Saturday, June 14, 2014

முள்ளங்கி-குடைமிளகாய் பொரியல் / Radish-Capsicum Stir-fry

முள்ளங்கியைப் பொரியல் செய்வதா??  அதும் குடைமிளகாய் கூடவா??-என பலர் எண்ணக்கூடும், ஆனால் "மாத்தி யோசி"ச்சு இப்படி ஒரு புதிய காம்பினேஷனில் இறங்கினேன். ஏற்கனவே சிவப்பு முள்ளங்கி பொரியல் பலமுறை செய்திருப்பதால் கொஞ்சம் தைரியமாகவே வெள்ளை முள்ளங்கியில் செய்யத் தொடங்கினேன். உணவு வகைகள் வண்ணமயமாக:) இருக்கவேண்டும் என்ற ஆர்வக்கோளாறு கடந்த வருஷத்தில் இருந்து பிடித்துக்கொண்டதில் கண்ணில் படும் பளிச் காய்களை எல்லாம் ஒன்றாக்கி ரணகளப்படுத்திட்டிருக்கேன், அது வேற கதை! ;)  நீங்களும் மானாவாரியான காய்கறிகளை விதவிதமான காம்பினேஷன்ல சமைச்சுச் சாப்பிடுங்க, புதுருசிகளை சுவைக்க வாய்ப்பும், அதனால ஒரு சந்தோஷமும் கிடைக்கும். :)
தேவையான பொருட்கள்
முள்ளங்கி-11/2( ஒரு கப் அளவு நறுக்கிய முள்ளங்கி)
குடைமிளகாய்-1(விரும்பிய வண்ணத்தில்)
நறுக்கிய வெங்காயம்-2 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய்-2(காரத்துக்கேற்ப)
தேங்காய்த்துருவல்-1டேபிள்ஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு-தலா 1/2டீஸ்பூன்
உப்பு
எண்ணெய் 

செய்முறை
முள்ளங்கியை கழுவி, தோல்சீவி விரும்பிய வடிவில் நறுக்கவும்.
குடைமிளகாயையும் கழுவி துண்டுகளாக்கிக் கொள்ளவும். 
வெங்காயம்-பச்சைமிளகாய் நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து, கடுகு தாளித்து க.பருப்பு-உ.பருப்பு சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
அதனுடன் வெங்காயம்-பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, நறுக்கிய காய்களையும் சேர்க்கவும்.
கிளறிவிட்டு, கால்கப் தண்ணீரும் தேவையான உப்பும் சேர்த்து வேகவிடவும்.
காய்கள் மெல்லியதாக நறுக்கியிருப்பதால் விரைவில் வெந்துவிடும். குழைய வேகவிடாமல் காய் வெந்ததும் தேங்காய்த்துருவல்  சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான கலர்ஃபுல் பொரியல் ரெடி. எல்லா வகையான சாதங்களுக்கும் பொருத்தமாக இருக்கும்.

14 comments:

  1. மாத்தி யோசித்ததை செய்து பார்க்க வேண்டும்... நன்றி...

    ReplyDelete
  2. நல்ல ஐடியா !இப்படி சமைப்பதால் சுவை மட்டும் அல்ல சத்தும் அதிகமாகக கிடைக்கும்.

    ReplyDelete
  3. laya settai panna aarambithu vitargala? romba busy aagiteengala mahi?lovely clicks....coloful and healthy poriyal.

    ReplyDelete
  4. மாத்தி யோசிச்சாலும் நல்லாஇருக்கு. எங்க வீட்டு முள்ளங்கியில் செய்திடுவோம். நன்றி மகி.

    ReplyDelete
  5. Never tried this combo, looks so colorful and nice..

    ReplyDelete
  6. Never even thought of making mullangi poriyal, I use it only for sambar. Lovely combo, nice version, thanks for sharing.

    ReplyDelete
  7. மகி,

    கலர்ஃபுல் பொரியல் கண்ணைப் பறிக்குது. நீங்க மாத்தி யோசிச்சதால எங்களுக்கும் வித்தியாசமான ஒரு பொரியல் கெடைச்சிருக்கு.

    ReplyDelete
  8. அடடா.. மிக அருமையாக இருக்கே... நிச்சயம் செய்து பார்த்து விடுகிறேன்.
    மிக்க நன்றி நல்ல பகிர்வு! வாழ்த்துக்கள்!

    மகி!!!
    உங்களைத் தொடர் பதிவு ஒன்றிற்கு அழைத்துள்ளேன்!
    வருகை தாருங்கள்! மிக்க நன்றி!

    ReplyDelete
  9. ஆஹா அருமை. நான் குடைமிளகாய்க்கு மஸ்ரூம்தான் சேர்த்து இப்படி பொரியல்போல.. சோயா சோஸ் சேர்த்துச் செய்வது வழக்கம். முள்ளங்கி இதுவரை வீட்டில் சமைத்ததில்லை :(.

    ReplyDelete
  10. //முள்ளங்கியைப் பொரியல் செய்வதா?? அதும் குடைமிளகாய் கூடவா??//ன்னு நினைச்சுட்டே படிக்க ஆரம்பிச்சா... அவ்வ்! அதையே எழுதி வைச்சிருக்கீங்க மகி. ;)
    //விரும்பிய வடிவில் நறுக்கவும்.// ம். பூக்கள் போல குக்கி கட்டர் இருக்கு. நறுக்கிரலாம்.
    //க.பருப்பு-உ.பருப்பு// ;))) கு.மிளகாய், ப.மிளகாயை கவனிக்காம விட்டுட்டீங்க. ;D

    ReplyDelete
  11. ஏன் முள்ளங்கியில் பொரியல் நல்லதானே இருக்கும்.

    ஆனால் கூட ரெட்கேப்சிகம் சேர்த்த காம்பினேஷன் சூப்ப்ர் மகி..

    ReplyDelete
  12. முள்ளங்கி பொரியல் செய்ததில்லை. செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

    நான் முள்ளங்கி, குடமிளகாய், காரட் என மூன்றும் சேர்த்து சாம்பாரில் போடுவேன். இரண்டு மூன்று காய்களை சேர்த்து சாம்பாரில் போடுவது சுவையும் கூட்டுகிறது. தில்லியில் முள்ளங்கியை தாபாக்களில் பச்சையாக சாலட்டில் சாப்பிட்டிருக்கிறேன். முள்ளங்கி பராட்டாவும் எப்போதும் செய்வது தான். இனி பொரியலும் இடம்பெறும். நன்றி.

    ReplyDelete
  13. கருத்துக்கள் தந்த அனைவருக்கும் இனிய நன்றிகள்!

    @இமா, // பூக்கள் போல குக்கி கட்டர் இருக்கு. நறுக்கிரலாம்.// அவ்வ்வ்வ்...நறுக்கிட்டு மறக்காமப் படமெடுத்துட்டு அப்புறமா சமையுங்கோ, என்ன? :)
    // கு.மிளகாய்,// இன்னும் இந்த ஷார்ட்ஃபார்ம் ரொம்பவும் வழக்கத்துக்கு வர்லை, இல்லன்னா "கவனிச்சிருப்பேன்"!! ஹிஹி...

    @அம்முலு, // எங்க வீட்டு முள்ளங்கியில் செய்திடுவோம்.// கலக்குங்கோ! என்ஸொய்! :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails