தோட்டத்தை பற்றி எழுதி கொஞ்ச நாள் ஆயிடுச்சு..எல்லாரும் மறந்திரப் போறீங்கன்னு, இதோ அடுத்த பதிவு..தக்காளி,மிளகாய் இவையெல்லாம் விதை போட்டு முளைக்க நாளாகும் என்று(என்னவோ,லோகல் மார்க்கெட்டுக்கு வெஜிடபிள் சப்ளை பண்ணப் போற மாதிரி எப்படியெல்லாம் யோசிக்கிறேன் பாருங்க!:) )
பக்கத்துல இருந்த நர்சரி-ல நாற்றுகளா வாங்கிடலாம்னு நர்சரி போனோம்.
முதல் முறை போனப்போ கேமரா எடுத்துட்டு போகல..இந்த போட்டோஸ் இரண்டாவது முறை போனப்ப எடுத்தது...
மே கடைசி என்பதால் வெயில் கொஞ்சம் நல்லாவே அடிக்க ஆரம்பித்திருந்தது..இந்த பூச் செடிகளைக் கவனித்து பார்த்தா,வெயிலின் தீவிரம் நல்லா தெரியும்..லைட்டா வாடி வதங்கி இருக்கு பாருங்க..
மஞ்சள் நிறப் பூக்களைப் பார்த்துட்டு போட்டோ எடுக்காம வருவேனா நானு? :)
காய்கறி நாற்றுக்கள்னு பார்த்தா, இங்கே எல்லா இடத்திலும் தக்காளில சில வகைகள்,மிளகாய்ல பல வகைகள்,கத்தரி அப்புறம் ஹெர்ப்ஸ் தான் இருக்கு..மற்றபடி கேரட்,ப்ரோக்கலி,முள்ளங்கி,பீன்ஸ்,சுக்கினி இப்படி எல்லாமே விதைகள் தான் இருக்கிறது.
குடைமிளகாய் நாற்று..
நாங்க ரெண்டு தக்காளி நாற்றுகள் வாங்கினோம்..மிளகாய்ல இவ்வளவு விதமான்னு நான் ஒரொரு செடியா எடுத்து பார்த்துட்டு இருந்தேன்..வீட்டுக்கு வந்து பார்த்தா மிளகாய் நாற்றுகள் மட்டுமே ஐந்து வந்திருந்தது.:):)
ஒரொரு செடியா பார்த்துட்டு,இருந்த இடத்திலேயே வைக்கணும்..கார்ட்ல வைச்சா??? அப்படின்னு இங்கே ஒருவர் முறைக்கிறார்! :)
புதினா,ஸ்ட்ராபெரி மற்றும் சில பூச்செடிகள் வாங்கி வந்தோம். மண்ணில் நட்டு சில வாரங்கள் ஆகிடுச்சு.செடிகள் எல்லாருமே மிக ஆரோக்கியமாக இருக்காங்கன்னு சொல்ல முடியாது..சுமாரா வளர்ந்துட்டு இருக்காங்க..அவங்க எல்லாரும் அடுத்த பதிவில் உங்களைப் பார்க்க வருவாங்க..அது வரை நர்சரிப் பூக்களை ரசியுங்க என்று அன்புடன் கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்.நன்றி!
நர்சரியும் வாங்கிய செடிகளும் பார்க்க அழகாக இருக்கு,எனக்கும் செடி வளர்க்க ஆசை தான்,அடிக்கடி இந்தியா போய் வருவதால் செடியை யார் பார்ப்பார்கள் என்றே தயக்கம்.
ReplyDeleteஆஹா..ஆசியாக்கா,இது நான் செகன்ட் டைம் நர்சரி போனப்ப எடுத்த படங்கள்..நான் வாங்கிவந்த செடிகள் அடுத்த பதிவில். :)
ReplyDeleteநீங்க அப்பப்ப ஊருக்கு போய் வருவீங்க,அப்ப செடிகள் வளர்ப்பது கொஞ்சம் சிரமம்தான்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நர்சரின்னு சொன்னிங்க ஒரு குழந்தைகூட இல்லயே .....
ReplyDeleteபடங்களும் செடிகளும் அழகு... வாங்கிய செடிகளையும் போடுங்க பார்க்கும் ஆசை வந்துடுச்சி :-))
ReplyDelete/நர்சரின்னு சொன்னிங்க ஒரு குழந்தைகூட இல்லயே ...../ கர்ர்ர்ர்..ர்ர்!! என்ன ஜெய் அண்ணா இப்படி சொல்லிட்டீங்க? அங்கே இருந்த செடிகள் எல்லாமே குழந்தை செடிங்கதான்! :))))))))))))))))
ReplyDeleteசீக்கிரமா எங்க வீட்டு செடிகளும் உங்க எல்லாரையும் பார்க்க வருவாங்க..கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. நன்றி!
Nice posting.
ReplyDeleteI too feel like gardening now.
nice plants more chilly plants the yellow flowers are really cute i enjoyed very much
ReplyDeleteMahi, beautiful post. Antha yellow poo romba azhagu. Enaku yellowna romba pidikum :) Chedi ellam valamodu valara vazhthukal ;).
ReplyDeleteBeautiful flowers.....waiting to see your garden flowers!!!!!! lovey yellow flowers...great
ReplyDeleteமஞ்சள் பூக்கள் கொள்ளை அழகு....
ReplyDeleteமல்லிமகி என்ன என்னை நியாபகம் இருக்கா!
ReplyDeleteதோட்டம் சூப்பர். இனி உங்கவீட்டு குழந்தைச்செடிகளை பார்க்க ஆவல்.
மஹி சூப்பரா கலக்கிட்டிங்க. நானும் நிறய்ய தடவை போயிருக்கேன். ஆனால் இந்த ஐடியா தோன்றவில்லை. அடுத்த முறை க்ளிக் க்ளிக் தான்.
ReplyDeleteம்.. நர்சரிக்குள் போனால் எல்லாமே வாங்க ஆசை தான். ம்.. நான் எல்லாம் இந்த முறை விதைகள் போட்டு இப்ப தான் முளைக்க ஆரம்பித்திருக்கு.
மகி, அழகா இருக்கு. மஞ்சள் பூக்கள் கொள்ளை அழகு.
ReplyDeleteஹையோ! நம்ம ஜெய் இவ்வளவு அப்பாவியா????
@@@vanathy--//ஹையோ! நம்ம ஜெய் இவ்வளவு அப்பாவியா???? //
ReplyDeleteஏங்க.. அதுசரி இனிமே சந்தேகம் எல்லாம் என் பிளாக்கிலேயே கேட்டுக்கிறேன் அங்க வாங்க ...ஹி..ஹி..
//கர்ர்ர்ர்..ர்ர்!! என்ன ஜெய் அண்ணா இப்படி சொல்லிட்டீங்க? அங்கே இருந்த செடிகள் எல்லாமே குழந்தை செடிங்கதான்! :))))))))))))))))//
ReplyDeleteஅப்ப ஒன்னுக்கூட நடக்கிர , தவழும் குழந்தை செடிகளை கானோமே!! ( அச்சோ..திரும்பவும் சந்தேகம் கேட்டுட்டேனே )
/நீங்க நம்ம லிஸ்டில சேர்ந்திட்டீங்கதானே ஆட்டோமேடிக்கா புத்திசாலியா ஆயிடுவீங்க/ புத்திசாலி ஆயிட்டம்ல?
ReplyDelete/அப்ப ஒன்னுக்கூட நடக்கிர , தவழும் குழந்தை செடிகளை கானோமே!! ( அச்சோ..திரும்பவும் சந்தேகம் கேட்டுட்டேனே )/ இனி நீங்க எத்தனை சந்தேகம் கேட்டாலும் சலிக்காம பதில் சொல்லிடுவேன்.
அந்த சோடா புட்டி கண்ணாடிய நல்லா சோப்பு போட்டுக் கழுவி கண்ணுல மாட்டிகிட்டு:) மூணாவது போட்டோவை பாருங்க ஜெய் அண்ணா!
அதிலே பச்சை கலர் டிஷர்ட் போட்டுக்கிட்டு,உங்களுக்கு முதுகு காட்டிட்டு ஒரு ரெண்டு கால் குழந்தை:) போகுதே,தெரிலையா?
ஹிஹி!! எப்பூடி?
//அதிலே பச்சை கலர் டிஷர்ட் போட்டுக்கிட்டு,உங்களுக்கு முதுகு காட்டிட்டு ஒரு ரெண்டு கால் குழந்தை:) போகுதே,தெரிலையா?
ReplyDeleteஹிஹி!! எப்பூடி?//
அடடா...ஆமாங்க...அந்த பெரிய குழந்தையும் அவங்க பாட்டிக்கு சின்ன குழந்தைதானே!!
//அந்த சோடா புட்டி கண்ணாடிய நல்லா சோப்பு போட்டுக் கழுவி கண்ணுல மாட்டிகிட்டு:) //
அப்ப மூக்கு கண்ணாடி இல்லையா ?..நா அதை இத்தனை நாளும் மூக்கு கண்ணாடின்னுதான நெனைச்சிருந்தேன்....:-)
Hey Mahi, nan entha post-ta eppo than pakkaren..ella plants-sum superb ba irukku..malarkal eppovumey azaghu than..pictures ellamey superb..
ReplyDeleteமஹி.. உரம் போட வேண்டி இருக்கலாம்.. ஆர்கானிக் உரங்கள் கிடைக்குமான்னு பாருங்க.. இல்ல, தோட்டமிடுதல் பத்தி தேடிப் பாருங்க கூகிள்ல..
ReplyDelete@புனிதா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..தமிழ் குடும்பத்துலயும் நீங்கதானா கமெண்ட் போட்டிருக்கீங்க?
ReplyDelete@ஹே சித்து, அட் லாஸ்ட் வந்துட்டே என் ப்ளாக்-க்கு! ரொம்ப சந்தோஷமா இருக்கு..நேரம் கிடைக்கும்போது வந்துட்டுப் போ!
@மஞ்சு,உங்களுக்கும் மஞ்சள் பூ பிடிக்குமா?சேம் பின்ச் :) உங்க வாழ்த்துக்கு நன்றி!
@ஆமாங்க வேணி,அந்த மஞ்சள் பூக்கள் ரொம்ப அழகா இருந்தது..இவர் வெயில் தாங்க முடியாம போலாம்,போலாம்னு கூப்ப்டுட்டே இருந்தார்..ஆனாலும் போட்டோ எடுத்துட்டு தான் வந்தேன்.:) நன்றிங்க!
@மேனகா,நன்றி!
@மலிக்கா,உங்கள ஞாபகம் இல்லாம இருக்குமா? எங்க வீட்டு செடிகள் சீக்கிரமா வருவாங்க.வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி!
@வருகைக்கு நன்றி வானதி! உங்க கேள்விக்கு நோ கமெண்ட்டு!:) :)
@ஜெய் அண்ணா,/அப்ப மூக்கு கண்ணாடி இல்லையா ?./ இதுவே ஒரு பதிவு எழுதற அளவுக்கு வெயிட்டான:) டவுட்டு தான்! கண்ணுக்கு போடும் கண்ணாடிக்கு மூக்குக் கண்ணாடி என்று பெயர் வந்தது ஏன்?-னு அடுத்த பதிவு போட்டுடுங்க.
@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிது! இங்கே நிறைய வெரைட்டியான பூக்களைப் பார்க்க முடில,ஆனாலும் இருக்கும் பூக்கள் எல்லாமே அழகாய்த்தான் இருக்கு.
@சந்தனா,உரம் போட்டுப் பார்க்கிறேன்..நான் பண்ணிய குளறுபடியால்தான் ஒண்ணு ரெண்டு செடிங்க வாடிப் போச்சு. ஆலோசனைக்கு நன்றி!
விஜி,வாங்க,வாங்க! எங்கே வெகு நாளா உங்களைக் காணோம்?
ReplyDeleteஎனக்கும் முதல் முறை நர்சரி போனப்ப கேமரா எடுத்துப் போக நினைவில்லை..அங்கே போனப்புறம்தான் தோனுச்சு..நெக்ஸ்ட் டைம் மறக்காம எடுத்துட்டு போனேன்.
சீக்கிரமா உங்க தோட்டத்தையும் போட்டோ எடுத்து ப்ளாக்ல போடுங்க. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி விஜி!
Colourful post.... காய்கறி செடி போடறது எல்லாம் சரி... அதை சமைச்சு recipe எல்லாம் போட்டு பயபடுத்த கூட சரியா... டீல்????? ஹி ஹி ஹ
ReplyDelete/காய்கறி செடி போடறது எல்லாம் சரி... அதை சமைச்சு recipe எல்லாம் போட்டு பயபடுத்த கூட சரியா... டீல்?????/ ஹ..ஹ..ஹா!! காய்கறி செடி போடறதெல்லாம் பொழுது போக்குங்கோ..அதுல வர காய்கறிய(மட்டும்) வைச்சு சமையல் செய்யற அளவுக்கு பெரீ...ய்ய கார்டன் எல்லாம் இல்லைங்க புவனா! 'இன்றைய அறுவடை'ன்னு சில/பல பதிவுகள் போடுவேன். ஆனா,எல்லா அறுவடையும் ஒற்றைப்படைல தான் இருக்கும். பயப்படாம வாங்க.:):):)
ReplyDeleteஆஹா...படங்கள் எல்லாம் அருமை...நாங்களும் home depot போய் சில செடிகளை வாங்கி வந்து வைத்து இருக்கின்றோம்...பூக்கள் பார்க்க இன்னும் வாங்கி வைக்க வேண்டும் என்று ஆசையினை தூண்டிவிட்டிங்களே...எற்கனவே 50$ காலி...இதுல வேறு இப்படியா ஆசை காட்டுவது...
ReplyDeleteமகி கட்டுரை சூப்பர் நாங்களும் செடி வளர்கிரோம் செடி எல்லாம் நல்ல வளர்ந்து வருகின்றது இப்போது தான் புதினா செர்ரி தக்காளி எடுத்து வந்தேன்
ReplyDeleteஅடுத்த முறை எங்கள் தோட்டத்தை போட்டோ எடுத்து போடுகிரேன்\
]பாருங்க
கீதா,உங்க கருத்தை இப்பத்தான் பார்க்கிறேன்,சாரி! $50 தானே காலி பண்ணிருக்கீங்க? எப்ப என்கூட வந்து மேட்ச் ஆகறது? அதுக்குத்தான் இப்படி எல்லாம் போஸ்ட் பண்ணிட்டிருக்கேன்;) அப்பதானே இங்கே சொல்லி என் பட்ஜெட்ட இன்னும் கொஞ்சம் இன்கிரீஸ் பண்ண சொல்லலாம்? :)
ReplyDeleteசெர்ரி கூட வாங்கிருக்கீங்களா? சூப்பருங்க..சீக்கிரமா போட்டோஸ் போடுங்க! வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க தமிழ்குடும்பம் டீம்!