அனைவருக்கும் திருக்கார்த்திகை தீப வாழ்த்துக்கள்!
தீபங்களால் அலங்கரிக்கத் தயாராய்க் கோலங்கள்..
~~~
பொதுவாக எங்க வீடுகளில் பொரி உருண்டை செய்யும் வழக்கம் இல்லை. தீபத்துக்கு வீடெல்லாம் சுத்தம் செய்து மெழுகிவிட்டு, மாலையில் பிள்ளையார் கோயிலுக்குச் சென்று இரண்டு விளக்குகளை ஏற்றிவைத்து சாமி கும்பிட்டுவிட்டு வந்து வீட்டில் கோலமிட்டு விளக்குகள் வைத்து அலங்கரிப்போம். வாசல் கோலத்தில், வாசற்படிகளில், திண்ணையில், அம்மிக் கல், ஆட்டுக்கல், உரல், கிணறு இப்படி எல்லா இடங்களிலும் விளக்குகள் வைப்போம்.இந்தப் பொரி உருண்டை தோழி ப்ரியா ராம் வீட்டிலிருந்து அனுப்பியது. எல்லோரும் எடுத்துக்கோங்க.. :)
~~~~
இந்தக் மாக்கோலங்கள் அம்மா வீட்டிலிருந்து...
11 புள்ளி, இடைப்புள்ளி 6 வரை..
15 புள்ளி, இடைப்புள்ளி 8 வரை..
வெளி வாசலில் உள்ள கோலம், 15 புள்ளி-இடைப்புள்ளி 8 வரை..
15புள்ளி, நேர் புள்ளி 1 வரை..
5 புள்ளி, நேர் புள்ளி 1 வரை..
கோலம் போட்டு முடித்த பின் அக்கா இடைப்புள்ளிகள் வைத்திருக்கிறார். அதனால் புதிதாகப் பார்ப்பவர்களுக்குக் கொஞ்சம் குழம்பும். முடிந்தால் நாளை இடைப்புள்ளிகள் இல்லாமல் (பேப்பரில் வரைந்து) இணைக்கப்பார்க்கிறேன்.
இந்தக் கோலம் 5, 7,9,11 என ஒற்றைப்படை எண்களில் விரிவாக்கிக்கொண்டே போகலாம். :)
7 புள்ளி-3 வரிசை, நேர் புள்ளி 1 வரை.
ஏழு வரிசைப் புள்ளிகளில் இரண்டாம் வரிசையில் இரண்டு புறமும் ஒரு புள்ளி மட்டும் வைத்துக்கொள்ளவும். இந்தக்கோலமும் ஒற்றைப்படை எண்களில் விரிவாக்கிக்கொண்டே போகலாம். இக்கோலம் சேலை முந்தானை போல வடிவம் எனத்தோன்றும் எனக்கு! :)
என் அக்கா சிவில் எஞ்சினியர், வெகு அழகாக எழுதுவார், அழகாக வரைவார், கோலங்களும் அழகாகப் போடுவார், அதற்கு சான்று இந்தக் கோலங்களே! இந்தப் பூக்கள் இலைகள் கொண்ட பார்டர் எனக்கு ரொம்பப் பிடித்தது. :)
~~~
கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? இன்றைய பதிவு அதே தான்..!! :)
அம்மா வீட்டிலும், மாமியார் வீட்டிலும் இருந்து வந்த படங்களின் உபயத்தால் இன்று இன்னொரு பதிவு.. இந்தப் படங்கள் யாவும் (எனது) காலையில் வாட்ஸ்ஸப்பில் வந்தவை. ஹி..ஹி..ஹி! ;)
~~~
ஏற்கனவே ஒரு முறை இந்தப் பாடலைப் பகிர்ந்திருந்தாலும்...இன்றைய பதிவுக்குப் பொருத்தமானதாலும், எனக்குப் பிடித்த பாடல் என்பதாலும் மீண்டுமொருமுறை...
தீபங்கள் பேசுகின்றன.. :) :) :)
தீபங்கள் பேசுகின்றன.. :) :) :)
திருக்கார்த்திகை தீப வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள் மஹி !
ReplyDeleteஇதமாக இருக்கிறது இன்றைய இடுகை. அழகழகான கோலங்கள், அருமையாக ஒரு பாடல்.
ReplyDeleteசூப்பர் மகி.
அக்கா கை வெகு நேர்த்தி. ஆமாம், ஒரு கோலம், (சேலைக் கரை போல ஒரு பக்கம் மட்டும் கரையோடு ஒரு கோலம்.) மிஸ்ஸிங் போல இருக்கே! அதைப் போல போட நினைத்திருக்கிறேன். எங்கே போடுவேன் என்றுதான் தெரியவில்லை. :-) போட்டாலும் அவர் போட்டது போல நேர்த்தியாக வரும் என்று நினைக்கவில்லை.
இமா, நீங்க கேட்ட கோலம் இணைக்கப்பட்டுவிட்டது. பார்ஹ்திருப்பீங்க என்று நினைக்கிறேன். சீக்கிரம் கோலம் போட்டுட்டு ஃபோட்டோ எடுத்துப் போடுங்கோ! :) நன்றி!
Deleteமிக அழகான கோலங்கள்.அருமையான பதிவு சகோதரி.
ReplyDeletearumai....
ReplyDeleteசூப்பரா இருக்கு உங்க அக்காவின் கோலங்கள் உட்பட அனைத்துக்கோலங்களும். நாங்களும் ஊரில் கார்த்திகை தீபத்திற்கு கோலங்கள் போட்டு விளக்குகள் வைப்போம்.. விளக்குகளோடு, தீபந்தங்களும் செய்து நடுவோம். தீபத்திருநாள் வாழ்த்துக்கள் மகி.
ReplyDeleteதீப்பந்தமா??! புதுசா இருக்கு அம்முலு..சாண்டில்யன் கதைகள் ஞாபகம் வருகிறது! :)
Deleteஉங்கள் அக்காவின் கோலம் மனதை கவர்கிறது.
ReplyDeleteஇனிய கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்.
திருக்கார்த்திகை தீப வாழ்த்துக்கள்
ReplyDeleteமகி,
ReplyDeleteநேற்று அவசரத்தில் வந்ததும் ஓடிவிட்டேன். ஆஹா, நிறைய கோலங்கள் இன்று வந்துள்ளன. அழகழகான கோலங்கள் உங்க அக்காவின் கைவண்ணமா ! சூப்பரா இருக்கு.
கவலைய விடுங்க. எங்க வீட்டிலும் பொரி உருண்டை எல்லாம் கிடையாது. மீண்டும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.
//கவலைய விடுங்க. // ஹிஹி..கவலையெல்லாம் இல்லை சித்ராக்கா! இன்ஃபாக்ட் எனக்கு எந்தக் காலத்திலும் பொரியுருண்டை பிடிச்சதே இல்லை!! ;)
Deletearumaiyana pathivu :) akkavin kolangal miga azhagu :) thangalukum thangal kudumbathaarukum iniya theebathirunaal nalvaazhthukkal!!!
ReplyDeleteமங்களகரமான கலர்புல் கோலம் படம் , பார்ப்பதற்கே எவ்வளவு அழகு. இந்த கோலத்தை போட்டவர்களுக்கு பெரிய நன்றி. விளக்கின் ஜோதியும் , கலர் கோலங்களும் பார்க்கும்போதே நம்மூரை நிறைய மிஸ் பண்ணுகிறோமே என்றொரு ஃபீலிங்க். தீபாவளியும், பொங்கலும் , கார்த்திகை தீபமும் ,
ReplyDeleteநினைத்தாலே மனதினுள் ஒரு இனம் புரியாத சந்தோஷம்.
"சொர்கமே என்றாலும் நம்மூர போல வருமா " பாட்டுதான் நினைவிற்க்கு வருகிறது.
வாழ்க வளமுடன்.
அருமையான பதிவு .அழகான கோலங்கள் ...
ReplyDeleteகோலங்களைப் பார்த்து ரசித்து பொரி உருண்டையும் சாப்பிட்டாகிவிட்டது.நன்றாக இருந்தது.வாழ்த்துக்கள்/
ReplyDeleteமிக அழகான பகிர்வு. நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteகோலங்களை ரசித்துக் கருத்துக்கள் தந்த அனைவருக்கும் இனிய நன்றிகள்!
ReplyDeleteரொம்ப லேட்டா வரேன். அருமையான படங்கள். நல்ல தொகுப்பு.வாழ்த்துகள் என்றும். அன்புடன்
ReplyDelete