Thursday, July 3, 2014

ப்ரெட் உப்புமா / ரொட்டி உப்புமா

தேவையான பொருட்கள்
ப்ரெட் ஸ்லைஸஸ்/ ரொட்டித் துண்டுகள் - 8
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-3 (காரத்துக்கேற்ப)
கடுகு-1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு-தலா 1டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்-2டேபிள்ஸ்பூன்
உப்பு-வெங்காயம் வதங்கும் அளவு
எண்ணெய்

செய்முறை
வெங்காயம்-பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து, க.பருப்பு-உ.பருப்பு சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
நறுக்கிய வெங்காயம்-பச்சைமிளகாய்-கறிவேப்பிலை(நான் சேர்க்கவில்லை) சேர்த்து வதக்கவும். வெங்காயம் சீக்கிரம் வதங்க உப்பை சேர்த்து வதக்கவும். 
ப்ரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு உதிர்த்துக்கொள்ளவும். [புது ப்ரெட்-ஐ விட மீதமான ப்ரெட் அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்த ப்ரெட் ஈஸியாக அரைபடும். நான் ஃரெஷ் ப்ரெட்தான் உபயோகித்திருக்கிறேன். ;)] 
உதிர்த்த ப்ரெட்-ஐ வதங்கிய வெங்காயத்துடன் சேர்த்து பிரட்டவும்.
ப்ரெட் ஓரளவு சூடேறியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான உப்புமா தயார். சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு
உப்பு வெங்காயம் வதக்க மட்டுமே, ரொட்டியில் ஏற்கனவே உப்பு இருக்கும்.
நாங்கள் எப்போதும் கோதுமை அல்லது மல்ட்டிகிரெய்ன் ப்ரெட் தான் வாங்குவது வழக்கம்.  வெள்ளை ரொட்டியும் உபயோகிக்கலாம்.
உதிர்த்த ரொட்டி சேர்த்த பின் அதிக நேரம் வதக்கினால் உப்புமா வறவற-வென ஆகிவிடும்.
சூடாகச் சாப்பிட்டால் சுவை அதிகம்! :)
ரெசிப்பி கிடைத்தது இங்கே.

10 comments:

  1. செய்து சூடாகவே சாப்பிடுகிறோம்... செய்முறைக்கு நன்றி...

    ReplyDelete
  2. குறைந்த நேரத்தில் செய்யும் சுவையான உப்புமா..1

    ReplyDelete
  3. சூப்பரான, ஈஸியான, பயன்மிக்க ஒரு ரெசிப்பி மகி. நன்றி.

    ReplyDelete
  4. சுவையான ப்ரெட் உப்புமா.. நானும் ஒரிருமுறை செய்திருக்கிறேன்.

    ReplyDelete
  5. பாண் உதிர்த்துப் போட்டுச் செய்திருக்கிறேன். இப்படி துருவலாக... முயன்றதே இல்லை. செய்து பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  6. ப்ரெட்டை குட்டிகுட்டி சதுரமா பிச்சு எண்ணெயில்லாமல் ஃப்ரை பண்ணி, பிறகு உப்புமா செய்து நான் மட்டுமே சாப்பிட்டேன். இதுமாதிரியும் செய்து பார்க்க வேண்டும். வறவற ஆகாமல் இருக்க சொல்லியுள்ள டிப்ஸுக்கும் நன்றி மகி.

    ReplyDelete
  7. இப்படிதான் நாங்களும் செய்கிறோம். அருமையாயிருக்கு.அன்புடன்

    ReplyDelete
  8. கருத்துக்கள் தந்த அனைவருக்கும் இனிய நன்றிகள்!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails