Sunday, July 27, 2014

சவலைப் பிள்ளைகள்..

மொத்தமாக கவனம் செலுத்தி கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்ட முதல் பிள்ளைகள் இரண்டாம், மூன்றாம் பிள்ளைகள் வந்த பின்னர், கவனிப்புக் குறைய கொஞ்சம் ஏங்கிப் போய்விடுவார்கள்.. அந்த சவலைப்பிள்ளைகள் போல என் வலைப்பூக்களும், தோட்டமும் (ஏன் ஜீனோ-வும் கூடத்தான்!) கவனிப்பு குறைந்து என் முழுக்கவனமும் லயா-வின் பின்னால் சென்றுகொண்டிருக்கிறது! :)..I miss my blog! avvvv....

முதல் புகைப்படத்தில் பூத்துச் சிரித்தாலும் செடிகள் கொஞ்சம் சுணங்கித்தான் போயிருக்கின்றன. புதினா மிகவும் ஸ்ட்ராங்க்-ஆன செடி என்பதால் தாக்குப் பிடித்துக்கொள்கிறது.  முதல் ஒரு முறை பார்க்கையில் புதினாவில் பூ வந்தது போன்ற தோற்றத்தில் பச்சைநிறத்தில் "ஏதோ ஒன்று" இருந்தது..
பூவாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் படமெடுத்தும் வைத்துவிட்டு ஒரு வாரம் வட அமெரிக்காவின் கிழக்குமூலைக்குச்  சென்றுவந்தோம்.

 
Tampa Aquarium-ல் மீன்களைப் பார்க்கும் என் தங்க மீனுக்குட்டி! :) 

திரும்பி வந்த போது புதினாவில் பசுமையாக இருந்த பூக்கள் வெள்ளைப் பூக்களாகிவிட்டிருந்தன. முதல் முறையாகப் புதினாப் பூக்களைப் பார்த்ததில் எனக்கு மிக மகிழ்ச்சி.  விதைகள் வருமா என காத்திருக்காமல் அவசரக்குடுக்கையாகப் பூத்திருந்த தண்டுகளைக் கிள்ளி சமைத்துவிட்டேன். அவ்வ்வ்வ்!! 
இது போன வருடம் டாலர் ஷாப்-ல் வாங்கி வந்த மிளகாய்ச் செடி. திடமாக நின்று ஒன்றிரண்டு காய்கள் காய்த்துக்கொண்டிருக்கிறது. காய் குறைவு என்றாலும் நல்ல குண்ண்ண்ண்டு மிளகாய்களாகக் காய்க்கும். ;) ஊருக்குப் போகையில் எல்லாம் பச்சையாக இருந்தார்கள்..வந்து பார்க்கையில் இருவர் "வெயிலில் தண்ணி இல்லாம எங்களை விட்டுவிட்டுப் போய்விட்டாயே" என்ற கோபத்தில் சிவந்து போயிருந்தார்கள். எல்லா மிளகாய்களையும் பறித்தாச்சு..
குட்டி ஹெல்ப்பர் புகைப்படத்துக்கு போஸ் குடுக்க யெல்ப்ப்ப் செய்கிறார்..
அப்பாடீ...கை கொஞ்ச நேரம் அமைதியாக நின்னுச்சு..ஒரு ஃபோட்டோ எடுத்தாச்...
ஆக மொத்தம், ஆறு மிளகாயை ஆல்மோஸ்ட் ஆறு படமெடுத்திருப்பேன். ஹிஹி...
ஊருக்குப் போகையில் அமைதியாக இருந்த ரோசாப்பெண்..வந்த போது பூக்களாகப் பூத்து வரவேற்பு அளித்தார். :)
 ஸோலார் டான்ஸிங் ஃப்ளவர்..வெகு நாட்களாகத் தவணையில் இருந்தது, இணையத்தில் பார்த்து வாங்கியாச்சு! :)
என் குட்டிப்பெண் வளர்ந்துட்டே இருக்காங்க..
நாட்கள் மின்னல் வேகத்தில் ஓடுகின்றன..விரைவில் லயமும் ஓட ஆரம்பிப்பாங்க, அவங்க பின்னால் நானும் ஓடுவேன். அப்போதும் அவ்வப்போது இங்கே எட்டிப்பார்க்க காலம் அனுமதிக்கவேண்டும். ;) :) 
ஓவராக மொக்கை போட்டாச்..பிராயச்சித்தமாக ஒரு ஆப்பிள் பை(Apple Pie from Denny's), கடைல வாங்கினதுதான்..தகிரியமாச் சாப்புடுங்க..டாங்ஸூ! ;) 

17 comments:

 1. பூக்களும் மீன்களும் லயமாய் கருத்தைக் கவர்ந்தன.பாராட்டுக்கள்.!

  ReplyDelete
 2. laya thirumbum pothu padam eduthu podunga Mahi...

  ReplyDelete
 3. புதினாவை இத்தனை வருடமாச் சமைக்கிறேன். செடியும் வைத்திருக்கிறேன்.இன்றுதான் அதில் பூவைப் பார்த்திருக்கிறேன்... அழகு ரோஜாக்கள்....ரோஜாவின் கைகளும் ...குழந்தையைச் சொன்னேன்...

  ReplyDelete
 4. நல்ல படப்பிடிப்பு/வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. யம்மாடீஈஈஈஈஈஈஇ. பாப்பா கைப்பக்கத்துலெ மொளகாயா? வேணாம்ப்பா வேணாம், வேணவே வேணாம். கொழந்த கையாலெ கண்ணத் தொட்டுச்சின்னா தெரியும் சோகம். கவனம் கவனம்.

  ReplyDelete
  Replies
  1. அக்கறையான பதிவுக்கு நன்றிங்க. மொத்தத்தில் ஒரு நிமிடம் கூட கொழந்தை கையில் இல்லை மிளகாய். ஜஸ்ட் வைச்ச உடனே எடுத்திட்டேன். :)

   Delete
 6. புதினா பூ .... இப்போதான் பார்க்கிறேன். இனி நானும் புதினாவை வளர விட்டு விதை எடுத்து விடுகிறேன் மகி. பாப்பாவை மிளகாய் பக்கத்தில் தைரியமா விட்டு போட்டோ எடுத்திருக்கீங்கா.. பாத்து மகி ...

  ReplyDelete
 7. Oh, precious! :) Haven't visited your space in a long time but I had a sneaking suspicion that I may find cute little pictures of your darling daughter here and voila. She is so adorable and boy, has she grown up fast!

  ReplyDelete
 8. புதினா பூ,ரோஜாக்கள்............அருமை

  ReplyDelete
 9. பூத்திருந்த தண்டுகளை எப்பிடி சமைச்சீங்க? அறிந்து கொள்ள ஆவல்.
  விதைகள் வரும். மினி கசகசா போல இருக்கும்.

  அப்பா மீனும் குட்டி மீனும் மீன் பார்ப்பது அழகு.

  மிளகாய் & லயா பார்க்க... என் பெரியவரது சின்னக் காலம் நினைவுக்கு வருகிறது. மிளகாய் சாப்பிடுவார்.

  ரோசஸ் நிறையப் பூத்து இருக்கே! அழகா இருக்கு.

  சோலார் பூ... நாங்க முதல் முறை இந்தியா போனப்ப வாங்கி வந்தோம். அழகு இல்ல!

  //குட்டிப்பெண் வளர்ந்துட்டே இருக்காங்க..// ம். :-) கொஞ்ச காலம் அவங்க பின்னால ஓடுவீங்க. பிறகு ஸ்கூல் கிளம்பிருவாங்க. அப்பவும் வேலை இருக்கும். ஆனாலும் இங்க வராம எங்களோட எல்லாம் பகிர்ந்துக்காம இருக்க முடியாது. :-) நிச்சயம் வருவீங்க.

  ஆப்பிள்பைக்கு நன்றி.

  ReplyDelete
 10. புதினா பூ இப்போதுதான் பார்க்கிறேன். அழகான ரோஜாக்கள்! பாப்பு கையில் மிளகாயா? தைரியம்தான் உங்களுக்கு.

  ReplyDelete
  Replies
  1. //தைரியம்தான் உங்களுக்கு. // :) நன்றீங்க!

   Delete
 11. Super mint and solar flowers. I have a solar cat from Japan.
  Laya has grown up. You are going to be very busy.

  ReplyDelete
 12. புதினா பூ புதிது, அழகு...

  ReplyDelete
 13. கருத்துக்கள் தந்த அனைவருக்கும் நன்றிகள்!

  ReplyDelete
 14. மன்னிக்க மகி.நான் லேட்டாக வந்துவிட்டேன்.சுற்றுலாவினால் தாமதம்.
  காலம் எவ்வளவு விரைவாக போகிறது. உங்க செல்லம் வளர்கின்றா. அழகா இருக்கா.சுற்றி போடுங்க.
  புதினா பூ எனக்கும் வந்தது. இப்போ முள்ளங்கி பூவும் வந்துவிட்டது. என் பூக்களும் மலர்கின்றன.
  ஆனா கவனம் மகி.லயாவிடம் இப்படியான விளையாட்டு வேண்டவே வேண்டாம். நல்பகிர்வு நன்றிகள்.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails