Sunday, December 28, 2014

பூனையாரே, பூனையாரே.. போவதெங்கே.. சொல்லுவீர்!!
பூனையாரே பூனையாரே போவதெங்கு சொல்லுவீர்
கோலி குண்டு கண்களால் கூர்ந்து ஏனோ பார்க்கிறீர்
பஞ்சுக் கால்களாலே நீர் பையப்பையச் சென்றுமே என்ன செய்யப் போகிறீர்?
எலி பிடித்துத் தின்னவா?
அங்கே இங்கே போகிறீர்..அடுப்பங்கரையை நோக்கியா?
சட்டிப்பாலைக் குடிக்கவா சாது போல செல்கிறீர்?
சட்டிப்பாலும் ஐயைய்யோ ஜாஸ்தியாய் கொதிக்குதே
தொட்டால் நாக்கை சுட்டிடும், தூர ஓடிப் போய்விடும்!
~~~
லயாவிற்காக பார்க்க ஆரம்பித்த பாடல்கள், இப்பொழுது வரிகள் அனைத்தும் வெகு பரிச்சயமாகிப் போய்விட்டன! :) குழந்தைகளுக்கான வீடியோக்கள் என்றாலும் ஒவ்வொரு சின்னச் சின்ன டீடெய்லும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள் இந்தப் பாடல்களில். தமிழ்ப்பாடல்கள் அர்த்தமுள்ள, தெளிவான பாடல்களாகவும் இருக்கின்றன.

3 little kittens
they lost their mittens
...
தமிழுக்கு சற்றும் இளைப்பில்லை காண் என்று போட்டி போடும் ஆங்கிலப்பாடல்கள்! எண்ணற்றவை இணையத்தில் கொட்டிக் கிடந்தாலும் எங்களுக்குப் பரிச்சயமான, பிடித்த பாடல்கள் இவை. 

இந்தப் பாடலில் வரும் மூன்று பூனைக்குட்டிகள், பூனையம்மா, அவர்களின் வீடு - சமையலறை -பாத்திரங்கள்- மைக்ரோவேவ் அவன் - ட்யூலிப் பூங்கொத்துக்களால்  அலங்காரம் என்று என்னைக் கவர்ந்த விஷயங்கள் ஏராளம். ஆக மொத்தம் லயா பார்ப்பதை விடவும் நான் பார்ப்பது அதிகம். ஹிஹ்ஹி!எலியம்மா எலியம்மா எட்டி பாரம்மா
இனிமையான பண்டம் இங்கே இருக்குதே அம்மா..
....
இந்தப் பாட்டில் பூனையார் வில்லனாகவும், எலியம்மா புத்திசாலியாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். பூனை ஏதேதோ காரணங்கள் சொல்லி எலியை வளையை விட்டு வெளியே இழுக்கப்பார்த்தாலும் சாமர்த்தியமான எலியம்மா தப்பிவிடுவார்! :)

5 little speckled frogs
Sat on a speckled log..
Eating some most delicious bugs..yum, yum!!
...
5 தவளைகள் குளத்தில் மிதக்கும் மரக்கட்டை மீது அமர்ந்திருப்பதாகவும், பூச்சிகளைப் பிடித்துச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் அவை ஒவ்வொன்றாக குளத்தில் குதிப்பதாகவும் பாடல்.

குளத்தில் குதிக்கும் தவளைகள் ஈஸி சேரில் சாய்ந்தவாறு பேப்பர் படிப்பதும், கூல் டிரிங்க்ஸ் குடிப்பதுமாக அதகளம் செய்கின்றன! க்யூட்! :)

அன்னை மொழி எத்துணை முக்கியமானது, அன்னை சொல்வதைக் கேட்பது எவ்வளவு இன்றியமையாதது என்பதைச் சொல்லும் அடுத்துவரும் இந்தப் பாடல்..

குருவி ஒன்று மரத்திலே...
கூடு ஒன்றை கட்டியே
அருமைக் குஞ்சு மூன்றினை அதில் வளர்த்து வந்தது
நித்தம் நித்தம் குருவியும்
நீண்டதூரம் சென்றிடும்..
கொத்தி வந்து இரைதனை குஞ்சு தின்ன கொடுத்திடும்..
...
அழகழகான குருவிகள், பூக்கள், கருத்து என்று அழகான பாட்டு இது. இவை மட்டுமல்ல, இந்தத் தமிழ் மற்றும் ஆங்கிலப்பாடல்கள் பல உள்ளன. ஒரு மணி நேரம் ஓடும் ப்ளே லிஸ்ட்டுகளைப் பார்த்தால் நேரம் போவதே தெரியாது. நேரமிருப்பவர்கள் ரசியுங்களேன். நன்றி! :) 

4 comments:

 1. ஐயோ என் மகனை விட எனக்கும் அந்த 3 little kittens favourite பாட்டு . அதில் வரும் Meow Meow Meow Meow, we shall have no pie. ஆனால் என் வயசு 30+. Ha ha ha.

  ReplyDelete
 2. correct mahi, engalukkum all rhymes and kids channel characters athupadi. Even pattu hum pannuvathu kooda rhymes than varuthu...

  ReplyDelete
 3. ரசித்தேன்...

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. count me too...i am also like to watch that cute videos with my sons....

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails