பிறந்திருக்கும் "ஜய" வருடம் அனைவருக்கும் நன்மை பயக்க வாழ்த்துக்கள்! தமிழ்ப்புத்தாண்டின் முதல் பதிவாக ஒரு இனிப்புடன் துவங்கலாம். :)
தேவையான பொருட்கள்
ரொட்டித்துண்டுகள் -4 (நான் ஹோல்க்ரெய்ன் ரொட்டி உபயோகித்திருக்கிறேன்.)
வெண்ணெய்-1டேபிள்ஸ்பூன்
கண்டென்ஸ்ட் மில்க்-1/4கப்
முட்டை-2
பால்-1/2கப்
உலர் திராட்சை- ஒரு கைப்பிடி
சின்னமன் பவுடர்-1/4டீஸ்பூன்
சர்க்கரை-1டேபிள்ஸ்பூன்
செய்முறை
ரொட்டியை சிறுதுண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
மைக்ரோவேவ் சேஃப் பாத்திரத்தில் கண்டென்ஸ்ட் மில்க் + வெண்ணெய் சேர்த்து 30 விநாடிகள் சூடுபடுத்தவும். வெண்ணெய் உருகிவிடும், அதனை கண்டென்ஸ்ட் மில்க்குடன் சேர்த்து நன்றாக கலந்து ஆறவைக்கவும்.
ஆறியதும் அதனுடன் முட்டைகளை உடைத்து ஊற்றி கலக்கவும்.
அதனுடன் பால் சேர்த்து கலக்கவும்.
நறுக்கிய ரொட்டித்துண்டுகள், பட்டை பொடி(சின்னமன் பவுடர்), உலர் திராட்சை இவற்றை பால்-முட்டை கலவையுடன் சேர்த்து கிளறிவிடவும்.
Pudding செய்யும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி ப்ரெட் கலவையை ஊற்றவும்.
மேலாக இன்னும் சிறிது கண்டென்ஸ்ட் மில்க்கை ஊற்றி, சர்க்கரையைத் தூவிவிடவும்.
350F ப்ரீஹீட் செய்யப்பட்ட அவன் -ல் Pudding பாத்திரத்தை வைத்து 40-45 நிமிடங்கள் பேக் செய்யவும்.
சுவையான சாஃப்ட்டான Pudding ரெடி. ஆறீயதும் கத்தியால் துண்டுகள் போட்டு ஐஸ்க்ரீம் அல்லது விப்பிங் க்ரீம் இவற்றுடன் பரிமாறவும்.
தட்டில் இருப்பதில் 80% எனக்கு..20%
ஜீனோவுக்கு!
நீங்களும் செய்து பாருங்க.. நன்றி! :)
உங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .
ReplyDeleteSuper recipe. Happy new year.
ReplyDeleteபாக்கவே சூப்பரா இருக்கு மகி. ஜீனோவின் பார்வையும் அதை உறுதி செய்யுதே !
ReplyDeleteஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !
This used to be my favourite. hm! அது ஒரு காலம்!! ;)
ReplyDelete