Wednesday, June 25, 2014

ரோஜா...ரோஜா!

ரோஜா..ரோஜா..ரோஜா..ரோஜா!
கண்ட பின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன்!
...
.....
..
இந்த வரிகள் இந்தப் பதிவிற்கு பொருந்தாது. ஏனெனில் இந்த ரோஜாக்கள் எல்லாமே என் வீட்டு ரோஜாக்கள். :)
முதல் படத்தில் இருப்பவை இன்று வீடு வந்த பூங்கொத்து ரோஜாக்கள்!
~~
கடந்த வருடம் அக்டோபரில் பூத்துக் குலுங்கிய ரோஜாச்செடியில் இந்த வருடத்தின் முதல்ப்பூ!
 . முதல் படத்தை விட இன்னும் சற்றே அருகில் போய் எடுத்தது அடுத்த படம்..
ஆரஞ்சு நிறத்தில் மலர ஆரம்பிக்கும் இந்தப்பூ வாட வாட ரோஸ் நிறமாகிவிடும்..
 ~~
சில பல வருடங்களாக எங்களுடன் இருக்கும் சிவப்பு ரோஜாக்கள்..
சிறு பூக்கள் என்றாலும் கொத்துக் கொத்தாகப் பார்க்கையில் அதுவும் ஒரு அழகுதான்!
பொறுமையாக கொலாஜ் பண்ணிட்டேன், நீங்க பார்த்துதான் ஆகணும், வேறு வழியில்லை! ஹிஹி..
~~
  இந்த ஃபிப்ரவரியில் வாங்கிய ரோஜா..மொட்டு மலர ஆரம்பித்ததில் இருந்து க்ளிக்கியது..
~~
இந்த ஒற்றை ரோஜா..
அழ.....கா இருந்ததால் சுற்றி சுற்றிப் படமெடுக்கவைத்துவிட்டது!
~~
எனக்காய் மெனக்கெட்டு வாழ்த்தட்டை செய்த ஒரு அன்பு அக்காவிற்கு என்னால் சொல்ல முடிந்த சிறு நன்றி! தேங்க் யூ அக்கா! 
:) 
~~

14 comments:

  1. எல்லா ரோஜாக்களும் கொள்ளை அழகு மஹி !!!
    அந்த ரெட் ரோசஸ் எனக்கு ரொம்ம்ம்ம்ப பிடிச்சிருக்கு !!!

    ReplyDelete
  2. appadiye yeduthukkalam pola erukku mahi....

    ReplyDelete
  3. சூப்ப்ப்பர் மகி. மிக மிக அழகாக இருக்கு எல்லா ரோஜா பூக்களுமே. பூங்கொத்து மிக அழகு. படங்கள் எல்லாமே ரெம்ப ரெம்ப அழகா இருக்கு. பூக்களை அதுவும் ரோஜாவை பார்க்க அலுக்குமா என்ன. இப்போதான் என் வீட்டில் பூக்கிறார்கள்.பகிர்வுக்கு நன்றி மகி.

    ReplyDelete
  4. சூப்ப்ப்பர் மகி. எல்லா ரோஜாப்பூக்களும் அழகா இருக்கு. பிங்க் பூங்கொத்து அழகூஊஊ. நீங்களும் அழகுக்கு அழகு சேர்ப்பது போல படம் எடுத்திருக்கிறீங்க. பூக்களை பார்க்க,அதுவும் ரோஜாவைப்பார்க்க அலுக்குமா என்ன. என் வீட்டிலும் பூக்கிறார்கள். அழகான பதிவு.நன்றி மகி.

    ReplyDelete
  5. மிகவும் ரசிக்கவைத்த ரோஜாக்கள்..

    ReplyDelete
  6. ரோஜாப் பூங்கொத்து அழகோ அழகு. அதைவிட நம் வீட்டில் அவை பூக்கும்போது இன்னும் அழகாகிவிடுகிறது. சிவப்பு ரோஜா அழகா வந்திருக்கே மகி. நான் எவ்வளவோ முயற்சித்தும் வேறு நிறத்தில்தான் வருகிறது.

    ReplyDelete
  7. ரோஜாக்கள் அழகு... இப்போ இங்கும் எல்லா இடத்தில் கலர் கலரா ஒரு பெரிய தேங்காய் அளவில்கூட பூத்துக் குலுங்குது.

    சூப்பர் மகி அந்த ஒரேஞ் ரோஸ்..

    ReplyDelete
  8. றோஜாக்கள் ராஜாங்கமோ இங்கு...:)

    எல்லாமே அருமையாக இருக்கு மகி!
    க க கொ போ...:)
    (கண்களைக் கவ்விக் கொண்டுவிட்டாய் போ)

    வாழ்த்துக்கள் மகி!

    ஆமா...
    பத்துக் கேள்விக்கென்ன பதில்?...
    பத்துக் கே..ள்விக்கென்ன பதில்ல்ல்ல்?.. ;)

    ReplyDelete
  9. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்...!
    அழகு ரோஜாக்கள் ஆரஞ்சு இன்னும் அழகு. நானும் வைத்துள்ளேன் இலைகள் இல்லாமல் அழகான சிவப்பு ரோஜாக்கள். ஹா ஹா ஏன் தெரியுமா சிபி வழி வந்தவர்கள் போலும் பூச்சிகளுக்கு இரையாகி விடுவார்கள். நானும் மருந்து அடித்து பார்த்தேன்.கேட்கவே இல்லை. ஆனாலும் அழகாக நிறையவே பூக்கிறது. பஹ்டிவுக்கு நன்றி ! வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  10. வலைச்சரம் மூலமாக தங்களைப் பற்றி அறிந்தேன். தங்கள் பதிவுகள் தெர்டர வாழ்த்துக்கள்.
    www.ponnibuddha.blogspot.in
    www.drbjambulingam.blogspot.in

    ReplyDelete
  11. ரோஜா ரோஜாக்கள்,,,,,,,,,

    ReplyDelete
  12. கருத்துக்கள் தந்த அனைவருக்கும் நன்றிகள்!

    @இளமதி, //பத்துக் கேள்விக்கென்ன பதில்?...
    பத்துக் கே..ள்விக்கென்ன பதில்ல்ல்ல்?.. ;)// பதில் வ(த)ந்தாச்சுங்கோ!

    @திரு.இனியா, திரு.ஜம்புலிங்கம் & திரு.விமலன், வலைச்சரம் மூலம் வருகை தந்தமைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  13. லேட்தான், ஆனாலும்... அனைத்திற்கும் என் அன்பு வாழ்த்துக்கள் மகி.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails