Wednesday, January 25, 2012

ஒற்றைக்கால் பூக்கள்..

இந்த வருடம் வசந்தம் கொஞ்சூண்டு சீக்கிரமாகவே வந்துவிட்டது. டிசம்பர் மாத இறுதியில் புதுச்செடிகள் நடப்பட்டு, ஜனவரியில் பாதி கடக்கும்போதே புதுப்பூக்கள் தலையாட்ட ஆரம்பித்துவிட்டன. கடவுள் 2012-ன் வசந்தத்தை கொஞ்சம் ஃபாஸ்ட்ஃபார்வர்ட் செய்துவிட்டார் போலும்!! ;) ;)

கடந்த வாரம் ஒரு மாலை இளவெயில் நேரத்தில் என் கேமராவில் சிறைப்பிடித்த மலர்க்கூட்டங்கள்,உங்கள் பார்வைக்கு! :)





பிக்காஸாவில் ஸ்லைட்ஷோவையே embed செய்யும் வசதி கண்ணில் பட்டதால் சேர்த்திருக்கிறேன். பாருங்க..பார்த்து முடிச்சதும் கொஞ்சம் டீடெய்லாப் பூக்களை ரசிப்போம்.

நடுவில் ஒரு ப்ரவுன் நிற புல்வகைச் செடி, இருபுறமும் பாப்பி, ரனன்குலஸ் இரண்டு செடிகளும் கலந்து நட்டிருக்கிறார்கள். அடுத்து பசும்புல்லை நட்டு ப்ரிம்ரோஸ் செடிகளால் எல்லை கட்டியிருக்கிறார்கள் இந்த முறை..

ரனன்குலஸ் செடிகள் இன்னும் சிறிய நாற்றுக்களாய் இருக்கின்றன, பாப்பி செடிகள்தான் கிடுகிடுவென்று உயர்ந்த பூக்களால் பளீரென்று சிரிக்கின்றன..
அந்தி வெயிலின் இதமான மஞ்சள் நிறம் பூக்களில் படிந்து சாதாரண காட்சிகளையும் அருமையான வண்ணக்கலவையாய் மாற்றி கண்களுக்கு விருந்தளிக்கின்றது..இது எங்க வீட்டுத் தொட்டிச் செடிகள். வெள்ளை செவ்வந்தி..குளிருக்கு எல்லாத் தண்டுகளையும் பூச்சி பிடித்து, வெட்டிவிட்டிருந்தேன், ஒரு பூ மட்டிலும் ஆரோக்கியமாய்ப் பூத்துவிட்டது. :)

மேரிகோல்ட் செடியில் குட்டிக்குட்டி மலர்கள்தான், பக்கத்தால போய் :) போட்டோ எடுத்ததால் பெரிய பூக்களாய்த் தெரியுது. படங்களைப் பார்த்ததுமே என்னவர் "உனக்குன்னு இந்த மஞ்சள்ப்பூக்கள் எங்கிருந்துதான் வாய்க்குமோ?"என்று செல்லமாய் அலுத்துக்கொண்டார்.:))))))

நான் என்னங்க செய்யட்டும்..அதுதான் இருக்குது,நான் போட்டோ புடிச்சிருக்கேன்..வேறகலர் பூ இருந்தா நான் எடுக்கமாட்டேனா என்ன? ;)

40 comments:

  1. ஸ்லைட் ஷோ அருமை.அதென்ன ஒற்றைகால் பூக்கள்.பல கால் பூக்களும் இருக்கா? :)).

    ReplyDelete
  2. பூக்களின் படங்கள் அழகோ அழகு. பூக்களை படங்களில் பார்க்கும்போதும் சரி நேர்ல பார்க்கும்போதும் சரி நம்ம முகமும் பூவாக மலர்ந்துவிடும்.

    ReplyDelete
  3. /அதென்ன ஒற்றைகால் பூக்கள்.பல கால் பூக்களும் இருக்கா? :))/ :) :) பலகால் பூக்கள் இல்லை ஆசியாக்கா,ஆனால் இரட்டைக்கால் பூக்கள் இருக்கு!;)

    இறைவன் படைப்பில் ஒருகால் பூக்கள் எல்லாம் மண்ணில் மலரும்,ரெட்டைக்கால் பூக்கள் எல்லா வீடுகளிலும் உண்டு! குட்டிக்குழந்தைகள் எல்லாருமே பூக்கள்தானே? :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆசியாக்கா!
    ~~
    லஷ்மிம்மா,அழகான கருத்துக்கு மிக்க நன்றிமா!:)
    ~~
    உஷா மேடம்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

    ReplyDelete
  4. அழகான பூக்கள். வஸந்தருது மன மோகனமே பாடுகின்றதா

    ReplyDelete
  5. பூக்கள் எல்லாம் வழக்கம்போல் அழகு மஹி! குறிப்பா உங்க வீட்டு வெள்ளைச் செவ்வந்தி ரொம்ப அழகா இருக்குபா :)

    ReplyDelete
  6. ஓவ்வொரு பூக்களும் அழகோ அழகு மகி

    ReplyDelete
  7. அழகான கண்களை கவரும் புகைப்படங்கள்!!

    ReplyDelete
  8. எல்லா பூக்களும் அழகோ அழகு படம் பிடிச்ச மகி மாதிரியே
    அந்த பாப்பி ரோசா நிறமா அல்லது கனகாம்பர நிறமான்னு சேர்ந்த நிறம்
    ரொம்ப அழகா இருக்கு மகி ..அந்த நிறத்தில் ஒரு காஞ்சி பட்டு புடவை என்கிட்டே இருக்கு .அப்பா எனக்கு சில வருடமுன் அனுப்பி வச்சது .எடுத்து தடவி பார்த்து திரும்ப பெட்டில வச்சிருவேன் .

    ReplyDelete
  9. எல்லா பூக்களும் அழகா இருக்கு. நீங்க இருக்கும் இடம் ரொம்ப குளிரா இருக்காது போல இருக்கு. இங்கேயும் இந்த தடவ frost snow எதுவும் இங்கே இல்லே ஸோ மார்ச் மாசம் வெளியே வரும் daffodil இப்பவே வெளியே வந்திடிச்சு. அடுத்த மாதமே பூ பூக்குமோ என்னவோ? மஞ்சள் பூ பூத்தால் படம் எடுத்து போடுறேன்.



    அதிசயமா பூஸ காணோம்? நேத்திக்கு பிஷ் கட்லெட் செஞ்சு சாப்பிட்ட மயக்கம் இன்னும் தீரல போல இருக்கு :))

    ReplyDelete
  10. unga baby photo podunga mahi.....

    ReplyDelete
  11. என்ன கொடுமை சாமீஈஈஈ? பூப் பூத்திடுச்சொ? நிசமாத்தான் சொல்றீங்களா?:)) அவ்வ்வ்வ்வ்..

    ““எங்களுக்கு இண்டைக்கும் ஸ்னோ.... அது நல்லவங்க இருக்கிற இடத்தில மட்டும்தான் ஸ்நோ வருமாம்””...

    கிரிசா இந்தப்பக்கம் வந்தால் ஒருக்கால் மேற்கோள் குறிக்குள் இருக்கும் வசனத்தை அழுழுழுழுழுத்தி வாசிக்கச் சொல்லுங்கோ:))

    ReplyDelete
  12. //குட்டிக்குழந்தைகள் எல்லாருமே பூக்கள்தானே? :)//

    யெஸ்ஸ் யெஸ்ஸ்ஸ்.. பூஸ், பூ, கொயந்தை எல்லாம் ஒண்ணுதான்:)).

    ReplyDelete
  13. //அதிசயமா பூஸ காணோம்? நேத்திக்கு பிஷ் கட்லெட் செஞ்சு சாப்பிட்ட மயக்கம் இன்னும் தீரல போல இருக்கு :))//

    இல்ல இல்ல மயக்கம் இன்னும் தீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈரவே இல்லை:)))))).

    ReplyDelete
  14. //எல்லா பூக்களும் அழகோ அழகு படம் பிடிச்ச மகி மாதிரியே ///



    இது உங்க கண்ணுக்கு படவில்லையா பூஸ் அவ்ளோ மயக்கமா ?????????

    ReplyDelete
  15. அருமை இடுகை. படம் எல்லாம் அழகா வந்திருக்கு மகி. தலைப்பும் அதற்கு நீங்க சொன்ன காரணமும் சூப்பர்.
    //ப்ரவுன் நிற புல்வகைச் செடி// ஃப்ளாக்ஸ் வகை அது.

    ரசிச்சு ரசிச்சு ஃபோட்டோ எடுத்திருக்கீங்க. நானும் ரசித்தேன்.

    ReplyDelete
  16. என்ன அழகு..எத்தனை அழகு..!!!

    ReplyDelete
  17. Yes, this time here too weather is very erratic. Long rainy season, less winter.....

    Thanks for those lovely shots Mahi.

    ReplyDelete
  18. //அது நல்லவங்க இருக்கிற இடத்தில மட்டும்தான் ஸ்நோ வருமாம்””...///



    என்னைய மாதிரி, மகி மாதிரி, பச்சை பூவு மாதிரி ரெம்ப ரெம்ப நல்லவங்க(?) இருக்குற ஊரில எல்லாம் ஸ்னோ வராதாம்.



    பூஸ் நோட் தி அபவ் பாயிண்ட் ப்ளீஸ் :)) இங்கே நல்லா வெயில் அடிக்குது

    ReplyDelete
  19. //ரெட்டைக்கால் பூக்கள் எல்லா வீடுகளிலும் உண்டு! குட்டிக்குழந்தைகள் எல்லாருமே பூக்கள்தானே// கவித கவித வைரமுத்து ரேஞ்சுக்கு இப்புடி எல்லாம் எழுதுறீங்க ?



    பூஸ், பூ, கொயந்தை எல்லாம் ஒண்ணுதான்:)). இதுக்கு என்னத்த சொல்ல ??

    ReplyDelete
  20. //என்னைய மாதிரி, மகி மாதிரி, பச்சை பூவு மாதிரி ரெம்ப ரெம்ப நல்லவங்க(?) இருக்குற ஊரில எல்லாம் ஸ்னோ வராதாம். //

    mee mee yellow fish tooo

    ReplyDelete
  21. //யெஸ்ஸ் யெஸ்ஸ்ஸ்.. பூஸ், பூ, கொயந்தை எல்லாம் ஒண்ணுதான்:)).//

    என்னை யாராவது புகழ்ந்தா ஷையா இருக்கும் ஹி...ஹி... :-)))))))

    ReplyDelete
  22. //என்னைய மாதிரி, மகி மாதிரி, பச்சை பூவு மாதிரி ரெம்ப ரெம்ப நல்லவங்க(?) இருக்குற ஊரில எல்லாம் ஸ்னோ வராதாம். //

    mee mee yellow fish tooo/// சாரி சாரி அஞ்சு ஒன்ஸ் மோர்


    " என்னைய மாதிரி , மகி மாதிரி , அஞ்சு மாதிரி, பச்சை பூவு மாதிரி ரெம்ப ரெம்ப நல்லவங்க இருக்குற ஊரில எல்லாம் ஸ்னோ வராதாம் "....

    ReplyDelete
  23. //என்னை யாராவது புகழ்ந்தா ஷையா இருக்கும் ஹி...ஹி... :-)))))))//


    ஆகா இதுக்குத்தானா மகி ரெம்ப வருந்தி வருந்தி பச்சை பூவு கமெண்ட் போடுறதில்லேன்னு கூப்ட்டீங்க???


    பூஸ் இதுக்கு ஒண்ணுமே சொல்லலே? ரெம்ப ஸ்னோவோ ?


    மத்தியானம் வெயில் அடிச்சுகிட்டு இருந்த ஊரு நான் வேலைய விட்டு கெளம்பும்போது ஒரே கல் மழை.

    அதுக்கு காரணம் யாரோ ஒருத்தங்க தேம்ஸ்ல ஒத்தை கால்ல தியானம் பண்ணுறாங்களாம் ரெம்ப ரெம்ப நல்லவங்க இருக்குற ஊரில எல்லாம் ஸ்னோ வரணுமுன்னு :))

    ReplyDelete
  24. //ஆகா இதுக்குத்தானா மகி ரெம்ப வருந்தி வருந்தி பச்சை பூவு கமெண்ட் போடுறதில்லேன்னு கூப்ட்டீங்க??? //

    ஆ....எங்கே..எங்கே....ஒரு மிஸ்ட் கால் அடிச்சாலே...ஒரு மணி நேரம் விடாம பேசியே காதை பஞ்சராக்குவேன் .. இதுல தேடினாங்களா..??? :-)))

    ReplyDelete
  25. //கடவுள் 2012-ன் வசந்தத்தை கொஞ்சம் ஃபாஸ்ட்ஃபார்வர்ட் செய்துவிட்டார் போலும்!! ;) ;) //

    பூஸ் இந்த டயலாக்கை கவனிக்கல ப்போலிருக்கு ஹா..ஹா.. :-)))

    ReplyDelete
  26. //என்னவர் "உனக்குன்னு இந்த மஞ்சள்ப்பூக்கள் எங்கிருந்துதான் வாய்க்குமோ?"என்று செல்லமாய் அலுத்துக்கொண்டார்.:))))))//

    பூக்கள்ள மட்டுமா..!!!! :-))).

    ReplyDelete
  27. ஒவ்வொரு பிரேமையைம் ரசிச்சு எடுத்தாதான் இதுப்போல கலர் காம்பினேஷன் அழகா வரும் .(( போட்டோக்கலையின் அறிச்சுவடி )) ..:-))

    ReplyDelete
  28. //
    " என்னைய மாதிரி , மகி மாதிரி , அஞ்சு மாதிரி, பச்சை பூவு மாதிரி ரெம்ப ரெம்ப நல்லவங்க இருக்குற ஊரில எல்லாம் ஸ்னோ வராதாம் "...//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் கூட்டுச் சேர்ந்திட்டாங்க பூஸ் கூட்டுச் சேர்ந்திட்டாங்க... இது ரொம்ப ஈசியாப் போச்சு.... ஒரு குண்டு போதும்.. செலவு மிச்சம் ஹையோ.... என் மீசையை ஆரோ இழுக்கிறமாதிரி இருக்கே.. சே..சே.. பயப்பூடப்பூடா ஸ்ரெடியா இருகோணும்.... அது பிரமையாத்தான் இருக்கும்.. எங்கிட்டயேவா:)).

    ReplyDelete
  29. //ஜெய்லானி said...
    //யெஸ்ஸ் யெஸ்ஸ்ஸ்.. பூஸ், பூ, கொயந்தை எல்லாம் ஒண்ணுதான்:)).//

    என்னை யாராவது புகழ்ந்தா ஷையா இருக்கும் ஹி...ஹி... :-)))))))///

    ஹா..ஹா..ஹா... அதாரது பச்சைப்பூவைப் புகழ்ந்தது.... கூட்டிவாங்க பிரித்தானிய நீதிமன்றத்துக்கு, மன்னிப்புக் கேட்க வச்சிடலாம்:)))).

    ReplyDelete
  30. // ஒரு மிஸ்ட் கால் அடிச்சாலே...ஒரு மணி நேரம் விடாம பேசியே காதை பஞ்சராக்குவேன் .. இதுல தேடினாங்களா..??? :-)))//

    தெளிவா சொல்லிட்டீங்கல்லே இனிமே ஏன் தேட போறாங்க ??


    //பூஸ் இந்த டயலாக்கை கவனிக்கல ப்போலிருக்கு ஹா..ஹா.. :-)))// பூஸ் இப்பெல்லாம் நெறைய்ய டயலாக் கவனிக்குறது இல்லே நீங்க பாட்டுக்கு திட்டோணுமுன்னா திட்டிடுங்க பூஸ இதுதான் சான்ஸ்:))


    //பூக்கள்ள மட்டுமா..!!!! :-))).// இதுல ஏதும் உள்குத்து இல்லையே ??

    ReplyDelete
  31. //அது பிரமையாத்தான் இருக்கும்.. எங்கிட்டயேவா:)).// அது பிரம்மை இல்லே சுண்டெலி ஈஈ ஈஈஈ ஒடுங்க பூஸ் குவிக்


    //அதாரது பச்சைப்பூவைப் புகழ்ந்தது.... // இதுக்கு பேருதான் தொட்டிலையும் ஆட்டி விட்டு கொயந்தையையும் பின்ச் பண்ணுறது :))

    ReplyDelete
  32. Beautiful flowers, Mahi. I want to have a flower garden like that one day too. :) Unga rasanai sooper!

    ReplyDelete
  33. Dear Mahi,

    I have a surprise for you. please visit http://my-hobby-lounge.blogspot.com/2012/01/liebster-blogger-award.html :-)

    ReplyDelete
  34. பூக்களின் படங்கள் பார்க்க அழகாயிருக்கு.

    ReplyDelete
  35. காமாட்சிமா,அஸ்மா,ஃபாயிஸா,மேனகா அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ஏஞ்சல் அக்கா சிலநினைவுகளுக்காகவே சிலபொருட்களை பாதுகாப்போம்,இல்லையா? என்னிடமும் கிட்டத்தட்ட அதே கலர்ல காஞ்சிப்பட்டு இருக்கு.அழகான கருத்துக்குக்கு நன்றி!:)

    /நீங்க இருக்கும் இடம் ரொம்ப குளிரா இருக்காது போல இருக்கு./ஆமாங்க கிரிஜா,காற்று போஸ்ட்லயே சொன்னேன்,நீங்க கவனிக்கலை போல!;) வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

    அனானி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

    /பூஸ், பூ, கொயந்தை எல்லாம் ஒண்ணுதான்:))./அப்படியா அதிரா? சரி,சரி!:)
    /நிசமாத்தான் சொல்றீங்களா?:)) அவ்வ்வ்வ்வ்..
    /நிசமேதான்,நம்புங்க. :)


    இமா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. சிறு தகவல்களையும் உன்னிப்பா கவனிச்சிருக்கீங்க,தேங்க்ஸ்! :)

    ஸாதிகாக்கா,நன்றி!

    மீரா,2012 வந்ததுமே இப்படியெல்லாம் நடக்குதோ? ;)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

    ஜெய் அண்ணா,என்னென்னமோ சொல்லிட்டீங்க,சந்தோஷமா இருக்குது.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!


    ஏஞ்சல் அக்கா & கிரிஜா, உங்க கூட அரட்டையடிக்க முடியாமல் போயிடுச்சு,மன்னிக்கவும்.

    ராதை,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.பூக்களைப் பார்க்கையில் மனசுக்கு இதமா இருக்கும். சலிக்காமல் பார்ப்பேன்,உங்க ஆசை விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள் ராதை!:)

    மீரா,நன்றி,நன்றி,நன்றி! :)

    சித்ரா மேடம், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  36. hyaaaa
    colour colour pookal.
    Mahi neeril vanthu, medhuva thottu parkanum pol errukku.
    viji

    ReplyDelete
  37. விஜிம்மா,அடுத்தமுறை யு.எஸ். வரப்ப இங்கயும் வாங்க,பார்க்கலாம். :)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  38. Loved all the pictures on the side bar ..and also lovely titles :)

    ReplyDelete
  39. படங்கள், படங்களில் உள்ள பூக்கள் அனைத்தும் அழகு.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails