Thursday, February 2, 2012

கதம்பம்..

ஏழு காய் சாம்பார் குறிப்பை எழுதுகையில் "கதம்ப சாம்பார்" என்ற பெயர் நினைவு வரவே இல்லை..கருத்தினைத் தெரிவித்த நட்பூக்கள் சொன்னதிலிருந்து இந்த கதம்பம் என்ற வார்த்தை அடிக்கடி மனசில் அலைந்துகொண்டே இருக்கிறது. அடுத்து என்ன...மலரும் நினைவுகள்தான்!! :)

கதம்பம்..மல்லிகை(அ)முல்லை, கோழிக்கொண்டை, மரிக்கொழுந்து,மருகு, என்று வெள்ளை,சிவப்பு,பச்சை என்று மூன்று வண்ணப்பூக்களைத் தொடுத்த சரத்தைச் சொல்வோம் எங்க ஊரில்..சிலநேரங்களில் வெள்ளைநிறத்துக்கு ஒரு பூ சேர்த்திருப்பார்கள். (பெயர் நினைவு வரல..வெள்ளைவெளேர்னு முல்லை போலவே இருக்கும்,ஆனா வாசனையே சுத்த்த்த்தமா இருக்காது. என்று சொல்லிருந்தேன், பிறகு நினைவு வந்தது.. ;), "காக்கடா" என்று சொல்லுவோம். எடிட் பண்ணலாம்னு வந்தா, குறிஞ்சியும் சொல்லிருக்காங்க.. :)). கலர்ஃபுல்லாக அழகாக இருக்கும்.

பொதுவாகவே எனக்கு செடிகளில் இருந்து மல்லி,முல்லை,ஜாதிமுல்லை பூக்களை பறிப்பதும் பிடிக்கும், நெருக்கமாக சரம் தொடுக்கவும் மிகவும் பிடிக்கும். ஊரில் இருக்கையில் கட்டிய சரம் வாங்குவதை விட விடுபூ(உதிரிப்பூ) வாங்கி கட்டி(சரம் தொடுத்து) வைப்பதே வழக்கம்.

பூக்காரர் மாலை நேரங்களில் விடுபூவை பெரிய கூடைகளில் வைத்துக்கொண்டு சைக்கிளில் வருவார். சிறு தராசில், எடைக்கல் இல்லாமல் ஒரு ரூபாய் நாணயங்களைப் போட்டு "2 எடை(2 நாணயங்கள்) ஐந்து ரூபாய்--3 எடை பத்து ரூபாய்" இப்படி விற்பார்கள். காலை நேரம் பூச்சரங்களும், ஊட்டி(!) ரோஸ் பூக்களும் வரும்.

ஸ்கூல்/காலேஜ்/வேலைக்குக் கிளம்பும் அவசரத்திலும் அப்படியே போற போக்கில பூ வாங்கி வைத்துக்கொண்டு போனதுண்டு. பஸ்ஸ்டாப் பூக்காரம்மாக்கள் பூவைத் தலையில் வைக்க ஹேர்பின்( to be more precise in our slang, பூ குத்தற(!) சைடூசி! :)) ) கூட விற்பாங்க. வீடுகளில் செடிவைத்து விற்பனை(!) செய்வோர் டம்ளர் கணக்கில் விற்பாங்க.அங்கே சீக்கிரமாப் போனால்தான் பூ கிடைக்கும், இல்லன்னா அக்கம் பக்கம் இருக்கும் போட்டிக்காரிகள்(!) வாங்கிட்டுப் போயிருவாங்க. ;)

கோவையில் காந்திபுரம்-க்ராஸ்கட் ரோடு கார்னரிலும், உள்ளே லக்ஷ்மி காம்ப்ளக்ஸ்,கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர் அருகிலும் நெருக்கமாகத் தொடுத்த மல்லிகைச் சரங்களை விற்பார்கள். மாலை மாதிரி அவ்வளவு நெருக்கமாகத் தொடுக்கப்பட்டிருக்கும். மல்லிகையின் இடையிடையே ப்ளாஸ்டிக்கில் வண்ணவண்ணமாக குட்டிகுட்டிப் பூக்கள் சேர்த்து கோர்க்கப்பட்ட மல்லிகைச் செண்டுகளும் கல்யாண சீஸன்ல படுவேகமா விற்பனையாகும். பட்டுச்சேலைக்கு மேட்சான கலரில் பூ கோர்த்த மல்லிகைச் செண்டு சூப்பரா இருக்கும்ல?;)

பூவை நெருக்கமாகத் தொடுத்து தண்ணீர் தெளித்து (எவர்)சில்வர் டப்பாவில் போட்டு மூடிவைத்தால், அடுத்தநாள் காலையில் சூப்பரா வைச்சுட்டுப் போலாம்..ம்ம்ம்...அது ஒரு அழகிய கனாக்காலம்!
இது இந்த முறை ஊருக்குப் போயிருந்த போது தொடுத்த முல்லைச்சரம்..பூவைக் கட்டி எடுத்து ஃப்ரிட்ஜில் வைச்சு வீட்டிலிருந்த எல்லாருக்கும் எடுத்தும் கொடுத்தேன்,ஆனா நான் மட்டும் வைக்க மறந்துட்டேன். இங்கே வந்து படங்களைப் பார்க்கையில்தான் நினைவுவந்தது. :)

***அப்டேட்***
யு.எஸ். மற்றும் கனடா வாழ் தமிழ்த்திருமக்களே, உங்களுக்கு மல்லிகை,முல்லைப்பூ எவ்வளவு விலையா இருந்தாலும் பரவால்லை, வாங்கியே ஆகணும்னு ஆசைப்பட்டீங்கன்னா, இதோ இங்கே க்ளிக்குங்க. இந்த பேன்ஸி ஃப்ளோரிஸ்ட்ஸ் மல்லி, முல்லை இப்படி பூக்கள் எல்லாமே விற்பனை செய்யறாங்க. கல்யாணம் கச்சேரி எல்லாத்துக்கும் பூ அலங்காரமும் செஞ்சு குடுக்கறாங்களாம்.....(பூ விக்கற தகவல் சரி,,,அடுத்தது எதுக்குன்றீங்களா??? ஜஸ்ட் இன் கேஸ்...ஹிஹிஹி! :))))))

~~~
புற்றுநோய் விழிப்புணர்வை எல்லாரிடமும் பரப்பும் வகையில் நேசம் அமைப்பினரும் யுடான்ஸ் திரட்டியும் இணைந்து பல்வேறு போட்டிகள் நடத்துகிறார்கள்.

இதிலே பங்குபெறுவதற்காக நம் தோழமைகள் பலரும் படைப்புக்களை அனுப்பியிருக்காங்க... வானதி- விடியல் , ஆசியா அக்கா- வலி ,சந்தனா-அனைவரும் நலமா? , ஜலீலா அக்கா -ஆயிஷாமாவின் தன்னம்பிக்கை, அப்பாவி தங்கமணி -- ஆசீர்வாதம், ஹுஸைனம்மா - வருமுன்காப்போம் இப்படி...ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள், வருமுன் காக்கும் முயற்சிகள், வந்தபின்னர் செய்யவேண்டிய வழிமுறைகள் என்று ஒவ்வொருவரும் தத்தம் பாணியில் பல தகவல்ககளைப் பகிர்ந்திருக்கிறார்கள். இணைப்புகள் கொடுத்திருக்கிறேன். படித்துப் பாருங்கள். உங்களுக்குத் தெரிந்த தகவல்களை எல்லாருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
~~
மீராஸ் டேலன்ட் கேலரி யில் இருந்து என் வலைப்பூவுக்கு ஒரு விருது கொடுத்திருக்காங்க.. மீராவின் வலைப்பூவில் பல்வேறு கைவேலைகளில் இருந்து வட இந்திய உணவுவகைகள் வரை பல ஸ்வாரசியமான விஷயங்கள் உண்டு.கவிதை,ஓவியம், சமையல், கைவேலை என்று பலதுறைகளில் பிரகாசிக்கும் மீராவிடம் இருந்து இந்த விருதைப் பெற்றது சந்தோஷமாக இருக்கிறது.மிக்க நன்றி மீரா!! :)

இந்த விருதினை
1.வானதி -- "வானதி'ஸ்"
2.ப்ரியா ராம் -- "ரசிக்க ருசிக்க"
3.அதிரா -- "என் பக்கம்"
4.ஏஞ்சலின் -- "காகிதப்பூக்கள்"
5.விஜி -- "விஜி'ஸ் க்ராஃப்ட்ஸ்"
இவர்களுக்கு வழங்குகிறேன். விருது பெற்ற ஐவருக்கும் வாழ்த்துக்கள்! 200க்கு குறைவான பின்தொடர்வோர்( followers) இருக்கும் உங்களுக்கு விருப்பமான வலைப்பூ தோழமைகளுடன் இந்த விருதினைப் பகிர்ந்துகொள்ளுங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

விருதை மட்டும் குடுத்தா நல்லாருக்காதில்ல..இந்தாங்க, பீன்ஸ் கேஸரோல் & கோக்கனட் கேக்! கேஸரோல் சுத்த சைவம்..கேக்ல முட்டை சேர்த்திருக்கு. பார்த்து சாப்பிடுங்க. :)

~~
அடுத்து எங்க வீட்டுப்பக்கம் இருக்கும் ஒரு கடற்கரை..வீட்டிலிருந்து 20 நிமிட பயணதூரத்தில் இருக்கு..ஒரு புறம் மலைக்குன்றுகள், மறுபுறம் பஸிஃபிக் கடல் என்று அழகாக இருக்கும் சிறிய கடற்கரை..பலமுறை போயிருக்கிறோம்..ஒரு முறை சென்ற பொழுது கடலோரம் இருந்த உணவகம் ஒன்றில் லன்சுக்குப் போலாம் என்று நினைத்து மாலை 4 மணிக்கு சாப்பிட்டுக்கொண்டே சூரியன் கடலில் மூழ்கிய காட்சியை ரசித்தோம்..அதே நேரம் கடலோரம் நடந்துகொண்டிருந்த ஒரு போட்டோஷூட் கண்ணில் பட்டது. :)

நம்மள்லாம் கல்யாணம்னா மண்டபம் புடிச்சு,ஸ்டேஜ் டெகரேஷனுக்கு தனியா ஒரு செலவு செய்து போட்டோ எடுப்போம், இங்கே கல்யாணத்தை முடித்துவிட்டு சன்ஸெட் சமயத்தில் கடற்கரைக்கு வந்து கடலன்னையும் வானமும் இயற்கையாக சிருஷ்டித்திருந்த எழில்பொங்கும் செஞ்சாந்து நிறப் பிண்ணணியில் மணமக்கள் புகைப்படம் எடுத்துகிட்டு இருந்தாங்க...எந்த ஊர் கல்யாணமா இருந்தாலும் எப்பவுமே கல்யாணக்கூட்டத்தைப் பார்த்தாலே ஒரு சந்தோஷம்தான், இல்லீங்களா? :)
சாப்பாடு(!) முடிந்தபிறகு டிஸர்ட் ஒன்று சாப்பிட்டோம்,சூப்பரா இருந்தது..சின்னமன் ப்ரெட் புடிங்..ரொட்டித்துண்டுகளை எண்ணெயில் பொரிச்சு எடுத்து சர்க்கரை+சின்னமன் பவுடர் சேர்த்து கலந்து தருகிறார்கள். சுடச்சுட சாப்பிட சூப்பரா இருந்தது. ஆனால் கொஞ்சம் சாப்பிட்டதுமே, புடிங் ஆறியும் போகவும் திகட்ட ஆரம்பிச்சது!;) அதனால் என்ன..எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத சூரிய அஸ்தமனம் இருக்கே...அதை அனுதினமும் ரசித்தாலும் சலிக்காது எங்களுக்கு..உங்களுக்கு எப்படி? :)))))

39 comments:

 1. மகி.. மலரும் நினைவுகள் சூப்பர்... மிகவும் அருமை.... உங்களுக்கு விருது கிடைத்ததற்கு என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்....நல்ல ஆரம்பித்து நன்றாகவும் முடித்து இருக்கிறீர்கள்....கலக்கல்...

  ReplyDelete
 2. விருது கிடைத்தத்ற்கு வாழ்த்துகள். பதிவு சூப்பரா இருக்கு. வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. மல்லிகை,முல்லை, மருவுடன்,தாழைவைத்துக் கட்டினால் மணம் அபாரமாக இருக்கும் கதம்பம். முல்லைச் சரம் அடர்த்தியாகத் தொடுத்து
  மேலே கனகாம்பரமும் வைத்து பின்னலழகு கண்முன் வருகிறது. கதம்பத்தில் கதம்பமாகவே விஷயங்கள்
  நன்றாக அறிய முடிந்தது. விருது கிடைத்ததற்கு ஒரு கதம்ப மாலையை
  உனக்கு அணிவிக்கிறேன். ஸந்தோஷம்.

  ReplyDelete
 4. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் காணாமல் போய்விட்ட விருதை மீண்டும் ஆரம்பிச்சுப்புட்டாங்களோ? வாழ்த்துக்கள் மகி....

  எனக்கும் தாறீங்க... வாழ்க்கை வறுத்தமைக்கு விருதோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் முடியல்ல சாமீஈஈஈஈஈ.....:)) நில்லுங்க... பின்புதான் வாறேன் வெடி இருக்கு இண்டைக்கு மகிக்கு:))

  ReplyDelete
 5. aha Thanks Mahi chellam.

  Thanksda for the award.
  Nan en blogle pottukkaren seria?

  Ammadiyoo en poo vaikum anubavatha eppedi etti parthe nee?
  Apadeye en kadantha kalatha parthamathri errunthathu.
  Nan retta jadai podduppen. nee?

  Awardum kuduthu chapidauvm kudutha Mahikku ellarum oru OOOOOOOOOO podunga.
  viji

  ReplyDelete
 6. கதம்பம் என்றதும் பழைய நினைவுகள் வருகிறது மகி.நான் ரொம்ப சின்னவளா இருக்கசே குட்டியூண்டு இரட்டை ஜடை பின்னி இரண்டி ஜடைக்கும்நடுவில் கதம்ப சரத்தினை சூட்டி தலையில் கலர் கலர் பூக்களுடன் திரிவோம்.மருக்கொழுந்து,தாழம்பூ,டிசம்பர் பூ,சம்பங்கி,முல்லை என்று பலவித கலவை மணம் அப்படியே தூக்கும்.இப்பொழுதெல்லாம் கதம்பம் படங்களுக்கும் மற்ற அலங்காரங்களுக்கும் மட்டும்தான் பயன் படுத்துகின்றனர்.

  விருதுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. அவ்வ்வ்வ்வ்... ஊரிலிருந்த கொஞ்சக்காலத்தில நித்தியாவட்டை, மொட்டுப் பிடுங்கி, இரவிரவாக் கட்டி வைப்பேன், காலையில் பூத்திருகும்... திருவெம்பாவை 10 நாளும் அது பிள்ளையார் கழுத்துக்கு தினமும் போகும்... மறக்க முடியாத நாட்கள்.

  ReplyDelete
 8. எங்கட நாட்டில, கொழும்பில் மட்டும்தான் பூ வித்தல், மாலை கட்டி வித்தல் என்பன கோயில் முன் கடைகளில் இருக்கும், மற்றும்படி, எங்கேயும் பூ வாங்குவதென்றெல்லாம் இல்லை. கோயில் விஷேட நாட்கள் அல்லது வைபவங்களுக்கு மட்டுமே மாலை கட்டுவோம்.

  மற்றும்படி, கனகாம்பரம், மல்லிகை, நித்தியகல்யாணி... இப்படிப் பூக்கள்.. எம் வீடு பக்கத்து வீடெல்லாம் போய், அவர்களோடு கதைத்துக் கதைத்துப் பிடுங்கி வந்து, வாழைநாரில் பூமாலை கட்டி கோயிலுக்குக் கொடுப்போம்.

  ReplyDelete
 9. ஊரில் வைபவங்களுக்கென மாலை கட்டிக் கொடுப்போம் இருக்கிறார்கள் அவர்களை “பண்டாரிகள்” எனச் சொல்வதாக நினைவு, அவர்களிடமே ஓடர் கொடுப்போம், கல்யாணப்பொம்பிளை மாப்பிளைக்காக.

  ReplyDelete
 10. குட்டிக் குடி நித்தியகல்யாணி மொட்டுப் பிடுங்கி, சரமாகக் கட்டி தலைக்கு வைப்பதுதான் எமக்குப் பிடிக்கும், பூமாலை வைத்தால் ஏதோ பெரிதாக இருப்பதாக இருக்கும்.... அதெல்லாம் ஒரு காலம்.... இப்போ கோயிலும் போச்சு மாலையும் போச்சு... எல்லாம் பிளாஸ்ரிக் மயமாகிட்டுது.

  ReplyDelete
 11. //விருது பெற்ற ஐவருக்கும் வாழ்த்துக்கள்! 200க்கு குறைவான பின்தொடர்வோர்( followers) இருக்கும் உங்களுக்கு //

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னா வில்லத்தனம்... எமகு இன்னும் 200 ஃபலோவேர்ஸ் இணையவில்லை எனச் சொன்னால் விட்டிடுவமா... கொஞ்சம் பொறுங்க, நானே இண்டைக்கு 200 ஐடி ஓபின் பண்ணி என்னிடமே ஃபலோவராக இணையப்போகிறேன்... எங்கிட்டயேவா.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))..

  ReplyDelete
 12. //விருதுக்கு வாழ்த்துக்கள்.//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஸாதிகா அக்கா.. விருதுக்கு எதுக்காம் வாழ்த்து, அழகா..”அதிராவுக்கு வாழ்த்துக்கள்” அப்பூடிச் சொல்லோணும் ... வான்ஸ்க்கெல்லாம் சொல்லத்தேவையிலை:))).

  ReplyDelete
 13. //இந்தாங்க, பீன்ஸ் கேஸரோல் & கோக்கனட் கேக்! கேஸரோல் சுத்த சைவம்..கேக்ல முட்டை சேர்த்திருக்கு. பார்த்து சாப்பிடுங்க. :)//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) முட்டையைக் காணல்லியே எங்க? எங்கேஏஏஏஏஏ முட்டை?:))).

  ReplyDelete
 14. //அதை அனுதினமும் ரசித்தாலும் சலிக்காது எங்களுக்கு..உங்களுக்கு எப்படி? :)))))//

  அப்பூடித்தான்...:))

  அவ்வ்வ்வ் சொல்ல மறந்திட்டேன்.. மீ ஃபெஸ்ட்டூஊஊஊஊஉ:))... எங்க எங்கட பாதிப்பேருக்கு மேல காணாமல் போயிடினம்.... சுனாமி கினாமி எங்காவது தாக்கிட்டுதோ? புளியை அசைக்காதே சுனாமி....

  பில்லாவையும் காணேல்லை.. இதுக்குத்தான் சொல்றது ஊருக்குப் போகாதீங்க, பொன்னியைப் பார்க்காதீங்க என.. ஆர்தான் என் பேச்சைக் கேட்கினம்:))))

  ReplyDelete
 15. Congrats Mahi! vaasamillatha poo, kaakaratinu solluvanga.

  ReplyDelete
 16. //எங்க எங்கட பாதிப்பேருக்கு மேல காணாமல் போயிடினம். சுனாமி கினாமி எங்காவது தாக்கிட்டுதோ//
  இதோ வந்திட்டேன்ன்ன் என்னையாவது சுனாமி தாக்குறதாவது!!
  எங்கே லஞ்ச் ஆரம்பிச்ச ஒடனே லாக் பண்ணா கூகிள் குரோம் டவுன் லோட் பண்ணு அப்புடின்னு மெச்செஜ் அத பார்த்திட்டு டவுன் லோட் பண்ண போனா IT admin securtiy not allowed ன்னு மெச்செஜ் வந்திச்சு. அப்புறம் ஒரு வழியா என் ப்ளாக் க்கு உள்ளே போய் இங்கே வர்றதுக்குள்ளே ஹும்ம்ம்

  ReplyDelete
 17. முதல்ல விருது பெற்ற மகி, பூஸ், வான்ஸ் மற்றும் அனைத்து வலை உலக நட்புக்களும் வாழ்த்துக்கள்

  //வான்ஸ்க்கெல்லாம் சொல்லத்தேவையிலை:))).//

  வான்சையும் பூஸ் விட்டு வெக்கல??  //முட்டையைக் காணல்லியே எங்க? எங்கேஏஏஏஏஏ முட்டை?:))).//

  மகி கேக் மேல முட்டை வெச்சு ஒரு போட்டோ போட்ட்ருங்கோ :))  //பின்புதான் வாறேன் வெடி இருக்கு இண்டைக்கு மகிக்கு:))//

  என்னவா இருக்கும் ன்னு இல்லாத மூளைய போட்டு கொழப்பி கிட்டு இருக்கேன். பூஸ் இந்த மாதிரி சஸ்பென்ஸ் எல்லாம் எதுக்கு கரரர் ர்ர்ர்ர்

  ReplyDelete
 18. அழகா பூ கட்டி இருக்கீங்க மகி

  எனக்கு மல்லி அதுவும் குண்டு மல்லி சரம் மட்டும் தான் புடிக்கும். ஊருல இருக்கும் பொதும்ம் இப்போ போகும்போதும் தவறாம எனக்கு மல்லி சரம் எங்க மாமனார், நாத்தனார் எல்லாம் வாங்கி வைப்பாங்க. அனேகமா இங்கே இருந்து போறவங்க மட்டும் தான் தலையில பூ வெச்சுக்கிறாங்க ன்னு நெனைக்கிறேன். இப்போ அந்த trend போன மாதிரி தெரியுது. .

  ReplyDelete
 19. சூரிய அஸ்தமனம் சூப்பர். எத்தன தடவ பார்த்தாலும் சலிக்காது. Ok 12.32 ஆயிடிச்சு அப்புறம் வரேன்.

  Have a lovely week end

  ReplyDelete
 20. எனக்கு விருதா??? மிக்க நன்றி. பூச் சரம் அழகோ அழகு. படத்தினை பார்த்ததும் இங்கை தான் எங்கேயோ பூ வாங்கியிருக்கிறீங்கன்னு நினைச்சேன். கனடாவில் மல்லிகை, கனகாம்பரம் சரமாக கோர்த்து விற்கிறார்கள். விலை அதிகம். நான் வாங்கியதில்லை. என் மாமி வாங்குவார்கள்.

  கல்யாண போட்டோ ஷூட்டிங்க் - இப்பெல்லாம் எங்க ஆளுங்களும் இப்படி இயற்கை காட்சிகளில் படம் பிடிக்க தொடங்கிட்டாங்க, மகி. என் நெருங்கிய உறவினரின் திருமணத்துக்கு பார்க், காடு, மலை, நீர்வீழ்ச்சி என்றெல்லாம் சுத்தி சுத்தி போட்டோ எடுத்தார்கள். மணமக்களை எடுத்தா பரவாயில்லை. நெருங்கிய உறவினர்கள் எல்லோருமே இங்கெல்லாம் அலைய வேண்டி இருந்தது. எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது. விட்டா போதும் என்று ஆச்சு. கிட்டத்தட்ட 2 -3 மணி நேரங்கள் எடுத்தார்கள். ஆனால் பாருங்கள் இவ்வளவு மெனக்கெட்டு போட்டொ எடுப்பார்கள். பிறகு அலமாரியில் ஆல்பத்தினை பூட்டி வைச்சுடுவார்கள். இவ்வளவு பேரை நாயா, பேயா அலைய வைச்சோமே அவர்களுக்கு ஒவ்வொரு காப்பி அனுப்புவோம் என்று யாரும் நினைப்பதில்லை.

  ReplyDelete
 21. நானே இண்டைக்கு 200 ஐடி ஓபின் பண்ணி என்னிடமே ஃபலோவராக இணையப்போகிறேன்...//இப்படியெல்லாம் கூட செய்யலாமா??? வான்ஸ் உனக்கு சொந்தபுத்தி இல்லை. இதையே அப்படியே ஃபாலோ பண்ணிக்கோ.

  200 க்கு குறைவா பாலோவர்ஸ் - கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....மகி , 20ன்னு நினைச்சு மாத்தி எழுதிட்டீங்களா அம்மிணி.

  ReplyDelete
 22. விருதுக்கு நன்றி மகி... முட்டை போட்ட கேக் எனக்கு வேண்டாம்.... கேசரோல் மட்டும் நான் எடுத்துக்கறேன்.

  பூச்சரம் நெருக்கமா ரொம்ப அழகா கட்டி இருக்கீங்க மகி.... எனக்கு முல்லை பூ கட்டவே புடிக்காது.... எடுக்க எடுக்க பூ வந்து கிட்டே...... இருக்கும். முல்லை பூ வச்சுக்க ரொம்ப புடிக்கும். மல்லி பூ கட்டவும் புடிக்கும், வச்சுக்கவும் புடிக்கும். நானும் உதிரியா வாங்கி தான் தொடுப்பேன்...

  ReplyDelete
 23. நல்ல பகிர்வு.பூச்சரம் அழகு.விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. wow..love your kadambam Mahi..
  keep rocking..
  congrats on your award..;)

  Tasty Appetite

  ReplyDelete
 25. விரும்பினால் இதையும் கவனத்தில் கொள்ளுங்கோ..

  http://www.thamilnattu.com/2012/02/blog-post_05.html

  ReplyDelete
 26. Congrats on Ur Award.Veggie Cake Cum Casserole Droolworthy Dear. Poo remba azhakai Korthirukeega Mahi.Luv it

  ReplyDelete
 27. முல்லை பூவை பாத்ததும் 'முசுமுசு'னு அழுவாச்சி வருது மகி...நானும் என் தங்கையும் பூவுக்காக போட்ட சண்டைகளும் மலரும் நினைவுகளாய் கண் முன்னே...ஹ்ம்ம்... இந்த வாட்டி ஊருக்கு போனப்பவும் வெக்க வழி இல்லாம போச்சு... ஐ மிஸ் இட்...:(

  லாலா கார்னர்னா எனக்கு ஸ்வீட் ஞாபகம் வருதோ இல்லியோ அந்த கோவில் முன்னாடி இருக்கற பூ ஞாபகம் தான் வரும். அந்த வாசமில்லா வெள்ளை பூவின் பேரு காட்டுமல்லி'னும் சொல்லுவாங்க, இல்லயா மகி?

  நன்றி புற்றுநோய் விழிப்புணர்வு பதிவை பகிர்ந்து கொண்டதற்கு... விருது வாங்கினவங்களுக்கும் குடுத்தவங்களுக்கும் வாழ்த்துக்கள்...:)

  சன்செட் ரெம்ப அழகா இருக்கு மகி... நைஸ் கிளிக்..

  ReplyDelete
 28. எனக்கு நெருக்கமா தொடுத்த பூ தான் இஷ்டம். அதனாலேயே உதிரியா பூ வாங்கி நானே கட்டி வெச்சுப்பேன். திருச்சி, மதுரையில் மட்டும் பூ நெருக்கமா கட்டி சும்மா கிண்ணுன்னு இருக்கும்.

  கொசுவத்தி சுத்த வெச்சிட்டீங்க.

  ReplyDelete
 29. superb.. ரொம்ப அழகா பூ தொடுத்திருக்கீங்க மஹி... ஊருக்கு போகும்போது தான் நான் ஆசை தீர தலை நிறைய பூ வைத்துக் கொள்வேன். ஒரு வருடத்துக்கும் பூவுக்காக ஆகும் செலவை ஒரு மாதத்தில் செய்ய நேர்ந்தாலும் கவலைப்பட மாட்டேன் ;)) ஹி..ஹி.. ஊரிலிருந்து வரும்போதும் சில்வர் டப்பாவில் பூ வாங்கி வந்துவிடுவேன். ;)

  ஹூம்..எவ்ளோஓஓஓஓ பெரிய கேக் ஸ்லைஸ்... நல்லா சாப்டீங்களா?

  /நானே இண்டைக்கு 200 ஐடி ஓபின் பண்ணி என்னிடமே ஃபலோவராக இணையப்போகிறேன்...//இப்படியெல்லாம் கூட செய்யலாமா??? வான்ஸ் உனக்கு சொந்தபுத்தி இல்லை. இதையே அப்படியே ஃபாலோ பண்ணிக்கோ. / அதிரா, வானதி...ரிப்பீட்டூஊ-ஹாஹாஹா

  ReplyDelete
 30. shallots (chinna vengayam), ivy gourd (kovakkai), unripe mango(maangai), parboiled rice (idly arisi), palm sugar (panagkarkandu)... mahi intha comment ah asiya ku forward pannuga pls

  ReplyDelete
 31. இப்போதெல்லாம் பூக்களை ரசிப்பதோடு சரி.ஊருக்குப் போனால்கூட வைத்துக்கொள்ளலாம் என விருப்பமிருந்தாலும் பழக்க தோஷத்தில் மறந்துவிடுகிறது. கோவைக்கு வந்தால் பூ எங்கு வாங்கலாம் என தெரிந்துவிட்டது.

  ஆமாம்.நான்கூட பார்த்தேன். குட்டிக் குட்டியாக,கலர்கலராக,அழகழகான‌ பிளாஸ்டிக் பூக்கள் எங்கள் வீட்டிலும் வச்சிருந்தாங்க.பூக்கட்டும்போது இடையில் வச்சுக்கட்ட.

  சூரிய அஸ்தமனம் ஃபோட்டோ சூப்பர்.

  ReplyDelete
 32. வித்யா,வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க! :)
  ~~
  லஷ்மிம்மா,வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிம்மா!
  ~~
  காமாட்சிம்மா,தாழம்பூ...ஹ்ம்! இப்பல்லாம் அந்தப்பூ இருக்குதான்னே தெரில. முல்லை-கனகாம்பரம், மல்லி-கனகாம்பரம் காம்பினேஷன் எங்கம்மாவும் சொல்லுவாங்க. எனக்கு பின்னலும் கொஞ்சம்(!) நீளம்தான்..உங்க கண்முன்னே வரும் காட்சி உண்மைதான்!:))))))))

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமா!
  ~~
  அதிரா,வாங்கோ! /வாழ்க்கை வறுத்தமைக்கு விருதோ/ வறுத்து முடிச்சு,மறந்து மறுபடி வாழணூம்ல..அதுக்குத்தான் விருது! ;)
  ~~
  விஜிம்மா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
  பூவைப்பது உங்க காலத்துல இருந்தே இப்புடித்தான் இருக்கா?? ;) ஸ்கூல 10த் வரைதான் ரெட்டைஜடை போட்டதெல்லாம்,மத்தபடி இல்லைங்க..
  ஓஓஓ-வுக்கு தேங்க்ஸ் விஜிம்மா!
  ~~
  /நான் ரொம்ப சின்னவளா இருக்கசே குட்டியூண்டு இரட்டை ஜடை பின்னி /ஆஹா,ஸாதிகாக்கா இப்புடி கரெக்ட்ட்டா ஞாபகம் வைச்சிருக்கீங்க? சூப்பர் போங்க!

  டிசம்பர் கனகாம்பரம்..ம்ம்ம்..கலர் கலரா இருக்குமே..இப்பல்லாம் அந்தப்பூ இருக்குதா ஸாதிக்காக்கா?? மஞ்சக் கனகாம்பரம் எங்க வீட்டில பலவருஷம் இருந்தது.

  சம்பங்கில சின்னதா ஒரு வட்டச்செண்டு,நடுவில கோழிக்கொண்டைப்பூ வைத்து இருக்கும்,அது வாங்கி வைக்க எனக்கு ரொம்ப ஆசை,ஆனா நிறைவேறவே இல்ல! ;)

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸாதிகாக்கா!
  ~~
  அதிரா,வாழைநாரில் பூ கட்டுவதும் சூப்பரா இருக்கும்ல? நாரை கிழித்து பதப்படுத்துவதே ஒரு வேலை,தண்ணியில் நனைத்துக்கொண்டே தொடுக்கணும்! ஆளாளுக்கு பழைய நினைவுகளை கிளறறீங்க!:)

  எங்க ஊரில சாமிக்கு மட்டுமில்லாம, ஆசாமிகளும் பூ வைப்பது வழக்கம்! ;) எங்க ஊர்ல அவர்களை "பண்டாரம்"னு சொல்லுவோம்னு நினைவு.

  /நானே இண்டைக்கு 200 ஐடி ஓபின் பண்ணி என்னிடமே ஃபலோவராக இணையப்போகிறேன்.../ஹாஹா..எனக்கு இப்புடி ஒரு ஐடியாத் தோணாமப் போச்சே..அவ்வ்வ்!

  நன்றி அதிரா!
  ~~
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க காயத்ரி!
  ~~
  குறிஞ்சி, நானே எடிட் பண்ணனும்னு வந்தேன், பாத்தா நீங்களும் காக்கடா பூவை சொல்லிருக்கீங்க! தேங்க்ஸ்!
  ~~

  ReplyDelete
 33. கிரிஜா,வேலைக்கு நடுவிலும் கடமையை கரீக்ட்டாக செய்யும் உங்க சின்ஸியரிட்டிக்கு பாராட்டுக்கள்! ;)

  எனக்கு மல்லியும் பிடிக்கும், ஆனா முல்லை ரொம்ப பிடிக்கும்ங்க! :) காரணம் மல்லிப்பூவை கட்டுவதை விட முல்லைப்பூ கட்டுவது ஈஸி!

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிரிஜா!
  ~~
  வானதி,கனடால பூ விற்பனை பற்றி கேள்விப்பட்டேன்.அந்த சைட்டை நானும் பாத்தேன்.அநியாயத்துக்கும்தான் இருக்குது விலை! ஏதாவது அக்கேஷன்னா மொத்தமா ஆர்டர் பண்ணி எல்லாரும் ஷேர் பண்ணிக்கலாம்,அப்படிதான் சமீபத்தில கூட உப்பேரிபாளையத்துல;) ஒரு ப்ரெண்ட் வாங்கினதாச் சொன்னாங்க!

  கல்யாண காமெடி ஜூப்பரா இருக்கு..ஆல்பம் அனுப்பாட்டியும் அட்லீஸ்ட் டிஜிட்டல் காப்பியாவது ஷேர் பண்ண மாட்டாங்களா?? அவ்வ்வ்வ்வ்..பாவம்தான் நீங்க!
  ~~
  ஆசியாக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
  ~~
  /மகி , 20ன்னு நினைச்சு மாத்தி எழுதிட்டீங்களா அம்மிணி./ஆத்தாடி,,நான் இம்ப்பூட்டு யோசிக்கலையே..எனக்கும் இதே கண்டிஷன்லதானே விருது கிடைச்சது?? சீக்கிரம் நம்ம எல்லா ப்ளாகும் 200+ ஆகணும்னுதான் இப்புடில்லாம்! ஹிஹிஹி!
  ~~
  ப்ரியா,முல்லைப்பூ கட்டறது எனக்கு பிடிக்கும்! ஒவ்வொருமுறை யாராவது ஒரு ஆள் மூணு மூணு பூவா எடுத்துவைப்பாங்க,அப்ப கட்டுவது இன்னும் ஈஸி!நீங்க்ளும் ட்ரை பண்ணுங்க! ;)
  நான் மல்லிப்பூவும் கட்டுவேன்,ஆனா முல்லை அளவுக்கு நெருக்கமா கட்ட வராது..அதனால் மல்லினா லக்ஷ்மி காம்ப்ளக்ஸ் பூதான்! :)

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா!
  ~~
  ஜெயந்தி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
  ~~
  க்றிஸ்டி,வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 34. அப்பாவி, முசுமுசுன்னெல்லாம் அழுகக்கூடாது,உங்கூருக்கு பக்கத்தாலயே மல்லிப்பூ,முல்லைப்பூ எல்லாம் விக்கறாங்க.நான் அந்த சைட் லிங்க் அனுப்பறேன்,ஆர்டர் பண்ணி என்ஸொய்! ;)))

  லாலா கார்னர்னாலே சித்திவிநாயகர் கோயிலும் அந்த பூக்கடைகளும்தானே நினைவு வரும்! ஹ்ம்ம்....!

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புவனா! சன்ஸெட் போட்டோஸ் பெரும்பாலும் எங்கூட்டுக்காரர் எடுப்பது,சொல்லிடறேன் அவர்கிட்ட! :)
  ~~
  /திருச்சி, மதுரையில் மட்டும் பூ நெருக்கமா கட்டி சும்மா கிண்ணுன்னு இருக்கும்./எங்கூர்லயும் 2-3 இடத்தில கிண்ணுனு கட்டிய பூக்கள் கிடைக்கும் கலாக்கா! கோவைக்கும் வாங்க!:)

  என்ன பண்ண, யாம் பெற்ற கொசுவர்த்தி,பெறுக இவ்வையகம்!! ;)))
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
  ~~
  /ஊரிலிருந்து வரும்போதும் சில்வர் டப்பாவில் பூ வாங்கி வந்துவிடுவேன். ;)/ உங்களுக்கென்னம்மிணி..3-4 மணி நேரத்துல போயிச் சேர்ந்துடலாம்,நாங்கள்லாம் அப்புடியா??

  கேக் செஞ்சு பலநாளாச்சு,நல்லாவே சாப்ட்டோம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
  ~~
  அனானி,சொல்லிடறேங்க.
  வருகைக்கு நன்றிங்க!
  ~~
  சித்ரா மேடம்,நீங்களும் மறந்துட்டீங்களா? நானும் இப்படித்தான் மறந்துட்டேன்,ஆனா ஒரே ஒரு வாட்டிதான். :)

  கோவைக்கு எப்ப வரீங்க?
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

  ReplyDelete
 35. /உங்களுக்கென்னம்மிணி..3-4 மணி நேரத்துல போயிச் சேர்ந்துடலாம்/ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... ஏன்? ஏன் இப்படி ஒரு வெறி? பதிவு நல்லாருக்குன்னுதானே சொன்னேன்... அதுக்கு ஏன் இப்டி சாபம் விடறீங்க.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... (jus kidng;))

  ReplyDelete
 36. /அதுக்கு ஏன் இப்டி சாபம் விடறீங்க.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.../ஹாஹ்ஹா...பானு,நான் என்ன அர்த்தத்திலே சொன்னேன்னு படிக்கிறவங்களுக்கு கண்டிப்பாப் பிரிஞ்சிருக்கும். உங்க அட்டெம்ப்ட் இஸ் ஃபெய்ல்ட்!! :)

  பின்னே...என்னமோ என்னைய தூள் பட சொர்ணக்கா ரேஞ்சுக்கு க்ரியேட் பண்ண அட்டெம்ப்ட் பண்ணறீங்க? அந்த பருப்பெல்லாம் இங்க வேகாது..மகி ரெம்ப ரெம்ப சாது! ;)))))))))))

  ReplyDelete
 37. மலரும் நினைவுகள்...அருமை. எனக்கும் சரம் தொடுக்கக் காட்டிக் கொடுங்களேன். முன்பு எப்போவோ பழகினேன். இப்போ மறந்து போச்.

  விருதுல்லாம் வாங்கி இருக்கீங்க, பாராட்டுக்கள். உங்க கையால விருது வாங்கின வானதி, பிரியா, அதிரா, விஜி, ஏஞ்சலின், ஐவருக்கும் என் பாராட்டுக்கள்.

  புற்றுநோய் விழிப்புணர்வு கட்டுரைகள் பற்றிய தகவலுக்கு நன்றி. படிக்கிறேன்.

  ReplyDelete
 38. Nice to read it... " பூ குத்தற(!) சைடூசி!" perfect Coimbatore slang... Me belong to salem, there we use to tell as "பூ குத்தற(!) சைடூசு".... he he he...

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails