Sunday, June 8, 2014

கம், கம், கேப்ஸிகம்! :)

கடந்த வருடம் வாங்கிய குடைமிளகாய்ச் செடி, இந்த முறை பல பூக்கள் பிடித்து பரபரப்பாக:) வளரத்துவங்கியது. பூக்கள் பலவும் பிஞ்சாகி வளரவும் ஆரம்பித்தன. 
பிஞ்சுகள் விட்டு சந்தோஷமாக வளர்ந்த செடி, வசந்தத்திலேயே ஒரு முறை வந்த கோடை வெயில் தாக்குதலில் மாட்டியது. மிளகாய்ப் பிஞ்சுகள்/காய்கள் விரைவில் முகம் சிவந்து நிறம் மாற ஆரம்பித்துவிட்டன.
கூடவே ஏதோ பூச்சிகள் வேறு தொந்தரவு செய்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். அவ்வப்போது தண்ணீர் ஊற்றுவதை தவிர வேறு ஏதும் செய்யவில்லை இந்த அப்பாவிச் செடிக்கு. அதுவாக வளர்ந்தது பாவம்..
பழுத்த மிளகாய்ப் பழங்களைப் பறித்தாயிற்று.  விதவிதமான வடிவங்கள் இருந்தாலும் அவையும் ஒரு அழகாகத் தெரிகின்றன எனக்கு.  தண்ணீர் ஊற்றியதைத் தவிர ஏதும் செய்யாத எனக்கு செடி தந்த அன்பளிப்புகள் என்பதாலோ? :)
மிளகாய்களை குழம்பாக்கி பிரியாணிக்கு சைட்-டிஷ் ஆக ஒரு நாளும்...
2 சிறிய மிளகாய்களை முழுதாக சாம்பாரில் போட்டும் (படமெடுக்க மறந்தேன்!! ;)), 
முள்ளங்கியுடன் கலந்து பொரியல் செய்தும்..
ரசித்து ருசித்தோம். ருசி அபாரமாக இருந்தது. மிளகாய் குழம்பு ரெசிப்பி இங்கே, பொரியல் ரெசிப்பி விரைவில் வெள்ளித் திரையில் :)  வெளியாகும்! நன்றி, வணக்கம்!

14 comments:

  1. அன்பளிப்புகள் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மிளகாய் பழ குழம்பும் பிரியாணியும் சாப்பிட அழைக்குதே... எல்லா பழமும் சிவக்காமல் ஒரு சிலது கருப்படிச்சிருக்கே மகி.. அந்த பழம் கசக்குமே.. இல்ல படத்துல அப்பிடி தெரியுதா.. நாங்க மீல் மேக்கர் போட்டு இந்த பழம் சேர்த்து குழம்பு வைப்போம். வட்ட வட்டமா நறுக்கிய முள்ளங்கி பொரியலும் சூப்பர்.

    ReplyDelete
  3. சூப்பர் மகி. வித்தியாசமா ஷேடட் கலரில வித்தியாசமா இருக்கு உங்க கேப்ஸிகம். ரெசிப்பு விரைவில் போடுங்க .வாழ்த்துக்கள் .நன்றி.

    ReplyDelete
  4. //படத்துல அப்பிடி தெரியுதா.// ஆமாங்க! கருப்பாக இல்லை எதுவும், கசக்கவும் இல்லையே! அது கருஞ்சிவப்பு, போட்டோல அப்படித் தெரியுதுன்னு நினைக்கிறேன்.
    மீல் மேக்கர்-காப்ஸிகம்? இந்த காம்பினேஷன் இன்னும் நான் டிரை பண்ணதில்லை.
    ரெசிப்பி போடுங்க, டிரை பண்ணிருவோம்.:)
    முள்ளங்கி -குடைமிளகாய் கலர் காம்பினேஷனுக்காகவே செய்தேன், சூப்பரா இருந்துச்சு.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க!
    ~~
    தனபாலன் சார், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

    ReplyDelete
  5. நன்றி அம்முலு..சீக்கிரமா போட்டுடலாம் ரெசிப்பி! :)

    ReplyDelete
  6. ஆஹா, இவ்வளவு(?) மிளகாய்களா ! ஆர்கானிக்'ல இப்படித்தான் குட்டிகுட்டியா மிளகாய் வருது. ஒரே சமயத்துல எல்லாத்தையும் பறிச்சு ஃப்ரிட்ஜ்ல வைக்காம தேவைக்குப் பறிச்சிருக்கலாமே.

    பிரியாணித் தட்டு சூப்பரா இருக்கு மகி. இனி வாங்கினா முள்ளங்கியோட சேர்த்துப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  7. அன்பின் மகி - கம்கம் காப்ஸிகம் பதிவு நன்று - நல்வாழ்த்துகள் =- நட்புடன் சீனா

    ReplyDelete
  8. வணக்கம் மகி! நலமா?
    உங்க குட்டித்தேவதை எப்படி இருக்கிறா?
    அப்புறம் அந்தச் செல்லக் குட்டி...

    அருமையான கேப்ஸிகம் அறுவடை!
    கண்களைக் கவரும் வண்ணம்!
    அத்தனையும் அற்புதம்!

    வாழ்த்துக்கள் மகி!

    ReplyDelete
  9. நம் வீட்டில் விளைஞ்சதைக் கொண்டு நாமே சமைத்து சாப்பிடுவது தனி ருசிதான். படங்களே நாவூற வைக்கின்றன. முள்ளங்கி பொரியல் சூப்பர்.

    ReplyDelete
  10. மிளகாய் செடி தந்த அன்பளிப்புகள் கண்ணைக் கவர்கின்றன.
    வாழ்த்துகள் தோழி.

    ReplyDelete
  11. கருத்துக்கள் தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

    @சித்ரா அக்கா, //ஒரே சமயத்துல எல்லாத்தையும் பறிச்சு ஃப்ரிட்ஜ்ல வைக்காம தேவைக்குப் பறிச்சிருக்கலாமே. // ஹி,,ஹி,,,ஆமாம்ல? மூளை வேலை செய்யலை, எல்லாத்தையும் ஒரே நாள்ல பறிச்சிட்டேன்! :)
    @இளமதி, நாங்கள் அனைவரும் நலம். குட்டிச்செல்லம்(ஜீனோ) சூப்பரா இருக்கார். :)

    ReplyDelete
  12. ரிவர்ஸ்ல வரேன். சோ...வெள்ளித்திரை... படிச்சாச்சு.

    ReplyDelete
  13. இமா, நன்றி! :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails