போல இருப்பதாகவும் தோன்றும் சில நேரங்களில்..
மஞ்சள், வெள்ளை, ஆரஞ்ச்+வயலட் என பல நிறங்களில் வயோலாக்கள் இருந்தன. வழக்கம் போல குழம்பித் தெளிந்து வெள்ளைப் பூக்களும், இரு வண்ணப் பூக்களும் வாங்கிவந்தேன்.
பூத்தொட்டியில் சில கேரட் செடிகள் வளர்வதைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தேன், புதுச் செடிகள் நடுகையில் அவற்றைப் பறித்தபோது...
3 கேரட்டுகள் கிடைத்தன! :)
இந்தப் பதிவில் வயோலா மலர்களின் படங்களைப் பகிர்கிறேன். பல பூக்கள் இருந்தாலும், இந்த வயோலா பூக்களின் மீது ஏதோ ஒரு தனிப்பாசம்! ;) அவற்றைப் பார்க்கையில் "pug" வகை பைரவர்களின் முகச்சாயல் தெரியும் எனக்கு. மனித முகம் போல இருப்பதாகவும் தோன்றும் சில நேரங்களில்..
மஞ்சள், வெள்ளை, ஆரஞ்ச்+வயலட் என பல நிறங்களில் வயோலாக்கள் இருந்தன. வழக்கம் போல குழம்பித் தெளிந்து வெள்ளைப் பூக்களும், இரு வண்ணப் பூக்களும் வாங்கிவந்தேன்.
படங்களில் மற்ற பூக்கள் தெரிந்தாலும், வயோலாக்கள் மட்டுமே என் கண்ணுக்குத் தெரிகின்றன! ;) அடுத்து வரும் படத்தில் கூடவே வெங்காயத்தாள் நாற்றுகள் தெரிகின்றன..அது கண்ணில் பட்டதும் கொஞ்சம் கொசுவர்த்தி சுற்ற ஆரம்பிக்கிறது மனது!
கடையிலிருந்து வாங்கி வந்த வெங்காயத்தாள்களின் வேரை மட்டிலும் நட்டு வைத்து தளிர்த்தவை அறுவடை செய்யப்பட்டு ஒரு ஃப்ரைட் ரைஸில் உபயோகமும் படுத்தப்பட்டன.
இப்போது மீண்டும் துளிர்த்த நாற்றுகளில் மொட்டுகள் கட்டியிருக்கின்றன. வெங்காயத்தாளை இப்போதே பறித்துக்கொள்ளலாம் அல்லது இனி பூக்கள் மலர்ந்தபின் விதைகள் எடுக்கலாம், அத்தோடு சில காலம் கழித்த பின்னரே மீண்டும் வெ.தாள்கள் கிடைக்கும் என்று தகவல் கிடைத்தது. அனேகமாக வெங்காயப்பூக்கள் மலரும் என்றே நினைக்கிறேன், இன்னும் செடிகளைப் பறிக்கவில்லை.
இறுதியாக மீண்டும் ஒரு வயோலா க்ளோஸ்-அப் உடன் பதிவை நிறைவுசெய்கிறேன். நன்றி! :)
வயோலா மலர்கள் அழகு !! எனக்கு ஆரஞ்சு வயலட் ரொம்ப பிடிச்சிருக்கு ....pug face :) geno paiyan face :)
ReplyDeleteஎதைப் பார்த்தாலும் பப்பீஸ் நினைவுதானா! ;)
ReplyDeleteநிறையப் பூத்தால் அவற்றையெல்லாம் சேகரித்து பூக்களை நீக்கிவிட்டுத் தண்டுகளைச் சமைக்கலாம். இதைத்தான் எங்கள் ஊரில் 'வெண்காயத்தாள்' என்று விற்பார்கள்.
இங்கு மீந்திருந்த காரட் கூட இப்படித்தான் இருக்கிறது. கலர் கொஞ்சம் ப்ரைட். ஆனால்... ட்ரிக்ஸியாருக்கு கடை காரட்தான் வேண்டுமாம். வீட்டில் விளைந்த இலை மட்டும் சாப்பிடுவார். ;)
//pug face :) geno paiyan face :)// அக்கா ஜீனோ = pug+Chihuahua, அவருக்கு பக்-இனத்தவரின் கால்களும், Chihuahua இனத்தவரின் முகமும் வந்திருக்கு! :)
ReplyDeleteஎனக்கும் ஆரஞ்சு+வயலட் ரொம்ப பிடித்தது, போன சீஸனுக்கும் வாங்கியிருந்தேன், இந்த முறையும் வாங்கிட்டேன். :)
நன்றிக்கா கருத்துக்கு!
~~
இமா, நான் நட்டு வைச்சது ஒரு 10 வெங்காயத்தாள்தான், நிறையவெல்லாம் வரல்லை, அடுத்த முறை 2-3 கட்டு வாங்கிவந்து நடப்போறேன். அப்ப நீஙக் சொன்ன மாதிரி நிறைய தண்டுகள் கிட்டும்! ;)
இங்கே கேரட் இனிப்பில்லை, மே பி உங்க வீட்டிலும் அப்படித்தானிருக்குமோ என்னவோ! அதான் டிரிக்ஸியம்மா வேணாம்ன்றாங்க! ஹஹ!
நன்றி இமா கருத்துக்கு!
சிரிக்கும் மலர்கள்கூடி
ReplyDeleteசிங்காரிக்கும் பகிர்வுகள்.. அழகு..
அழகழகான பூக்கள். பார்த்து ரசிப்பதோடு சரி. வாங்குவதில்லை. இங்கே இவையெல்லாம் பூத்து முடியும் தருவாயில் உள்ளன. இப்போ அடிக்கிற வெயில் கோடையையே மிஞ்சிவிடும்போல் உள்ளது.
ReplyDeleteகேரட் நல்லா குண்டா இருக்கே ! வெங்காயத்தாள் சாதம் நல்லா கலர்ஃபுல்லா இருக்கு.
அழகா இருக்கு மகி பூந்தொட்டி பூக்கள்.ஆரஞ்சு-வயல்ட் வயோலா அழகோஅழகு.
ReplyDeleteப்ரைட் ரைஸ் ம் பசியை தூண்டுகிறது. நன்றி பகிர்விற்கு.
வயோலா ,பார்க்க மிகவும் அழகு,அனைதுமே சூப்பர் தான்,அந்த ஃப்ரைட் ரைஸ் எனக்கெ எனக்கு.
ReplyDeleteவயோலா பூக்கள் பார்க்க மிக அழகு. மிக அழகிய படங்கள் மஹி.. தொட்டில் மலரும் சுகம் தானே!
ReplyDeleteSuper. Here spring hasn't arrived yet. Weather is very strange this year. I lost interest in gardening. Let's see.
ReplyDeleteஇராஜேஸ்வரி மேடம், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
ReplyDelete~~
சித்ராக்கா, இங்கும் வெயில்ல்ல்ல்ல்ல்ல்தான்! பல பூக்கள் வெயில் தாங்காம கருகிட்டாங்க! :-| எனக்கு காய்ச்செடிகளை(முக்கியமா, தக்காளீ!;)) வளர்ப்பதை விட பூக்கள் வளர்ப்பதே விருப்பம்..பூக்கள் இதுவரை என்னை ஏமாற்றவில்லை! :))))
கேரட் குண்டா இருக்கு ஆனா இனிப்பில்லை! ;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா!
~~
அம்முலு, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
ஆசியாக்கா, மீண்டும் உங்களை இங்கே பார்ப்பது மகிழ்ச்சி..கருத்துக்கு நன்றி அக்கா..ப்ரைட் ரைஸ் உஙளுக்கேதான்! :)
~~
ராஜி மேடம், தொட்டில் மலரும் சுகம்தான்! கருத்துக்கும், அன்பான விசாரிப்பிற்கு நன்றிகள்!
~~
வானதி, வேலைக்குப்போனதும் இந்த வேலைகளில் ஆர்வம் குறைஞ்சு போச்சா உங்களுக்கு? :) வெதர் சரியானதும் தொடருங்க தோட்டத்தை. நன்றி வானதி!
Lovely pictures, and a pretty post, looking for the pug face in those beautiful violas..
ReplyDeleteவயோலா புதுசாயிருக்க பெயர். லயாக்கு அடுத்தபடிதான் வயோலா. அன்புடன்
ReplyDelete