Friday, July 11, 2014

ப்ரோக்கலி பொரியல்

தேவையான பொருட்கள்
ப்ரோக்கலி துண்டுகள்-11/2கப்
வெங்காயம்-1
பூண்டு-4பற்கள்
தக்காளி-1
பச்சைமிளகாய்-1
கறி மசாலா பொடி-11/2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல்-2டீஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
சீரகம்-1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு -தலா 1/2டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை
ப்ரோக்கலியை கழுவி, பூக்களாக நறுக்கி வைக்கவும்.
வெங்காயம்-பச்சைமிளகாய்-பூண்டு-தக்காளியை நறுக்கிவைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து, சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
க.பருப்பு-உ.பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். 
வெங்காயம்-பூண்டு-பச்சைமிளகாய் வதக்கி, தக்காளியும் சேர்த்து குழைய வதக்கவும்.
நறுக்கிய ப்ரோக்கலி பூக்கள் சேர்த்து பிரட்டி விடவும்.
கால் கப் தண்ணீரை தெளித்து மசாலா பொடி-உப்பு சேர்த்து கலந்து விடவும்.
காய் 4-5 நிமிடங்களில் வெந்துவிடும். (பாத்திரத்தை மூடி வைத்தால் பச்சை நிறம் மங்கிவிடும், அதனால் அப்படியே வேகவிடவும்)
காய் வெந்ததும் தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறி இறக்கவும். 
சுவையான ப்ரோக்கலி பொரியல் தயார். சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிடலாம். முதல் படத்தில் கத்தரி-உருளை சாம்பார், சோறு, முட்டைக்கோஸ் பொரியல் & ப்ரோக்கலி பொரியல். 

10 comments:

  1. சத்தான குறிப்பு. இங்கே ப்ரொகொலியெல்லாம் கிடைக்காது. கிடைத்தால் செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. hmmm vaasam inga varuthu mahi..

    ReplyDelete
  3. ப்ரோக்கலி சத்தும் சுவையும் நிரம்பியது..

    ReplyDelete
  4. நான் ப்ரொகொலி கூட காரட்டும் சேர்ப்பேன் ..உங்க முறையிலும் செய்து பார்க்கிறேன் ..உடம்புக்கு ரொம்ப சத்துள்ளது மகி

    ReplyDelete
  5. ப்ரொகொலி பொரியல் வாசனை இங்கு வரை மணக்கிறது. இதுவரை பொரியல் செய்ததில்லை. விரைவில் செய்கிறேன். பகிர்வுக்கு நன்றி மகி.

    ReplyDelete
  6. ஆஹா! பார்க்க ஆசையா இருக்கு. நான் சும்மா அவிச்சு சாப்பிட்டுட்டு இருக்கிறேன். எப்பவாவது தோன்றினால் இந்தக் குறிப்பு ட்ரை பண்ணுவேன்.

    ReplyDelete
  7. வெங்காயம், தக்காளி சேர்த்து இந்தப் பொரியல் பண்ணதில்லை. ப்ரோக்கலி வாங்கி ஒரு மாசத்துக்கும் மேல ஆச்சு. மீண்டும் வாங்கி சமைக்க மேலும் ஒரு மாதமாகலாம். அப்போது இது மாதிரி சமைக்கிறேன் மகி.

    ReplyDelete
  8. ஆஹா சூப்பர்ர்.. எங்கட வீட்டிலும் ஸ் ரீம் தான்.. எப்பவாவது சுண்டல்போல செய்வதுண்டு ஆனா அது உள்ளே இறங்க கஸ்டப்படும்:).

    ReplyDelete
  9. This would taste good with rotis..

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails